தமிழ் அறிஞர் மறைமலை அடிகளாரின் பேரனுக்கு பணி முறைப்படுத்தப்படும்
சர்வதேச தமிழ் படிப்பு நிறுவனத்தில், ஒருங்கிணைந்த கட்டணத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரியும் தமிழ்ச் சேவகர் மறைமலை அடிகளாரின் பேரன் பி.சிவகுமாரின் பணி முறைப்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார். மறைமலை அடிகளாரின் மகன் மற்றும் சிவகுமாரின் தந்தையுமான மரை பச்சையப்பன் வறுமையில் வாடுவதாகவும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வாடகை வீட்டுக்கு பராமரிப்பு கட்டணத்தை செலுத்த முடியாத காரணத்தையும் அறிந்த முதலமைச்சர், இன்றுவரை செலுத்த வேண்டிய கட்டணங்களை தள்ளுபடி செய்து பச்சையப்பனுக்கு வாழ்நாள் முழுவதும் விலக்கு அளித்தார்.
கோயில்களில் தமிழில் அர்ச்சனை : பெயர்ப் பலகை வெளியீடு
தமிழகத்தில் உள்ள கோயில்களில் வருகிற வெள்ளிக்கிழமை முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது. இதன் முதல்கட்டமாக 47 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு "அன்னைத் தமிழில் அர்ச்சனை" என விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வைக்கப்படவிருக்கும் பெயர் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், அர்ச்சகரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும்
கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் ஏழாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இந்நிலையில் கீழடியில் ஏழு குழிகளும், அகரத்தில் எட்டு குழிகளும் கொந்தகையில் நான்கு குழிகளும், மணலூரில் மூன்று குழிகளும் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை இந்த ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட உறைகிணறுகள், வெள்ளி நாணயம், பவளம், உழவுக்கருவிகள், பானைகள், பானைஓடுகள் ஆகியவற்றை காட்சிப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கெனவே தளங்களில் பானைகள், பானைஓடுகள், உறைகிணறுகள் ஆகியவற்றை காண அனுமதிக்கப்படுகிறது. மேலும், வெள்ளி நாணயம் உள்ளிட்ட பொருட்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்ற நீரஜ் சோப்ரா இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளார். முதல் வாய்ப்பிலேயே 86.65 மீ தூரம் ஈட்டி எறிந்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 22:10 (IST) 04 Aug 2021183 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்
இங்கிலாந்து டெஸ்ட்டில் அபாரமாக பந்துவீசிய இந்திய அணி இங்கிலாந்து அணியை 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியுள்ளது
- 21:49 (IST) 04 Aug 2021இங்கிலாந்து டெஸ்ட்; இந்தியா அபார பந்துவீச்சு
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி அபாரமாக பந்துவீசியுள்ளது. இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்துள்ளது. பும்ரா, ஷமி தலா 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்
- 20:47 (IST) 04 Aug 2021மக்களை தேடி மருத்துவம் திட்டம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
கிருஷ்ணகிரியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். மருத்துவ வாகனத்தில் மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் ஆகியோர் வீடு தேடிச் சென்று சிகிச்சையளிப்பர்.
- 19:52 (IST) 04 Aug 2021தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,949 பேருக்கு கொரோனா; 38 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 38 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
- 19:22 (IST) 04 Aug 2021தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 3 நாள் டெல்லி பயணம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 3 நாள் பயணமாக டெல்லி செல்கிறார். ஆகஸ்ட் 6 முதல் 8 வரை டெல்லியில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்கிறார்.
- 19:00 (IST) 04 Aug 2021மகளிர் ஹாக்கி அணி விளையாடிய விதம் பெருமை அளிக்கிறது - பிரதமர்
மகளிர் ஹாக்கி அணி விளையாடிய விதம் பெருமை அளிக்கிறது என பிரதமர் மோடி, இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பாலுடன் தொலைபேசியில் பேசினார்.
- 18:08 (IST) 04 Aug 2021அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க முடிவு - தமிழக அரசு
மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்காக அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது
- 17:12 (IST) 04 Aug 2021டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் ஹாக்கி அரையிறுதியில் அர்ஜெண்டினாவிடம் இந்தியா போராடி தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் ஹாக்கி அரையிறுதியில் அர்ஜெண்டினாவிடம் இந்தியா போராடி தோல்வி அடைந்தது. அர்ஜெண்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 3வது இடத்திற்கான போட்டியில் இந்தியா விளையாடும்.
- 17:11 (IST) 04 Aug 202110.5% வன்னியர் இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரி பாமக பாலு மனு தாக்கல்
10.5% வன்னியர் இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி பா.ம.க. செய்தித் தொடர்பாளர் கே.பாலு உயர்நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
10.5% வன்னியர் இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி பா.ம.க. செய்தித் தொடர்பாளர் கே.பாலு உயர்நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
- 16:23 (IST) 04 Aug 2021அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகள் - அமைச்சர் சேகர் பாபு
இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை மீட்டு தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளை கட்ட திட்டமிட்டுள்ளோம். சிதம்பரம் நடராஜர் கோயிலை மீட்பதற்கு தேவையான சட்டப்போராட்டத்தை நடத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.” என்று கூறியுள்ளார்.
- 16:00 (IST) 04 Aug 2021ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய புதிய சட்டம் இயக்கப்படும் என அறிவிப்பு
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்ய "தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும்" என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
- 15:27 (IST) 04 Aug 2021நீதிமன்றத்துக்கும், அரசுக்கும் நன்றி - சுப்பையா மனைவி
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு திருப்திகரமாக உள்ளது என்று கூறியுள்ள அவரது மனைவி நீதிமன்றத்துக்கும், அரசுக்கும் நன்றி என கூறியுள்ளார். மேலும் "இது போன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்க ஒரு எடுத்துக்காட்டு" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இந்த வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது குறித்து பேசிய சுப்பையாவின் வழக்கறிஞர், நீண்ட காலமாக நடந்த வழக்கில் வரலாற்றில் பதிய வைக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
- 15:19 (IST) 04 Aug 2021டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று நாட்டிகாமில் தொடங்கியுள்ள நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
- 15:15 (IST) 04 Aug 2021மல்யுத்த போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர்
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த போட்டியில் ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா அரையிறுதியில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
- 15:14 (IST) 04 Aug 2021மல்யுத்த போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர்
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த போட்டியில் ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா அரையிறுதியில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
- 15:13 (IST) 04 Aug 2021மருத்துவர் சுப்பையாவின் வழக்கு தொடர்பாக 57 சாட்சியங்கள் விசாரணை
மருத்துவர் சுப்பையாவின் தாய் மாமனுக்கு சொந்தமான இரண்டே கால் ஏக்கர் நிலத்தை உரிமை கொண்டாடுவதில் எழுந்த பிரச்சனை தொடர்பாக அரசு தரப்பில் 57 சாட்சிகளை விசாரணை செய்து173 ஆவணங்கள், 42 சான்றுகள் குறியீடு செய்யப்பட்டன
- 15:13 (IST) 04 Aug 2021நீதிமன்றத்துக்கும், அரசுக்கும் நன்றி - சுப்பையா மனைவி
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு திருப்திகரமாக உள்ளது என்று கூறியுள்ள அவரது மனைவி நீதிமன்றத்துக்கும், அரசுக்கும் நன்றி என கூறியுள்ளார். மேலும் "இது போன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்க ஒரு எடுத்துக்காட்டு" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இந்த வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது குறித்து பேசிய சுப்பையாவின் வழக்கறிஞர், நீண்ட காலமாக நடந்த வழக்கில் வரலாற்றில் பதிய வைக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
- 14:54 (IST) 04 Aug 2021மருத்துவர் சுப்பையாவின் வழக்கு தொடர்பாக 57 சாட்சியங்கள் விசாரணை
மருத்துவர் சுப்பையாவின் தாய் மாமனுக்கு சொந்தமான இரண்டே கால் ஏக்கர் நிலத்தை உரிமை கொண்டாடுவதில் எழுந்த பிரச்சனை தொடர்பாக அரசு தரப்பில் 57 சாட்சிகளை விசாரணை செய்து173 ஆவணங்கள், 42 சான்றுகள் குறியீடு செய்யப்பட்டன
- 14:16 (IST) 04 Aug 2021தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அறிவிப்பு
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- 13:58 (IST) 04 Aug 2021தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான வெள்ளை அறிக்கை ஆக.9ம் தேதி வெளியீடு
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான வெள்ளை அறிக்கை ஆக.9ம் தேதி வெளியிடப்பட உள்ளது. 120 பக்கங்கள் கொண்ட இந்த வெள்ளை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார்.
- 13:55 (IST) 04 Aug 2021பெகாசஸ் உளவு விவாகரம்: அமளியில் ஈடுபட்டதாக 6 திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்
பெகாசஸ் உளவு விவகாரத்தில் அமளியில் ஈடுபட்டதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் (டோலா சென், எம்.டி. நாடிமுல் ஹக், அபீர் ரஞ்சன் பிஸ்வாஸ், சாந்தா சேத்ரி, அர்பிதா கோஷ், மவுசம் நூர்) சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வெங்கையா நாயுடு எச்சரிக்கையை மீறி அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டதால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
The 6 MPs are:
— Bharti Jain (@bhartijainTOI) August 4, 2021
1. Ms. Dola Sen
2. Shri Md. Nadimul Haque
3. Shri Abir Ranjan Biswas
4. Shrimati Shanta Chhetri
5. Ms. Arpita Ghosh
6. Shrimati Mausam Noor - 13:31 (IST) 04 Aug 2021சட்டப்பேரவையில் வரும் 13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்!
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சட்டப்பேரவையில் வரும் 13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 13:15 (IST) 04 Aug 2021மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு; 9 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
சென்னையில் நடந்த மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் என்ற பகுதியில் 10 கோடி மதிப்பிலான நிலம் ஒன்று இருந்துள்ளது. இந்த நிலம் தொடர்பான பிரச்னையில், சென்னையிலிருந்த பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி கூலிப்படையினரால் கொல்லப்பட்டார். இது சம்பந்தமாக அவருடைய மைத்துனர் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர், கூலிப்படைகள், ஆசிரியர் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட 10 பேரை கைதுசெய்திருந்தனர்.
அதில் ஐயப்பன் என்பவர் அப்ரூவர் ஆன நிலையில் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. தீர்ப்பு இன்றைய தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
- 12:35 (IST) 04 Aug 2021குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "குத்துச்சண்டையில் லவ்லினா பெற்ற வெற்றி இந்தியர்களை மேலும் ஊக்கப்படுத்தும்; போட்டியில் லவ்லினாவின் உறுதித்தன்மை போற்றத்தக்கது" என்று குறிப்பிட்டுள்ளார்
- 12:24 (IST) 04 Aug 2021'தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் "தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
- 12:20 (IST) 04 Aug 2021டோக்கியோ ஒலிம்பிக் போட்டி : இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கம்
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 69 கிலோ குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அசாம் மாநிலத்தை சேர்ந்த லவ்லினா, தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே வெற்றிபெற்றுள்ளார்.
expresssports | sportsupdate || டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்! https://t.co/gkgoZMqkWC | olympics | tokyo2020 | teamindia | boxingnews | lovlinaborgohain pic.twitter.com/7FHk6gf1cU
— IE Tamil (@IeTamil) August 4, 2021 - 12:04 (IST) 04 Aug 2021தமிழக அமைச்சரவை கூட்டம் தொடக்கம்
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மேலும், தமிழக நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி, வேளாண் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- 10:47 (IST) 04 Aug 2021சாலைகளில் போராட்டம் மேற்கொண்ட மீனவர்கள்
கொரோனா நோய்தொற்று பரவலினால், தாங்களின் வாழ்வாதாரத்தை இழந்ததாகவும், அதற்கான நிவாரத்தை அரசு வழங்க கோரியும் சிலி நாட்டின் மீனவர்கள் சாலைகளில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளையும் டயர்களையும் எரித்து போராட்டம் மேற்கொண்டனர்.
- 10:45 (IST) 04 Aug 2021வழிபாட்டுத் தலங்களில் மீண்டும் கட்டுப்பாடு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்டறிந்து அங்கு தடைவிதிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாங்கண்ணி தேவாலயத்துக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருவதற்கு தடைவிதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- 10:43 (IST) 04 Aug 2021இறக்குமதி காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்ட நடிகர் தனுஷ் மனு
வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய நடிகர் தனுஷ் மனு மீது நாளை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.
- 10:11 (IST) 04 Aug 202150.37 கோடி தடுப்பூசிகள் விநியோகம்
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 50.37 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
- 10:10 (IST) 04 Aug 2021விரைவில் நிறைய கல்லூரிகள் அமைக்கப்படும்
கோயிலுக்கு சொந்தமான இடங்களில், கல்வி நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் தமிழகத்தில் மிக விரைவில் நிறைய கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும், கோயில் சிலைகளை கடத்தும் நபர்களை கைது செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
- 09:44 (IST) 04 Aug 2021ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புத் துறை அமைச்சரை குறிவைத்து நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்ட நிலையில், 10 பேர் காயமடைந்தனர்.
- 09:43 (IST) 04 Aug 2021இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெறுகிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற 62 போட்டிகளில் 34 போட்டிகளில் இங்கிலாந்து வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- 09:40 (IST) 04 Aug 2021இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம் மகளிர் 57 கிலோ எடைப்பிரிவு தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் தோல்வியடைந்தார்.
- 09:39 (IST) 04 Aug 2021வளக்கொள்ளையர்களை அழிக்க வேண்டும்
தமிழ்நாட்டின் கனிம வளங்கள் கேரளாவுக்குக் கொள்ளைப்போவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வளக்கொள்ளையர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.