Tamil News Updates : பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 150- வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்க : Doctors’ Protest Live Updates: Bengal LoP Suvendu Adhikari slams TMC ‘goons’ for vandalism, seeks CAPF deployment at R G Kar Hospital
முக்கிய ஏரிகளின் நீர்நிலவரம்
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2477 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 91 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 309 மில்லியன் கன அடியாக உள்ளது!
-
Aug 16, 2024 22:56 ISTநீடாமங்கலம் அருகே தப்பியோடிய ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸ்
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே வழிப்பறி கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைதான நிலையில், தப்பியோடிய ரவுடி மனோ நிர்மல்ராஜை ஆதனூரில் போலீசார் சுற்றிவளைத்தனர். அப்போது காவலர் விக்னேஷை வலது கையில் அரிவாளால் வெட்டிவிட்டு ரவுடி மனோ நிர்மல்ராஜ் தப்பியோட முயற்சி செய்தபோது, நீடாமங்கலம் உதவி ஆய்வாளர் சந்தோஷ்குமார், ரவுடி நிர்மல்ராஜை வலது காலில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார். காயமடைந்த காவலர் விக்னேஷ், ரவுடி நிர்மல் ராஜ் இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
-
Aug 16, 2024 22:34 ISTகுரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு அறிவித்தபடி செப். 14-ம் தேதி நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்
குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு செப். 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2 நாட்களுக்கு முன் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட அட்டவணையில் செப்டம்பர் 28-ம் தேதி என குறிப்பிடப்பட்டு இருந்ததால், பலருக்கு குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு அறிவித்தபடி செப். 14-ம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளித்துள்ளது.
-
Aug 16, 2024 21:31 ISTஅரசுப் பேருந்து ஓட்டுநர் குடும்பத்துக்கு முதல்வர் ரூ.3 லட்சம் நிதியுதவி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அரசுப் பேருந்தின் மீது உயர் மின்னழுத்த கம்பி உரசியதால் உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ஓட்டுநர் பிரதாப்பின் குடும்பத்திர்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
Aug 16, 2024 21:23 IST3 புதிய மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பெங்களூரு உட்பட 3 மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. பெங்களூரு மெட்ரோ 3-ம் கட்டத்திற்கு ரூ.15,611 கோடியும், தானே ஒருங்கிணைந்த ரிங் மெட்ரோ திட்டத்திற்கு ரூ.12,200 கோடியும், புனே மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2,954 கோடியும் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
-
Aug 16, 2024 20:47 ISTபெண் மருத்துவர் கொலை சம்பவம்: மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்திற்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடத்தப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும், குற்றவாளிக்கு மரண தண்டனையும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
-
Aug 16, 2024 20:46 IST7 முறை தேசிய விருது: இளையராஜாவை முந்திய ஏ,ஆர்.ரஹ்மான்
7 விருதுகளுடன் அதிக முறை தேசிய விருதுகள் வென்ற இசையமைப்பாளர் என்ற சாதனையை தக்கவைத்தார் AR ரஹ்மான் 5 தேசிய விருதுகளுடன் இளையராஜா 2ம் இடத்தில் உள்ளார்
-
Aug 16, 2024 20:45 ISTஅரசு திட்டங்கள் குறித்து தவறான தகவல்: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்காதவர்கள், நாளை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவியதை அடுத்து அரசுத் திட்டங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
Aug 16, 2024 19:59 ISTசாதி பெயரை சொல்லி திட்டிய வழக்கு: இளைஞருக்கு 3 மாதம் சிறை
கடந்த 2016ம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, பட்டியலின சமூக இளைஞரை பொது இடத்தில் வைத்து சாதியைக் குறிப்பிட்டு அவதூறாக பேசிய வழக்கில், சசி என்ற இளைஞருக்கு 3 மாத கடுங்காவல் தண்டனை மற்றும் ₹1000 அபராதம் விதித்து SC/ST வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது,
-
Aug 16, 2024 19:57 ISTவயநாடு நிலச்சரிவு: 10 கோடி நிவாரணம் கொடுத்த ஆந்திர முதல்வர்
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ10 கோடி நிதி வழங்கியள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Aug 16, 2024 19:38 ISTநில அபகரிப்பு தொடர்பான வன்முறை: உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து
நில அபகரிப்பு தொடர்பாக கார்த்திக் என்பவர் அளித்த புகார் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் ரவுடிகள், அரசியல்வாதிகள் துணையுடன் நிகழும் நில அபகரிப்பு தொடர்பான கொலை, வன்முறை சம்பவங்கள் குறித்த விசாரணையை கண்காணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என கூறியுள்ளார்.
-
Aug 16, 2024 19:35 ISTகல்லூரி மாணவர்கள் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அடுத்த கங்கனான்குளத்தில் ப்ரீ பையர் (FREE FIRE) விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 22 பேர் மீது வழக்குபதிவு செய்த போலீசார், 9 பேரை கைது செய்துள்ளனர்
-
Aug 16, 2024 19:32 ISTஇந்திய காடுகளுக்கு வெளியே மரம் வளர்ப்புத் திட்டம்
கோவை தடாகம் காவல் நிலையம் அருகே ரெட்வூட்ஸ் இயற்கை வேளாண் பண்ணையில் வரும் 25ம் தேதி காலை இந்திய காடுகளுக்கு வெளியே மரம் வளர்ப்புத் திட்டம் தொடர்பான பயிற்சி நடைபெற உள்ளதால், பயிற்சியில் கலந்துகொள்ள பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
Aug 16, 2024 18:47 ISTஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் காவிரியில் நீர்வரத்து 14,000 கன அடியில் இருந்து 25,000 கன அடியாக அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க 31 நாளாக தடை தொடர்கிறது.
-
Aug 16, 2024 18:36 ISTவள்ளலார் சர்வதேச மையம் - தமிழக அரசு விளக்கம்
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலம், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை 22ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது
-
Aug 16, 2024 18:18 ISTமோடியுடன் வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தொலைபேசியில் பேச்சு
வங்கதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும், வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவு தேவை என பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார்
-
Aug 16, 2024 18:04 ISTநாடு முழுவதும் நாளை மருத்துவர்கள் ஸ்டிரைக்
கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை சம்பவத்தை கண்டித்து நாளை காலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. புறநோயாளிகள் பிரிவு இயங்காது, சாதாரண அறுவை சிகிச்சைகள் நடைபெறாது. அவசர அறுவை சிகிச்சைகள், விபத்து பிரிவுகள் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Aug 16, 2024 17:48 ISTமழைநீர் பணிகள் – அதிகாரிகளிடம் அமைச்சர்கள் சரமாரி கேள்வி
சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள், மாநகராட்சி, குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை, மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 7 மாதமாக ஒரு இடத்திலும் பணிகள் நடைபெறவில்லை என அதிகாரிகளை கண்டித்த அமைச்சர் உதயநிதி,கீழ்கட்டளை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.மேலும், சுண்ணாம்பு கொளத்தூர் பகுதியில் பணிகள் எப்போது முடியும்? என்றும் அமைச்சர் உதயநிதி கேட்டார். 7 அமைச்சர்களும் வரிசையாக அமர்ந்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்விகளை கேட்டு வருகின்றனர்
-
Aug 16, 2024 17:24 ISTதேசிய விருது; ரஹ்மான் மற்றும் திருச்சிற்றம்பலம் படக்குழுவுக்கு தனுஷ் வாழ்த்து
சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருது வாங்கிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தேசிய விருது வாங்கிய திருச்சிற்றம்பலம் படக்குழுவுக்கும் நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்
-
Aug 16, 2024 17:11 ISTவடகிழக்கு பருவ மழை ஆலோசனை கூட்டம் - 7 அமைச்சர்கள் பங்கேற்பு
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் வடகிழக்கு பருவ மழை குறித்த ஆலோசனை கூட்டத்தில் 7 அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி, எ.வ.வேலு, சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு மற்றும் மேயர் பிரியா, சென்னையில் உள்ள 3 எம்.பி.க்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்
-
Aug 16, 2024 16:49 ISTசெந்தில் பாலாஜி வழக்கு - சாட்சி விசாரணை தொடக்கம்
சட்டவிரோத பணபரிமாற்றத் தடைச்சட்ட வழக்கில் கைதான செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சாட்சி விசாரணையை துவங்கியது. கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு பதியப்பட்டது
-
Aug 16, 2024 16:35 ISTவயநாட்டில் இடைத்தேர்தல் எப்போது? - தேர்தல் ஆணையம் விளக்கம்
இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வெல்லக்கிழமை ஹரியானா, ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் தேதிகளை மட்டும் அறிவித்துள்ளது. ராகுல் காந்தி ராஜினாமா செய்த நிலையில் இன்று வயநாடு லோக்சபா தொகுதி காலியாக உள்ளது. இந்த நிலையில், வயநாடு லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கவில்லை.
"கேரளா மாநிலம் வயநாட்டில் இயற்கை பேரிடர் காரணமாக இடைத்தேர்தல் நடத்த முடியாது. உரிய நேரத்திற்குள் வயநாடு லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்." என்று இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
Aug 16, 2024 16:08 ISTமுதல் நாளில் தங்கலான் ரூ. 26.44 கோடி வசூல்
நேற்று வியாழக்கிழமை உலகம் முழுவதும் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம், முதல் நாளில் ரூ. 26.44 கோடி வசூல் செய்துள்ளதாக பட நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது
-
Aug 16, 2024 16:07 ISTஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு
'90 இடங்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு, 11,838 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 87.09 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்' என்று தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்றும், ஹரியானாவில் ஒரே கட்டமாக அக்டோபர் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று அக்டோபர் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஹரியானாவிலும் அக்டோபர் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.
-
Aug 16, 2024 15:33 IST'6 மணி நேரத்திற்குள் எஃப்.ஐ.ஆர்' - மத்திய அரசு அதிரடி உத்தரவு
மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தாக்கப்பட்டால் 6 மணி நேரத்திற்குள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 6 மணி நேரத்திற்குள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு மருத்துவ நிறுவனத் தலைவரே பொறுப்பேற்க வேண்டும் என மருத்துவ நிறுவனங்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவ பணியாளர்கள் மீது தொடர் தாக்குதல்கள் நிகழ்வதை அடுத்து மத்திய சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
Aug 16, 2024 15:29 ISTசிறந்த பாடகர் - அர்ஜித் சிங்
சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது `பிரம்மாஸ்திரா - 1' படத்திற்காக அர்ஜித் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
Aug 16, 2024 15:27 ISTதேசிய விருது - கவனம் ஈர்த்த "ஆட்டம்"
சிறந்த திரைப்படமாக தேசிய விருது `ஆட்டம்' என்கிற மலையாளப்படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த படத்தொகுப்புக்கான விருதையும் "ஆட்டம்" வென்று அசத்தியுள்ளது
-
Aug 16, 2024 15:17 IST‘தமிழகத்தில் கடந்த 42 மாதங்களில் 3,28,970 கருக்கலைப்புகள்’ - ஆர்.டி.ஐ-ல் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
தமிழகம் முழுவதும் 42 மாதங்களில் 19 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டும் சுமார் 3 லட்சத்து 28,970 கருக்கலைப்புகள் நடைபெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தமிழ்நாடு சுகாதாரத் துறை கட்டுப்பாட்டில் உள்ள குடும்ப நல இயக்ககம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
-
Aug 16, 2024 15:10 ISTசிறந்த பொழுதுப்போக்கு திரைப்படம் காந்தாரா
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான தேசிய விருதை கன்னடத்தில் வெளிவந்த 'காந்தாரா' படம் வென்றது.
-
Aug 16, 2024 14:44 IST70வது தேசிய திரைப்பட விருதுகள்
சிறந்த ஒலி வடிவமைப்பு - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன்(பொன்னியின் செல்வன் 1)
-
Aug 16, 2024 14:43 IST70வது தேசிய திரைப்பட விருதுகள்
சிறந்த ஆவணப்படத்திற்கான விருது - ‘Murmurs of the Jungle’ (சோஹில் வைத்யா )
சிறந்த படம் - குல்மோஹர் (இந்தி )
-
Aug 16, 2024 14:43 IST70வது தேசிய திரைப்பட விருதுகள்
சிறந்த பின்னணிப் பாடகி - பாம்பே ஜெயஸ்ரீ (சாயும் வெயில் - சவுதி வெள்ளக்கா)
சிறந்த பின்னணிப் பாடகர் - அர்ஜித் சிங் (கேசரியா - பிரம்மாஸ்த்ரா)
சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஸ்ரீபத் (மல்லிகாபுரம்)
சிறந்த இயக்குனர் - சூரஜ் பர்ஜத்யா (உஞ்சாய்)
-
Aug 16, 2024 14:41 ISTகே.ஜி.எஃப்-2 படத்திற்கு தேசிய விருது
சிறந்த கன்னட படத்திற்கான தேசிய விருதை கே.ஜி.எப்-2 படம் வென்றது. கே.ஜி.எஃப் படத்திற்காக சண்டை பயிற்சியாளர் அன்பறிவுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Aug 16, 2024 14:40 IST2 விருதுகளை வென்ற தனுஷின் திருச்சிற்றம்பலம்
'மேகம் கருக்காதா' பாடலுக்காக சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதை ஜானி மாஸ்டர், சதீஷ் கிருஷ்ணன் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சிற்றம்பலம் படத்திற்காக நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Aug 16, 2024 14:39 IST'தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்' - இ.பி.எஸ் அதிரடி அறிவிப்பு
"தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். பிரிந்து சென்ற நிர்வாகிகளை மீண்டும் இணைக்க வேண்டும்." என்று அ.தி.மு.க அவரச செயலாளர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
Aug 16, 2024 14:13 IST70-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு
சிறந்த தமிழ் திரைப்படம் - பொன்னியின் செல்வன் 1
சிறந்த கன்னட திரைப்படம் - கே.ஜி.எப் 2
சிறந்த மலையாள திரைப்படம் - சவுதி வெள்ளைக்கா
சிறந்த நடிகை - நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)
சிறந்த பின்னணி இசை - ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த நடனம் - ஜானி மாஸ்டர் (திருச்சிற்றம்பலம்)
சிறந்த நடிகர் - ரிஷப் ஷெட்டி (காந்தாரா)
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - காந்தாரா
சிறந்த தெலுங்கு திரைப்படம் - கார்த்திகேயா 2
சிறந்த ஒலி அமைப்பு - ஏ.ஆர். ரஹ்மான் (பொன்னியின் செல்வன்)
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - அன்பறிவ் (காந்தாரா)
-
Aug 16, 2024 14:00 IST70-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்புகள்!
சிறந்த தமிழ்படம் - பொன்னியின் செல்வன் 1
சிறந்த தெலுங்கு திரைப்படம் - கார்த்திகேயா 2
சிறந்த மலையாள திரைப்படம் - சவுதி வெள்ளக்கா சிசி 225/2009
சிறந்த கன்னடத் திரைப்படம் - KGF 2
-
Aug 16, 2024 13:27 IST3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நாளை (ஆக.17) கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Aug 16, 2024 13:25 ISTசெல்லூர் ராஜு பேட்டி
நல்ல கூட்டணியை உடைத்தது அண்ணாமலை. அதன் விளைவாகவே பாஜக மைனாரிட்டி அரசாக உள்ளது
செல்லூர் ராஜு
-
Aug 16, 2024 13:25 ISTஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் எப்போது?
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
-
Aug 16, 2024 12:35 ISTவந்தே பாரத் ரயில் சேவை ரத்து
தாம்பரம் பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் திருநெல்வேலி - சென்னை இடையே இயக்கப்படும் அதிவிரைவு ‘வந்தே பாரத்’ ரயில் சேவை இன்றும், நாளையும் (ஆக.16,17) ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு;
-
Aug 16, 2024 12:34 ISTதவறு செய்த கவுன்சிலர்கள் மீது உடனடி நடவடிக்கை
கவுன்சிலர்கள் யாராவது தவறு செய்தால் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
Aug 16, 2024 12:13 ISTபேருந்துகளில் சாதிப் பாடல்கள்: நெல்லை காவல்துறை எச்சரிக்கை
நெல்லையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் சாதிய ரீதியிலான பாடல்கள் ஒளிபரப்பினால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
- நெல்லை மாநகரக் காவல் துறை எச்சரிக்கை
-
Aug 16, 2024 12:13 ISTஅமெரிக்கா சென்றாலும் கட்சியையும் அரசையும் கவனித்துக் கொண்டிருப்பேன்- ஸ்டாலின்
தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றாலும் கட்சியையும் அரசையும் கவனித்துக் கொண்டிருப்பேன். 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் இலக்கு.
புகார் வந்திருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம், சுணக்கமின்றி செயல்பட்டால் அடுத்த முறையும் திமுக ஆட்சி தான்.
தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்
-
Aug 16, 2024 11:44 ISTகுலசேகரப்பட்டினம் ஏவுதளப் பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும்
குலசேகரப்பட்டினம் ஏவுதளப் பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
-
Aug 16, 2024 11:17 IST13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் தென்காசி, திருநெல்வேலி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Aug 16, 2024 11:16 ISTதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
நிதி பகிர்வில் தமிழ்நாட்டுக்கு வஞ்சனை காட்டும் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம்" திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
-
Aug 16, 2024 10:59 ISTரயில் திட்டங்களுக்கு 1000 ரூபாயைப் பிச்சை போடுவது போல் போட்டிருக்கிறது மத்திய அரசு : எம்.பி. டி.ஆர்.பாலு கண்டனம்
தமிழ்நாட்டு ரயில் திட்டங்களுக்கு 1000 ரூபாயைப் பிச்சை போடுவது போல் போட்டிருக்கிறது மத்திய அரசு தமிழ்நாட்டு ரயில்வே திட்டங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கண்டனம்
-
Aug 16, 2024 10:58 ISTஊழல் புகார் தொடர்பாக ரோஜா உள்ளிட்ட 4 பேரை விசாரிக்க பரிந்துரை
ஊழல் புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரோஜா உள்ளிட்ட 4 பேரை விசாரிக்க பரிந்துரை விஜயவாடா போலீஸ் ஆணையருக்கு பரிந்துரை செய்தது ஆந்திர சிஐடி போலீஸ்
-
Aug 16, 2024 10:58 ISTஸ்டாலின் தலைமையில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடக்கம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் 72 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு கூட்டம் தொடங்கிய உடன் முதலில், முதல்வர் ஸ்டாலின் எழுதிய தென் திசையின் தீர்ப்பு புத்தகம் வெளியீடு
-
Aug 16, 2024 10:22 ISTதங்கம் விலை உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்த ரூ.6565க்கும் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.52,520க்கும் விற்பனை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.