scorecardresearch

Tamil news updates: 16 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடத்திற்கு இன்று தேர்தல்!

Tamil Nadu News, Tamil News LIVE, Petrol price Today – 09 June 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

கர்நாடகா, ஹரியானா, ராஜஸ்தான், மகாரஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடத்திற்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 41 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகி உள்ள நிலையில் மீதமுள்ள இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

பெட்ரோ – டீசல் விலை

இன்றைய தினத்தில் பெட்ரோல் லிட்டருக்கு  ரூ. 102.63-க்கு, டீசல் லிட்டருக்கு ரூ. 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நடிகை நயன்தாராவிற்கு திருமணம்

இன்று காலை 8.30 மணிக்கு மாமல்லபுரத்தில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு திருமணம் நடைபெற உள்ளது. மேலும் திருமணத்தில் கலந்துகொள்ளும் ரசிகர்களுக்கு செல்போன் கொண்டு செல்ல கூடாது என்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ச இன்று ராஜினாமா ?

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்  பசில்  ராஜபக்ச தனது பதவியை இன்று ராஜனாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு தொழிலதிபர் தம்மிக்க பெரோரா நியமிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

உலகளவில் 53.71 கோடி பேருக்கு கொரோனா

உலகளவில் இதுவரை 53.71 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 50.80 கோடி பேர் குணமடைந்த நிலையில், 63.25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் என். ஐ. ஏ சோதனை

 சென்னை, மயிலாடுதுறையில் உள்ள 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மயிலாடுதுறையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அந்த நபர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
20:08 (IST) 9 Jun 2022
செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான கவுண்டவுனை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை, ரிப்பன் மாளிகையில் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் இலச்சினை மற்றும் சின்னத்தை ஒளிப்பட காட்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான கவுண்டவுனை (COUNTDOWN) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

19:09 (IST) 9 Jun 2022
50 ஆண்டுகளுக்கு பின் கோயிலுக்கு வந்தடைந்த நடராஜர் சிலை

1966 – 1974 கால கட்டத்தில் புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயிலில் இருந்து காணாமல் போன நடராஜர் சிலை 50 ஆண்டுகளுக்கு பின் கோயிலுக்கு வந்தடைந்தது . சிலைக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

19:08 (IST) 9 Jun 2022
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க அதிகாரி நியமனம்

வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். முறைகேடு குறித்து 3 மாதத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

19:07 (IST) 9 Jun 2022
பயில்வான் ரங்கநாதன் மீது பின்னணி பாடகி சுசித்ரா புகார்

சமூக வலைதளத்தில் அவதூறாக பேசியது தொடர்பாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது பின்னணி பாடகி சுசித்ரா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

18:11 (IST) 9 Jun 2022
காவல் புகார் ஆணையம் அமைக்கும் சட்டம் தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு

காவல் புகார் ஆணையம் அமைக்கும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு அவகாசம் அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக காவல்துறை உயர் அதிகாரிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதாக பதிவான வழக்கில், உயர் அதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் யார் விசாரிப்பார்கள் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

17:45 (IST) 9 Jun 2022
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.77.81 ஆக வீழ்ந்து வர்த்தகம் நடைபெறுகிறது

17:37 (IST) 9 Jun 2022
அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு 13ம் தேதி காங்கிரஸ் தரப்பில் அமைதிவழிப் போராட்டம்

டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு வரும் 13ம் தேதி காங்கிரஸ் தரப்பில் அமைதிவழிப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்கள் கலந்து கொண்ட காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

17:24 (IST) 9 Jun 2022
ஆடல் பாடல் நிகழ்வுக்கு அனுமதி கோரிய வழக்கு – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ஆடல் பாடல் நிகழ்வுக்கு காவல்துறை இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கையின் படி காவல் ஆய்வாளர் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை, தென்பழஞ்சி பகுதியில் நடைபெறும் அய்யனார் கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரிய வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

17:16 (IST) 9 Jun 2022
எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகள் நிறுத்தப்படாது என்ற அறிவிப்புக்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

தமிழ்நாட்டில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகள் நிறுத்தப்படாது என்ற அறிவிப்புக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், கல்வி சார்ந்த விஷயங்களில் அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்

17:13 (IST) 9 Jun 2022
25 காவல் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு

தமிழகம் முழுவதும் 25 காவல் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது

17:07 (IST) 9 Jun 2022
எல்.கே.ஜி., யூ.கே.ஜி. பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடு; நாளை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை

தமிழ்நாட்டில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து நாளை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்துகிறார். அதிகாரிகளுடன் நடைபெறும் ஆலோசனையில் ஆசிரியர் நியமனம் குறித்தும் அமைச்சர் விவாதிக்கிறார்

16:31 (IST) 9 Jun 2022
நயன்தாரா –விக்னேஷ் சிவன் திருமணம்; புகைப்படம்

நடிகை நயன்தாராவை இன்று திருமணம் செய்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன், அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

15:58 (IST) 9 Jun 2022
ஜூலை 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் – தேர்தல் ஆணையர் அறிவிப்பு

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும். ஜூலை 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்

15:46 (IST) 9 Jun 2022
பா.ஜ.க.,வை எதிர்க்கட்சியாக உருவாக்குவது தி.மு.க தான் – அண்ணாமலை

திமுக அரசுதான் பாஜகவை பிரதான எதிர்க்கட்சியாக உருவாக்கி வருகிறது என்றும், தமிழகத்தின் ஆளுங்கட்சியாக பாஜக விரைவில் மாறும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

15:18 (IST) 9 Jun 2022
புதிய தேர்தல் அதிகாரி!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ராஜ்யசபாவின் செயலாளர் தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

14:04 (IST) 9 Jun 2022
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி!

44வது செஸ் ஒலிம்பியாட் ஜூலை 28 முதல் ஆக.10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில்பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரில் பங்கேற்க 187 நாடுகளின் வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

14:04 (IST) 9 Jun 2022
ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை!

அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை. இரட்டை தலைமையில் கட்சி நன்றாக செயல்பட்டு வருகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

14:04 (IST) 9 Jun 2022
எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்!

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும். எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவைக்கேற்ப நியமிக்கப்படுவர். பல்வேறு தரப்பு கோரிக்கையினை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரைக்கிணங்க வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

12:54 (IST) 9 Jun 2022
14.40 லட்சம் பேரின் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் ஐ. பெரியசாமி தகவல்

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அடமானம் வைத்தவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி. 14 லட்சத்து 40 ஆயிரம் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ. பெரியசாமி தகவல்

12:22 (IST) 9 Jun 2022
பசில் ராஜபக்ச ராஜினாமா

மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்ச தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இலங்கை நாடாளுமன்ற செயலாளரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். எம்.பி. பதவியை துறந்தாலும், அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன் என பசில் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

12:14 (IST) 9 Jun 2022
திகார் சிறையில் பாதுகாப்பு இல்லை – சுகேஷ் சந்திரசேகர் புகார்

திகார் சிறையில் தனக்கு பாதுகாப்பு இல்லை: உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சுகேஷ் சந்திரசேகர் புகார். இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் உள்ளார்

11:57 (IST) 9 Jun 2022
தரமற்ற மளிகை பொருட்களை ரேஷனில் திணிப்பதா? ஓபிஎஸ்

தரமற்ற மளிகை பொருட்களை விற்க ரேஷன் கடை ஊழியர்களை திமுக கட்டாயப்படுத்துகிறது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு தரவேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கவேண்டும் என அதிமுக ஒருங்கிணையப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை

11:42 (IST) 9 Jun 2022
குடியரசு தலைவர் தேர்தல் – 3 மணிக்கு அறிவிப்பு

குடியரசு தலைவர் தேர்தல் குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகிறது. இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிப்பை வெளியிடுகிறது தேர்தல் ஆணையம். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ந் தேதியுடன் நிறைவடைகிறது

11:34 (IST) 9 Jun 2022
குரோம்பேட்டை வாகனம் நிறுத்துமிடத்தில் தீ விபத்து

சென்னை குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் தீ விபத்து.30க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசம்

11:23 (IST) 9 Jun 2022
கொரோனா பரவல்- இளைஞர் பயிற்சி மையம் மூடப்பட்டது

கொரோனா பரவலால் ஊழியர்கள், மாணவர்கள் பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வரும் வரை பயிற்சி நிறுவனம் மூடப்படுகிறது. விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் விடுதியை உடனே காலி செய்யவும் துணைப்பதிவாளர் அறிவுறுத்தல்

Web Title: Tamil news today live sri lanka nia investigation petrol disel price world corona

Best of Express