scorecardresearch

Tamil news Highlights: மத்திய அரசின் சின்னங்களை தமிழக அரசு வெளியிடுவதில்லை; அமைச்சர் குற்றச்சாட்டு

Tamil Nadu News, Tamil News, Petrol price Today – 09 Oct 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil news Highlights: மத்திய அரசின் சின்னங்களை தமிழக அரசு வெளியிடுவதில்லை; அமைச்சர் குற்றச்சாட்டு

Petrol and Diesel Price:

 சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Bigg Boss Tamil Season 6 Live : பிக்பாஸ் தமிழ் சீசன் 6 இன்று துவங்குகிறது

மணி சாருக்கு நன்றி

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் மணிரத்னத்திற்கு மீண்டும் மீண்டும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன். பொன்னியின் செல்வன் 2 எப்போது வரும் என அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள் ராஜராஜன் காலத்தில் இந்து மதம் இருந்ததா என அறிக்கை கொடுத்துள்ளேன்.

சிவசேனா கட்சியின் சின்னம் முடக்கம்

சிவசேனா கட்சியின் ‘வில், அம்பு’ சின்னத்தை முடக்கியது இந்திய தேர்தல் ஆணையம். ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே அணிகள் தனித்தனியே சின்னத்திற்கு உரிமை கோரிய நிலையில் முடக்கப்பட்டுள்ளது.

Live Updates
22:40 (IST) 9 Oct 2022
தொடர் மழை; புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்

21:57 (IST) 9 Oct 2022
ஸ்ரேயாஸ் சதம்; 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்து அசத்தினார்

20:29 (IST) 9 Oct 2022
மத்திய அரசின் சின்னங்களை தமிழக அரசு வெளியிடுவதில்லை; அமைச்சர் குற்றச்சாட்டு

மத்திய அரசின் திட்டங்களில் பிரதமர் படம், மத்திய அரசு சின்னங்களை தமிழக அரசு வெளியிடுவதில்லை. சுகாதார விழிப்புணர்வுக்கு ரூ.24 கோடி அளித்தும் ஒரு விளம்பரத்தில் கூட மத்திய அரசின் சின்னத்தை தமிழக அரசு வெளியிடவில்லை என மத்திய அமைச்சர் பாரதி பிரவீன் பவார் குற்றம் சாட்டியுள்ளார்.

19:58 (IST) 9 Oct 2022
குஜராத் சூர்ய கோவிலில் 3டி தொழில்நுட்பம்; தொடங்கி வைத்தார் மோடி

குஜராத் மாநிலம் மொதேராவில் உள்ள சூர்ய கோவிலில் 3டி தொழில்நுட்பத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

19:43 (IST) 9 Oct 2022
டெல்லி, சமூக நலத்துறை அமைச்சர் ராஜினாமா

டெல்லி, சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கெளதம் ராஜினாமா செய்துள்ளார். மத மாற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அவர் ராஜினாமா செய்துள்ளார்

19:31 (IST) 9 Oct 2022
நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு இரட்டை ஆண் குழந்தைகள்

நானும் நயன்தாராவும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அம்மா அப்பா ஆகிவிட்டோம் என விக்னேஷ் சிவன் ட்வீட் செய்துள்ளார்

19:21 (IST) 9 Oct 2022
திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து விபத்து – 18 பேர் படுகாயம்

திண்டிவனம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் நிழற்குடையில் ஆம்னி பேருந்து புகுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 18 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்

18:59 (IST) 9 Oct 2022
குப்பைகளை தரம் பிரித்து வழங்காத வீடுகள், வணிக வளாகங்களுக்கு அபராதம் – வேலூர் மாநகராட்சி

குப்பைகளை தரம் பிரித்து வழங்காத வீடுகள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் குப்பை கொட்டுவதை ஆதாரமளிப்பவர்களுக்கு ரூ200 அன்பளிப்பு வழங்கப்படும். குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என வேலூர் மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார்

18:23 (IST) 9 Oct 2022
‘ஆப்ரேஷன் மின்னல்’ வேட்டை; 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைது

தமிழ்நாட்டில் 'ஆப்ரேஷன் மின்னல்' வேட்டை மூலம் கடந்த 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது

18:16 (IST) 9 Oct 2022
என் மீது தவறாக வழக்குப்பதிவு – சின்னத்திரை நடிகர் அர்ணவ்

என் மீது தவறாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகார் பொய்யானது; என் விரல் கூட அவர் மீது படவில்லை என சின்னத்திரை நடிகர் அர்ணவ் கூறியுள்ளார்

17:46 (IST) 9 Oct 2022
மிலாடி நபி – பிரதமர் மோடி வாழ்த்து

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மிலாடி நபி திருநாள் நம் சமூகத்தில் அமைதி, ஒற்றுமை, கருணை உணர்வை மேம்படுத்தட்டும் என அவர் பதிவிட்டுள்ளார்

17:42 (IST) 9 Oct 2022
இந்தியாவுக்கு 279 ரன்கள் இலக்கு

இந்தியா – தென் ஆப்பிரிக்கா 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 279 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்துள்ளது

17:17 (IST) 9 Oct 2022
பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ 500 அபராதம் : வேலூர் மாநகராட்சி

வேலூர், பொது இடங்களில் குப்பை கொட்டுவதை ஆதாரமளிப்பவர்களுக்கு ₨200 அன்பளிப்பு வழங்கப்படும் என்றும், குப்பை கொட்டுபவர்களுக்கு ₨500 அபராதம் விதிக்கப்படும் என்று வேலூர் மாநகராட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் குப்பைகளை தரம் பிரித்து வழங்காத வீடுகள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

16:47 (IST) 9 Oct 2022
நெல்லையில் வெளுத்து வாங்கிய கனமழை : வள்ளியூர் – திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கனமழை வெளுத்து வாங்கியதன் காரணமாக வள்ளியூர் ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வள்ளியூர் – திருச்செந்தூர் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

15:43 (IST) 9 Oct 2022
2 வது முறையாக தி.மு.க தலைவர் : ட்விட்டரில் ட்ரெண்டாகும் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவராக தொடர்ந்து 2 வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ட்விட்டரில் “தலைவர் எம்.கே.ஸ்டாலின்” என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. திமுக தொண்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலரும் “தலைவர் எம் கே ஸ்டாலின்” என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

15:41 (IST) 9 Oct 2022
இருசக்கர வாகனத்தில் கள்ளத்தனமாக மது விற்று வரும் ஓய்வு பெற்ற காவலர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக குணசேகரன் என்பவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இவர் இருசக்கர வாகனத்தில் கள்ளத்தனமாக மதுபானங்களை பதுக்கி வைத்துக் கொண்டு திருத்தணி நெடுஞ்சாலை மற்றும் நகரின் முக்கிய இடங்களில் மதுபானம் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி என்பதால் இவர் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் கண்டும் காணாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

14:26 (IST) 9 Oct 2022
பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

திமுக தலைவராக 2வது முறையாக போட்டியின்றி தேர்வான நிலையில் மரியாதை செலுத்தினார்.

13:46 (IST) 9 Oct 2022
திமுக தலைவராக 2வது முறையாக ஸ்டாலின் தேர்வு – பெரியார் திடலில் மரியாதை

சென்னை: பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

திமுக தலைவராக 2வது முறையாக போட்டியின்றி தேர்வான நிலையில் மரியாதை

13:45 (IST) 9 Oct 2022
திமுக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் உரை

பல்முனை தாக்குதலை நான் எதிர்கொள்கிறேன் என திமுக பொதுக்குழுவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

13:33 (IST) 9 Oct 2022
நிர்வாகிகளின் அனைத்து செயல்பாடுகளையும் நானே நேரடியாக கண்காணிப்பேன் – ஸ்டாலின்

நிர்வாகிகளின் அனைத்து செயல்பாடுகளையும் நானே நேரடியாக கண்காணிப்பேன்.

நாம் பெற்ற வெற்றியை நிரந்தரமாக தக்கவைக்க வேண்டும். இனி தமிழகத்தை திமுக தான் ஆளப்போகிறது என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை – திமுக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

13:04 (IST) 9 Oct 2022
முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது – உதயநிதி

அல்லும் பகலும் அயராது உழைக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. திமுக பொதுக்குழு கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

13:04 (IST) 9 Oct 2022
தலைவராக தேர்ந்தெடுத்த தொண்டர்களுக்கு நன்றி – ஸ்டாலின்

உழைப்பு உழைப்பு உழைப்பு என கருணாநிதியால் பாராட்டப்பட்டது தான் என் அடையாளம். என்னை தலைவராக தேர்ந்தெடுத்த தொண்டர்களுக்கு நன்றி – திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் பேச்சு

12:28 (IST) 9 Oct 2022
அரசுப்பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி? – வழக்குப்பதிவு

கோவையில் அரசுப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடைபெற்றதாக தகவல்

சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

11:47 (IST) 9 Oct 2022
கோவை அருகே நாட்டு துப்பாக்கியால் விவசாயி சுட்டுக்கொலை

கோவை, மேட்டுப்பாளையம் அருகே நாட்டு துப்பாக்கியால் விவசாயி சுட்டுக்கொலை

குடிபோதையில் ஏற்பட்ட பிரச்சினையில் சின்னசாமி என்பவர் சுட்டுக்கொலை

துப்பாக்கியால் சுட்டு கொன்ற ரஞ்சித்தை கைது செய்து போலீசார் விசாரணை

11:40 (IST) 9 Oct 2022
திமுக துணை பொதுச்செயலாளரானார் கனிமொழி எம்.பி

திமுக துணை பொதுச்செயலாளரானார் கனிமொழி எம்.பி, திமுக பொதுக்குழு கூட்டத்தில் துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி., நியமனம்

11:39 (IST) 9 Oct 2022
அயலக அணி உருவாக்கப்பட்டதற்கு

திமுகவில் புதிதாக சுற்றுச்சூழல் அணி, அயலக அணி உருவாக்கப்பட்டதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல்

11:39 (IST) 9 Oct 2022
நாட்டு துப்பாக்கியால் விவசாயி சுட்டுக்கொலை

கோவை, மேட்டுப்பாளையம் அருகே நாட்டு துப்பாக்கியால் விவசாயி சுட்டுக்கொலை குடிபோதையில் ஏற்பட்ட பிரச்சினையில் சின்னசாமி என்பவர் சுட்டுக்கொலை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ரஞ்சித்தை கைது செய்து போலீசார் விசாரணை

11:38 (IST) 9 Oct 2022
துணைப் பொதுச்செயலாளர்கள் நியமனம்

திமுக பொதுக்குழு கூட்டத்தில் துணைப் பொதுச்செயலாளர்கள் நியமனம். துணை பொதுச்செயலாளர்களாக பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் மீண்டும் நியமனம்

09:21 (IST) 9 Oct 2022
திமுக பொதுக்குழு கூடுகிறது

15வது திமுக பொதுக்குழு கூட்டம். அமைந்தகரை தனியார் பள்ளி வளாகத்தில் திமுக பொதுக்குழு கூடுகிறது – அமைச்சர்கள் வருகை

08:28 (IST) 9 Oct 2022
பைக் மோதி தாய், கைக்குழந்தை உயிரிழப்பு

சென்னை அமைந்தகரையில் பைக் மோதி தாய், கைக்குழந்தை உயிரிழப்பு சாலையை கடக்க முயன்ற போது, அதிகவேகமாக வந்த பைக் மோதி விபத்து சம்பவ இடத்திலேயே 6 மாத கைக்குழந்தையுடன் தாயும் உயிரிழப்பு விபத்து ஏற்படுத்திய இளைஞர், அவருடன் வந்த பெண்ணை பிடித்து அண்ணா நகர் போலீசார் விசாரணை

08:28 (IST) 9 Oct 2022
மோசமான பொதுக்குழு கூட்டம்

அதிமுக சட்ட விதிகளைபோல், மற்ற கட்சிகளில் சட்ட விதிகள் இல்லை கட்சியில் தலைமை பொறுப்பை தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என சட்ட விதிகளை உருவாக்கியவர் எம்ஜிஆர். சர்வாதிகார எண்ணம் கொண்டவர்கள் தலைமை பொறுப்பில் வரக்கூடாது என இவ்விதிகளை வகுத்தார். ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இதுபோன்ற மோசமான பொதுக்குழு நடந்ததில்லை – ஓபிஎஸ்

Web Title: Tamil news today live sri lanka sharathkumar ps 1 hindu