Advertisment

Tamil News Today: பயணிகளின் நலன் கருதி ஆம்னி பேருந்துகளை சென்னை நகருக்குள் இயக்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

Tamil News Today Updates : இன்று நடைபெறும் செய்திகளை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN Omni Bus Owners Association secretary Maaran press meet Tamil News

IE Tamil Updates

Tamil News Today Updates : பெட்ரோல், டீசல் விலை | சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல், ரூ.103.63, டீசல்  டீசல்  ரூ. 94.34 -க்கும் விற்பனை செய்யப்ப்படுகிறது.  

Advertisment

 ஏரிகள் நீர் நிலவரம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 86.74% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 84.22% ,புழல் - 84.24% பூண்டி - 94.86% சோழவரம் - 72.8% கண்ணன்கோட்டை - 99.2%

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

  • Jan 23, 2024 21:59 IST
    பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு

    பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது



  • Jan 23, 2024 21:57 IST
    ராமருக்கு ரூ.11 கோடி மதிப்பில் தங்க கிரீடத்தை வழங்கிய வைர வியாபாரி

    குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி முகேஷ் படேல் அயோத்தியில் உள்ள பால ராமருக்கு ரூ.11 கோடி மதிப்பில் வைரம் பொருத்திய தங்க கிரீடத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்



  • Jan 23, 2024 21:33 IST
    சிவகங்கையில் பராமரிப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி, மின்வாரிய ஊழியர் மரணம்

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நயினார் மேடை கிராமத்தில் மின் பழுது பராமரிப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி, மின்வாரிய ஊழியர் மாரி பாண்டி உயிரிழந்தார். கவனக்குறைவாக இருந்ததாக போர்மேன் சேகர், ராஜ்குமார் ஆகிய இருவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட பொறியாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்



  • Jan 23, 2024 20:45 IST
    தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் சுற்றுப்பயண விபரம் வெளியீடு

    மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் சுற்றுப்பயண விபரம் வெளியிடப்பட்டுள்ளது



  • Jan 23, 2024 20:32 IST
    மதுரை ஜல்லிக்கட்டு போட்டி; வெற்றிபெறும் காளைக்கும், வீரருக்கும் தலா ஒரு மஹிந்திரா தார் பரிசு

    மதுரை கீழக்கரையில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெறும் காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் தலா ஒரு மஹிந்திரா தார் பரிசாக வழங்கப்படுகிறது



  • Jan 23, 2024 20:26 IST
    ஆஸ்கர் விருது இறுதிப் பட்டியலில் இந்திய ஆவணப்படம்

    ஆஸ்கர் விருது இறுதிப்பட்டியலில் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட To kill a Tiger ஆவணப்படம் இடம்பெற்றுள்ளது.



  • Jan 23, 2024 20:10 IST
    ஈரோடு- நெல்லை ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு



    ஈரோடு நெல்லை ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், இது நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த ரயில் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், தென்காசி உள்ளிட்ட 8 இடங்களில் நின்று செல்லும்.



  • Jan 23, 2024 20:00 IST
    ஆளுநரின் வரலாற்று புரட்டுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள்; கே.எஸ் அழகிரி

    “ஆளுநர் ஆர்.என். ரவியின் வரலாற்று புரட்டுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள்; தேசப் பக்தி இல்லாத ஒரு இயக்கம்தான் பாஜக. காந்தியை சிறுமைப்படுத்த காழ்ப்புணர்ச்சியோடு கூறியவரை தேசப்பக்தர்களின் ஆன்மா மன்னிக்காது” என்றார்.



  • Jan 23, 2024 19:25 IST
    தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்க; டி.ஆர். பாலுவை பார்த்து கேட்ட உதயநிதி

    சென்னையில் டி.ஆர் பாலு புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட உதயநிதி, “இளைஞரணி மாநாட்டுக்கு நிதிதான் தரல, தேர்தல்ல இளைஞர்களுக்கு வாய்ப்பாவது கொடுங்க” என டி.ஆர். பாலுவை பார்த்து கேட்டார். இந்த வீடியோ காட்சி வைரலாகிவருகிறது.



  • Jan 23, 2024 19:13 IST
    கருணாநிதி ஏ.ஐ. வீடியோ வெளியீடு

    திமுக பொருளாளர் டி.ஆர் பாலு எழுதிய நூல்களை சென்னையில் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது, மு.க. ஸ்டாலினை கருணாநிதி வாழ்த்துவதுபோல் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் வீடியோ வெளியிடப்பட்டது.



  • Jan 23, 2024 18:55 IST
    நாடாளுமன்ற தேர்தல் - மாநில நிர்வாகிகள் குழுவை நியமிக்க பா.ஜ.க முடிவு

    நாடாளுமன்ற தேர்தலை வழிநடத்தும் மாநில நிர்வாகிகள் குழுவை நியமிக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளார். இந்த வாரத்தில் குழுவை நியமித்து நாடாளுமன்ற தேர்தல் பணிகளைத் தொடங்கவும் 39 தொகுதியிலும் இம்மாதம் நாடாளுமன்றத் தேர்தல் அலுவலகத்தைத் திறக்கவும் பா.ஜ.க முடிவு செய்துள்ளது.



  • Jan 23, 2024 18:24 IST
    நெல்லை ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க ஒப்புதல் 

     

    ஈரோடு - நெல்லை இடையேயான முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்ட ரயில் சேவை நாளை முதல் அமலுக்கு வருகிறது; சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், தென்காசி உட்பட 6 இடங்களில் ரயில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jan 23, 2024 18:20 IST
    சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

    அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கு விசாரணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.



  • Jan 23, 2024 18:00 IST
    ராமர் கோயில் திறப்பு அரசியல் நிகழ்வு அல்ல - ரஜினிகாந்த் பேட்டி

    சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி: ராமர் கோயில் திறப்பு என்பது என்னைப் பொறுத்தவரை அரசியல் நிகழ்வு அல்ல, ஆன்மீக நிகழ்வு. ராமர் கோயில் திறந்தவுடன் நேரில் பார்த்த முதல் 150 பேரில் நானும் ஒருவன், உண்மையில் எனக்கு பெரிய சந்தோஷம். இந்த விவாகாரத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். எல்லாருடைய பார்வையும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறினார்.



  • Jan 23, 2024 17:46 IST
    குடியரசு தினம், தைப்பூசம் தொடர்  விடுமுறை; 580 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

    குடியரசு தினம், தைப்பூசம் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து நாளை (24.01.2024) மற்றும் நாளை மறுநாள் (25.01.2024) தினசரி பேருந்துகளுடன் 405 சிறப்பு பேருந்துகளும் பிற இடங்களில் இருந்து 175 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 580 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.



  • Jan 23, 2024 17:32 IST
    ஜன. 22-ம் தேதி ரூ.168.83 கோடி வருவாய் - பதிவுத்துறை தகவல்

    தமிழகத்தில் ஜனவரி 22-ம் தேதி மட்டும் 21,004 ஆவணங்கள் பதிவு செய்து ரூ. 168. 83 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. சென்னையில் ஜனவரி 22-ல் 137 அடுக்குமாடி குடியிருப்புகள் பதியப்பட்டு ரூ. 12 கோடி வருவாய் பெறப்பட்டுள்ளது என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது.



  • Jan 23, 2024 17:29 IST
    இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது

     

    நெடுந்தீவு கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.



  • Jan 23, 2024 17:26 IST
    திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலத்தை ஒட்டி பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

    திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலத்தை ஒட்டி பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    thiruvannamalai girivalam bus

     



  • Jan 23, 2024 16:52 IST
    ஏறுதழுவுதல் அரங்கம் நாளை திறப்பு

    மதுரையில் நாளை திறக்கப்பட இருக்கும் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவதல் அரங்கத்தில் முதல் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. 500 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.



  • Jan 23, 2024 16:47 IST
    விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர் பலி 

    திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே தனியார் குடியிருப்பு வளாகத்தில் கழிவு நீர் தொட்டியை தூய்மை செய்ய, தொட்டியை திறந்த போது விஷவாயு தாக்கி சுரேஷ் என்ற தூய்மை பணியாளர் உயிரிழந்தார். 

    மற்றொரு பணியாளர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • Jan 23, 2024 16:32 IST
    கேலோ இந்தியா - தங்கம் வென்ற தமிழகம்

    கேலோ இந்தியா போட்டியில் மகளிர் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில் தமிழ்நாடு வீராங்கனை பூஜா ஆர்த்தி தங்கம் வென்றார். இறுதிப் போட்டியில் மகாராஷ்டிராவின் நிருபமா துபேயை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி தமிழகத்தின் பூஜா ஆர்த்தி தங்கம் வென்று அசத்தினார். 

    காலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் தமிழகத்திற்கு இது 7வது தங்கம் ஆகும். 



  • Jan 23, 2024 15:57 IST
    ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை

    பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக மேற்கொண்ட சிறப்பு பணிக்காக ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 



  • Jan 23, 2024 15:21 IST
    கேலோ இந்தியா போட்டி: தமிழகத்திற்கு மேலும் ஒரு பதக்கம்

    81 கிலோவுக்கு உட்பட்ட பிரிவில் நடைபெற்ற ஜூடோ போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த ஹேமன் சச்சின் மணிப்பூர் வீரரை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றார். 

     

     



  • Jan 23, 2024 15:13 IST
    ஐசிசி 2023ம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு

    2023 ம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து 2023-ம் ஆண்டிற்கான ஒருநாள் கிரிக்கெட் அணிகளை ஐசிசி அறிவித்துள்ளது.

    இந்த அணிக்கு இந்திய வீரர் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்ப்பட்டுள்ளார். இந்த அணியில் அதிகபட்சமாக இந்திய அணியிலிருந்து 6 வீரர்களும், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து தலா 2 வீரர்களும் நியூசிலாந்திலிருந்து 1 வீரரும் இடம்பெற்றுள்ளனர்.

    1. ரோகித் சர்மா (கேப்டன்) - இந்தியா

    2. சுப்மன் கில் - இந்தியா

    3. டிராவிஸ் ஹெட்- ஆஸ்திரேலியா

    4. விராட் கோலி - இந்தியா

    5.டேரில் மிட்செல் -நியூசிலாந்து

    6.ஹென்ரிச் கிளாசென் - தென் ஆப்பிரிக்கா

    7. மார்கோ ஜான்சன் - தென் ஆப்பிரிக்கா

    8.ஆடம் ஜம்பா - ஆஸ்திரேலியா

    9. முகமது சிராஜ்- இந்தியா

    10.குல்தீப் யாதவ்-இந்தியா

    11.முகமது ஷமி- இந்தியா.



  • Jan 23, 2024 15:03 IST
    டெல்லி தேர்தல் ஆணையம் விளக்கம்

    ஏப்ரல் 16ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்க உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில் டெல்லி தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 16 என்பது தேர்தல் தொடர்பான பணிகளை திட்டமிட்டு முடிப்பதற்கான உத்தேச தேதி மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளது.



  • Jan 23, 2024 14:59 IST
    தங்கம், வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு

    தங்கம், வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரியை 11% இருந்து 15 % ஆக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. கடந்த இரு மாதங்களாக தங்கத்தின் இறக்குமதி அதிகரித்துள்ள நிலையில், இந்த வரி உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிப்பு



  • Jan 23, 2024 14:01 IST
    போலீசார் - காங்கிரஸ் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு

    அசாமில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் தள்ளுமுள்ளு போலீசார் - காங்கிரஸ் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு



  • Jan 23, 2024 13:59 IST
    மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை உருவாகும் : எம்.பி. கனிமொழி

    பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களின் கோரிக்கைகளை கேட்டறிய உள்ளோம். முதற்கட்டமாக செல்ல உள்ள இடங்களின் பட்டியல் குறித்து ஆலோசித்தோம். மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை உருவாகும்" என  திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.



  • Jan 23, 2024 13:14 IST
    "கூட்டணியை நான் பார்த்து கொள்கிறேன், தேர்தல் பணிகளை நீங்கள் மேற்கொள்ளுங்கள்" - கமல்ஹாசன்

    "கூட்டணியை நான் பார்த்து கொள்கிறேன், தேர்தல் பணிகளை நீங்கள் மேற்கொள்ளுங்கள்" என மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.  மேலும் கூட்டணி அமைத்தாலும் அனைத்து பூத்களிலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு நிர்வாகிகள் இருக்க வேண்டும்" "கட்சியில் செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும்" என்று கூறிய கமல்ஹாசன் கட்சியின் தலைவராக, தான் என்ன செய்ய வேண்டும் என நிர்வாகிகளிடம் கருத்துக்கேட்டார்.



  • Jan 23, 2024 12:44 IST
    திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை

    நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை.

    எம்.பி. கனிமொழி தலைமையிலான குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை.

    டி.கே.எஸ் இளங்கோவன், பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, எம்.எம்.அப்துல்லா பங்கேற்பு. சி.வி.எம்.பி.எழிலரசன், எழிலன், மேயர் பிரியா உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்பு



  • Jan 23, 2024 12:43 IST
    ஆளுநர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் தான் வருகைப் பதிவு

    சென்னை அண்ணா பல்கலை.யில் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில், கலந்துகொண்டால் தான் மாணவர்களுக்கு வருகைப் பதிவு என சுற்றறிக்கை

    அண்ணா பல்கலை. வளாகத்தில் நடைபெறும் நேதாஜி பிறந்தநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு. ஆளுநரின் நிகழ்ச்சியில், அண்ணா பல்கலை. கிண்டி வளாகத்தில் உள்ள ECE, CSE, IT துறை மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என சுற்றறிக்கை

    மாணவர்களின் வருகையை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் பதிவு செய்ய வேண்டும் எனவும் துறை தலைவர்களுக்கு கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் அறிவுறுத்தல்



  • Jan 23, 2024 12:43 IST
    ஆளுநர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் தான் வருகைப் பதிவு

    சென்னை அண்ணா பல்கலை.யில் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில், கலந்துகொண்டால் தான் மாணவர்களுக்கு வருகைப் பதிவு என சுற்றறிக்கை

    அண்ணா பல்கலை. வளாகத்தில் நடைபெறும் நேதாஜி பிறந்தநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு. ஆளுநரின் நிகழ்ச்சியில், அண்ணா பல்கலை. கிண்டி வளாகத்தில் உள்ள ECE, CSE, IT துறை மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என சுற்றறிக்கை

    மாணவர்களின் வருகையை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் பதிவு செய்ய வேண்டும் எனவும் துறை தலைவர்களுக்கு கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் அறிவுறுத்தல்



  • Jan 23, 2024 12:43 IST
    ஆளுநர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் தான் வருகைப் பதிவு

    சென்னை அண்ணா பல்கலை.யில் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில், கலந்துகொண்டால் தான் மாணவர்களுக்கு வருகைப் பதிவு என சுற்றறிக்கை

    அண்ணா பல்கலை. வளாகத்தில் நடைபெறும் நேதாஜி பிறந்தநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு. ஆளுநரின் நிகழ்ச்சியில், அண்ணா பல்கலை. கிண்டி வளாகத்தில் உள்ள ECE, CSE, IT துறை மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என சுற்றறிக்கை

    மாணவர்களின் வருகையை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் பதிவு செய்ய வேண்டும் எனவும் துறை தலைவர்களுக்கு கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் அறிவுறுத்தல்



  • Jan 23, 2024 12:42 IST
    மக்களவைத் தேர்தலில் கமல் போட்டி: ஆலோசனை

    நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி குறித்து ஆலோசனை

    கமல்ஹாசன் தலைமையில் தொடங்கியது நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை

    கோவை அல்லது தென் சென்னையில் கமல் போட்டியிட உள்ளதாக தகவல்

    எங்கு போட்டி என்பது குறித்து இன்றைய கூட்டத்திலேயே முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்

    நாடாளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது



  • Jan 23, 2024 12:13 IST
    எம்.எல்.ஏ மகன், மருமகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

    பல்லாவரம் திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

    வீட்டில் பணிபுரிந்த பெண்ணை கொடுமைப்படுத்திய புகாரில் வழக்குப் பதிவு



  • Jan 23, 2024 11:50 IST
    பொன்முடி வழக்கு: அதிமுக ஜெயக்குமார் மனு தள்ளுபடி

    முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் சாட்சியாக சேர்த்துக்கொள்ள கோரி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி. 



  • Jan 23, 2024 11:48 IST
    மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவையில் ஒப்புதல்

    முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம். தொழில் முதலீடுகளை ஈர்க்க வரும் 28ஆம் தேதி வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

    சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்படுவதாக தகவல். பிப்ரவரி 2வது வாரத்தில் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது

    தொழில்துறை, சமூக நலத்துறை மற்றும் கலால் துறை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல். மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவையில் ஒப்புதல்



  • Jan 23, 2024 11:29 IST
    தமிழக அமைச்சரவை கூட்டம் தொடக்கம் 

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

    சட்டமன்ற கூட்டத்தொடர் விரைவில் கூடவுள்ள நிலையில் அதுகுறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தகவல்



  • Jan 23, 2024 11:00 IST
    ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும்

     "போக்குவரத்து ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பணிச்சுமை அதிகம் என்பது உண்மை தான். தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிட்டு நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது . ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும்" போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்



  • Jan 23, 2024 10:12 IST
    குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்த விவகாரம்: 2 மாணவர்கள் சஸ்பெண்ட்

    திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவருக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்த விவகாரம் இரண்டு மாணவர்களை சஸ்பெண்ட் செய்து துணைவேந்தர் நாகராஜ் உத்தரவு கடந்த 6ம் தேதி நடந்த சம்பவம் குறித்து 3 பேராசிரியர்கள் குழு விசாரணை விசாரணையின் அடிப்படையில் இளங்கலை இறுதியாண்டு பயிலும் 2 மாணவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை



  • Jan 23, 2024 09:40 IST
    இந்தியா கூட்டணியின் வெற்றியை நமது தலைவர் கரங்களில் சேர்க்க அயராது உழைப்போம்

    சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணியின் மாநில மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டின் வெற்றி, 2024 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கட்டும் பாசிஸ்ட்டுகளுக்கு முடிவுகட்டி, அடிமைகளை வீழ்த்தி இந்தியா கூட்டணியின் வெற்றியை நமது தலைவர் கரங்களில் சேர்க்க அயராது உழைப்போம் - உதயநிதி ஸ்டாலின்



  • Jan 23, 2024 09:25 IST
    கொடநாடு வழக்கு : அமைச்சர் உதயநிதி பதில்

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி கருத்து தெரிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்" சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் மனு தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக இபிஎஸ் தொடர்ந்த வழக்கில், இடைக்கால தடை விதிக்கப்பட்டது கொடநாடு சம்பவத்தின் போது இபிஎஸ் முதல்வராக இருந்தார் என்பதால் பொது ஊழியராக அவரது செயல்பாடு குறித்து அறிக்கை வெளியிட்டேன் - பதில் மனு கொடநாடு வழக்குக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என எடப்பாடி பழனிசாமி கூற முடியாது - பதில் மனு பதில்மனுவுக்கு விளக்கமளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து விசாரணை பிப்ரவரி 26ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு. 



  • Jan 23, 2024 08:42 IST
    அயோத்தி ராமர் கோயிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி

    அயோத்தி ராமர் கோயிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி பால ராமரை தரிசிப்பதற்காக குவிந்த பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதல் அதிக அளவில் மக்கள் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பு அயோத்தி ராமர் கோவிலில் நேற்று பிராண பிரதிஷ்டை நடைபெற்றது



  • Jan 23, 2024 08:40 IST
    தீர தின கொண்டாட்டம் பிரதமர் மோடி பங்கேற்பு

    டெல்லியில் வீர தீர தின கொண்டாட்ட நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார் வரும் 31ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை அரங்கேற்ற மத்திய அரசு திட்டம்



  • Jan 23, 2024 08:04 IST
    தமிழக மீனவர்கள் 6 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

    நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 6 பேரை கைது செய்த இலங்கை கடற்படை 6 மீனவர்கள், 2 விசைப்படகுகளை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றதாக தகவல் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் எல்லை தாண்டியதாக கூறி தமிழக மீனவர்கள் 6 பேர் கைது



  • Jan 23, 2024 08:03 IST
    இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்

    இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் .முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம், சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை என தகவல்.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment