பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 162-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம். 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2436 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 72 மில்லியன் கன அடியாக உள்ளது!
500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 302 மில்லியன் கன அடியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Aug 26, 2024 22:42 ISTகிருஷ்ணகிரி பாலியல் வழக்கு மேலும் இருவர் கைது
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த சுதாகர் மற்றும் கமல் இருவரும் கைது
-
Aug 26, 2024 22:38 ISTசீன பொருட்களுக்கு 100 சதவீதம் வரி: கனடா பிரதமர் அறிவிப்பு
சீனாவில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களை இறக்குமதி செய்ய 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கூறியுள்ளார். மேலும் உலக சந்தையில் லாபம் பெரும் வகையில், சீனா தரமற்ற முறையில் நடந்துகொள்வதாக கூறியுள்ள அவர், சீனாவில் இருந்து இறக்குமதியாகும், இரும்பு மற்றும் அலுமினியத்திற்கு 25 சதவீதம் வரி விதிக்க முடிவு.
-
Aug 26, 2024 20:57 ISTசுங்கச் சாவடிகளில் கட்டணங்களை உயர்த்தக் கூடாது: திருமாவளவன் கண்டனம்
ஏற்கனவே பல்வேறு விதமான வரிகளை சுமத்தி ஏழை,எளிய மக்களை கசக்கிப் பிழியும் ஒன்றிய பாஜக அரசு சுங்கச்சாவடி கட்டணங்களின் மூலமாகவும் பொதுமக்களைத் துன்புறுத்தி வருகிறது. இந்நிலையில் மேலும் கட்டணத்தை உயர்த்துவது அநீதியானது விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
Aug 26, 2024 19:58 ISTமுக்கிய பொறுப்புகளை துறந்து பா.ஜ.க.,வில் இணைந்தேன் - விஜயதாரணி
எம்.எல்.ஏ, தேசிய பொதுச்செயலாளர், முதன்மை கொறடா உள்ளிட்ட பொறுப்புகளை துறந்து பா.ஜ.க.,வில் இணைந்தேன், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராக வாய்ப்பு இருக்கும் எனச் சொல்லப்பட்டது. ஒரு மூத்த தலைவர் தனக்கு சீட் வேண்டுமென பிடிவாதமாக இருந்ததால் அவருக்கு வழங்கப்பட்டது. மனம் வருத்தமின்றி பொன்னாருக்காக தேர்தலில் பணியாற்றினேன் என விஜயதாரணி தெரிவித்துள்ளார்
-
Aug 26, 2024 19:23 IST10 சக்கரங்களுக்கு மேலுள்ள கனரக வாகனங்களில் கனிமம் ஏற்றத்தடை - நெல்லை ஆட்சியர்
10 சக்கரங்களுக்கு மேலுள்ள கனரக வாகனங்களில் கனிமம் ஏற்றத்தடை தடை விதித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
-
Aug 26, 2024 18:59 ISTபாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை
பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 தடகள வீரர்களுக்கும் பயிற்சியாளர் ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது
-
Aug 26, 2024 18:33 ISTமுதல்வரின் அமெரிக்க பயணம் வேடிக்கையானது – டி.டி.வி தினகரன்
உள்நாட்டு முதலீடுகளையே தக்கவைக்க முடியாத முதலமைச்சர், உலக முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க பயணம் மேற்கொள்வது வேடிக்கையானது என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்
-
Aug 26, 2024 18:10 ISTசத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர பிரமாண்ட சிலை உடைந்தது!
பிரதமர் மோடி திறந்துவைத்த சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர பிரமாண்ட சிலை, உடைந்தது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சிலை இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது
-
Aug 26, 2024 17:54 ISTகள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
Aug 26, 2024 17:51 ISTவிவசாயிகள் போராட்டம் தொடர்பாக கங்கனா ரனாவத் கூறிய கருத்து அவருடைய சொந்தக் கருத்து – பா.ஜ.க
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பா.ஜ.க எம்.பி. கங்கனா ரனாவத் கூறிய கருத்து அவருடைய சொந்தக் கருத்து; பா.ஜ.க.,வின் கருத்து அல்ல என பா.ஜ.க விளக்கம் அளித்துள்ளது
-
Aug 26, 2024 16:29 ISTஅண்ணாமலை, தமிழிசை, நயினாருக்கு அமைச்சர் பதவி கொடுக்காதது ஏன் - சீமான் கேள்வி
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: “நாங்கள் செல்போனில் பேசுவது எப்படி பொதுவெளியில் கசிகிறது. பேசும் கருத்துகள் முன்னும் பின்னும் கட் செய்து வெளியிடப்படுகிறது. எங்கே குற்றம் நடந்தாலும் திருச்சிக்கு அழைத்து வந்து விசாரிப்பது ஏன்? நான் இல்லாவிட்டால் தி.மு.க-வினர் முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்தியிருக்க மாட்டார்கள். பா.ஜ.க-வில் 18 பேருக்கு மேல் போட்டியிட்டார்கள். பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை, அண்ணாமலை, கே.பி. ராமலிங்கம், நயினார் நாகேந்திரன் தோற்றுப்போனார்கள். தோற்றவர்களில் யாருக்காவது இணையமைச்சர் பதவி கொடுத்திருக்க வேண்டும். திருப்பி எல். முருகனுக்கு நிதியமைச்சர் பதவி கொடுக்கிறீர்கள். எனக்கு வலிக்கிறது. உங்களுக்கு வலிக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Aug 26, 2024 16:19 ISTமது அருந்த வருவோருக்கு ஓட்டுநர் இல்லையா? பார் நிர்வாகமே ஏற்பாடு செய்ய வேண்டும் - கோவை காவல்துறை
காரில் மது அருந்த வருவோருக்கு ஓட்டுநர் இல்லையெனில், பாதுகாப்பாக அவரது வீட்டிற்கு செல்வதற்கு தேவையான ஓட்டுநருடன் கூடிய மாற்று வாகனத்தை பார் நிர்வாகமே ஏற்பாடு செய்ய வேண்டும்; நம்பகத்தன்மை உள்ள வாகன ஓட்டுநரை மதுபானக் கூடம் ஏற்பாடு செய்து மது அருந்திய நபரின் சொந்த வாகனத்திலேயே அவரை அழைத்துச் சென்று வீட்டில் விட வேண்டும் என்று கோவை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
Aug 26, 2024 16:14 ISTநடிகை மினு முனீர் பல சக நடிகர்கள் மீது பாலியல் புகார்
பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கேரள மாநில சலசித்ரா அகாடமி தலைவர் ரஞ்சித் மற்றும் நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் ஆகியோர் அந்தந்த பதவிகளில் இருந்து விலகிய மறுநாள், நடிகை மினு முனீர் திங்கள்கிழமை இரண்டு முறை சி.பி.ஐ (எம்) எம்.எல்.ஏ உட்பட பல்வேறு நடிகர்களிடமிருந்து பாலியல் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டதாகக் கூறினார்.
நடிகை மினு முனீர், செய்தியாளர்களிடம் பேசுகையில், நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு மற்றும் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) முக்கியத் தலைவர் எடவேல பாபு ஆகியோரின் பெயரைக் கூறியுள்ளார். மினு முனீரின் குற்றச்சாட்டுகளுக்கு முகேஷ், ஜெயசூர்யா மற்றும் பாபு பதிலளிக்காத நிலையில், குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை வரவேற்பதாக ராஜு கூறினார்.
-
Aug 26, 2024 15:24 ISTசிறையில் சிறப்பு சலுகைகள்: கன்னட நடிகர் தர்ஷன் மீது 3 வழக்குகள் பதிவு
சிறையில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்ட புகாரில் கன்னட நடிகர் தர்ஷன் மீது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் தர்ஷன் உள்ளிட்ட 4 பேர் மீது தனித்தனியே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் தர்ஷன் சொகுசு வாழ்க்கையை அனுபவிப்பதாக புகார் எழுந்தது.
-
Aug 26, 2024 15:05 IST1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் கோவில் கண்டுபிடிப்பு!
சேலத்தில் மண்ணுக்குள் புதைந்து கிடந்த 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வித்தகர் விநாயகர் கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவ்வையார் நேரடியாக வருகை தந்து விநாயகர் அகவல் என்ற நூல் எழுதிய இடம் என்பதை அடித்துக் கூறுகின்றனர். மண்ணுக்குள் புதைந்து கிடந்த 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொக்கிஷம் என்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வழிபாடு செய்து வருகிறார்கள்
-
Aug 26, 2024 15:03 ISTஅவதூறு வழக்கு: இ.பி.எஸ் நாளை ஆஜர்!
தி.மு.க எம்.பி., தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு ஆஜராகிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
-
Aug 26, 2024 15:01 ISTசாதி, மதச் சான்றிதழ் கேட்டு மரியாதை குறைவு - நமிதா குற்றச்சாட்டு
"மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சாதி, மதச் சான்றிதழ் கேட்டு மரியாதை குறைவாக நடத்தினர்" என்று நடிகையும், பாஜக பிரமுகருமான நமிதா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
-
Aug 26, 2024 14:53 ISTயானை தாக்கியதில் விவசாயி காயம்
தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய கரிசல் குடியிருப்பு கிராமத்தில் ஒற்றைக் காட்டு யானை புகுந்தது. யானை தாக்கியதில் ஆறுமுகம் என்ற விவசாயி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குள்ள குளத்தில் சுற்றி வரும் யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறை ஈடுபட்டுள்ள நிலையில், மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கவும் திட்டமிட்டு வருகிறார்கள்.
-
Aug 26, 2024 14:51 ISTவேன் டயர் வெடித்து விபத்து
ஆரணி அருகே வேன் டயர் வெடித்து விபத்தில் ஒரு வயது குழந்தை உயிரிழந்தது. மேலும், 22 பேர் படுகாயம் அடைந்தனர். ஆரணியைச் சேர்ந்த குடும்பத்தினர் புதுச்சேரியில் உள்ள கோயிலுக்கு வேனில் செல்லும் போது, விண்ணமங்கலம் பகுதியில் டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது.
-
Aug 26, 2024 14:41 IST"ஒரு தலைவரை விமர்சிக்கும் போது வார்த்தைகள் கடுமையாக இருக்க கூடாது" - தமிழிசை சௌந்தரராஜன்
"அண்ணாமலை, கட்சியின் மாநில தலைவர், அவருக்கு கருத்து சொல்ல உரிமை உண்டு. ஒரு தலைவரை விமர்சிக்கும் போது வார்த்தைகள் கடுமையாக இருக்க கூடாது. வரும் காலத்தில் அண்ணாமலையின் கருத்து குறித்து விவாதிக்கப்படலாம். ரஜினிகாந்த் தி.மு.க-வில் ஒரு சுனாமியை உருவாக்கியுள்ளார்" என்று பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
-
Aug 26, 2024 14:03 ISTலடாக்கில் புதிதாக 5 மாவட்டங்கள்!
லடாக் யூனியன் பிரதேசத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். புதிதாக ஜான்ஸ்கார், ட்ராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகிறது.
-
Aug 26, 2024 14:01 ISTபுதுச்சேரிஆளுநர் கைலாஷ்நாதன் சுற்றறிக்கை!
புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் மீதான புகார்கள் தொடர்பாக, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதிகாரி பெயர், அவர் மீதான குற்றச்சாட்டு, பணியிடை நீக்கம் இருந்தால் எதனால், அவ்வழக்கின் தற்போதைய நிலை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Aug 26, 2024 14:00 ISTமான் இறைச்சியுடன் வன வேட்டை தடுப்பு காவலர் கைது
சத்தியமங்கலத்தில் மான் இறைச்சியுடன் வன வேட்டை தடுப்பு காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரின் வாகன தணிக்கையின் போது இரு சக்கர வாகனத்தில் வந்தவரின் பையை சோதனை செய்ததில் உள்ளே கடமான் இறைச்சி இருந்தது தெரியவந்ததுள்ளது. இறைச்சி கொண்டு வந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றும் பொம்மனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
Aug 26, 2024 13:55 ISTசென்னையில் தீ விபத்து!
சென்னை வேளச்சேரியில் பேன்ஸி ஸ்டோரில் பயங்கர தீ விபத்தால் கடும் புகை மூட்டம் நிலவுகிறது. 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தீ விபத்தால் வேளச்சேரி பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
Aug 26, 2024 13:53 IST'உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி' - வானிலை ஆய்வு மையம் தகவல்
``வரும் 29ம் தேதி, மத்திய கிழக்கு, அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு'' என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Aug 26, 2024 13:11 ISTகிணற்றில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு
தூத்துக்குடி, கோவில்பட்டி அருகே கூசாலிப்பட்டி கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கிணற்றில் நீச்சல் அடித்துக் குளித்துக்கொண்டிருந்த நிலையில், ஆகாஷ் (14), சாமுவேல் (14) ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சடலங்களைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Aug 26, 2024 12:41 ISTவேட்பாளர் பட்டியலை திரும்பப் பெற்றது பாஜக
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்காக வெளியிடப்பட்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக திரும்பப் பெற்றுள்ளது. 44 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை இன்று அக்கட்சி வெளியிட்ட நிலையில், அது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
-
Aug 26, 2024 12:38 ISTமீனாட்சியம்மன் கோயிலுக்குள் என்னை அனுமதிக்கவில்லை: நமீதா வீடியோ
“எத்தனையோ கோயிலுக்கு போயிருக்கேன். ஆனா இப்படி நடந்தது இல்ல” - நடிகை நமீதா குற்றச்சாட்டு#SunNews | #Namita | #Madurai pic.twitter.com/Df4Q2D8Ob4
— Sun News (@sunnewstamil) August 26, 2024 -
Aug 26, 2024 11:58 ISTலடாக்கில் புதிய 5 மாவட்டங்கள்
யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிய 5 மாவட்டங்களை உருவாக்கி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
ஸன்ஸ்கார், த்ராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் ஆகிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன
-
Aug 26, 2024 11:20 ISTஅண்ணா பல்கலை. சிண்டிகேட் கூட்டத்தில் புதிய முடிவு
தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளில், மாணவர்களின் கல்வித்தரத்தை ஆய்வு செய்ய அனைத்து செமஸ்டர்களிலும் ஒரு பாடத்திற்கு பல்கலைக்கழகமே வினாத்தாள் தயாரித்து, தேர்வு நடத்தி, வினாத்தாள் திருத்தம் செய்து மதிப்பெண்கள் வழங்க அண்ணா பல்கலை. சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு
தமிழ்நாட்டில் 116 பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அந்தஸ்தில் இயங்குகின்றன. இக்கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. பாடத்திட்டம் வழங்கினாலும் சொந்தமாகவே வினாத்தாள் தயாரித்து, தேர்வுகளை இக்கல்லூரிகளே நடத்துகின்றன
-
Aug 26, 2024 10:46 ISTதுரைமுருகன் உடனான நட்பு தொடரும்- ரஜினி
"அமைச்சர் துரைமுருகன் உடனான நட்பு தொடரும்"
அமைச்சர் துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர் - ரஜினிகாந்த்
-
Aug 26, 2024 10:31 ISTதங்கம் விலையில் மாற்றமில்லை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ₹6,695க்கும் ஒரு சவரன் ₹53,560க்கும் விற்பனை!
-
Aug 26, 2024 10:04 ISTபெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை
பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை. குற்றவாளிகள் யாரும் தப்பிவிடக் கூடாது என மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு
-
Aug 26, 2024 10:03 ISTஇஸ்கான் கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகள்
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, சென்னை அக்கறையில் உள்ள இஸ்கான் கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகள்
விழாவையொட்டி கிருஷ்ண கீர்த்தனைகள் அரங்கேற்றம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
கிருஷ்ணர், ராதை உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேகம் ஆராதனை
-
Aug 26, 2024 09:30 ISTமுதலீடுகளை ஈர்க்க ஸ்டாலின் நாளை அமெரிக்கா பயணம்
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா புறப்படுகிறார். நாளை இரவு அமெரிக்கா புறப்படும் ஸ்டாலின் அங்கு 17 நாட்கள் தங்கி பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார். செப்.12-தேதி சென்னை திரும்புகிறார்.
-
Aug 26, 2024 08:58 ISTஅண்ணா அறிவாலயத்தில் மது பாட்டில் வீச்சு
திமுக தலைமை அலுவலகத்தில் மது பாட்டில் வீச்சு
திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் மது பாட்டில் வீச்சு
பீர் பாட்டிலை வீசிய அதிமுக முன்னாள் நிர்வாகியை பிடித்த சென்னை தேனாம்பேட்டை போலீசார்
-
Aug 26, 2024 08:42 ISTஆம்ஸ்ட்ராங் கொலை - கைதானவருக்கு நெஞ்சுவலி
ஆம்ஸ்ட்ராங் கொலை - கைதானவருக்கு நெஞ்சுவலி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருமலை என்பவருக்கு திடீர் நெஞ்சுவலி
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
-
Aug 26, 2024 08:03 ISTஅமெரிக்க ஓபன் - இன்று தொடக்கம்
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன் தொடர் இன்று துவக்கம்.
முன்னணி வீரர்கள் ஜோகோவிச், அல்கராஸ், சின்னர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.