News In Tamil : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை வண்டியூரில் நடைபெற்ற அரசியல் எழுச்சி மாநாட்டில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடி தலைமையிலான அரசு சொந்த நாட்டு மக்கள் மீதே பொருளாதார தாக்குதல் நடத்துகிறது என்றும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுதான் மோடி அரசு மக்களுக்கு தரும் பரிசு என்றும் விமர்சித்தார். மேலும், அதிமுக மூலம் பாஜக தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. தனது ஊழலை மறைக்க அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.
கோவை மசக்காளிபாளையம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் சுகாதாரத்துறையால் நடத்தப்பட்ட முகாமில் தடுப்பூசி போடப்பட்டது. பென்டாவேலன்ட், ரோடோவைரஸ் தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு போடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தடுப்பூசி போடப்பட்டதால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்தப் புகார் தொடர்பாக, கமிட்டி அமைத்து விசாரணை நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பூமியை தொடர்ந்து செவ்வாய்கிரகத்தில் மனித உயிர்கள் வாழ்வது சாத்தியமா என்ற ஆராய்ச்சியை மனிதர்கள் தீவிரப்படுத்தி இருக்கிறது. அந்த வரிசையில் அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கான அதிநவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய PRESERVANCE விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் செலுத்தியது. 7 மாதகால பயணத்தை அடுத்து வெற்றிகரமாக விண்கலத்தில் இருந்து ரோபோட்டிக் ரோவர், ஜெசிரோ பள்ளத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 2 மணி அளவில் தரையிறங்கியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Live Blog
Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.
புதுச்சேரி பொறுப்பு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரலாற்றுப் பிழை செய்துள்ளதாக புதுச்சேரி முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு இருப்பதாக விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழ்நாட்டில் இருந்து பாஜகவுக்கு ஒரு எம்.பிக்கூட இல்லாத போதும், தமிழ்நாட்டுக்கு குறை வைக்காமல் செயலாற்றி வருபவர் தான் பிரதமர் மோடி; 2014 முதல் தமிழ்நாட்டுக்கு அதிக திட்டங்களை தந்துகொண்டிருப்பது பாஜக அரசு தான்” என்று தெரிவித்துள்ளார்.
ஆளுநரிடம் அதிமுக அமைச்சர்கள் மீதான் ஊழல் புகார் பட்டியலை அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், “5 அமைச்சர்கள், ஒரு எம்.எல்.ஏ மீது 9 புகார்கள் அடங்கிய ஆதாரத்துடன் கூடிய ஊழல் பட்டியல் தந்துள்ளோம்; அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு தனக்கு இருக்கும் அதிகாரத்தின்படி நடவடிக்கை எடுப்பதாக் ஆளுநர் உறுதி அளித்துள்ளார்” என்று கூறினார்.
அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரின் 2வது பட்டியலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் அளித்தனர். மேலும், அமைச்சர்கள் மீது தாங்கள் அளித்துள்ள ஊழல் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் திமுக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்தால் நிச்சயமாக வரவேற்போம். அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பிறகு அதிமுகவை மீட்டெடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட விதிமீறல் வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றும் சிஏஏ போராட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்றும் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தேர்தல் பிரசாரத்தின்போது முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். மேலும், கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய பரிசீலனை செய்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் பிப்ரவரி 25 முதல் விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம். விருப்ப மனுவுடன் இணைத்து நன்கொடை தொகையையும் செலுத்தலாம் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights