Tamil News Highlights : தமிழகம் வரும் குடியரசுத் தலைவர்
நாளை மாலை சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் திருவுருவப்பட திறப்பு விழா நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இன்று தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 12.45 மணிக்கு சென்னை வந்தடையும் அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் வரவேற்க உள்ளனர். மாலை நாலரை மணி அளவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை செல்லும் குடியரசுத் தலைவர் அங்கு நடைபெற உள்ள சென்னை மாகாண சட்டசபை உருவாகியதன் நூறாம் ஆண்டு விழாவில் கலந்து கொள்கிறார்.
மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு
நாகப்பட்டிணம் மாவட்டம் கோடியக்கரை கடற்பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்தத் துப்பாக்கிசூட்டில் நாகை மீனவர் கலைச்செல்வன் என்பவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமியின் சொத்துகள் ஏலம்
பல்வேறு வங்கிகளில் பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்தாததால், முன்னாள் எம்பியும் திமுக சொத்து பாதுகாப்புக் குழுவின் உறுப்பினருமான கே. சி. பழனிச்சாமிக்குச் சொந்தமான அசையா சொத்துக்கள் ஏலம் விடப்படுவதாக வங்கிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மற்றும் திருச்சியில் உள்ள வீடு, வணிக வளாகங்கள் ஆகிய 9 சொத்துக்களை ஏலமிட உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூடுகிறது . நாளை மறுநாள் காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது தமிழக நிதிநிலை அறிக்கை தொடர்பாக அமைச்சரவையுடன் ஆலோசிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
அறியாமைக்கும், ஏழ்மைக்கும் எதிராக குரல் கொடுத்தவர் கருணாநிதி. தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க காரணமாக இருந்தவர் கருணாநிதி. மக்களின் முன்னேற்றங்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழுரை
பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி. கருணாநிதியின் புகைப்படத்தை திறந்து வைத்த குடியரசுத்தலைவர் மற்றும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி என நன்றியுரை ஆற்றினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி
இந்திய வரலாற்றின் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் கலைஞர் கருணாநிதி. இது முக்கியத்துவம் வாய்ந்த நாள் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சட்டமன்றத்தில் உரையாற்றினார்.
சட்டமன்ற நூற்றாண்டு விழாவிலும், கருணாநிதியின் படத்திறப்பு விழாவில் கலந்து கொள்வதிலும் பெருமை அடைகிறேன். இதுவரை இருந்து அனைத்து சபாநாயகர்களுக்கும் வாழ்த்துக்கள் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பண்டைய எழுத்து முறை புத்தகத்தை பரிசளித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாள் இது. சட்டப்பேரவையின் வைர விழா கருணாநிதி தலைமையில் கொண்டாடப்பட்டது. முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் கருணாநிதி என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
யானை சிலை மீது கருணாநிதி கைவைத்து நிற்பது போன்ற உருவப்படம் சட்டமன்றத்தில் திறந்துவைக்கப்பட்டது; படத்திற்குக் கீழே ’காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாசு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சட்டமன்றத்தில் கருணாநிதி உருவப்படத்தை திறந்துவைத்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாதிரியை நினைவுப்பரிசாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா தொடங்கியது. விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்ச மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.
3ம் பாலினத்தவர் அனைவருக்கும் 3 மாதங்களில் கொரோனா தடுப்பூ செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி உள்பட இருவர் மீதான குற்ற வழக்கை டிச. 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்” என்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு பரவலை தடுக்க அம்மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாததால் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்
கொரோனாவின் டெல்டா பிளஸ் வகை தொற்றுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த இடைத்தரகர் ஸ்ரீ ஹர்ஷாவை சிபிசிஐடி போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியில் ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுக்கும் பணி தற்போது நடைபெறவில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் தெலி மக்களவையில் எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக ஐந்து நாள் பயணமாக சென்னை வந்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர் அவரை வரவேற்றனர்.
பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உளவு பார்க்கப்பட்டது தொடர்பாக 10வது நாளாக இன்றும் எதிர்க்கட்சியினர் அமலியில் ஈடுபட்டதால் இன்றும் நாடளுமன்றம் முடங்கியது.
இரண்டு ஒலிம்பிக் மெடல்களை பெற்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்றை உருவாக்கியுள்ள பி.வி. சிந்துவுக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று ராஜ்யசபை தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் எம். வெங்கைய நாயுடு வாழ்த்துகள்
கடந்த வாரம் கர்நாடகாவின் முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டார். அமைச்சரவை அமைப்பது தொடர்பாக முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை இன்று சந்திக்க உள்ளார் பசவராஜ்.
ஒலிம்பிக் போட்டியின் ஒவ்வொரு ஆட்டத்திலும் மகளிர் அணி வரலாறு படைத்து வருகிறது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் அரையிறுதி போட்டிக்கு மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து 36,946 பேர் குணமடைந்துள்ளனர். எனவே குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,08,57,467 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்புடன் 4,13,718 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிராம சபை கூட்டங்களை நடத்த கோரி கோவை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் என்றும் அடுத்த கிராம சபை கூட்டம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதிவு செய்யப்பட்ட 3-வது வழக்கில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டிருக்கிறார். கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.
#expresssports | #sportsupdate || ஒலிம்பிக் ஹாக்கி: அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்த இந்திய மகளிர் அணி!https://t.co/gkgoZMqkWC | #olympics | #tokyo2020 | #teamindia | #hockey | #indvsaus pic.twitter.com/ccOCuSa9vG
— IE Tamil (@IeTamil) August 2, 2021
இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது என்றும் அக்டோபர் மாதத்தில் உச்சத்தில் இருக்கும் என்றும் ஐஐடி வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
கோவிட் -19-க்கு எதிராக 100 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட்ட இந்தியாவின் முதல் நகரமாக ஒடிசாவின் தலைநகரான புவனேஸ்வர் மாறியுள்ளது.
மகளிர் 200 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் கடைசி இடத்தைப் பிடித்து தோல்வியை தழுவினார்.
கன்னியாகுமரி கடற்கரை உள்ளிட்ட இடங்களை சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்க 9-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை, திரிவேணி சங்கமம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.