News In Tamil : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை வண்டியூரில் நடைபெற்ற அரசியல் எழுச்சி மாநாட்டில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடி தலைமையிலான அரசு சொந்த நாட்டு மக்கள் மீதே பொருளாதார தாக்குதல் நடத்துகிறது என்றும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுதான் மோடி அரசு மக்களுக்கு தரும் பரிசு என்றும் விமர்சித்தார். மேலும், அதிமுக மூலம் பாஜக தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. தனது ஊழலை மறைக்க அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.
கோவை மசக்காளிபாளையம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் சுகாதாரத்துறையால் நடத்தப்பட்ட முகாமில் தடுப்பூசி போடப்பட்டது. பென்டாவேலன்ட், ரோடோவைரஸ் தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு போடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தடுப்பூசி போடப்பட்டதால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்தப் புகார் தொடர்பாக, கமிட்டி அமைத்து விசாரணை நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பூமியை தொடர்ந்து செவ்வாய்கிரகத்தில் மனித உயிர்கள் வாழ்வது சாத்தியமா என்ற ஆராய்ச்சியை மனிதர்கள் தீவிரப்படுத்தி இருக்கிறது. அந்த வரிசையில் அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கான அதிநவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய PRESERVANCE விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் செலுத்தியது. 7 மாதகால பயணத்தை அடுத்து வெற்றிகரமாக விண்கலத்தில் இருந்து ரோபோட்டிக் ரோவர், ஜெசிரோ பள்ளத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 2 மணி அளவில் தரையிறங்கியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
திண்டுக்கல்லில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவந்த 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவிகள் 3 பேரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி பொறுப்பு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரலாற்றுப் பிழை செய்துள்ளதாக புதுச்சேரி முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு இருப்பதாக விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழ்நாட்டில் இருந்து பாஜகவுக்கு ஒரு எம்.பிக்கூட இல்லாத போதும், தமிழ்நாட்டுக்கு குறை வைக்காமல் செயலாற்றி வருபவர் தான் பிரதமர் மோடி; 2014 முதல் தமிழ்நாட்டுக்கு அதிக திட்டங்களை தந்துகொண்டிருப்பது பாஜக அரசு தான்” என்று தெரிவித்துள்ளார்.
ஆளுநரிடம் அதிமுக அமைச்சர்கள் மீதான் ஊழல் புகார் பட்டியலை அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், “5 அமைச்சர்கள், ஒரு எம்.எல்.ஏ மீது 9 புகார்கள் அடங்கிய ஆதாரத்துடன் கூடிய ஊழல் பட்டியல் தந்துள்ளோம்; அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு தனக்கு இருக்கும் அதிகாரத்தின்படி நடவடிக்கை எடுப்பதாக் ஆளுநர் உறுதி அளித்துள்ளார்” என்று கூறினார்.
அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரின் 2வது பட்டியலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் அளித்தனர். மேலும், அமைச்சர்கள் மீது தாங்கள் அளித்துள்ள ஊழல் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் திமுக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் நினைவு இல்லத்துக்கு பொதுமக்களை அனுமதிக்க விதித்த தடை நீட்டிக்கப்படுகிறது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்தால் நிச்சயமாக வரவேற்போம். அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பிறகு அதிமுகவை மீட்டெடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
கைது சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற அரசு ஊழியர்கள் கைது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததை தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைப்பு தடுப்பூசி போடப்பட்ட 7 ஆயிரம் குழந்தைகள் கண்காணிப்பு – சுகாதாரத்துறை
“மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவது அ.தி.மு.க அரசு தான்” என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி தலைமைச் செயலகம் முன் அரசு ஊழியர்கள் சாலை மறியல்
“கொஞ்சம் பொறுங்கள்; அவர் சிறப்பாக விளையாடுவார்”-அர்ஜூன் டெண்டுல்கர் குறித்து ஜாகீர் கான்
கொரோனா தொற்றுக்கு கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பு மருந்து பாதுகாப்பற்றது என அறிவிக்கக் கோரி வழக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிப்.25ல் துணை ராணுவப் படையினர் தமிழகம் வருகை
உசிலம்பட்டி அருகே பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தை மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளது – காயங்களுடன் பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் பெற்றோர்களிடம் காவல்துறை தொடர்ந்து விசாரணை
2 எம்.டெக் படிப்புகளுக்கு மத்திய அரசு இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் *அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வளிமண்டல மேலடுக்கில் மேற்குத்திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியால் பிப்ரவரி 22-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட விதிமீறல் வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றும் சிஏஏ போராட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்றும் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தேர்தல் பிரசாரத்தின்போது முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். மேலும், கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய பரிசீலனை செய்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக சீனாவில் 2020-ம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலா 52.1% குறைந்திருக்கிறது. சுற்றுலா பயணிகளின் வருகை குறைவால் சீனாவில் 61.1% வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பழம்பெரும் நடிகை சரோஜாதேவி, சௌகார் ஜானகி, நடிகர் ராமராஜன், சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படவுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் பிப்ரவரி 25 முதல் விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம். விருப்ப மனுவுடன் இணைத்து நன்கொடை தொகையையும் செலுத்தலாம் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
நாசாவின் ‘பெர்சவரன்ஸ்’ விண்கல ஆய்வில் முக்கிய பங்காற்றிய இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானி சுவாதி மோகனை திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். உலகம் மற்றும் இந்தியாவிற்கு பெருமையான தருணம் என குறிப்பிட்டார்.