கட்டுப்பாடுகள் கடுமையாக்க வேண்டும்
தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்களில் மீண்டும் கொரோனா வேகம் எடுப்பதால், கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கும்படி மாநில அரசாங்ககளுக்கு மத்திய அரசு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது அலை முடிவு பெரும் இந்த வேளையில், 10 மாநிலங்களில் உள்ள 46 மாவட்டங்களில் பாதிப்பின் அளவு அதிகமாக இருப்பதால், அம்மாநிலங்களில் கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்தவேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. முக்கியமாக மக்கள் திறலாகக் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.
பஞ்சாபில் நாளை முதல் அனைத்து பள்ளிகளும் திறப்பு
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பஞ்சாபில் நாளை முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் அனைத்து வகுப்புகளையும் நடத்தும் அதே நேரத்தில், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 48-ஆக பதிவாகி இருந்தது. மேலும், 44 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் பஞ்சாப் அரசு பள்ளிகள் திறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2 மாத தடைக் காலத்திற்கு பின் கடலுக்குச் செல்லும் மீனவர்கள்
கன்னியாகுமரி மேற்கு கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் 60 நாட்கள் மீன்பிடித் தடைக் காலத்திற்கு பிறகு கடலுக்கு செல்கின்றனர். தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகம் நுழைவு வாயிலில் ஏற்பட்டுள்ள மணல் திட்டுகளால் கடலுக்கு செல்வதில் சிரமம் உள்ளதாகவும், அவைகளை போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 19:54 (IST) 01 Aug 2021தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
- 19:52 (IST) 01 Aug 2021மீண்டும் ஊரடங்கிற்கான சூழலை ஏற்படுத்திவிடாதீர்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
கூட்டம் கூடுவதால் கொரோனா பரவலுக்கு மக்களே காரணமாகி விடக்கூடாது. அலட்சியம் வேண்டாம். எச்சரிக்கையாக இருப்போம். 3ஆவது அலையை தடுப்போம். மீண்டும் ஊரடங்கிற்கான சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எச்சரித்துள்ளார்.
- 19:07 (IST) 01 Aug 2021ஒலிம்பிக்; அரையிறுதியில் நுழைந்தது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி
டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆண்கள் அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது ; காலிறுதியில் பிரிட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் 41 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்குள் இந்திய ஆண்கள் அணி நுழைந்துள்ளது.
- 19:06 (IST) 01 Aug 2021ஒலிம்பிக்; அரையிறுதியில் நுழைந்தது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி
டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆண்கள் அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது ; காலிறுதியில் பிரிட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் 41 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்குள் இந்திய ஆண்கள் அணி நுழைந்துள்ளது.
- 19:00 (IST) 01 Aug 2021பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஒலிம்பிக் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சிந்து இந்தியாவின் பெருமைக்குரியவர், நாட்டின் மிகச்சிறந்த ஒலிம்பிக் வீரர்களில் ஒருவர் எனவும் பிரதமர் பாராட்டியுள்ளார்.
- 18:08 (IST) 01 Aug 2021ஒலிம்பிக்; பேட்மிண்டனில் வெண்கலம் வென்றார் பி.வி.சிந்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெண்கல பதக்கம் வென்றார். வெண்கல பதக்கத்துக்கான பேட்மிண்டன் போட்டியில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியோவை வீழ்த்தினார் பி.வி.சிந்து.
- 17:57 (IST) 01 Aug 2021சென்னை அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை
சென்னை அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள எஞ்சிய குடியிருப்புகளை இடிக்க கூடாது எனவும் அங்குள்ள மக்கள் முறையாக மறுகுடியமர்வு செய்யப்படும் வரை இடிக்க வேண்டாம் எனவும் பொதுப்பணித் துறையினருக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
- 17:56 (IST) 01 Aug 2021சென்னை அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை
சென்னை அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள எஞ்சிய குடியிருப்புகளை இடிக்க கூடாது எனவும் அங்குள்ள மக்கள் முறையாக மறுகுடியமர்வு செய்யப்படும் வரை இடிக்க வேண்டாம் எனவும் பொதுப்பணித் துறையினருக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
- 17:33 (IST) 01 Aug 2021லிங்கேஸ்வரர், மாரியம்மன் கோயில்களில் தரிசனம் ரத்து
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி லிங்கேஸ்வரர், கருவலூர் மாரியம்மன் கோயில்களில் ஆடி கிருத்திகையையொட்டி நாளை மற்றும் நாளை மறுதினம் மற்றும் ஆகஸ்ட் 8 ஆகிய தேதிகளில் பக்தர்களுக்கான தரிசனம் ரத்து என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
- 16:19 (IST) 01 Aug 2021அடுத்த வாரம் முதல் கோயில்களில் தமிழில் அர்ச்சனை” - அமைச்சர் சேகர் பாபு
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு: “தமிழ்நாட்டில் கோயில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை தொடங்கப்பட உள்ளது; முதற்கட்டமாக சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் புதன் அல்லது வியாழக்கிழமை தொடங்கப்படும். அன்னை தமிழில் அர்ச்சனை என்று பெயர் பலகை வைக்கப்பட்டு அர்ச்சகரின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிட திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.
- 13:34 (IST) 01 Aug 2021கோவையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
கோவையில், ,பால், மருந்தகம், காய்கறி ஆகிய அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கிராஸ்கட் சாலை, நூறடி சாலை, ராமமூர்த்தி சாலை உள்ளிட்ட 10 இடங்களில் ஞாயிற்று கிழமைகளில் கடைகள் இயங்க தடை விதித்துள்ளனர்.
- 13:26 (IST) 01 Aug 2021பொதுமக்கள் கவனக் குறைவாக இருந்தால் கொரோனா 3வது அலை வரும் - ககன்தீப் சிங் பேடி
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி: “பொதுமக்கள் கவனக் குறைவாக இருந்தால் கொரோனா 3வது அலை வரும். புதிதாக 35 பேருக்கு கொரோனா பாதிப்பு வந்த காரணம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. தவிர்க்க முடியாத காரணத்தினால் 9 இடங்களில் வணிக பகுதிகள் மூடப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
- 12:06 (IST) 01 Aug 2021மக்களுக்கு பயன்தரும் வகையில் நிதிநிலை அறிக்கை அமையவேண்டும் - முதலமைச்சர் அறிவுறுத்தல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மக்களுக்கு பயன்தரும் வகையில் இவ்வாண்டு நிதிநிலை அறிக்கை மற்றும் விவசாயத்துக்கான முதல் தனி நிதிநிலை அறிக்கை அமைய வேண்டும் அமைச்சர் மற்றும் துறை உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
- 11:55 (IST) 01 Aug 2021இன்று முதல் ஆகஸ்ட் 3 வரை பிரதான கோயில்களில் பக்தர்களுக்கு தடை
தஞ்சை பெரியகோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், கும்பகோணம் காசிவிஸ்வநாதர் திருக்கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பிரதான கோயில்களிலும், ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் 3-ம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- 11:43 (IST) 01 Aug 2021புதுச்சேரியில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு
புதுச்சேரியில் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளை இன்று முதல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
- 11:34 (IST) 01 Aug 2021கேரளாவிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சான்றிதழ் கட்டாயம்!
ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வர ஆர்டிபிசிஆர் சான்றிதழ் அல்லது இரு தவணை சான்றிதழ் கட்டாய என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- 11:09 (IST) 01 Aug 2021பிசிசிஐக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிக்கை
காஷ்மீர் பிரீமியர் லீக் விவகாரம் தொடர்பாக இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குழம்பிய நிலையில் உள்ளதாகவும் பிசிசிஐ மீது குற்றஞ்சாட்டியுள்ள கிப்ஸ், சூதாட்ட புகாரில் ஈடுபட்டவர் என சாடிய அவர், காஷ்மீர் பிரீமியர் லீக் விவகாரத்தை ஐசிசி-யிடம் பாகிஸ்தான் கொண்டு சென்றால் அதனை வரவேற்பதாகவும் ஒருவர் பதிலடி கூறியுள்ளார்.
- 10:37 (IST) 01 Aug 2021ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி காலிறுதியில் சதீஷ் குமார் தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் குத்துச்சண்டை போட்டியில் ஆடவர் குத்துச்சண்டை 91 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சதீஷ் குமார் காலிறுதியில் தோல்வியடைந்தார்.
- 09:46 (IST) 01 Aug 2021பாஜக அரசு எந்த பிரச்னைகளையும் விவாதிக்கத் தயாராக இல்லை
ஒவ்வொரு விஷயங்களிலும் பல நிலைபாடு எடுக்கக் கூடியவர்கள் பாஜகவினர். அவர்கள் எந்த பிரச்னைகளையும் விவாதிக்கத் தயாராக இல்லை என்றும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கனிமொழி எம்.பி தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.