Tamil News Today : தமிழ்நாடு மற்றும் இந்தியா சார்ந்த செய்திகளின் தொகுப்பை உடனடி அப்டேட்களுடன் இந்தத் தளத்தில் காணலால். லேட்டஸ்ட் செய்திகளை அறிய இணைந்திருங்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் லைவ் ப்ளாக் இது!
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மழை தொடர்கிறது. நாளை தீபாவளி தினத்தன்றும், அடுத்த நாளும்கூட மழை தொடர வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் இன்று கன மழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.
தீபாவளியையொட்டி சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வார விடுமுறை நாளான இன்று செயல்படுகிறது. இன்றைக்கு பதில் தீபாவளிக்கு மறுநாளான ஞாயிறன்று கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை தி.நகர் உள்ளிட்ட வணிக பகுதிகளில் மக்கள் சமூக இடைவெளியை மறந்து பெருமளவில் கூடி, தீபாவளி பர்சேஸ் செய்யும் காட்சிகள் பலரையும் அதிர வைத்திருக்கிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு 9,510 பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும் கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகமானது. சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி நகரங்களுக்கு விமானக் கட்டணமும் 2 அல்லது 3 மடங்காக உயர்ந்தது.
சென்னையில் தொடர்ந்து விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கும் விற்பனை செய்யப்படுகிறது
Tamil Nadu News In Tamil : தமிழகத்தில் கூட்டுறவு ஊழியர்களுக்கு 10 சதவிகித போனஸ் அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது. ஏற்கனவே இதர பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இதே அளவு போனஸ் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநிலத் தலைவர் முருகன் நேற்று சந்தித்தார். வேல் யாத்திரைக்கு அரசு தடை விதித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. எனினும் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கவே அவர்களை தனித்தனியே சந்தித்ததாக முருகன் குறிப்பிட்டார்.
Web Title:Tamil news today live tamil nadu chennai latest news chennai rains
கேரளாவின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்து பாஜக தலைமை அறிவித்துள்ளது.
பாஜகவின் தமிழக பொறுப்பாளராக சி.டி.ரவியை நியமித்து அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “அநாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் வகையில் மக்கள் தீப ஒளி ஏற்றுமாறு” கேட்டுக்கொண்டுள்ளார்.
முதல்வர் பழனிசாமி தீபாவளி வாழ்த்து செய்தியில், “அகந்தை எனும் இருள் விலகி ஆனந்தம் எனும் ஒளி பெருக வாழ்த்துகிறேன். இன்பங்கள் பெருகி அனைத்து நலமும் வளமும் பெற்று ஒற்றுமை, மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன், “அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா பதவியில் நீடிக்க கூடாது; இடைநீக்கம் செய்ய வேண்டும். சூரப்பா தொடர்ந்து பதவியில் நீடிப்பது விசாரணைக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
தமிழகம் - கர்நாடகா இடையே வரும் 16ஆம் தேதிக்கு பிறகும் பேருந்துகள் இயக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் தீபாவளியையொட்டி, வரும் 16ஆம் தேதி வரை பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேருந்துகள் எரிந்து சேதமானது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1939 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 14 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சிறுபனையூர் தக்கா கிராமத்தில் ஷான் என்பவர் மீது ஹாரூண் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஷான் உயிரிழந்தார். ஹாரூன் உரிமம் பெற்ற கைத் துப்பாக்கியை வைத்து சுட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹாரூன் மனைவியுடன் ஷான் தவறான உறவில் இருந்ததால் துப்பாக்கியால் சுட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீபாவளியையொட்டி அயோத்தி ராம ஜென்ம பூமியில் சிறப்பு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு . இன்று மாலை 5.30 மணிக்கு ஐந்தரை லட்சம் விளக்குகள் ஏற்றப்படவுள்ளன.
நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் டீசர் நாளை அதிகாலை 4.32 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. சிம்புவின் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இது தீபாவளி ட்ரீட் தான்.
தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு .போக்குவரத்துத் துறை செயலாளராக சமயமூர்த்தி நியமனம் கருவூல ஆணையராக குமார் ஜெயந்த் நியமனம் வெளிநாடு மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக தர்மேந்திர பிரதாப் நியமனம்
சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசனை நியமித்தது தமிழக உயர் கல்வித்துறை.
தேசிய ஆயுர்வேத தினத்தையொட்டி குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஆயுர்வேத நிறுவனங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.
தமிழறிஞர் இராம.இருசுப்பிள்ளை மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
கோயில்களில் 16ஆம் தேதி முதல் குடமுழுக்கு நடத்த அனுமதி. ஊரடங்கு பின்பு கோயில்களில் குடமுழுக்கு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க முடிவு. சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்தது குறிப்பிடத்தக்கது.
தீபத் திருவிழாவின் பரணி தீபம் மற்றும் மகாதீபம் நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க தடை. திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு 5,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 15-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்த குழு அமைத்தது தமிழக அரசு. அரியர் விவகாரம், சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்களில் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக சூரப்பா மீது புகார் எழுப்பப்பட்டதாக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தெரிவித்துள்ளார். இதனை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஜெய்பூரில் தேசிய ஆயுர்வேத நிறுவனத்தையும் ஜாம்நகரில் ஆயுர்வேத கல்வி ஆராய்ச்சி மையத்தையும் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு.நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
அறத்தின் ஆட்சி, ஆணவத்தின் வீழ்ச்சியைக் குறிக்கின்ற நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளியைக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், காவலர்கள், மருத்துவர்கள் உள்பட 105 சாட்சிகள் சேர்ப்பு. இது சம்பந்தமாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்துள்ளது. சாத்தான்குளம் காவல்நிலைய தலைமை காவலர் பியூலா, ரேவதி உள்ளிட்ட 6 போலீசார் சேர்க்கப்பட்டுள்ளனர். கோவில்பட்டி கிளை சிறை கண்காணிப்பாளர், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரும் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை, தடயவியல் ஆய்வு மைய அறிக்கையும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
சென்னை யானைகவுனியில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புனேவில் வைத்து 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொலையான சீத்தலின் மனைவி ஜெயமாலா உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார் சென்னை அழைத்து வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக தாய், தந்தை, மகன் ஆகிய 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
சென்னை யானைகவுனியில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புனேவில் வைத்து 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொலையான சீத்தலின் மனைவி ஜெயமாலா உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார் சென்னை அழைத்து வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக தாய், தந்தை, மகன் ஆகிய 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல் கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதியளித்துள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி 100 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தீபாவளியையொட்டி சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வார விடுமுறை நாளான இன்று செயல்படுகிறது. இன்றைக்கு பதில் தீபாவளிக்கு மறுநாளான ஞாயிறன்று கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.