Tamil News Highlights : பொது மக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகளை வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கும் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த சாமனப்பள்ளி என்ற கிராமத்தில் இன்று தொடங்கி வைக்கிறார். இதன் முதல் கட்டமாக நகரம் மற்றும் கிராமப்பகுதிகளை சேர்ந்த 20 லட்சம் பேர் பயனடையும் வகையில் தொடங்கப்படுகிறது. மேலும், படிப்படியாக 1 கோடி பேரை சென்றடையும் வகையில் விரிவாக்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி ஆண்டுதோறும் 257 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
செப்டம்பர் 12-ம் தேதி நடைபெற இருக்கும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6-ம் தேதி வரை காலக்கெடு இருந்த நிலையில் தற்போது மேலும் நான்கு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய 11-ம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம்
டோக்கியோவில் நடைபெற்று வரும் இந்தியா - ஜெர்மனி அணிகள் இடையிலான வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஹாக்கி போட்டியில், முதல் பாதி ஆட்ட முடிவில் ஜெர்மனி 3 கோல்களும், இந்தியா 3 கோல்களும் அடித்து சமநிலையில் இருந்தனர். இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் இந்தியாவுக்கான 3-வது கோலை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து ஜெர்மனியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 20:35 (IST) 05 Aug 2021தமிழ்நாட்டில் மதவெறுப்பை தூண்டுவோர் மீது நடவடிக்கை கோரி முதலமைச்சருக்கு பீட்டர் அல்போன்ஸ் கடிதம்
திருச்செங்கோட்டில் கிறிஸ்தவ வழிபாட்டு கூடம் அருகே விநாயகர் சிலை வைத்து மதமோதலை உருவாக்க சதி; தேவைப்பட்டால் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தடுப்புக்காவலில் கைது செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மதவெறுப்பை தூண்டுவோர் மீது நடவடிக்கை கோரி முதலமைச்சருக்கு சிறுபாண்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கடிதம்.
- 20:27 (IST) 05 Aug 2021பொறியியல் 2 ஆம் ஆண்டில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பம் ஆரம்பம்
நேரடியாக 2 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
- 20:02 (IST) 05 Aug 2021அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு - சசிகலா
அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும், எத்தனையோ சோதனையான காலகட்டத்தில் அதிமுகவிற்கு துணை நின்றவர் மதுசூதனன் என்றும் சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.
- 19:21 (IST) 05 Aug 2021தமிழகத்தில் மேலும் 1,997 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் மேலும் 1,997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25.69 லட்சமாக உயர்வு
- 18:54 (IST) 05 Aug 2021ஏழை, எளிய மக்களின் குரலாக அதிமுகவிற்குள் இறுதி மூச்சுவரை திகழ்ந்தவர் மதுசூதனன் - முதலமைச்சர் ஸ்டாலின்
மதுசூதனன் மறைவு செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும், துயரத்திற்கும் உள்ளானேன் என்றும், ஏழை - எளிய மற்றும் அடித்தட்டு மக்களின் குரலாக அதிமுகவிற்குள் இறுதி மூச்சுவரை திகழ்ந்தவர் மதுசூதனன் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- 18:28 (IST) 05 Aug 2021தமிழ் நாடு கனிமவளத்துறை அதிகாரி நச்சு வாயுவை சுவாசித்ததால் மரணம்
தமிழ் நாடு கனிமவளத்துறைச் சேர்ந்த அதிகாரிகள், சென்னையில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தபோது, நச்சு வாயுவை சுவாசித்ததால், மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளனர். லாட்ஜ் ஊழியர்கள் அறைகளில் இருந்து புகை வெளிவருவதை கண்டு தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு துறை அதிகாரிகளை மீட்டது. அவர்களில், அரவிந்தன் என்பவர் மரணமடைந்துள்ளார், மற்றவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பழுதடைந்த ஏசியில் இருந்து நச்சு வாயு வெளியேறியதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- 18:10 (IST) 05 Aug 2021பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா ஜாமீன் மனு தள்ளுபடி
இந்து மதம், பாரத மாதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனுவை நாகர்கோவில் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
- 17:52 (IST) 05 Aug 2021அறநிலையத்துறை கோயில்களில் 'அன்னை தமிழில் அர்ச்சனை' திட்டம் தொடக்கம் - அமைச்சர் சேகர்பாபு
அறநிலையத்துறை கோயில்களில் 'அன்னை தமிழில் அர்ச்சனை' திட்டம் தொடங்கப்பட்டது. இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தமிழில் அர்ச்சனை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- 17:50 (IST) 05 Aug 2021அதிமுக அவைத் தலைவர் மதுசூதணன் மறைவால் பெருந்துயர் அடைந்தேன் - எடப்பாடி பழனிசாமி இரங்கல்
அதிமுக அவைத் தலைவர் மதுசூதணன் மறைவு குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழக அவைத்தலைவர் அண்ணன் மதுசூதனன் அவர்களின் மறைவு செய்தியறிந்து ஆற்றொண்ணா பெருந்துயரும் சொல்லொண்ணா சோகமும் அடைந்தேன். மதுசூதனன் அவர்களின் மறைவு கழகத்திற்கு மட்டுமல்லாது தமிழகத்திற்கே ஒரு பேரிழப்பு” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
- 17:45 (IST) 05 Aug 2021மதுசூதனன் மரணம் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு - அதிமுக தலைமை அறிவிப்பு
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மறைவையொட்டி வரும் 7ஆம் தேதி வரை 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
- 17:10 (IST) 05 Aug 2021ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; விசாரணைக்கு தடையில்லை - ஐகோர்ட்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடையில்லை என்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 16:41 (IST) 05 Aug 2021அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று 3.42 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 80.
- 15:58 (IST) 05 Aug 2021தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு இலவச பயணம்
அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் சென்னை மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
- 15:40 (IST) 05 Aug 2021நுழைவு வரி பாக்கி செலுத்த நடிகர் தனுஷ்க்கு அவகாசம்
"சொகுசு காருக்கான நுழைவு வரி பாக்கி ரூ.30.30 லட்சத்தை 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டும்" என் நடிகர் தனுஷுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 14:57 (IST) 05 Aug 2021இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க உத்தரவு
பள்ளிகளில் 6 - 18 வயதுடைய இடைநின்ற மாணவர்களை கணக்கெடுப்பு செய்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை குறித்து பதிலளிக்க வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை முதன்மைச்செயலர், பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்து்ளளது.
- 14:55 (IST) 05 Aug 2021மேகதாது அணைக்கு எதிராக பாஜன உண்ணாவிரதம்
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா திட்டமிட்டுள்ள நிலையில், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜ.க. சார்பில் மாநிலத்தலைவர் அண்ணாமலை சார்பில் தஞ்சையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
- 14:01 (IST) 05 Aug 20218 இந்திய ஹாக்கி வீரர்களுக்கு ரூ.1 கோடி பரிசு: பஞ்சாப் அரசு
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியைச் சேர்ந்த பஞ்சாப் மாநில வீரர்கள் 8 பேருக்கு தலா ரூ.1 கோடி பரிசளிப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
- 14:01 (IST) 05 Aug 2021பூஜையுடன் தொடங்கிய ‘தனுஷ்44’ படத்தின் படப்பிடிப்பு!
கார்த்திக் நரேனின் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘தனுஷ் 44’ படத்தில் நடிக்கிறார். தனுஷுடன் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின், படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. வேஷ்டி சட்டையில் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நடிகை நித்யா மேனன் உள்ளிட்டோர் பூஜையில் கலந்துகொண்டுள்ளனர்.
- 13:31 (IST) 05 Aug 2021தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 13:16 (IST) 05 Aug 2021சாதி ஒழிப்பை கொண்டு வரும் அரசுக்கு பாராட்டுகள் - விசிக தலைவர் திருமாவளவன்!
தமிழ்நாட்டில் படிப்படியாக சாதி ஒழிப்பை கொண்டு வரும் அரசுக்கு பாராட்டுகள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்
- 13:07 (IST) 05 Aug 2021பாடப்புத்தகங்களில் தலைவர்களின் சாதிப்பெயர்கள் நீக்கம்!’ - தமிழ்நாடு பாடநூல் கழகம் நடவடிக்கை
தமிழக பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், அரசியல் ஆளுமைகள் உள்ளிட்ட தமிழ்த்தலைவர்கள் பெயரின் பின்னால் இருக்கும் சாதிப்பெயர்களை நீக்கியிருக்கிறது தமிழ்நாடு பாடநூல் கழகம்
- 12:45 (IST) 05 Aug 2021ராஜேந்திர சோழன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் - தொல்.திருமாவளவன் கோரிக்கை!
மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
- 12:40 (IST) 05 Aug 2021அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடம்!
உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோவில் கடந்த மாதம் 20ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. எனவே அவரை சந்திக்க அதிமுகவினர் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
- 12:18 (IST) 05 Aug 2021தமிழ்நாட்டில் முதன்முறை - ஆகஸ்ட் 13ல் தாக்கலாகிறது காகிதமில்லா பட்ஜெட்!
தமிழ்நாடு அரசின் நிதி - நிலை அறிக்கை வரும் 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதன்முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. காகிதமில்லா சட்டப்பேரவை என்ற அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- 12:15 (IST) 05 Aug 2021பெகாசஸ் விவகாரம் - உச்சநீதிமன்றம் உத்தரவு
பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பான ரிட் மனுக்கள் தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
- 11:47 (IST) 05 Aug 2021நடிகர் தனுஷூக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம்
இறக்குமதி காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி நடிகர் தனுஷ் 2015-ம் ஆண்டில் தாக்கல் செய்த வழக்கு விசாரணை நடைபெற்றது. என்ன தொழில் செய்கிறார் என மனுவில் தெரிவிக்காதது ஏன் என்று நடிகர் தனுஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், எவ்வளவு கார் வாங்கினாலும், தொகையை சரியாக செலுத்த சொல்லி கண்டனம் தெரிவித்துள்ளது.
- 11:29 (IST) 05 Aug 2021பொலிவியா நாட்டில் கடும் பனிப்பொழிவு
பொலிவியா நாட்டில் கடும் பனிப்பொழிவு காரணத்தால் பல நகரங்கள் பனிபோர்வை போர்த்தியது போல் காட்சி அளிக்கின்றன. கட்டிடங்கள், சாலைகள், வாகனங்கள் உள்ளிட்டவை பனியால் மூடப்பட்டுள்ளன. தட்ப வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கும் கீழே உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
- 11:25 (IST) 05 Aug 2021தம்பிதுரை மீதான நில ஆக்கிரமிப்பு வழக்கு
அதிமுகவை சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு சொந்தமான பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
- 11:21 (IST) 05 Aug 2021நில வரி விதிப்பிலிருந்து விலக்கு கோரிய மனு
மத்திய அரசு நிறுவனம் என கூறி தமிழ்நாடு நகர்புற நில வரி விதிப்பிலிருந்து விலக்கு கோரிய இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
- 11:12 (IST) 05 Aug 2021தமிழகத்தில் 1,949 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் மேலும் 1,949 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25.67 லட்சமாக உயர்ந்திருக்கிறது.
- 11:11 (IST) 05 Aug 2021சேலத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்
வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காடு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து சேலம் மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து சேலம் ஆட்சியர் கார்மேகம் உத்தரவுவிட்டிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.