Advertisment

Tamil News Updates: மே 20-க்கு பிறகு சி.பி.எஸ்.இ. 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்

Tamil Nadu Live News Update Today- 3 May 2024- அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cbse exam

Tamil news

Tamil Nadu | Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

 பாலியல் புகாருக்கு, மேற்குவங்க ஆளுநர் ஆனந்த போஸ் விளக்கம்

என்னை கலங்கப்படுத்துவதன் மூலம் யாரேனும் தேர்தலில் ஆதாயம் அடைய விரும்பினால் கடவுள் அவர்களை ஆசிர்வதிப்பார். தன் மீதான பாலியல் புகாருக்கு, மேற்குவங்க ஆளுநர் ஆனந்த போஸ் விளக்கம். மேற்கு வங்கத்தில் ஊழல், வன்முறைக்கு எதிரான எனது போராட்டத்தை யாரும் தடுத்து நிறுத்த முடியாது - ஆளுநர் ஆனந்த போஸ். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 • May 04, 2024 07:06 IST
  பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

  மே 20 ஆம் தேதிக்கு பிறகு சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என சிபிஎஸ் இ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  அதேநேரம் தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வரும் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. • May 04, 2024 00:36 IST
  ரோகித் வெமூலா தலித் அல்ல: தெலங்கானா போலீஸ் அறிக்கை

  சாதி வன்கொடுமையால தற்கொலை செய்து கொண்ட ஹைதராபாத் ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமூலா தலித் அல்ல என தெலங்கானா போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
  ரோகித் வெமூலாவின் மரணம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. • May 03, 2024 23:30 IST
  சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய அறிவிப்பு

  சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் குறித்து இணையதளங்களில் போலியான தகவல்கள் பரவி வரும் நிலையில், சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே 20-ந் தேதிக்கு பின்னர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. • May 03, 2024 22:06 IST
  பழனி மக்களுக்கு குளிர்ச்சி தந்த மழை

  நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து மக்களுக்கு குளிர்ச்சியை தந்துள்ளது. • May 03, 2024 21:52 IST
  கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து

  சென்னையில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்தவர்கள் சென்ற மினி வேன், கோத்தகிரி மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு சிறுவன் உயிரிழந்த நிலையில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அமைந்துள்ளதாக என முதற்கட்ட தகவல் தெரிவத்துள்ளது, • May 03, 2024 21:12 IST
  சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து; தாத்தா- தாய் உயிரிழப்பு

   

  சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து விவகாரம் - தாத்தா உயிரிழந்த நிலையில், சிகிச்சையில் இருந்த தாய் நதியாவும் உயிரிழந்தார்.
  இந்த நிலையில், பூச்சி மருந்து கலந்த நதியாவின் மகன் பகவதி (20) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். • May 03, 2024 21:11 IST
  திண்டுக்கல்லில் திடீர் மழை

  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், பழனி, ஆயக்குடி உள்ளிட்ட பல இடங்களில் மிதமான மழை பெய்தது. • May 03, 2024 20:19 IST
  கார் விபத்தில் 4 பேர் பலி; கல்லூரி மாணவி கைது

  ஏப்ரல் மாதம் 30ம் தேதி சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் இரு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில், சிறுமுகையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
  இதில், விபத்தை ஏற்படுத்தியதாக மற்றொரு காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவி அக்‌ஷராவை போலீசார் கைது செய்தனர்.

  இந்நிலையில், இன்று சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ஜாமினில் விடுவிக்கப்பட்டார். • May 03, 2024 19:51 IST
  மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி; இழப்பீடு வழங்க உத்தரவு

  இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் எடுத்து பங்கேற்க முடியாமல் திரும்பியவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. • May 03, 2024 19:30 IST
  நீலகிரியில் கோடை மழை; மக்கள் மகிழ்ச்சி

  நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) தொடர்ச்சியாக அரை மணி நேரம் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். • May 03, 2024 19:06 IST
  ஈரோட்டில் 110 டிகிரி வெயில் பதிவு

  தமிழ்நாட்டில் இன்று அதிகப்பட்சமாக ஈரோட்டில் 110 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. • May 03, 2024 18:49 IST
  வாக்காளர்களை குழப்ப தேர்தலில் போட்டியிடுவோருக்கு தடை கோரிய மனு - சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு

  முக்கிய அரசியல் பிரமுகர்கள் தேர்தலில் போட்டியிடும்போது, வாக்காளர்களை குழப்பும் நோக்கில் அவர்களின் பெயர்களைக் கொண்ட சுயேச்சைகள் போட்டியிடுவதற்கு தடை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. அரசியல் தலைவர்களின் பெயர்களைக் கொண்ட ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதை நீதிமன்றம் எப்படி தடுக்க முடியும் என மனுவை எடுத்துக்கொண்ட நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். • May 03, 2024 18:28 IST
  நீலகிரி வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

  நீதிமன்ற உத்தரவுப்படி, நீலகிரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம்; டி.என் 43 என்ற பதிவெண் கொண்ட உள்ளூர் வாகனங்களுக்கு இ பாஸ் தேவையில்லை. வெளி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் உதகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இ-பாஸ் பெறலாம். இ- பாஸ் பெற வாகனத்தின் அசல் பதிவுச்சான்று, காப்புச்சான்று புகைப்படச் சான்று அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. • May 03, 2024 18:25 IST
   5 வயது சிறுவன் நுரையீரலில் எல்.இ.டி பல்ப்; வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்

  கடந்த ஒரு மாதமாக மூச்சுத் திணறல், சளி, இருமலால் அவதிப்பட்ட சிறுவனின் நுரையீரலில் எல்.இ.டி பல்ப் இருந்ததை ஸ்கேன் மூலம் அறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுவன் தவறுதலாக விழுங்கிய எல்.இ.டி பல்பை பிராங்கோஸ்கோபி மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். • May 03, 2024 17:40 IST
  உலக பத்திரிகை நாள்: திராவிட மாடல் அரசின் சார்பில் ஊடகவியலாளர்கள் ஸ்டாலின் வாழ்த்து

  உலக பத்திரிகை சுதந்திர நாளில் திராவிட மாடல் அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நல்வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். மேலும், சிறந்த இதழியலாளருக்கு ரூ. 5 லட்சம் பரிசுடன் கலைஞர் எழுதுகோல் விருது ஆண்டுதோறும் தரப்படுகிறது. கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு இவ்வாண்டு மட்டும் கூடுதலாக ஒரு பெண் எழுத்தாளருக்கு எழுதுகோல் விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். • May 03, 2024 16:55 IST
   'நீலகிரி வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை': வட்டார போக்குவரத்து அலுவலர்

  நீலகிரி மாவட்ட பதிவு எண் (TN43) கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரிக்கு மாற்றம் செய்திருப்பவர்கள், அதற்கான ஆவணங்களுடன் உதகை ஆர்.டி.ஓ. அலுவலகத்தை அணுகி இ-பாஸ் பெறலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். 

  மே 7 முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது • May 03, 2024 16:18 IST
  சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

  "சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித தங்கு தடையுமின்றி  குடிநீர் வழங்கப்படும்" என்று பெருநகர சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் தற்போதைய நீர் இருப்பை கருத்தில் கொண்டு சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. 

  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கீழ்ப்பாக்கம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம், சூரப்பட்டு ஆகிய 5 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நீர் சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீர் 111 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டுகிறது. "அக்டோபர் வரை தடையின்றி குடிநீர் விநியோகம்" செய்யப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.  • May 03, 2024 16:16 IST
  மே 6 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் வெப்ப அலை - வானிலை ஆய்வு மையம் 

  "தமிழக உள் மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். கத்திரி வெயிலை பொறுத்தவரை முதல் ஒரு வாரம் வெப்பம் அதிகரித்து காணப்படும். மே 6ம் தேதி வரை ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். கால நிலை மாற்றம் மட்டுமே, வெப்ப அலைக்கு காரணம் இல்லை" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  • May 03, 2024 16:15 IST
  சென்னையில் கோடை மழை வாய்ப்பில்லை - பாலச்சந்திரன் அறிவிப்பு 

  சென்னையில் கோடை மழை பெய்ய வாய்ப்பில்லை  என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  • May 03, 2024 16:14 IST
  பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயாருக்கு நோட்டீஸ்

  ஆபாச வீடியோ தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யின் தாயாருக்கு சிறப்பு விசாரணைக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

  பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை ரேவண்ணாவை தொடர்ந்து, தாயார் பவானியை விசாரணைக்கு ஆஜர் ஆகுமாறு நோட்டீஸ்  அனுப்பப்பட்டுள்ளது. 

    • May 03, 2024 15:01 IST
  விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. பாதிப்பு

  விழுப்புரம் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் சுமார் 30 நிமிடங்கள் வேலை செய்யவில்லை இன்று காலை 9.28 மணி அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் ஸ்ட்ராங் ரூமுக்கான சி.சி.டி.வி. கேமராக்கள் திடீரென இயங்கவில்லை.

  யு.பி.எஸ்.-ல் மின்தடை ஏற்பட்டு, பின் அது சரி செய்யப்பட்டதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பழனி விளக்கம் • May 03, 2024 14:46 IST
  வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி

  உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்தார் ராகுல் காந்தி!

  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிடோர் உடன் இருந்தனர். மே 13ம் தேதி இத்தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. • May 03, 2024 14:12 IST
  மேற்குவங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

  2024 தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 15 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது. காங்கிரஸ் எவ்வளவு முயற்சி செய்தாலும் நாடு முழுவதும் 50 இடங்களை கூட பெறுவது கடினம்.

  பாஜக தலைமையிலான NDA கூட்டணி தான் ஆட்சியமைக்கப் போகிறது என்பது இந்த தேர்தலில் தெளிவாக தெரிகிறது. எல்லையின் மறுபுறத்தில் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் என்ன தவறு செர்ய்தார்கள்?

  அவர்களின் துன்பத்தை போக்க தான் குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது;

  இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது

  - மேற்குவங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு • May 03, 2024 13:38 IST
  அடுத்த 5 நாட்களுக்கு இயல்பை விட அதிக வெப்பநிலை

  தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும். தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியல் முதல் 4 டிகிரி செல்சியல் வரை அதிகரிக்கும்.

  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை • May 03, 2024 13:34 IST
  மே 6 வரை வெப்ப அலை வீச வாய்ப்பு

  மே 6 வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசவுகரியம் ஏற்படலாம்.

  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை • May 03, 2024 13:17 IST
  6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  வரும் மே 7 ஆம் தேதி நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்று இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என கணித்துள்ளது. • May 03, 2024 13:16 IST
  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

  அதிமுக ஆட்சியின்போது குளறுபடியால் ரத்தான 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான புதிய பட்டியலை, உரிய இடஒதுக்கீடு முறையை பின்பற்றி 4 வாரத்துக்குள் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. • May 03, 2024 13:01 IST
  ரயிலில் பெண் பலி - கோட்டாட்சியர் விசாரணை

  கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற போது வாந்தி எடுப்பதற்காக கதவருகே நின்றிருந்த கர்ப்பிணி பெண் கஸ்தூரி தவறி விழுந்து பலி

  விபத்தில் உயிரிழந்த கஸ்தூரியின் பெற்றோரிடம், விருத்தாசலம் கோட்டாட்சியர் சையத் அகமது  விசாரணை

  விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கஸ்தூரியின் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் கோட்டாட்சியர் விசாரணை • May 03, 2024 12:55 IST
  18 மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனம் ரத்து

  அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனம் ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.

  4 வாரத்திற்குள் முறையான இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி புதிய மாற்றியமைக்கப்பட்ட பட்டியலை வெளியிட அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவு. இனசுழற்சி முறை பின்பற்றி இடஒதுக்கீடு வழங்காமல் பணிநியமனங்கள் வழங்கப்பட்டதாக தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு • May 03, 2024 12:50 IST
  பாலத்திற்கு அடியில் 3 சடலங்கள் - பரபரப்பு

  மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் அருகே பாலத்திற்கு அடியில் மீட்கப்பட்ட 3 சடலங்கள் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் சடலங்களை மீட்டு விசாரணை • May 03, 2024 12:49 IST
  நான் முதல்வன் திட்டம் - ஸ்டாலின்பெருமிதம்

   'நான் முதல்வன்' திட்டம் வாயிலாக யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களை சுட்டிக் காட்டி முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

  தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் அளித்த பேட்டி தொடர்பான செய்திகளை சுட்டிக் காட்டி சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவு  • May 03, 2024 12:48 IST
  அமேதியை பார்த்து ராகுலுக்கு அச்சம்: மோடி

  ``அமேதி தொகுதியை பார்த்து அச்சமடைந்த ராகுல் காந்தி தற்போது ரேபரேலியை தேர்வு செய்துள்ளார்'' ``காங்கிரஸின் மிகப்பெரிய தலைவர் தேர்தலில் போட்டியிடாமல் ஓடி ஒளிந்து கொள்வார் என நான் கூறியது நடந்தது'' ``தான் கூறியது போலவே ராஜஸ்தானுக்கு ஓடியவர் மாநிலங்களவை மூலம் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார் என சோனியா பற்றி பிரதமர் மோடி விமர்சனம்'' • May 03, 2024 12:31 IST
  சீமான் போராட்டம்- போலீசார் அனுமதி மறுப்பு

  வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து சீமான் அறிவித்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு.

  தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் கட்சி சார்பில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என மறுப்பு • May 03, 2024 12:29 IST
  4 ஆண்டுகளில் ரயிலில் இருந்து தவறி விழுந்து 87 பேர் பலி

  திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உள்பட பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளில் (2020 முதல் 2024) வரை ரயில் இருந்து தவறி விழுந்து 87 பேர் பலி. அதிகபட்சமாக 2023-ம் ஆண்டில் 42 பேர் உயிரிழப்பு - திருச்சி கோட்ட ரயில்வே காவல்துறை பதில்  • May 03, 2024 12:02 IST
  பிரஜ்வலை பிடிக்க ஜெர்மனி விரையும் சிறப்புக் குழு

  ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யை பிடிக்க ஜெர்மனி செல்ல சிறப்பு விசாரணைக்குழு முடிவு

  பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு விசாரணைக் குழு முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிக்கலாம்

  ``வாக்குமூலம் அளிப்பவர்களின் பாதுகாப்புக்கு கர்நாடக அரசு உறுதி'' - கர்நாடக உள்துறை அமைச்சர்   • May 03, 2024 11:49 IST
  ரேபரேலியில் ராகுல் வேட்பு மனுத் தாக்கல்

  உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஃபர்சாத்கஞ் விமான நிலையத்திற்கு வந்தார் ராகுல் காந்தி. அவருடன் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் வந்துள்ளனர்.  • May 03, 2024 11:48 IST
  ரூ.2.44 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

  டெல்லி விமான நிலையத்தில் ரூ.2.44 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல். துபாயிலிருந்து வந்த 5 அசர்பைஜான் நாட்டினரிடமிருந்து 3.5 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுப்பிடிப்பு • May 03, 2024 11:47 IST
  3-வது நாளாக வெடிமருந்து சேகரிக்கும் பணி

  காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம்.

  வெடி விபத்து நேர்ந்த இடத்தில் 500 மீட்டர் சுற்றளவில் சிதறிக்கிடக்கும் வெடி மருந்துகள். விபத்து நடந்த இடத்தில் சிதறிக்கிடக்கும் வெடி மருந்துகளை 3வது நாளாக சேகரிக்கும் பணி.

  வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலர்கள் கண்காணிப்பில் 50க்கும் மேற்பட்டோர் வெடி மருந்துகளை சேகரிக்கும் பணி தீவிரம். வெடி மருந்துகள் சிதறிக் கிடக்கும் இடத்தில் பொதுமக்கள் செல்லாமல் இருக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு • May 03, 2024 11:46 IST
  பச்சிளம் குழந்தை பொட்டலமாக வீசப்பட்ட கொடூரம்

  கேரள மாநிலம் கொச்சியில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் சடலம் பொட்டலம் கட்டி வீசப்பட்ட கொடூரம்.

   பச்சிளம் குழந்தையின் சடலம் பொட்டலமாக வீசப்படும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகி அதிர்ச்சி, பொட்டலத்தை பிரித்துப் பார்த்த போது பச்சிளம் குழந்தையின் சடலம் இருந்ததால் அதிர்ச்சி.

  அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து சடலம் வீசப்பட்டது விசாரணையில் அம்பலம். அடுக்குமாடி குடியிருப்புடன் தொடர்புடையவரே இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை • May 03, 2024 11:45 IST
  இந்த ஆண்டுக்குள் 7030 புதிய பேருந்துகள் வாங்கப்படும்

  சென்னையில் முதல்கட்டமாக 500 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை. கொரோனா காலத்தில் நிதி நெருக்கடி காரணமாக புதிய பேருந்துகளை வாங்க இயலவில்லை. 

  தற்போது அனைத்து அரசு பேருந்துகளையும் போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்து பழுதுகள் சரி செய்யப்பட்டு வருகிறது.

  31.12.2023ன் படி 52.73% பேருந்துகள் 9 ஆண்டுகளை கடந்து பழைய பேருந்துகளாக இருந்தன. தற்போது 652 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு அதே அளவிலான பழைய பேருந்துகள் கழிக்கப்பட்டன - போக்குவரத்துத்துறை விளக்கம் • May 03, 2024 11:41 IST
  மே 6-ம் தேதி திட்டமிட்டபடி +2 தேர்வு முடிவுகள் வெளியாகும்

  தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி வரும் மே 6-ம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை தகவல். தேர்வு முடிவுளை அமைச்சர் வெளியிடுவது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக விளக்கம்.  • May 03, 2024 11:08 IST
  கர்ப்பிணி உயிரிழப்பு: ரயில்வே போலீசார் கடிதம்

  கர்ப்பிணி உயிரிழப்பு - விசாரிக்க பரிந்துரை விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் கஸ்தூரி என்பவர் உயிரிழந்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை உயிரிழந்த கஸ்தூரிக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆனதால் விசாரணை நடத்த திருக்கோவிலூர் கோட்டாட்சியர் கண்ணனுக்கு ரயில்வே போலீசார் கடிதம் • May 03, 2024 09:30 IST
  ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணி பெண் பலி

  விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் பரிதாப பலி வாந்தி வந்ததால், காற்றோட்டமாக ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்டபோது தவறி விழுந்த விபரீதம் அபாய சங்கிலி வேலை செய்யாததால், அடுத்த பெட்டியில் இருந்து அபாய சங்கிலியை இழுத்த குடும்பத்தினர் ரயில் 8 கி.மீ. தொலைவு கடந்து விட்டதால் உடலை தேடி எடுப்பதற்கு 3 மணி நேரமானது நாளை மறுநாள் சங்கரன்கோவிலில் வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழப்பு.  • May 03, 2024 08:49 IST
  ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி

  உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி.அமேதி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை.  கிஷோரி லால் ஷார்மாவை வேட்பாளராக அறிவித்தது காங்கிரஸ் கட்சி.  • May 03, 2024 07:56 IST
  திருவண்ணாமலை - சென்னை இடையே 50 ரூபாய் கட்டணத்தில் பயணிகள் ரயில் சேவை

  திருவண்ணாமலை - சென்னை இடையே 50 ரூபாய் கட்டணத்தில் பயணிகள் ரயில் சேவை.  ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் வட மாநிலங்களில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் இணைப்பு நகரமாக திருவண்ணாமலை திருத்தலம் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் ரயில் காலை 9.50க்கு சென்னை வரும்.  சென்னையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 12 மணிக்கு திருவண்ணாமலையை அடையும்.  • May 03, 2024 07:46 IST
  ராகுல் காந்தி ரேபரேலியிலும், கே.எல்.சர்மா அமேதியிலும் போட்டியிட வாய்ப்பு

  காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலியிலும், கே.எல்.சர்மா அமேதியிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்.  • May 03, 2024 07:44 IST
  நாளை முதல் கத்திரி வெயில் : இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அளவு கூடும்

  தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் அனேக இடங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசுவதால் வெயில் சுட்டெரிக்கும் எனவும், இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அளவு கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment