தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.
சேலம், ஈரோடு, கோவையில் முதலமைச்சர் ஆய்வு :
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிடுகிறார். மேலும், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசிக்க
உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி :
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில், விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும், ஓரிரு நாள்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
மாநகரப் பேருந்துகளில் மகளிர்க்கான இலவச பயணம் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், பேருந்து நிறுத்தத்தில் ஒரு பயணி நின்றால் கூட பேருந்து நிறுத்தப்பட்டு அவரை ஏற்றிக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. பேருந்தில் பயணிக்கும் பெண்களிடம் கோபமாகவோ, இழிவாகவோ, ஏழனமாகவோ நடத்துனர்கள் பேசக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் 382 கடைகளிக்கு சீல் :
கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு காலத்தில் கொரோனா வழிமுறைகளை மீறி செயல்பட்டதாக, சென்னையில் ஒரு மாதத்தில் மட்டும் 382 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தனிநபர், நிறுவனம் என ஊரடங்கு விதிகளை மீறியோரிடம் இருந்து ஒரு மாதத்தில் மட்டும் 1.63 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 21:49 (IST) 19 May 2021டிவி நிகழ்ச்சி செட்டில் 6 பேருக்கு கொரோனா - விதிகளை பின்பற்றாததால் படப்பிடிப்பு தளத்திற்கு சீல்
சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் மலையாள தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்; விதிகளை பின்பற்றாததால் ரியாலிட்டி ஷோ நடைபெற்ற படப்பிடிப்பு தளத்திற்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- 20:37 (IST) 19 May 2021தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 34,875 பேருக்கு கொரோனா; 365 பேர் பலி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 34,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு மொத்தம் 16,99,225 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 365 பேர் உயிரிழந்தனர்.
- 20:00 (IST) 19 May 2021பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதரண விடுப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவைத்து வரும் பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களுக்காக 30 நாட்கள் சாதாரண விடுப்பு அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
- 19:14 (IST) 19 May 2021பதாகைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும்; திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
கொரோனா தடுப்ப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள சேலம், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறேன்; பொதுமக்களைப் பாதுகாக்கும் பணிகள் தொடர்பான ஆய்வு என்பதால் திமுக நிர்வாகிகள் எவரையும் சந்திக்க இயலாத சூழலில் இருக்கிறேன். எனக்கு வரவேற்பு கொடுக்கும் எண்ணத்தில் திமுக கொடிகளைக் கட்டுவதையும் பதாகைகள் வைப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- 18:53 (IST) 19 May 2021திருமண விழா இ-பதிவு: புதிய விதிமுறை
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வெளியூர்களுக்கு செல்பவர்களுக்கு இ.பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களின் அத்தனை வாகன எண்களும் ஒரே இ-பதிவில் வரவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- 18:47 (IST) 19 May 2021மருத்துவர்கள், உள்ளிருப்பு போராட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு மருத்துவமனையில், நோயாளிகளின் உறவினர்கள் மிரட்டுவதாக கூறி மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 18:23 (IST) 19 May 2021ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கியது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட பழுதுகள் சரி செய்யப்பட்ட நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கியது. இதில் இன்று உற்பத்தி செய்யப்பட்ட 6.34 மெட்ரிக் டன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
- 18:04 (IST) 19 May 2021தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் முதல்வர் ஆலோசனை
30 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் முதல்வர் ஸ்டாலின், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், தொண்டு நிறுவனங்களின் பணிகளை முறைப்படுத்த குழு அமைக்கப்படும் என்றும், பணிகளை ஒதுக்கீடு செய்ய கட்டளைகள் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
- 17:26 (IST) 19 May 2021விஜயகாந்துக்கு ஸ்டாலின் வாழ்த்து
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 16:54 (IST) 19 May 2021டவ் தே புயல், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் -பிரதமர் மோடி அறிவிப்பு
டவ் தே புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் , காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
- 15:55 (IST) 19 May 202112 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம், அலகுத்தேர்வு
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம், அலகுத்தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசுத் தேர்வுகள் இயக்ககம். மாணவர்கள் விடைகளை எழுதி, பெற்றோர் கையொப்பம் பெற்று, PDF வடிவில் அனுப்ப வேண்டும். பொதுத்தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், அலகுத்தேர்வு மதிப்பெண்களை கொண்டு தேர்வு முடிவுகளை வெளியிட திட்டம். கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் பொதுத்தேர்வு நடத்துவது சந்தேகம் என்பதால் தேர்வுத்துறை நடவடிக்கை.
- 15:13 (IST) 19 May 2021தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 14:55 (IST) 19 May 202118 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி : நாளை திருப்பூரில் துவக்கம்
தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் நாளை திருப்பூரில் துவங்க உள்ளது. மாநில முதல்வர் முக ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.
- 14:44 (IST) 19 May 2021இந்தியா சார்பாக கெஜ்ரிவால் பேசவில்லை - வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்
உருமாற்றம் அடைந்த சிங்கப்பூர் வைரஸ் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதற்கு சிங்கப்பூர் அரசு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இந்தியா சார்பாக கெஜ்ரிவால் பேசவில்லை. சிலரின் பொறுப்பற்ற பேச்சுகளால் இருநாட்டு உறவில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
- 14:44 (IST) 19 May 2021இந்தியா சார்பாக கெஜ்ரிவால் பேசவில்லை - வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்
உருமாற்றம் அடைந்த சிங்கப்பூர் வைரஸ் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதற்கு சிங்கப்பூர் அரசு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இந்தியா சார்பாக கெஜ்ரிவால் பேசவில்லை. சிலரின் பொறுப்பற்ற பேச்சுகளால் இருநாட்டு உறவில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
- 14:42 (IST) 19 May 2021முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 1 லட்சம் வழங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்
முதல்வர் நிவாரண நிதிக்கும், ஃபெப்சி யூனியனுக்கும் தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
- 14:16 (IST) 19 May 2021அனைத்துக் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவி தொகை - எடப்பாடி பழனிசாமி
பதிவுபெற்ற மற்றும் பதிவுபெறாத தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துக் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவி தொகை வழங்கிட வலியுறுத்தி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- 13:57 (IST) 19 May 2021மிதவைக் கப்பல் மூழ்கியதில் 14 பேர் பலி
மும்பை அருகே மிதவைக் கப்பல் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 14 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு. 70 நபர்களை தேடும் பணி மூன்றாவது நாளாக தொடர்ந்து வருகிறது.
- 13:55 (IST) 19 May 2021அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2,000 நிவாரணம் அரசு வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2,000 நிவாரணம் அரசு வழங்க வேண்டும் என்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
- 13:21 (IST) 19 May 2021கி.ராவின் உடல் தகனம் செய்யப்பட்டது
குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எழுத்தாளர் கி.ராவின் உடல் தூத்துக்குடி மாவட்டம் இடைசெவலில் தகனம் செய்யப்பட்டது. தமிழக வரலாற்றில் எழுத்தாளார் ஒருவருக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
- 13:14 (IST) 19 May 2021முதலிடம் பிடித்த தமிழகம்
கடந்த 24 மணி நேரத்தில் 10 மாநிலங்களில் 74% பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டிய நிலையில், தினசரி கொரோனா பாதிப்பில் முதலிடத்தை பிடித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 33, 059 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- 13:07 (IST) 19 May 202125 தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் விநியோகம் - முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
ரெம்டிசிவிர் மருந்துக்காக மக்கள் நாட்கணக்கில் காத்து கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக மருந்துகள் விற்பனை செய்ய அரசு முடிவெடுத்ததுள்ளது. இதன்படி 294 தனியார் மருத்துவமனைகள் இதற்காக விண்ணப்பம் செய்திருந்தனர். அதில் 172 மருத்துவமனைகள் உடனடி தேவை என்ற அடிப்படையில் பதிவு செய்திருந்தனர். அதனை தொடர்ந்து முதல் கட்டமாக 25 தனியார் மருத்துவமனைகளுக்கு 960 ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்கினார் முதல்வர்.
- 13:03 (IST) 19 May 2021வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் மழை இருக்கும்?
நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் முனைவர் நா. புவியரசன்.
- 12:20 (IST) 19 May 2021மறைந்த எழுத்தாளர் கி.ரா.வின் இறுதி ஊர்வலம்
மறைந்த எழுத்தாளர் கி.ரா.வின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. சற்றுநேரத்தில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
- 12:17 (IST) 19 May 2021ஐசியூ படுக்கை வேண்டி ட்வீட் செய்த பேராசிரியை மரணம்
ட்விட்டரில் தனக்கு ஒரு ஐ.சி.யூ படுக்கை வேண்டும் என கோரிக்கை வைத்த ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றிய 38 வயதான டாக்டர் நபிலா சாதிக் திங்கள்கிழமை இரவு ஃபரிதாபாத் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
- 12:16 (IST) 19 May 2021தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, இடியுடன் கூடிய மழையும் திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கும் வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 11:40 (IST) 19 May 2021இறந்த காவல்துறையினரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க கோரிக்கை
கொரோனா பாதுகாப்புப் பணியில் இறந்த காவல்துறையினரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.
- 11:00 (IST) 19 May 2021எழுத்தாளர் கி.ரா வின் உடல் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்!
கரிசல் எழுத்துகளின் ‘முன்னத்தி ஏர்’ கி.ராஜநாராயணன் நேற்று மறைந்த நிலையில், அவரது சொந்த ஊரில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது..
- 10:57 (IST) 19 May 2021டபுள் மாஸ்க் நல்லது; முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில், மாஸ்க் அணிவது உள்ளிட்ட பல விழிப்புனர்வு வழிகளை மக்களுக்கு வலியுறுத்தி உள்ளார். வீடியோவில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் டபுள் மாஸ்க் நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதை குறிப்பிட்ட முதல்வர், ஆலைகள், பேருந்துகள், அலுவலகங்கள், மருத்துவமனைகளில் இருக்கும் போது, டபுள் மாஸ்க் அணிய முதல்வர் ஸ்டாலின் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.