Advertisment

Tamil News Highlights: இன்று கருணாநிதி நினைவு தினம்; குடும்பத் தலைவிகளுக்கு முக்கிய திட்டம் அறிவிப்பு?

Latest Tamil News : 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என 5 பதக்கங்களுடன் இந்தியா 65-வது இடத்தில் இருக்கிறது.

author-image
WebDesk
New Update
karunanidhi

Tamil News Live : சென்னை, கோவை, திருப்பூரில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கலாம்

Advertisment

தமிழகத்தில் தளர்வுகளை நீட்டிக்கவேண்டுமா அல்லது குறைத்துக்கொள்ளவேண்டுமா என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. கொரோனா பரவுதல் அதிகரிக்கும் சென்னை, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மேலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் புதிதாக 1,997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய நாளைவிடத் தொற்று எண்ணிக்கை 49-ஆக அதிகரித்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் மழை

தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்திய 65-வது இடம்

கொரோனா லாக்டவுனுக்கு இடையே மிகத் தீவிரமாக டோக்கியோவில் நடந்துகொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 34 தங்கம், 24 வெள்ளி, 16 வெண்கலம் என 74 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 29 தங்கம், 35 வெள்ளி, 27 வெண்கலம் என 91 பதக்கங்களுடன் அமெரிக்கா 2-வது இடத்திலும் 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என 5 பதக்கங்களுடன் இந்தியா 65-வது இடத்திலும் இருக்கின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:57 (IST) 06 Aug 2021
    குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை திட்டம்; ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகும் என எதிர்பார்ப்பு

    தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை திட்டம் அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


  • 21:07 (IST) 06 Aug 2021
    இங்கிலாந்து டெஸ்ட்; இந்தியா முதல் இன்னிங்சில் 278 ரன்கள்

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 95 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 214 பந்துகளுக்கு 84 ரன்கள் சேர்த்தார். ரவீந்திர ஜடேஜா 86 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்.


  • 20:52 (IST) 06 Aug 2021
    தமிழ்நாட்டில் இன்று 1,985 பேருக்கு கொரோனா; 30 பேர் உயிரிழப்பு

    தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று சிகிச்சை பலனின்றி 30 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 1,908 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 1.60 லட்சம் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன; தற்போது 20,185 பேர் சிகிச்சையில் உள்ளனர்


  • 19:45 (IST) 06 Aug 2021
    தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் ஆகஸ்ட் 16 முதல் செயல்பட அனுமதி - முதலமைச்சர் அறிவிப்பு

    தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


  • 19:45 (IST) 06 Aug 2021
    செப்டம்பர் 1 முதல் 9, 10, 11, 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க உத்தேசம்

    தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 1 முதல் 9, 10, 11, 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க உத்தேசம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.


  • 18:33 (IST) 06 Aug 2021
    தமிழகத்தில் ஆகஸ்ட் 23 வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு

    தமிழகத்தில் வரும் 23ம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் வழிபாட்டிற்கு தடை விதித்துள்ளது.


  • 18:01 (IST) 06 Aug 2021
    அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு ரத்து - ஐகோர்ட் உத்தரவு

    அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி

    தருவதாக கூறி, மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  • 17:02 (IST) 06 Aug 2021
    சிகப்பு பட்டியலில் இருந்து மஞ்சள் பட்டியலக்கு மாறிய இந்தியா

    கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு சில நாடுகள் தடை விதித்திருந்தது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்ற பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சிவப்பு பட்டியலில் இருந்து இந்தியா மஞ்சள் பட்டியலுக்கு மாறியுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லும் இந்தியர்கள் விடுதிகளுக்கு பதிலாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


  • 16:52 (IST) 06 Aug 2021
    ராகுல் நிதான ஆட்டம் : இந்திய அணி திணறல்

    இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 183 ரன்களில் சுருண்ட நிலையில், அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில் நேற்று தொடங்கிய 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.

    தற்போது 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியுள்ளது. இதில் தொடர்ந்து பேட் செய்து வரும் இந்திய அணி சற்றுமுன்வரை 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் அரைசதம் கடந்து களத்தில் உள்ளார்.


  • 16:39 (IST) 06 Aug 2021
    தோனியின் ட்விட்டர் பக்கத்தில் மாற்றம்

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், அவரது ட்விட்டர் பக்கத்தில் இருந்து தற்போது ப்ளூ டிக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


  • 16:20 (IST) 06 Aug 2021
    இந்தியா துதரகத்திற்கு சீமான் கண்டனம்

    மலேசியாவில் தவிக்கும் தமிழகளை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சொந்த செலவில் நாடு திரும்ப வேண்டும் என்று இந்திய தூதரகம் கைவிரித்திருப்பது கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழகர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.


  • 15:51 (IST) 06 Aug 2021
    அரையிறுதியில் பஜ்ரங் புனியா தோல்வி

    டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா தோல்வி அடைந்தார். அரையிறுதியில் தோற்றாலும் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பஜ்ரங் புனியா விளையாட உள்ளார்.


  • 15:50 (IST) 06 Aug 2021
    கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள்

    தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் வரும் 9-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து பேராசிரியர்கள், பணியாளர்கள் வரும் 9-ம் தேதி முதல் கல்லூரிக்கு வர உத்தரவிட்டுள்ளது.


  • 15:49 (IST) 06 Aug 2021
    வேளாண் பட்ஜெட் - ஆலோசனை

    சென்னை தலைமை செயலகத்தில் வேளாண் பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். வேளாண் துறைக்கு முதல்முறையாக தனி பட்ஜெட் வரும் 14ஆம் தேதி பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.


  • 15:18 (IST) 06 Aug 2021
    கர்நாடகாவில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

    கர்நாடகாவில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.


  • 15:03 (IST) 06 Aug 2021
    "புகாரளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரமில்லை"

    இந்தியாவில் புகார் அளிக்க நீதிபதிகளுக்கு சுதந்தரமில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா வேதனை தெரிவித்துள்ளார். நீதிபதிகள் புகார் அளித்தால் காவல்துறையோ, சிபிஐ அமைப்போ உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் புலனாய்வு அமைப்புகள் நீதித்துறைக்கு உறுதுணையாக இல்லை எனவும் கூறியுள்ளார்.


  • 15:02 (IST) 06 Aug 2021
    ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்

    விளையாட்டுத் துறையை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனி மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.


  • 14:54 (IST) 06 Aug 2021
    "புகாரளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரமில்லை"

    இந்தியாவில் புகார் அளிக்க நீதிபதிகளுக்கு சுதந்தரமில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா வேதனை தெரிவித்துள்ளார். நீதிபதிகள் புகார் அளித்தால் காவல்துறையோ, சிபிஐ அமைப்போ உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் புலனாய்வு அமைப்புகள் நீதித்துறைக்கு உறுதுணையாக இல்லை எனவும் கூறியுள்ளார்.


  • 14:29 (IST) 06 Aug 2021
    இந்திய மகளிர் ஹாக்கி அணியிடம் மோடி உரையாடல்

    டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை இழந்த இந்திய மகளிர் ஹாக்கி அணியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். ஹாக்கி மகளிர் அணியின் பங்களிப்பை பிரதமர் மோடி பாராட்டினார். தொலைபேசி உரையாடலின்போது, கண் கலங்கிய இந்திய அணிக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.


  • 13:39 (IST) 06 Aug 2021
    3வது அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க சிறப்புக்குழு

    கொரோனா மூன்றாம் அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க சிறப்புக் குழு உருவாக்கி அறிவித்துள்ளது தமிழக அரசு. மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 13 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்து அறிவித்தது தமிழக அரசு.


  • 13:37 (IST) 06 Aug 2021
    ஆந்திர முதல்வரை சந்தித்தார் பி.வி. சிந்து

    ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனை நேரில் சந்தித்து வாழ்த்துகள் பெற்றார்.


  • 13:13 (IST) 06 Aug 2021
    மதுசூதனின் இறுதி ஊர்வலம் துவங்கியது

    மறைந்த அஇஅதிமுக அவைத் தலைவர் மதுசூதனின் இறுதி ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் பங்கேற்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள மூலக்கொத்தளம் மின் மயானத்தில் அவரது உடல் எரியூட்டப்பட உள்ளது.


  • 12:58 (IST) 06 Aug 2021
    தமிழகத்தில் ஊரடங்கு? முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் துவக்கம்

    தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 9ம் தேதியுடன் நிறைவடைகின்ற நிலையில் தற்போது ஆலோசனை கூட்டம்


  • 12:56 (IST) 06 Aug 2021
    விவசாயிகளுடன் போராட்டத்தில் கலந்து கொள்ள எதிர்க்கட்சியினர் பேரணி

    காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள், நாடாளுமன்றத்தில் இருந்து ஜந்தர் மந்தரில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள பேரணி மேற்கொண்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக பெகாசஸ் மற்றும் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கடும் குரல்களை எழுப்பியதோடு விவாதத்திற்கு ஆளுங்கட்சி வர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.


  • 12:36 (IST) 06 Aug 2021
    சிம்புவின் அடுத்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது

    இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு வெந்து தணிந்தது காடு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் அக்கினி குஞ்சொன்று கண்டேன் பாடலில் இருந்து இந்த தலைப்பு பெறப்பட்டுள்ளது


  • 12:15 (IST) 06 Aug 2021
    கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை தற்போது குத்தகைக்கு விடக் கூடாது - உயர் நீதிமன்றம்

    முழுமையாக இணைய தளங்களில் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பான தகவல்களை பதிவேற்றிய பிறகே கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு விட வேண்டும் என்று இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


  • 12:11 (IST) 06 Aug 2021
    தஞ்சை பெரிய கோவிலில் ஒலித்த தமிழ் மந்திரங்கள்

    உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இதுநாள் வரையில் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று தமிழில் மந்திரங்கள் ஓதப்பட்டது.


  • 12:06 (IST) 06 Aug 2021
    குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு பணிக்குழு

    கொரோனா தொற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு பணிக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 13 பேர் கொண்ட பணிக்குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது.


  • 11:55 (IST) 06 Aug 2021
    வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை

    கொரோனா தொற்று பின்னணியில் உணவு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்தல் தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை திமுக அரசு தாக்கல் செய்ய உள்ளது என்று தெரிவித்தார்.


  • 11:53 (IST) 06 Aug 2021
    அதிமுக கொடிகட்டிய காரில் வந்து மதுசூதனன் உடலுக்கு சசிகலா அஞ்சலி

    மதுசூதனன் உடலுக்கு அதிமுக கொடிகட்டிய காரில் வந்து அஞ்சலி செலுத்தி மதுசூதனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் சசிகலா.


  • 11:38 (IST) 06 Aug 2021
    தமிழகத்தில் கொரோனா பரிசோதனை அதிகரிப்பு

    தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத சூழலை கொண்டு வர தீவிர நடவடிக்கை எடுப்பதாகவும் கொரோனா பரிசோதனை அதிகரித்திருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.


  • 11:20 (IST) 06 Aug 2021
    பதக்கம் இழந்தாலும் திறமையானவர்கள் - மோடி

    ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் வீராங்கனைகள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தினர் என்றும் பதக்கத்தை இழந்தாலும் மகளிர் அணியின் திறமையான ஆட்டம், பலரையும் ஊக்குவிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


  • 10:14 (IST) 06 Aug 2021
    சுதந்திர தின விழாவையொட்டி சென்னை போக்குவரத்தில் மாற்றம்

    75-வது சுதந்திர தின விழா ஒத்திகையை முன்னிட்டு, வருகிற 07, 09 மற்றும் 13.08.2021 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்களிலும் காலை 06.30 மணி முதல் 10.00 மணி வரைக்கும் நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப்பெற்றுள்ள இராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.


  • 10:09 (IST) 06 Aug 2021
    மதுசூதனன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்

    மறைந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்ரமணியன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.


  • 10:06 (IST) 06 Aug 2021
    இந்திய வீரர் பஜ்ரங் புனியா கால் இறுதிக்கு முன்னேற்றம்

    ஒலிம்பிக் 65 கிலோ மல்யுத்தம் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா, கிர்கிஸ்தான் வீரர் அக்மதாலீவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.


  • 09:47 (IST) 06 Aug 2021
    மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி

    டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி வெண்கல பதக்கத்துக்கான மகளிர் ஹாக்கி போட்டியில் இறுதி வரை போராடி இந்திய அணி பிரிட்டனிடம் 3-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.


Lockdown Tokyo Olympics
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment