Advertisment

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக் அப் மரணம்: உடற்கூறு ஆய்வை வீடியோ பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு

சாத்தான்குளத்தில் 2 வணிகர்கள் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரவைத் தலைவா் வெள்ளையன் அறிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sathankulam father son lock up death, Tamil News Live Updates

Snews in tamil news : சாத்தான்குளம் கோயில்பட்டி சிறையில் விசாரணை!

Tamil News Today : கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை, மகனின் உடல்களை 3 மருத்துவர்கள் கொண்ட குழு உடற்கூராய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், உடற்கூராய்வின்போது வீடியோ பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

 உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 91,85,974ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49,21,380 ஆகவும், வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,74,257 ஆகவும் அதிகரிப்பு. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 23,88,153 ஆக உயர்ந்துள்ளது.  வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,22,610 ஆகவும் அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது, முழு முடக்கம் உள்ளிட்டவை பற்றி நாளை காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொலியில் அவசர ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,25,282-லிருந்து 4,40,215 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தோர் 2,37,196-லிருந்து 2,48,190 ஆக உயர்ந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 13.699-லிருந்து 14,011 ஆக அதிகரிப்பு. கொரோனாவால் பாதித்த 1,78,014 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் மேலும் 19 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 402 ஆக அதிகரித்துள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil nadu news : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:23 (IST)23 Jun 2020

    கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரி தற்கொலை

    கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரி விஜய் சங்கர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரு நகர முன்னாள் துணை ஆணையரான ஐஏஎஸ் அதிகாரி விஜய் சங்கர் பெங்களூரு ஜெய நகரில் உள்ள அவரின் வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்

    IMA நிதி நிறுவன மோசடி தொடர்பாக அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    21:35 (IST)23 Jun 2020

    தேனி மாவட்டத்தில் முழு ஊரடங்கு: மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவிப்பு

    கொரோனா பரவல் காரணமாக தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார். மேலும், மறு உத்தரவு வரும்வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    20:59 (IST)23 Jun 2020

    நெல்லையில் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு - வணிக சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

    நெல்லை மாநகர பகுதிகளில் வரும் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை காலை 6 மணி முதல் 2 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என்று நெல்லை வணிக சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    20:18 (IST)23 Jun 2020

    நாளை உரையாற்றுகிறார் இஸ்ரோ தலைவர்

    இஸ்ரோ தலைவர், நாளை (ஜூன் 24, 2020) காலை 11.30 மணிக்கு உரையாற்றுகிறார். நேரடி ஒளிபரப்பை இஸ்ரோ இணையதளம், பேஸ்புக், டிவிட்டர் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    19:40 (IST)23 Jun 2020

    ஆன்லைன் வகுப்புக்கு கட்டாய கட்டணம் வசூப்பதில்லை; எழுதித்தர தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு

    கடாயப்படுத்தி ஆன்லைன் வகுப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை வசூலிப்பதில்லை என எழுதித்தர தனியார் பள்ளிகளுக்கு தன்யார் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

    19:17 (IST)23 Jun 2020

    மதுரையில் 1,000ஐ நெருங்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை

    மதுரை மாவட்டத்தில் இன்று 137 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பு 988 ஆக உயர்ந்தது; மதுரை மாவட்டத்தில் இதுவரை 405 பேர் குணமடைந்த நிலையில் 574 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மொத்தம் 9 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

    18:46 (IST)23 Jun 2020

    சென்னையில் இன்று ஒரே நாளில் 1,380 பேருக்கு கொரோனா உறுதி

    சென்னையில் இன்று ஒரே நாளில் 1,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44,205 ஆக உயர்ந்துள்ளது.

    18:30 (IST)23 Jun 2020

    தமிழகத்தில் இன்று புதிதாக 2,516 பேருக்கு கொரோனா தொற்று; 39 பேர் பலி

    தமிழகத்தில் இன்று புதிதாக 2,516 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிகை 64,603 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 39 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    17:55 (IST)23 Jun 2020

    கோவில்பட்டி சிறையில் லாக்அப் மரணம்: 3 மருத்துவர்கள் குழு உடற்கூராய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு

    கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை, மகனின் உடல்களை 3 மருத்துவர்கள் கொண்ட குழு உடற்கூராய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், உடற்கூராய்வின்போது வீடியோ பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    17:37 (IST)23 Jun 2020

    சாத்தான்குளம் தந்தை மகன் லாக்அப் மரணம்; மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

    சாத்தான்குளம் தந்தை மகன் லாக்அப் மரணம் சம்பவம் குறித்து, 4 வாரத்தில் பதிலளிக்க சிறைத்துறை ஏடிஜிபி-க்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது.

    17:02 (IST)23 Jun 2020

    சாத்தான்குளம் விவகாரம் : டிஜிபிக்கு கனிமொழி எம்.பி. நோட்டீஸ்

    publive-image

    publive-image

    16:44 (IST)23 Jun 2020

    சிறைத்துறை ஏடிஜிபிக்கு நோட்டீஸ்

    சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 4 வாரத்தில் பதிலளிக்க சிறைத்துறை ஏடிஜிபி-க்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    16:40 (IST)23 Jun 2020

    தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு

    சாத்தான்குளத்தில் 2 வணிகர்கள் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரவைத் தலைவா் வெள்ளையன் அறிவித்துள்ளார்.

    16:10 (IST)23 Jun 2020

    தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை

    கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என்று தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

    15:34 (IST)23 Jun 2020

    கலெக்டர் போராட்ட இடத்திற்கு வருகை

    கோவில்பட்டி சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பேய்க்குளம் பகுதியில் வியாபாரிகள் சங்கம் சார்பாக கடையடைப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. கடையடைப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில், உயிரிழந்தவர்களின்,  உறவினர்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு திருச்செந்தூர் நாகர்கோவில் சாலையில் காலை 8 மணி அளவில் மறியலில் ஈடுபட்டனர். 

    மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, தூத்துக்குடி கலெக்டர், போலீஸ் எஸ்பி உள்ளிட்டோர் அங்கு வந்துள்ளனர்.

    15:28 (IST)23 Jun 2020

    அரசு உத்தரவு

    குடும்ப அட்டை தாரர்களை ரேஷன் கடைகளுக்கு வரவழைக்க கூடாது, 1000 ரூபாய் நிவாரணத் தொகையை வீடுகளுக்கே நேரடியாக சென்று மட்டுமே வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.மேலும், இந்த உத்தரவினை மீறும் அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    15:24 (IST)23 Jun 2020

    புதுவையில் கொரோனா பாதிப்பு 400ஐ கடந்தது

    புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழப்பு; இன்று புதிதாக மேலும் 9 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில்,  மொத்த பாதிப்பு 402ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.

    15:02 (IST)23 Jun 2020

    காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்

    கோவில்பட்டி சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பேய்க்குளம் பகுதியில் வியாபாரிகள் சங்கம் சார்பாக கடையடைப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. கடையடைப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில், உயிரிழந்தவர்களின்,  உறவினர்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு திருச்செந்தூர் நாகர்கோவில் சாலையில் காலை 8 மணி அளவில் மறியலில் ஈடுபட்டனர். 

    இதனிடையே தந்தை, மகன் சிறையில் உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்பாலகோபாலன் உத்தரவிட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

    14:41 (IST)23 Jun 2020

    ஸ்டாலின் கேள்வி

    சாத்தான்குளத்தில் காவல்துறை அழைத்துச் சென்ற ஜெயராஜ் அவரது மகன் பென்னீக்ஸ் இருவருமே இறந்துவிட்டார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. நெருக்கடி காலத்தில் வாய்த்தகராறுக்கும் உயிர் பறிப்பா? உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் பழனிசாமி  பதிலளிக்க வேண்டும்; உரிய நீதியும் வேண்டும்! என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.





    14:12 (IST)23 Jun 2020

    1,400 கண்காணிப்பாளர்கள் கொண்ட குழுக்கள்

    மதுரை மாநகராட்சியில் கொரோனா பரவாமல் தடுக்க 1,400 கண்காணிப்பாளர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் வீடுகளில் காய்ச்சல் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் அறிவித்துள்ளார்.

    13:58 (IST)23 Jun 2020

    காணொலி மூலம் ரிக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது

    ரிக் நாடுகளின் கூட்டத்தில் இந்தியா, சீனா, ரஷ்யா வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்பு. இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை. ரிக் நாடுகளின் கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார். கொரோனா தடுப்பு பணியில் ஒருங்கிணைந்த செயல்பாடு குறித்து விவாதம். 

    13:51 (IST)23 Jun 2020

    தந்தை மகன் உயிரிழந்த விவகாரம்

    தூத்துக்குடி மாவட்டத்தில் விசாரணைக்கு அழைத்துச்சென்ற தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் குறித்து நீதிபதி விசாரணை.  பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கோவில்பட்டி நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார். 

    13:24 (IST)23 Jun 2020

    நிவாரணத் தொகை

    சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ.1,000 நிவாரணத் தொகையை வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. 

    13:23 (IST)23 Jun 2020

    விழுப்புரத்திற்கு வெளி மாவட்டத்தினர் வர தடை

    வெளிமாவட்ட நபர்கள் விழுப்புரம் மாவட்டத்திற்குள் வர தடை. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

    13:18 (IST)23 Jun 2020

    இந்தாண்டு ஹஜ் யாத்திரை இல்லை

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி இல்லை. ஹஜ் புனித யாத்திரைக்கு விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திரும்ப கொடுக்கப்படும். 2.3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்து கட்டணம் பிடிக்கப்படாமல் பணம் திரும்ப வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்

    13:11 (IST)23 Jun 2020

    பழனி குடும்பத்துக்கு ஆளுநர் நிதியுதவி

    எல்லையில் வீர‌மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினருக்கு தமிழக ஆளுநரின் நேர்முக உதவியாளர் மேஜர் அஜய் ரத்தோர் நேரில் ஆறுதல் கூறி, பழனியின் குடும்பத்தினருக்கு ஆளுநரின் சிறப்பு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கினார்

    12:17 (IST)23 Jun 2020

    பி.எம்.கேர்ஸ் நிதி விபரம்

    பி.எம்.கேர்ஸ் நிதியில் ரூ.2 ஆயிரம் கோடியில் 50 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்காக ரூ.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    12:11 (IST)23 Jun 2020

    சி.பி.எஸ்.இ தேர்வுகளில் முக்கிய முடிவு

    "ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ள சிபிஎஸ்இ தேர்வுகள் தொடர்பாக நாளை மாலைக்குள் முடிவு எடுக்கப்படும்" எனஉச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தகவல். ஐசிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    11:53 (IST)23 Jun 2020

    உயர் நீதிமன்றம் உத்தரவு

    ஆன்லைன் வகுப்புக்களால் மாணவர்களின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? விரிவான அறிக்கை அளிக்க கண் மருத்துவமனை முதல்வருக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு நாளைக்கு 2 மணிநேரத்திற்கு மேல் ஆன்லைன் வகுப்பு நடத்த தடை கோரிய வழக்கில் உத்தரவு. 

    11:31 (IST)23 Jun 2020

    திருச்சியில் ஏற்பாடுகள் தீவிரம்

    திருச்சிக்கு வரும் வெள்ளியன்று முதல்வர் வருவதையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு சோதனை நடத்தப்படுகிறது. ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், வேளாண்துறை உள்ளிட்ட துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை. 

    11:13 (IST)23 Jun 2020

    ப.சிதம்பரம் கேள்வி

    கடந்த 2010-13ஆம் ஆண்டுகளில் சீனா ஊடுருவல்களின் போது இந்திய நிலப்பரப்பினை ஆக்கிரமிப்பு செய்யவுமில்லை, இந்திய வீரர்கள் யாரும் உயிரிழக்கவும் இல்லை 2015ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற சீனா ஊடுருவல் குறித்த பிரதமர் மோடியிடம் ஜே.பி.நட்டாவால் கேள்வி கேட்க முடியுமா?” என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்

    10:55 (IST)23 Jun 2020

    சென்னை கொரோனா பாதிப்பு

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 6,484 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் இதுவரை 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. 

    10:48 (IST)23 Jun 2020

    முதல்வருடன் செங்கோட்டையன் ஆலோசனை

    முதலமைச்சருடன், அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு நடத்தி வருகிறார். 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசனை நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிரேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க பரிசீலனை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    Tamil nadu news : முதுநிலை மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத ஒதுக்கீடு கோரி திமுக, அதிமுக, மதிமுக, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகளும், தமிழக அரசு சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபால், 27 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், இந்த வழக்குகளை தள்ளிவைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஜூலை 9 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
    Corona Coronavirus Covid 19
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment