Tamil News Today : செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொழியில் தருவதற்கான தளம் இது. அரசியல், சமூகம், காலநிலை, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து செய்திகளையும் இந்தத் தளத்தில் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் பெரிய கட்சிகளில் ஒன்றான அதிமுக.வை, எம்.ஜி.ஆர். உருவாக்கிய தினம் இன்று (அக்டோபர் 17). இன்று அ.தி.மு.க. 49-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதையொட்டி அதிமுக அலுவலகத்தில் இன்று, துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்று கொடியேற்றி, இனிப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் அந்தக் கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடுகிறார்கள்.
சென்னையில் கிண்டி, வடபழனி, தி.நகர், மாம்பலம், விமான நிலையம், பல்லாவரம், தாம்பரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை அதிகாலை முதல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து நல்ல காலநிலை நிலவியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிப்பட்டனர்.
சென்னையில் தொடர்ந்து விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு லைவ் ப்ளாக்கில் இணைந்திருங்கள்.
Live Blog
News In Tamil : அரசியல், சமூகம், காலநிலை, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து செய்திகளையும் இந்தத் தளத்தில் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த சி.எஸ்.கே 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்தது. 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா ரன் ஏதுமின்றி அவுட் ஆனார். அடுத்து வந்த ரஹானே 8 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிராடியா விளையாடி 57 பந்துகளில் 100 ரன் அடித்தார். இதனிடையே, ஷ்ரேயஸ் ஐயர் 23 ரன்களும், அலெக்ஸ் கேரி 4 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அக்சர் பட்டேல் 5 பந்துகளில் 21 ரன் எடுத்தார். டெல்லி அணி 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷிகர் தவான் 58 பந்துகளில் 101 ரன் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் ஒன்பதாவது முறையாக காலநீட்டிப்பு கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 8வது முறையாக கொடுத்த காலக்கெடு அக்டோபர் 24ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் மேலும் நீட்டிக்க கோரி கடிதம் எழுதப்படுள்ளது.
சி.எஸ்.கே.வில் முதலில் களம் இறங்கிய சாம் கரன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் அனார்.
அவருடன் களம் இறங்கிய டு பிளஸிஸ் 47 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
ஷேன் வாட்சன் 38 ரன்கள் எடுத்தார்.
தோனி 3 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அம்பத்தி ராயுடு 25 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 33 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
20 ஓவர் முடிவில் சி.எஸ்.கே 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய பெங்களூரு அணி 19.4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
நீட் தேர்வு எழுதிய கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த மாணவர் மனோஜ் நீட் தேர்வி குளறுபடி நடந்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். அக்டோபர் 11ம் தேதி வெளியிடப்பட்ட நீட் தேர்வு ஓ.எம்.ஆர் சீட்டில் 594 மதிப்பெண் காட்டிய நிலையில் நேற்று வெளியான நீட் தேர்வு முடிவில் 294 மதிப்பெண் என மாறிவந்ததால் மாணவர் மனோஜ் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து நீட் தேர்வு முகமையிடம் புகார் தெரிவித்தால் முறையான பதில் இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியனின் மகன் அன்பழகன் மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியனின் மகன் அன்பழகன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அன்பு மகனின் பிரிவால் துயருற்றிருக்கும் சுப்பிரமணியம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் கொவிட்-19 பெருந்தொற்று சூழல் மற்றும் தடுப்பூசி வழங்குதற்காக தயார் படுத்துதல், விநியோகம் மற்றும் நிர்வாகம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இந்தியாவில் முன்னெடுக்கப்படும் மூன்று தடுப்பூசிகள் முன்னேற்ற நிலையில் இருக்கின்றன. இதில் இரண்டு தடுப்பூசிகள் இரண்டாம் கட்ட சோதனையிலும், ஒரு தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனையிலும் உள்ளது.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தமிழக அரசு பயிற்சி மையங்கள் மூலம் 1615 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
தமிழகத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில் 57 புள்ளி நான்கு நான்கு சதவீதம் பேர் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணுக்கும் கூடுதலாகப் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை – மகன் (ஜெயராஜ்-பென்னிக்ஸ்) சிறை மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காவலர் தாமஸ் பிரான்சிஸ்க்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட்டது.
உயிரிழந்த தந்தையின் இறுதி சடங்கை நிறைவேற்றும் பொருட்டு இந்த 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பிரதமர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. பெண்கள் உயர்கல்வி பெறவும், வாழ்க்கையில் சாதிக்கவும் இது அவசியமாகும்! என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
அருமைச் சகோதரர் மா.சுப்பிரமணியத்தின் மகன் அன்பழகன் கொரோனா தொற்றால் உயிரிழந்தது நெஞ்சை உறைய வைத்துவிட்டது. மா.சுப்பிரமணியம் இணையர் கண்ணின் மணி போல் காத்துவந்தார்கள். ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை. ஊரார்க்கு ஒன்று என்றால் ஓடி நிற்கும் மா.சு.வுக்கு இப்படியொரு சோதனையா? ஆழ்ந்த இரங்கல்கள்! என்று மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
”வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாகை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள் சுமார் 10 பேர் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக, தமிழக போலீசாருக்கு இன்டர்போல் ரெட் அலர்ட் தரப்பட்டுள்ளது. தமிழக கியூ பிரிவு போலீசாரால் இலங்கை நாட்டில் தேடப்பட்டு வந்த 'டான்' ஜெமினி பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார்.
திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியத்தின் மகன் அன்பழகன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்ட நிலையில், தற்போது மரணமடைந்திருக்கிறார்.
அ.தி.மு.கவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த கிராமத்தில் கட்சி கொடி ஏற்றினார். சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் நடந்த நிகழ்வில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். முதலமைச்சரின் சொந்த கிராமத்தில் நடைபெற்ற அ.தி.மு.க தொடக்க விழா கொண்டாட்டத்தில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நீட் தேர்வில் தமிழகத்தில் 57.44% பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த சதவிகிதம், கடந்த ஆண்டைவிட அதிகம். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு 1.21 லட்சம் பேர் விண்ணப்பம் செய்து, 99,610 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 57,215 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாணவர் ஸ்ரீஜன் 710 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடமும், அகில இந்திய அளவில் 8வது இடமும் பெற்றுள்ளார்.
அகில இந்திய அளவில் முதல் 40 இடங்களில் ஸ்ரீஜன் மட்டுமே இடம்பிடித்துள்ளார். மாநில அளவில் மாணவி மோகன பிரபா 2வது இடம் பெற்றிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights