/indian-express-tamil/media/media_files/STrfVSZKHXHCy6w4icNw.jpg)
பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 173-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 34.66% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 34.37% ;
புழல் - 71.97% ; பூண்டி - 2.66% ; சோழவரம் - 5.36% ; கண்ணன்கோட்டை - 60.6%
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Sep 06, 2024 21:11 IST
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 64,217 போலீஸ் பாதுகாப்பு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 64,217 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று டிஜிபி சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.
-
Sep 06, 2024 20:43 IST
போதை மாத்திரை விற்பனை செய்த வடமாநில நபர் கோவையில் கைது
போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த வடமாநில நபரை கோவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சச்சின், கர்க்-ன் துலீப் பயோடெக் என்ற நிறுவனத்தில் இருந்து 20,000 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், போலியான ஜி.எஸ்.டி பில் தயாரித்து மாத்திரைகள் விற்பனை செய்து வந்தது அம்பலமாகியுள்ளது. இமாச்சலப் பிரதேசம் - ஹரியானா எல்லையில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது.
-
Sep 06, 2024 20:40 IST
சிலிண்டர் வெடித்ததால் உணவகத்தில் பயங்கர தீ
கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள கடைக்குள் இருந்த சிலிண்டர் வெடித்ததால் உணவகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
Sep 06, 2024 17:53 IST
பள்ளியில் சொற்பொழிவாளர் சர்ச்சை பேச்சு: இ.பி.எஸ் கண்டனம்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி: “அரசு உதவி பெறும் பள்ளியில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிக்க எப்படி அனுமதித்தனர்? சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த நபர் பல்வேறு அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பள்ளியில் சர்ச்சை கருத்துகளைப் பேசியது கண்டனத்துக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.
-
Sep 06, 2024 17:06 IST
த.வெ.க மாநாடு: காவல்துறையின் 21 கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார் புஸ்ஸி ஆனந்த்
விஜய் தொடங்கியுள்ள த.வெ.க கட்சி மாநாடு தொடர்பான காவல்துறையின் 21 கேள்விகளுக்கு த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்தார். செப். 23-ல் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது.
-
Sep 06, 2024 17:03 IST
மணலி புதுநகர் அருகே குழாய் உடைந்து எரிவாயு கசிவு
திருவள்ளுர் மாவட்டம், மணலி புதுநகர் அருகே வெள்ளிவாயல்சாவடியில் பூமியில் புதைக்கப்பட்ட இயற்கை எரிவாயு குழாயில் உடைப்பு ஏற்பட்டு எரிவாயு கசிந்து வான்நோக்கி புகைமண்டலமாகச் செல்கிறது. எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்லாத வண்ணம் காவல்துறையினர் திவீர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
Sep 06, 2024 17:01 IST
பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
பாரிஸ் பாராலிம்பிக் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்றார்.
-
Sep 06, 2024 16:59 IST
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு - அரசாணைவெளியீடு
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தபடி, தமிழக அரசு அரசாணை வெளியிட்ட்டுள்ளது.
-
Sep 06, 2024 16:50 IST
விஜய் மாநாடு விஷயத்தில் காவல்துறை நடவடிக்கை ஏன் பெரிதுபடுத்தப்படுகிறது - டி.டி.வி. தினகரன்
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்: “மாநாடு, கட்சி தொடங்கும்போது காவல்துறை கேள்வி கேட்பது இயலபுதான்; விஜய் மாநாடு விஷயத்தில் காவல்துறை நடவடிக்கை ஏன் பெரிதுபடுத்தப்படுகிறது என தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார். -
Sep 06, 2024 16:02 IST
அரசுப் பள்ளியில் சர்ச்சை பேச்சு: சொற்பொழிவாளர் அறக்கட்டளை குறித்து போலீஸ் விசாரணை
அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சொற்பொழிவாளர் அறக்கட்டளை குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். பல நாடுகளில் கிளைகளைக் கொண்ட பரம்பொருள் அறக்கட்டளை - பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளையில் போலீசார், உளவுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவில் இதற்கு கிளை இருப்பது தெரியவந்துள்ளது. அறக்கட்டளையை நடத்தும் மகாவிஷ்ணு என்பவர் தற்போது ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும், சில தினங்களில் இந்தியா வருவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மகா விஷ்ணுவின் பின்னணி, அறக்கட்டளையின் வருவாய் மற்றும் என்னென்ன பணிகளில் ஈடுபடுகிறது, எந்தெந்த பள்ளிகளில் என்னென்ன தலைப்புகளில் அவர் பேசியுள்ளார் என்ற பல கோணத்தில் விசாரணை நடக்கிறது.
-
Sep 06, 2024 15:44 IST
காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா காங்கிரஸில் இணைந்தனர். சமீபத்தில் ராகுல்காந்தியை இருவரும் சந்தித்த நிலையில், காங்கிரஸில் இணைந்தனர். ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வினேஷ் போகத் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Sep 06, 2024 15:38 IST
பள்ளிக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை
பள்ளிக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்த அறிவுறுத்தலை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். பள்ளியில் அரசு சாராத என்ன நிகழ்ச்சிகள் நடத்தினாலும் அனுமதி பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Sep 06, 2024 15:25 IST
ரயில்வே பதவியை ராஜினாமா செய்த வினேஷ் போகத்
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார் என தகவல் பரவி வரும் நிலையில், இந்திய ரயில்வேயில் அவர் வகித்து வந்த பொறுப்பில் இருந்து அவர் ராஜினாமா செய்துள்ளார்.
-
Sep 06, 2024 15:24 IST
அதிக அளவில் வெளியேறிய புகை தஞ்சையில் பரபரப்பு!
தஞ்சாவூர் சாலையில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த மினி பேருந்திலிருந்து அதிக அளவில் புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் பயணிகளைக் கீழே இறக்கிவிட்டு பேருந்து எஞ்சினை நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
-
Sep 06, 2024 15:23 IST
'தி கோட்' திரைப்படத்தின் வெற்றி விழா: கேக் வெட்டி கொண்டாடிய நடிகை சினேகா!
நடிகர் விஜயின் 'தி கோட்' திரைப்படத்தின் வெற்றி விழா: ஈஞ்சம்பாக்கம் விஜய் பார்க் திரையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார் நடிகை சினேகா.
#Photos | நடிகர் விஜயின் 'The GOAT' திரைப்படத்தின் வெற்றி விழா - ஈஞ்சம்பாக்கம் விஜய் பார்க் திரையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார் நடிகை சினேகா.#SunNews | #TheGOAT | #Vijay | #Sneha pic.twitter.com/0SZiVOFdqK
— Sun News (@sunnewstamil) September 6, 2024 -
Sep 06, 2024 15:22 IST
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது புரோக்கர்கள் மற்றும் அலுவலர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 70,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 15-க்கும் மேற்பட்ட புரோக்களையும் பிடித்து அவர்களது செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
-
Sep 06, 2024 15:03 IST
பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரிக்கை
"மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிகளில் தனியார் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க கூடாது" என்றும், துறையின் அனுமதி இல்லாமல் யாருக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மகா விஷ்ணு விவகாரம் சர்ச்சையான நிலையில் அதிரடியான கருத்து தெரிவித்துள்ளார்.
-
Sep 06, 2024 14:24 IST
அரசுப் பள்ளியில் பிற்போக்கு உரை - தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்
அசோக்நகர் அரசுப் பள்ளியில் பிற்போக்கு உரையாற்றிய மகா விஷ்ணு என்ற நபர், சைதாப்பேட்டை அரசுப் பள்ளியிலும் பேசிய விவகாரத்தில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, அசோக் நகர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பித்தக்கது.
-
Sep 06, 2024 14:23 IST
சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சை - பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை
சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சை விவகாரத்தில், பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
Sep 06, 2024 13:00 IST
உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் கீழமை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
-
Sep 06, 2024 12:50 IST
ஆஸ்திரேலியா சென்ற மகா விஷ்ணு
அரசுப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகா விஷ்ணு தற்போது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார்
-
Sep 06, 2024 12:46 IST
எங்கெல்லாம் பிற்போக்குத் தனங்கள் எட்டிப்பார்க்கிறதோ அங்கெல்லாம் சங்கர்கள் எழுந்து நிற்கட்டும் -அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
ஆசிரியர் திரு.சங்கர் போன்றோரே முற்போக்குக் கல்வியின் முன்கள வீரர்கள் ! அப்படியான ஆசிரியர்களை அரவணைத்துக் கொண்டாடும் மாண்புமிகு முதல்வர் @mkstalin
— Dr. T R B Rajaa (@TRBRajaa) September 6, 2024
அவர்களின் #திராவிட_மாடல் ஆட்சி இது!
எங்கெல்லாம் பிற்போக்குத் தனங்கள் எட்டிப்பார்க்கிறதோ அங்கெல்லாம் சங்கர்கள் எழுந்து நிற்கட்டும்… https://t.co/gQSmf4Ne9f pic.twitter.com/4542r5jwAi -
Sep 06, 2024 12:07 IST
பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு: தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம்
பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்த விவகாரத்தில் அரசு முதற்கட்ட நடவடிக்கை
இவ்விவகாரத்தில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது
-
Sep 06, 2024 11:46 IST
ஆன்மிக சொற்பொழிவு: பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையில் குழு அமைப்பு
சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்திய விவகாரத்தில் விசாரணை நடத்த பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் குழு அமைப்பு
மாற்றுத்திறனாளி ஆசிரியர் அவமதிப்பு தொர்பாக போலீசாரும் விசாரணையை தொடங்கியுள்ளனர்
-
Sep 06, 2024 11:17 IST
பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்: முக்கிய குற்றவாளி கைது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் டி.எஸ்.பி. காயத்ரி தாக்கப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான முருகேசனை போலீசார் கைது செய்தனர்.
கைதுசெய்த போது தப்பியோட முயன்று கீழே விழுந்ததில் கையில் அடிபட்ட முருகேசனுக்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
-
Sep 06, 2024 11:13 IST
பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு: காவல் உதவி ஆணையர் பள்ளியில் விசாரணை
ஆன்மீக சொற்பொழிவு நடந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்த நிலையில், அசோக் நகர் காவல் உதவி ஆணையர் பள்ளியில் விசாரணை
சம்பவம் நடந்த அன்று பள்ளியில் என்ன நடந்தது என்பது குறித்து ஆசிரியர்கள், தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
-
Sep 06, 2024 10:53 IST
தவறு யார் செய்தாலும் கண்டிப்பாக தண்டனை உண்டு: அன்பில் மகேஷ்
பள்ளியில் மாணவர்கள் உணர்ச்சி பெருக்கோடு இருக்கக்கூடாது. யார் வந்தாலும் விசாரிக்க வேண்டும்.
பள்ளிக்கு வருபவரின் பின்னணியை விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
பள்ளிக்கு யார் வரவேண்டும்? யார் வரக்கூடாது என்பதில் ஆசிரியர்களுக்கு தெளிவு வேண்டும்.
ஆன்மிக சொற்பொழிவாளரை தட்டிக்கேட்ட ஆசிரியர் சங்கர் மேடையில் நம்முடன் இருக்கிறார்.
நிகழ்ச்சிகளுக்கு நிர்வாக ரீதியாக எப்படி அனுமதி பெறவேண்டும் என்ற குறைந்தபட்ச புரிதல் ஆசிரியர்களுக்கு வேண்டும்.
இதை எச்சரிக்கையாகவோ, அறிவுரையாகவோ ஆசிரியர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தவறு யார் செய்தாலும் தப்பிக்க முடியாது. கண்டிப்பாக தண்டனை உண்டு.
அறிவியல் சார்ந்த சமுதாயத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் கொள்கை.
யாரை வேண்டுமானாலும் பள்ளிக்கு அழைத்து வந்து பேசவிட்டு கைதட்ட கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ்.
-
Sep 06, 2024 10:10 IST
இனி இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வகையில் நடவடிக்கை: அன்பில் மகேஷ்
சென்னை அரசுப் பள்ளி நிகழ்வில் ஆன்மீக சொற்பொழிவாளர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நாங்கள் எடுக்கப் போகும் நடவடிக்கை தமிழ்நாட்டில் இனி இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வகையில் ஒரு மிகப் பெரிய பாடமாக இருக்கும். இந்த விவகாரத்தில் உங்களுக்கு இருக்கும் அதே உணர்வு தான் முதல்வருக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் உள்ளது- அமைச்சர் அன்பில் மகேஷ்
-
Sep 06, 2024 09:54 IST
பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகள்- ஸ்டாலின்
தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன்: முதல்வர் ஸ்டாலின் பதிவு
-
Sep 06, 2024 09:21 IST
அரசுப் பள்ளியில் சர்ச்சை பேச்சு: ஸ்டாலின் பதிவு
அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி- ஸ்டாலின்
மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன. தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் - அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன்- ஸ்டாலின் X பதிவு
-
Sep 06, 2024 09:16 IST
அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு - விசாரணை
சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் மகா விஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தியது தொடர்பாக அப்பள்ளியில் விசாரணைக் குழு நேரில்ஆய்வு செய்ய உள்ளதாக தகவல். முன்ஜென் தவறுகால் மாற்றுத் திறனாளியாக பிறக்கிறார்கள் என பேசிய விஷ்ணுவின் பேச்சை கண்டித்த பார்வை மாற்றுத் திறனானி ஆசிரியரையும் அவர் மரியாதை குறைவாக பேசியுள்ளார்.
-
Sep 06, 2024 08:33 IST
ஆந்திராவில் மத்தியக் குழு இன்று ஆய்வு
ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்று ஆய்வை தொடங்குகிறது மத்தியக் குழு. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என சிவராஜ்சிங் சவுகான் உறுதி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.