scorecardresearch

Tamil news Highlights: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நாளை ஆஜர்

Tamil Nadu News, Tamil News, Petrol price Today – 16 Oct 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil news Highlights: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நாளை ஆஜர்

Petrol and Diesel Price:

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

நாங்கள் அமெரிக்காவைபோல் இல்லை

அமெரிக்காவை போல் நாங்கள் போரில் ஈடுபடவில்லை.  எங்களிடம் மிகவும் பாதுகாப்பான அனுசக்தி கட்டுபாடு அமைப்பு உள்ளது என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பதில் அளித்துள்ளார். உகில் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதற்கு இம்ரான்கான் பதிலளித்துள்ளார். 

பள்ளி மாணவன் உயிரிழப்பு

கடலூர், குறிஞ்சிப்பாடி அருகே கிராம நிர்வாக அலுவலக கட்டடம் இடிந்து விழுந்து பள்ளி மாணவன்  நேற்று உயிரிழப்பு.   இது தொடர்பாக  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
22:15 (IST) 16 Oct 2022
அந்தியூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை காரணமாக, ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி அறிவித்துள்ளார்

22:02 (IST) 16 Oct 2022
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நாளை ஆஜர்

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நாளை ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. 14 முறை சிபிசிஐடி நடத்திய சோதனையில் எதுவும் கிடைக்காத நிலையிலும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக மணீஷ் சிசோடியா ட்வீட் செய்துள்ளார்

21:43 (IST) 16 Oct 2022
‘ஸ்மார்ட் காவலர்’ செயலி அறிமுகம்

தமிழகத்தில் காவலர்களை கண்காணிக்க புதிய செயலியை டிஜிபி சைலேந்திர பாபு அறிமுகம் செய்தார். குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்வது உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு 'ஸ்மார்ட் காவலர்' செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

21:07 (IST) 16 Oct 2022
பாலியல் தொல்லை – முதியவர் போக்சோவில் கைது

புதுச்சேரி கீழக்காசாக்குடி பகுதியில் 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக பெற்றோர் அளித்த புகாரில் முதியவர் முருகன் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்

20:41 (IST) 16 Oct 2022
நாங்கள் இந்தியை திணிக்கவில்லை – தெலுங்கானா ஆளுநர் தமிழிசை

நாங்கள் இந்தியை திணிக்கவில்லை, ஆனால் இதை வைத்து அரசியல் செய்யவே போராட்டத்தை கையில் எடுக்கின்றனர். மாநில மொழிகளை குறைத்து மதிப்பிட வேண்டும் என்றோ, மாநில மொழிகளை மீறிச் செயல்பட வேண்டும் என்றோ நாங்கள் கூறவில்லை என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்

19:54 (IST) 16 Oct 2022
தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம்; ஒடிசாவை தமிழகம் பின்பற்ற வேண்டும் – ராமதாஸ்

ஒடிசாவை போன்று தமிழகத்திலும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு ஊழியர்களை தற்காலிக அடிப்படையிலும் ஒப்பந்த அடிப்படையிலும் நியமிப்பது மனித உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்

19:39 (IST) 16 Oct 2022
நாளை காங்கிரஸ் தலைவர் தேர்தல்

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தருர் இடையே போட்டி நிலவுகிறது

18:43 (IST) 16 Oct 2022
இ.பி.எஸ் தலைமையில் அ.தி.மு.க ஆலோசனை கூட்டம்

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்

18:18 (IST) 16 Oct 2022
ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு அறுவை சிகிச்சை

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வெற்றிகரமாக கண்புரை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என ஜனாதிபதி மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது

17:44 (IST) 16 Oct 2022
மாணவி சத்யாவை ரயிலில் தள்ளி கொலை செய்த வழக்கு; குற்றவாளி சதீஷை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி முடிவு

சென்னை, பரங்கிமலையில் மாணவி சத்யாவை ரயிலில் தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளி சதீஷை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. கொலைக்கு முன்னரே மாணவியை சதீஷ் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகார்கள் குறித்தும் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது

17:22 (IST) 16 Oct 2022
ரேசன் அரிசி குறித்த மத்திய அமைச்சரின் கருத்து வருத்தம் அளிக்கிறது – அமைச்சர் சக்கரபாணி

தரமான அரிசி குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டிருக்கலாம் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.

12 அரிசி ஆலைகள் மூலம் தரமான அரிசியை, அரசு வழங்கி வருகிறது. மத்திய அமைச்சரின் கருத்து வருத்தம் அளிக்கிறது. 4 அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னரே பொருட்கள் நியாயவிலை கடைகளுக்கு செல்கிறது. பொருட்கள் தரமில்லை என்றால் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தின் நியாயவிலை கடைகள் வடிவமைப்பை இதே மத்திய அமைச்சர் பாராட்டியிருந்தார் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்

16:52 (IST) 16 Oct 2022
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு சி.பி.ஐ சம்மன்

புதிய மதுபான கொள்கை மோசடி தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது

16:32 (IST) 16 Oct 2022
உலகின் சிறந்த கண் மருத்துவர்கள் – மதுரையை சேர்ந்த 4 பேர் தேர்வு

உலகின் சிறந்த கண் மருத்துவர்கள் பட்டியலை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில் மதுரையை சேர்ந்த 4 மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளனர். இதனையடுத்து மருத்துவர்கள் ஸ்ரீனிவாசன், ரத்தினம் சிவக்குமார், வெங்கடேஷ் பிரசன்னா மற்றும் லலிதா பிரசன்னாவுக்கு மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்

15:51 (IST) 16 Oct 2022
மருத்துவக் கலந்தாய்வு- நாளை தரவரிசைப் பட்டியல்

தமிழகத்தில் மருத்துவ படிப்புக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை (17.10.2022) வெளியிடப்பட உள்ளது.

15:11 (IST) 16 Oct 2022
உலக பட்டினி குறியீட்டில் இந்தியா சரிவு; பிரதமர், அமைச்சர்கள் குறித்து ராகுல் காந்தி கருத்து

ராகுல் காந்தி: “உலக பட்டினி குறியீட்டில், 107வது இடத்தில் உள்ளது. இப்போது பிரதமரும் அமைச்சர்களும் இந்தியாவில் பசி அதிகரிக்கவில்லை பிற நாடுகளில் மக்களுக்கு பசிக்கவில்லை என பிரதமரும் அமைச்சர்களும் கூறுவார்கள்” என்று நகைச்சுவையாக கிண்டல் செய்து கருத்து தெரிவித்துள்ளார்.

14:21 (IST) 16 Oct 2022
இந்தி திணிப்பு எந்த மாநிலத்திற்கும் ஏற்புடையது இல்லை – மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “ஒரே நாடு என்ற பெயரில் இந்தி மொழியை ஊக்குவிப்பதற்கு மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகள், பல்வேறு மொழிகள், பண்பாடுகளைக் கொண்ட இந்திய மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதை சிதைத்து இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஊஉறு விளைவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

14:10 (IST) 16 Oct 2022
இ.பி.எஸ் அளித்த கடிதம் மீது சபாநாயகர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் – ஓ.பி.எஸ் பேட்டி

மதுரையில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் பேட்டி: “இ.பி.எஸ் அளித்த கடிதம் மீது சபாநாயகர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை எதிர்க்கட்சி என்ற முறையில் பேரவையில் பேசுவோம்” என்று கூறினார்.

13:25 (IST) 16 Oct 2022
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

12:55 (IST) 16 Oct 2022
தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேச்சு

சென்னை, மடிப்பாக்கத்தில் நலத்திட்டங்களை தொடங்கிவைத்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேச்சு: இந்தியாவின் வளர்ச்சிக்கு இதுதான் சரியான தருணம். குடும்ப ஆட்சி செய்யும் கட்சி பாஜக அல்ல; தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும் என்று கூறினார்.

12:21 (IST) 16 Oct 2022
புதிய மதுக்கொள்கை: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன்

புதிய மதுக்கொள்கை தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. நாளை காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

10:19 (IST) 16 Oct 2022
சிதம்பரம் தீட்சிதர்கள் இருவர் சிறையில் அடைப்பு

குழந்தை திருமண விவகாரம் – சிதம்பரம் தீட்சிதர்கள் இருவர் சிறையில் அடைப்பு. மாப்பிள்ளையின் தந்தை, பெண் குழந்தையின் தந்தை இருவரும் சிறையில் அடைப்பு 28ஆம் தேதி வரை காவலில் வைக்க சிதம்பரம் நீதிமன்றம் உத்தரவு . குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் 2 தீட்சிதர்கள் மீது நடவடிக்கை சிதம்பரம் நடராஜர் கோயில்

08:57 (IST) 16 Oct 2022
விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

கர்நாடகா, ஹசன் நகரில் வேன், பால் ஏற்றி வந்த வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

08:57 (IST) 16 Oct 2022
கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

தஞ்சாவூர், கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக உபரிநீர் திறக்கப்படுவதால் எச்சரிக்கை

Web Title: Tamil news today live t 20 cricket amithsha pakistan america

Best of Express