Advertisment

Tamil News Highlights : அதி கனமழை எச்சரிக்கை : 18 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

Latest Tamil News : கரூரில் பள்ளி மாணவிக்கு மருத்துவர் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மருத்துவர் ரஜினிகாந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தது தனிப்படை போலீஸ்

author-image
WebDesk
New Update
Tamil News Highlights : அதி கனமழை எச்சரிக்கை : 18 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

Tamil news highlights : சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. ஸ்டாலின் தலைமையில் நான்காவது முறையாக நடைபெறும் இந்த அமைச்சரவை கூட்டத்தில், மழை வெள்ளப்பாதிப்பு, நிவாரண நிதி அறிவிப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ள பாதிப்பு நடவடிக்கையின் போது அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து, இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்துதல் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

நடிகர் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது சூரியா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. ஜெய்பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினை தவறாக சித்தரிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சிலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்வாறு கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், எழும்பூர் ஆயதப்படையை சேர்ந்த காவலர்கள் 5 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நினைவஞ்சலி செலுத்தும் விதமாகக் கர்நாடக திரைப்பட சம்மேளனம் சார்பில் கலைத்துறையினர் பங்கேற்கும் விழா பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நடிகர் புனித் ராஜ்குமார் கர்நாடக மக்களின் மனதில் எந்த அளவு இடம் பிடித்துள்ளார் என்பதற்கு அவருடைய இறுதிச் சடங்கில் பங்கேற்ற மக்கள் கூட்டம் சாட்சியாக அமைந்துள்ளது என்று கூறினார். பிறகு, கர்நாடக அரசு சார்பில்,  கர்நாடக ரத்னா என்ற உயரிய விருது வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.101.40-க்கும், டீசல் லிட்டர் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:49 (IST) 17 Nov 2021
    முதல் டி20 கிரிக்கெட்; நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

    முதல் டி20 கிரிக்கெட்டில் இந்தியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது



  • 21:58 (IST) 17 Nov 2021
    ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

    ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் நடந்த 2 என்கவுண்டர் சம்பவங்களில் தீவிரவாதிகளின் தளபதி உள்பட 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.



  • 20:59 (IST) 17 Nov 2021
    முதல் டி20 : இந்தியாவுக்கு 165 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து

    இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபபட்சமாக கப்தில் 70, சாப்மேன் 63 ரன்கள் சேர்த்தனர்.



  • 20:47 (IST) 17 Nov 2021
    அதி கனமழை எச்சரிக்கை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது



  • 20:27 (IST) 17 Nov 2021
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

    கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்



  • 20:14 (IST) 17 Nov 2021
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

    கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.



  • 20:13 (IST) 17 Nov 2021
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

    கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.



  • 20:05 (IST) 17 Nov 2021
    இன்னொரு ஹீரோ கிட்டேருந்து வாழ்த்து - ஜெய் பீம் படத்தை பாராட்டிய சூரிக்கு சூர்யா நன்றி

    இன்னொரு ஹீரோ கிட்டேருந்து வாழ்த்து வாங்குறது சந்தோஷமா இருக்கு என ஜெய் பீம் படத்தை பாராட்டிய சூரிக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்



  • 20:02 (IST) 17 Nov 2021
    இன்னொரு ஹீரோ கிட்டேருந்து வாழ்த்து - ஜெய் பீம் படத்தை பாராட்டிய சூரிக்கு சூர்யா நன்றி

    இன்னொரு ஹீரோ கிட்டேருந்து வாழ்த்து வாங்குறது சந்தோஷமா இருக்கு என ஜெய் பீம் படத்தை பாராட்டிய சூரிக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்



  • 19:20 (IST) 17 Nov 2021
    திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை -மாவட்ட ஆட்சியர் உத்தரவு

    வடகிழக்கு பருவமழையால் கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.



  • 19:12 (IST) 17 Nov 2021
    சட்டமன்றம் அனுப்பும் கோப்புகள் மீது ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடு தேவை – சபாநாயகர் அப்பாவு

    கோப்புகளை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் மரபு இருந்தும் ஆளுநர்கள் அதைச் செய்வதில்லை. சட்டமன்றங்கள் அனுப்பும் கோப்புகள் மீது ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என சிம்லாவில் நடைபெற்ற சபாநாயகர்கள் மாநாட்டில் தமிழக சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தியுள்ளார்



  • 18:02 (IST) 17 Nov 2021
    ரூ500 கோடி மதிப்பில் கிராவல் மண் எடுத்த விவகாரம்; ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி ஐகோர்ட்டில் மனு

    அரசு நிலத்தில் அனுமதியின்றி ரூ.500 கோடி மதிப்பில், கிராவல் மண் எடுத்த விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அவரது உதவியாளர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊழல் கண்காணிப்பு ஆணைய ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.



  • 17:56 (IST) 17 Nov 2021
    ஆள்கடத்தல் வழக்கில் அதிமுக மாநில நிர்வாகி டி.ஆர்.அன்பழகன் கைது

    கல்குவாரியில் பணிபுரிந்த இரு இளைஞர்களை கடத்திய வழகில் தருமபுரி மாவட்டம், தாளப்பள்ளத்தைச் சேர்ந்த அதிமுக விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் டி.ஆர். அன்பழகன் கது செய்யப்பட்டுள்ளார். கடத்தலில் அவருக்கு உதவியாக இருந்த மகேந்திரன், முருகன் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.



  • 17:27 (IST) 17 Nov 2021
    ராஷ்டிரபதியில் அத்துமீறி நுழைந்த 2 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்!

    டெல்லி ராஷ்டிரபதியில் அத்துமீறி நுழைய முயன்ற ஆணுக்கும், பெண்ணுக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.



  • 17:22 (IST) 17 Nov 2021
    ஓரிரு மணி நேரத்தில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 29 மாவட்டங்கள்ல் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 17:17 (IST) 17 Nov 2021
    அதிகரித்த காற்றுமாசு: டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

    டெல்லியில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் காற்றுமாசு காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் காற்றுமாசுவைக் கட்டுப்படுத்துவதில் அரசு இயந்திரம் முழுமையாக தோல்வியடைந்து விட்டதாக உச்ச நீதிமன்றம் டெல்லி அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளது. மேலும் இயற்கை வந்து காப்பாற்றும் என அரசு நினைத்துக் கொண்டிருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளது.



  • 17:03 (IST) 17 Nov 2021
    ஆந்திர மாநில ஆளுநருக்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி!

    ஆந்திர மாநில ஆளுநர் பிஸ்வா புஸன் ஹரிச்சந்திரனுக்கு லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால், உடனடியாக அவர் ஹைதரபாத்தில் உள்ள எஐஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • 16:51 (IST) 17 Nov 2021
    உள்நாட்டில் வடிவமமைக்கப்பட்ட போர் ஹெலிஹாப்டர்களை ராணுவத்திடம் ஒப்படைக்கும் மோடி!

    உத்தரபிரதேச மாநிலம், ஜான்சியில் நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் விழாவில், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட இலகுரக ஹெலிஹாப்டர்களை பிரதமர் மோடி இந்திய ராணுவத்துக்கு ஒப்படைக்கிறார். அந்த விமானத்தின் பிரேத்தியக காட்சிகள் இதோ!



  • 16:35 (IST) 17 Nov 2021
    அனுமதியின்றி இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு தடை விதிக்க உத்தரவு

    புதுச்சேரிக்கு இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு தமிழக போக்குவரத்து துறையின் உரிமம் அவசியம் என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் கடலூரில் இருந்து உரிய அனுமதியின்றி இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.



  • 16:33 (IST) 17 Nov 2021
    சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் மீதான கொலை வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்து விரைவில் பதிலளிக்க வேண்டும் என்று சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 16:32 (IST) 17 Nov 2021
    தமிழகம் முழுவதும் கனமழை

    நெல்லை மாவட்டம் ராதாபுரம், பணகுடி, வடக்கன்குளம் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் வடக்கில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தியாகதுருகம், கச்சிராயபாளையம், வெள்ளிமலை, சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.



  • 16:31 (IST) 17 Nov 2021
    தமிழகம் முழுவதும் கனமழை

    நெல்லை மாவட்டம் ராதாபுரம், பணகுடி, வடக்கன்குளம் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் வடக்கில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தியாகதுருகம், கச்சிராயபாளையம், வெள்ளிமலை, சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.



  • 15:18 (IST) 17 Nov 2021
    ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவராக கங்குலி

    ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவராக இருந்த அணில் கும்ளேவின் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய ஐசிசி கமிட்டி தலைவராக பிசிசிஐ தலைவ கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.



  • 14:44 (IST) 17 Nov 2021
    பொங்கல் தொகுப்பில் கரும்பும் வழங்கப்படும் - அமைச்சர் சக்கரபாணி

    தமிழகத்தில் பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையை பொறுத்து டோக்கன் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுப்பார்கள் என்று கூறியுள்ள அமைச்சர் சக்கரபாணி பொங்கல் தொகுப்பில் கரும்பும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.



  • 14:40 (IST) 17 Nov 2021
    சென்னைக்கு கனமழை எச்சரிக்கை

    சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார். மேலும் தாழ்வான பகுதிகளில் 684 தண்ணீர் இறைக்கும் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.



  • 14:39 (IST) 17 Nov 2021
    இயக்குநர் மற்றும் நடிகர் ஆர்.என்.ஆர்.மனோகரன் மரணம்

    தமிழ் திரையுலகில் இயக்குநர் மற்றும் நடிகரான ஆர்.என்.ஆர் மானோகரன் உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்தார். கடைசியாக இவர் ஆர்யாவின் டெடி படத்தில் நடித்திருந்தார். மேலும் புன்னகை பூவே உள்ளிட்ட சில படங்களில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். மாசிலாமணி மற்றும் வேலூர் மாவட்டம் என்ற இரு படங்களை இயக்கியுள்ளார்.



  • 13:43 (IST) 17 Nov 2021
    10 மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை

    குறைந்த காற்றழுத்ததாழ்வு பகுதி காரணமாக சென்னை வேலூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • 13:18 (IST) 17 Nov 2021
    சூர்யாவை தாக்குபவர்களுக்கு பரிசு தொகை அறிவித்த பாமகவினர் மீது வழக்குப்பதிவு

    நடிகர் சூர்யாவை எட்டி உதைப்பவருக்கு ரூபாய் 1 லட்சம் பரிசு அறிவித்த மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் மயிலாடுதறை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • 13:01 (IST) 17 Nov 2021
    4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்

    சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளார்.



  • 12:11 (IST) 17 Nov 2021
    சென்னை உட்பட 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

    திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 12:03 (IST) 17 Nov 2021
    செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு அதிகரிப்பு

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1500 கன அடியில் இருந்து 2000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வெள்ள பாதிப்பை தடுக்க நீர் திறக்கப்பட்டுள்ளது.



  • 11:39 (IST) 17 Nov 2021
    பொங்கலுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு அறிவிப்பு

    2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அரிசி குடும்ப அட்டைதார‌ர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு இடம்பெறும்.



  • 11:39 (IST) 17 Nov 2021
    பொங்கலுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு அறிவிப்பு

    2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அரிசி குடும்ப அட்டைதார‌ர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு இடம்பெறும்.



  • 11:07 (IST) 17 Nov 2021
    இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

    ஜெய்ப்பூரில் நடைபெறும் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ், ரோகித் சர்மா தலைமையில் முதன் முறையாக இந்திய அணி இன்று களமிறங்குகிறது.



  • 11:06 (IST) 17 Nov 2021
    உடனடி நிவாரணமாக ரூ.550 கோடி வழங்கவேண்டும்

    தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு ரூ.2,079 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உடனடி நிவாரணமாக ரூ.550 கோடி வழங்குமாறும் அமித்ஷாவிடம் டி.ஆர்.பாலு கோரிக்கைவிடுத்துள்ளார்.



  • 11:05 (IST) 17 Nov 2021
    புதிய கட்டடங்களை திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

    ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் புதிதாகக் கட்டப்பட்ட, பள்ளி, கல்லூரி விடுதிகளை தலைமைச் செயலகத்தில் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.



  • 10:28 (IST) 17 Nov 2021
    37 கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை சார்பில் புதிய முதல்வர்கள்

    அரசு கலை & அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், போட்டித்தேர்வு பயிற்சிக் கல்லூரிகள் என்று 37 பல்வேறு தரப்பட்ட கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



  • 10:26 (IST) 17 Nov 2021
    சட்ட பல்கலை. தேர்வுகளும் நேரடி முறையில் நடக்கும்

    சட்ட பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுகளும் நேரடி முறையில் நடைபெறும் என அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.



  • 10:03 (IST) 17 Nov 2021
    நவம்பர் 22-ல் தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம்

    பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து நவம்பர் 22-ம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



  • 09:43 (IST) 17 Nov 2021
    எழுத்தாளர், நடிகர் ‘பாரதி’ மணி காலமானார்

    பாட்டையா என அழைப்பட்ட எழுத்தாளரும் நடிகருமான கே.கே.எஸ்.மணி, வயது மூப்பின் காரணமாக மரணடைந்தார். தன்னுடைய இளமைக் காலங்களில் நாடகங்களில் நடித்த மணி, பின்னர் திரைப்படங்களிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தார். பாரதியாரின் வாழ்க்கை வரலாறு படமான பாரதியில், பாரதியாருக்கு தந்தையாக நடித்ததால் ‘பாரதி’ மணி என அழைக்கப்பட்டார்.



  • 09:40 (IST) 17 Nov 2021
    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    நேற்று இரவு சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்த நிலையில், இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்



  • 09:37 (IST) 17 Nov 2021
    இரவு நேரத்திலும் பிரேத பரிசோதனை செய்யலாம்

    போதிய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ள மருத்துவமனைகளில் மாலை மற்றும் இரவு நேரங்களிலும் பிரேதப் பரிசோதனை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.



  • 09:35 (IST) 17 Nov 2021
    மத்திய அமைச்சரவை கூட்டம்

    டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.



Stalin Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment