scorecardresearch

News Highlights: சசிகலா விலகல்; அதிமுக- பாஜக வரவேற்பு

Today’s Tamil News Live சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.93.11-க்கும், டீசல் லிட்டர் ரூ.86.45-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

News Highlights: சசிகலா விலகல்; அதிமுக- பாஜக வரவேற்பு

News In Tamil Live : சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகம் இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த 24-ம் தேதி தொடங்கிய விருப்ப மனு விநியோகம் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 5,500-க்கும் மேற்பட்ட மனுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. விருப்ப மனு அளித்தவர்களிடம் நாளை ஒரே கட்டமாக நேர்காணல் நடத்த அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல், எப்படி வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு என்கிற சட்டம் இயற்றப்பட்டது எனத் தென் நாடு மக்கள் கட்சி சார்பில் மனுதாரர் கேள்வி எழுப்பியுள்ளார். தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.  எம்.பி.சி பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் என்றும், இதனால் 22 சாதிப்பிரிவினர் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய முடியாமல் அதிமுக, திமுக அணிகள் திணறுகின்றன. அதிமுகவுடன் பாஜக, தேமுதிகவும், திமுகவுடன் காங்கிரஸ், இடதுசாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அசாம் மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் தேயிலைத் தோட்டத் தொழிலைச் சார்ந்தவர்கள் என்பதால் 126 சட்டமன்றத் தொகுதிகளில் 45 இடங்களில் வெற்றியைத் தீர்மானிப்பவர்கள் அவர்கள் தான். 60% இந்துக்கள், 15% கிறிஸ்துவர்கள், மற்ற மதத்தினர் 25% பேர், ஒடியா, கொண்டி, முண்டாரி, அஸ்ஸாமி என ஏராளமான மொழி பேசுபவர்களாக இருப்பதால் அவர்களை மதம் மற்றும் சாதி ரீதியில் ஒருங்கிணைப்பது இயலாத காரியம். அதனால் பல்வேறு திட்டங்கள் மூலமாகக் கவர அம்மாநில அரசியல் காட்சிகள் முயற்சி செய்துகொண்டிருக்கின்றன.

குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

வரும் மே மாதத்திற்குள் 142 நாடுகளுக்கு 23 கோடியே 70 லட்சம் தடுப்பூசிகள் விநியோகிக்க அஸ்ட்ராஜெனிகா – சீரம் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Live Blog

Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.


22:27 (IST)03 Mar 2021

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக போட்டியிடும் – டிடிவி தினகரன்

சசிகலாவின் அறிக்கையை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அம்மாவின் தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை சசிகலாவிடம் எப்போதும் இருந்து வருகிறது.      கட்சிக்குள் ஒற்றுமை  இல்லாத காரணத்தினால் தான் இந்த முடிவு எடுத்திருக்கலாம் என்று நினைக்கிறன். சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக போட்டியிடும் என்று தெரிவித்தார்.        

21:27 (IST)03 Mar 2021

அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவிப்பு!

அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்தார். தமிழகத்தில் அம்மா ஆட்சி  அமைந்திட இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.  
 

 

    
 

21:19 (IST)03 Mar 2021

மார்ச் 6ஆம் தேதி தொகுதிப் பங்கீடு குறித்த தகவல் தெரிய வரும் – வைகோ

மார்ச் 6ஆம் தேதி  நடைபெறும் மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்திற்குப் பிறகு, திமுக கூட்டணி உடனான தொகுதிப் பங்கீடு குறித்த முழுமையான தகவல் வெளியிடப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.  

20:10 (IST)03 Mar 2021

சென்னை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு – கோ.பிரகாஷ்

தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் 24 மணிநேரம் இயங்கக்கூடிய சென்னை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான தங்களுடைய புகார்களை 1800-425-7012 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், cVIGIL செயலி வாயிலாகவும் தெரிவிக்கலாம். மேலும், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வாக்காளர் தொடர்பான விவரங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் யென்று  சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

20:01 (IST)03 Mar 2021

திமுகவுடன் தொகுதி பகிர்வு பேச்சுவார்த்தை சுமுகமாக தொடர்கிறது – முத்தரசன் அறிக்கை

“திமுகவின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், தொகுதி பகிர்வு பேச்சுவார்த்தையில் கம்யூனிஸ்ட் – திமுகவுக்கிடையில் சிக்கல் நிலவுவது போலும் பேச்சுவார்த்தையில் முறிவு ஏற்படுவது போலும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரப்பப்படுகின்றன. அத்தகைய செய்திகளில் உண்மையில்லை என்பதுடன் அது குழப்பம் ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டது என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுமக்களுக்கு தெளிவுபடுத்திக் கொள்கிறது. தொகுதி பகிர்வு பேச்சுவார்த்தை சுமுகமாக தொடர்கிறது என்று முத்தரசன் தெரிவித்தார்.  

19:57 (IST)03 Mar 2021

கு.க.செல்வம் இன்று முறைப்படி பா.ஜ.கவில் இணைந்தார்

தி.மு.கவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் இன்று முறைப்படி பா.ஜ.கவில் இணைந்தார். 

19:54 (IST)03 Mar 2021

2ம் கட்ட பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து இன்று நடைபெறவிருந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை. விசிக இரட்டை இலக்கு எண்ணிக்கையில் தொகுதிகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளது. ஆனால், திமுக ஒற்றை இலக்கு இடங்களை ஒதுக்க நினைப்பதாக தகவல்கள் வெளியாகின.

கடந்த, மார்ச் 1-ம் தேதியன்று விசிக- திமுக முதற்கட்ட பேச்சுவாரத்தை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.      

19:32 (IST)03 Mar 2021

அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை ரத்து

தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுக மற்றும் தேமுதிக நிர்வாகிகள் இடையே  இன்று மாலை நடைபெற இருந்த பேச்சுவார்த்த்தை ரத்து செய்யப்பட்டது.     

19:16 (IST)03 Mar 2021

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை பங்களாதேஷ் செல்கிறார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் ஒரு நாள் அரசு முறை பயணமாக நாளை பங்களாதேஷ் செல்கிறார்.

18:53 (IST)03 Mar 2021

பாஜகவின் மத்திய தேர்தல் குழு நாளை புதுதில்லியில் கூடுகிறது

பாஜகவின் மத்திய தேர்தல் குழு நாளை புதுதில்லியில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பி.எல்.சந்தோஷ் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

18:45 (IST)03 Mar 2021

மதுரையில் ரத யாத்திரை நடத்த உயர்நீதிமன்றம்  அனுமதி

ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்காக மதுரையில் ரத யாத்திரை நடத்த உயர்நீதிமன்றம்  அனுமதி அளித்தது.   

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட நூறு வார்டுகளில் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில் ரத யாத்திரை மூலம் பொதுமக்களிடம் நிதி வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.

18:29 (IST)03 Mar 2021

தேர்தல் அதிகாரிகள் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் உள்ள 230 சட்டப் பேரவைத் தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள் தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய நான்கு தொகுதிகளுக்கு விரைவில் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

18:28 (IST)03 Mar 2021

சுனில் அரோரா காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பார்வையாளர்களுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா காணொலி காட்சி வாயிலாக இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

18:14 (IST)03 Mar 2021

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்தமிழகத்தின் மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளில் வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.  

18:11 (IST)03 Mar 2021

மதிமுக தேர்தல் பேச்சுவார்த்தை குழுவுடன்  வைகோ ஆலோசனை

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை  அலுவலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆலோசனை. திமுக கூட்டணியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் வேளையில், மதிமுக தேர்தல் பேச்சுவார்த்தை குழுவுடன்  வைகோ ஆலோசனை நடத்தி வறிகிறார்.  

17:30 (IST)03 Mar 2021

ஆசிய சிங்கம் மற்றும் புலிகள் எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் உள்ளன

உலகில் ஆசிய சிங்கம் மற்றும் புலிகள் எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் இருப்பதாக மத்திய வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.

17:28 (IST)03 Mar 2021

அதிமுகவில் 8,241 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் போட்டியிட 8,241 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். விருப்ப மனுவுக்கான நேர்காணல் நாளை  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   

17:07 (IST)03 Mar 2021

கோவிட்-19-க்கான தடுப்பூசி: அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி

கோவிட்-19-க்கான தடுப்பூசியை போடுவதற்கு அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  இந்த தடுப்பூசி அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

முன்னதாக ஆயுஷமான் பாரத் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மருத்துவ திட்டங்களை நடைமுறைப்படுத்தும் தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டும் மத்திய அரச அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

17:04 (IST)03 Mar 2021

முதல்வர் வேட்பாளராக என்னை முன்மொழிந்ததற்கு நன்றி – கமல்ஹாசன்

மக்கள் விரும்பும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக என்னை முன்மொழிந்த சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர், அன்புச் சகோதரர் சரத்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் எதிர்வரும் நாட்களில் எம்மோடு கைகோர்ப்பார்கள். இம்முறை வெல்வது தமிழகமாக இருக்கட்டும் என கமல்ஹாசன் தெரிவித்தார்.  

15:48 (IST)03 Mar 2021

அதிமுக – அமமுக இணைப்பிற்கும் பாஜகவுக்கு  சம்மந்தம் இல்லை – எல்.முருகன் பேட்டி

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்: “அதிமுக – அமமுக இணைப்பிற்கும் பாஜக விற்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என்று தெரிவித்தார்.

15:40 (IST)03 Mar 2021

இன்னும் சில கட்சிகள் எங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இருக்கிறது – கமல்ஹாசன்

கமல்ஹாசன்: பெண்கள் வாழ்க்கை தரம் மேம்பட பல்வேறு திட்டங்கள் உள்ளன

இலவச ஆரோக்கியம், கருத்தரிப்பு பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும் – கமல்ஹாசன் 

ஒரு இளைஞர் 5க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கினால், அவருக்கு சிறப்பு நிதி அளிப்போம் – கமல்ஹாசன்

ஆரோக்கியமான தமிழகம் என்ற இயக்கத்தை பள்ளி, கல்லூரிகளில் தோற்றுவிப்போம் – கமல்ஹாசன்

ஒவ்வொரு பஞ்சாயத்திலும் விளையாட்டு மையங்கள் தோற்றுவிக்கப்படும் – கமல்ஹாசன் 

விளையாட்டு மேம்பாட்டுக்கான 7 செயல் திட்டங்களை அறிவித்தார் கமல்ஹாசன் 

கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசி முடிவு செய்வோம் – கமல்ஹாசன்

இன்னும் சில கட்சிகள் எங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன – கமல்ஹாசன் தகவல்

15:36 (IST)03 Mar 2021

மநீம – சமக – ஐஜேகே கூட்டணி உறுதி – சரத்குமார் தகவல்

மநீம – சமக – ஐஜேகே கட்சிகளின் கூட்டணி உறுதி என சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். 

நல்லவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் இணைய வேண்டும் என மநீம தலைவர் கமல்ஹாசன் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ், மநீம கட்சியில் இணைந்தார். பொன்ராஜ் மநீம தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

15:01 (IST)03 Mar 2021

ம.நீ.ம கட்சியின் துணைத்தலைவராக அப்துல் கலாமின் உதவியாளர்

ம.நீ.ம, ச.ம.க., ஐ.ஜே.கே. கட்சிகள் கூட்டணி உறுதி என சரத்குமார் தகவல் தெரிவித்துள்ள நிலையில், நல்லவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் இணைய வேண்டும் என கமல் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த முன்னாள் முதல்வர் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் உதவியாளர் பொன்ராஜ் கட்சியின் துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

14:48 (IST)03 Mar 2021

பாஜகவில் இணைந்தார் திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம்

இன்று தமிழக பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் ஆயிரம் விளக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.

14:38 (IST)03 Mar 2021

சசிகலாவை இணைக்கும் பாஜகவின் யோசனையை நிராகரித்துவிட்டோம் – அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்: “அதிமுகவில் சசிகலாவை இணைப்பது என்பது பாஜகவின் யோசனையாக இருக்கலாம். அதை நிராகரித்துவிட்டோம். அவரை கட்சியில் இணைப்பது குறித்து யாரும் என்க்களை கட்டாயப்படுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

14:35 (IST)03 Mar 2021

ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி ராஜினாமா

ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய கர்நாடகா பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, தன் மீதான குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என்றும் விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்றும் ரமேஷ் ஜர்கிஹோலி வலியுறுத்தினார்.

13:35 (IST)03 Mar 2021

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-க்கு கொரோனா தடுப்பூசி

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று முதல் கட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

13:26 (IST)03 Mar 2021

சசிகலா விவகாரத்தில் அதிமுகவே முடிவெடுக்கும்: பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி

அதிமுக கூட்டணியில் சசிகலா இணைவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி ‘அது தொடர்பாக அதிமுகவே முடிவெடுக்கும்; சசிகலா, தினகரனின் பலம், பலவீனத்தை அதிமுக அறியும்’ என்று கூறினார்.

13:23 (IST)03 Mar 2021

துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ன் 2வது மகன் பெயரில் 100க்கும் மேற்பட்ட விருப்பமனுக்கள் தாக்கல்

அதிமுகவில் விருப்பமனு தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் முடிவடையகிற நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் 2வது மகன் ஜெயபிரதீப் பெயரில் 100க்கும் மேற்பட்ட விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது; கம்பம் வில்லிவாக்கம், கொளத்தூர் தொகுதிகளில் ஜெயபிரதீப் போட்டியிட தொண்டர்கள் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். 

13:20 (IST)03 Mar 2021

நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமானவரி சோதனை

நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களின் வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

13:16 (IST)03 Mar 2021

வேளச்சேரி தொகுதியில் சமக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டி

சென்னை வேளச்சேரி தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் விஏகானந்தா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

13:10 (IST)03 Mar 2021

பா.ஜ.க-வை தோற்கடிப்பதே முதல் நோக்கம் – கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “பாஜகவிடம் இருந்து நாட்டையும் எதிர்க்கட்சிகளையும் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதைநோக்கியே எங்களது தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சென்றுகொண்டிருக்கிறது” என்று கூறினார்.

12:28 (IST)03 Mar 2021

அதிமுகவிடம் பாமக கேட்டுள்ள 23 தொகுதிகள் பட்டியல் வெளியானதாக தகவல்

வேளச்சேரி, செய்யார், கும்மிடிப்பூண்டி,  செங்கல்பட்டு, திருப்போரூர், உத்திரமேரூர், குடியாத்தம், திருப்பத்தூர், திருக்கோவிலூர், ஓமலூர், மேட்டூர், பரமத்திவேலூர், கீழ்வேளூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, அணைக்கட்டு, ஆற்காடு ஆகிய தொகுதிகளை அதிமுகவிடம் பாமக கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், வேப்பனஹள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, வந்தவாசி, செஞ்சி, மயிலம் தொகுதிகளிலும் போட்டியிட பாமக விருப்பம் தெரிவித்திருக்கிறது.

12:24 (IST)03 Mar 2021

த.மா.கா நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன் ஆலோசனை

அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் த.மா.கா நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்துகிறார். அதிமுகவுடனான இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை லீலா பேலஸ் ஓட்டலில் நடக்கிறது.

11:44 (IST)03 Mar 2021

அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி

தமிழகத்தின் 69% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

11:43 (IST)03 Mar 2021

பாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் 10 மணிக்கு சென்னையில் வெளியிடப்படும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்திருக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம் அளிக்கவுள்ளனர்.

11:22 (IST)03 Mar 2021

லட்சுமிநாராயணன் இணைந்தது என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வலுவூட்டி உள்ளது – ரங்கசாமி

காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருந்த லட்சுமி நாராயணன், தனது எம்.எல்.ஏ பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து தற்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்கிறார். இதையடுத்து லட்சுமிநாராயணன் இணைந்தது என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு மேலும் வலுவூட்டி உள்ளது என்றும் தான் முதல்வராக இருந்த போதே நல்ல முறையில் பணியாற்றியவர் லட்சுமி நாராயணன் என்றும் புகழ்ந்திருக்கிறார் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி .

11:13 (IST)03 Mar 2021

சமத்துவ மக்கள் கட்சித் தலைவராக சரத்குமார்

தூத்துக்குடியில் நடந்த ச.ம.க பொதுக்குழு கூட்டத்தில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவராக மீண்டும் சரத்குமார் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ராதிகாவுக்கு மாநில துணை பொதுச்செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

10:26 (IST)03 Mar 2021

மாநில நிர்வாகிகளுடன் பா.ஜ.க முக்கிய தலைவர்கள் இன்று ஆலோசனை

சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க கட்சி அலுவலகத்தில் கிஷன் ரெட்டி, வி.கே.சிங், சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

10:24 (IST)03 Mar 2021

மார்ச் 11-ம் தேதி திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறுகிறது என்றும் மார்ச் 11-ம் தேதி தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் தொண்டர்களுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தி.மு.க-விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தவுள்ளன.

10:20 (IST)03 Mar 2021

நகைக்கடன் நிலுவை விவரங்களை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவு

ஜனவரி 31-ம் தேதி வரை நிலுவையில் உள்ள கடன் விவரங்களை கூட்டுறவு வங்கிகளுக்கு அளிக்கவேண்டும் என்று கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

10:16 (IST)03 Mar 2021

தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக மீண்டும் பேச்சுவார்த்தை

பாஜக, தேமுதிக, த.மா.கா கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. 12 முதல் 15 தொகுதிகள் வரை கேட்டுப் பெறும் கடைசி கட்ட முயற்சியில் தேமுதிக இருக்கிறது. இதையடுத்து விஜயகாந்த் பிரேமலதாவை அதிமுக குழு இல்லத்தில் சந்திக்க திட்டமிட்டுள்ளது அதிமுக. காலை 11 மணிக்கு மேல் த.மா.கா கட்சி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பெங்கேற்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil News Today : வன்னியர்களின் 20% உள்இடஒதுக்கீடு கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு கடந்த வாரம் 10.5% இடஒதுக்கீடு வழங்கி மசோதா நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த மசோதாவை எதிர்த்து தென் நாடு மக்கள் கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil news today live tamil nadu politics corona eps stalin modi admk dmk vanniyar reservation