News In Tamil Live : புதுச்சேரியில் பெரும்பான்மையை நாளை நிரூபிக்குமாறு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன், முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தது, துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி நீக்கப்பட்டது, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது உள்ளிட்ட நடவடிக்கைகள் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் நாராயணசாமியை தமிழிசை சௌந்தராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்குள் வாக்கெடுப்பை நிறைவு செய்யவும், முழு நிகழ்வையும் வீடியோ பதிவு செய்யவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதிலும் இருந்து முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் 88-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
சென்னை ஆதம்பாக்கத்தில் நடைபெற்ற மக்கள் பாதை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், “இளைஞர்களே வாருங்கள். ஊழலற்ற புதிய தமிழகத்தை உருவாக்குவோம். அரசியல் களம் காண்போம். நான் ஏற்றுக்கொள்கிறேன். அரசியல் களம் காண்பதை ஆமோதிக்கிறேன். நான் உங்களோடு பயணிக்க ஆசைப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட மக்கள் நீதிமய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், நல்லவர்களுக்காக மக்கள் நீதி மய்யம் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் எப்போதும் வரலாம் என்று சீமான், சரத்குமார் எப்போதும் எங்கள் அணிக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் வாருங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்று நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் அதிமுக-பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் பேரவைக்குள் நுழைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம்
“கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவோம்”என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்
“இன்று மாலை சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்; பெரும்பான்மை நிரூபிப்பது குறித்து முடிவு” – நாராயணசாமி
புதுச்சேரியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த திமுகவை சேர்ந்த வெங்கடேசன் “ஸ்டாலினிடம் சொல்லித்தான் ராஜினாமா செய்துள்ளேன்?“ என தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபையில் ஆளுங்கட்சி எமஎல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துவரும் நிலையில், இன்று மேலும் 2 எம்எல்ஏககள் ராஜினாமா செய்துள்ளதாகவும், இது குறித்து முதல்வருக்கு தகவல் அளித்துள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் இன்று ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சிவகொழுந்துவிடம் அளித்தார். இதனால், புதுச்சேரி சட்டமன்றத்தில் காங்கிரஸ் – திமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் பலம் 12 ஆக குறைந்துள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் செர்பிய வீரர் ஜோக்கோவிச், ரஷ்ய வீரர் மெத்வ தேவை 7-5, 6-2, 6-2 செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க நாளை சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளிதார். இதனால், புதுச்சேரி சட்டமன்றத்தில் காங்கிரஸ் – திமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 13 ஆக குறைந்துள்ளது. கட்சியில் உரிய மரியாதை இல்லாததால் ராஜினாமா செய்ததாக லட்சுமி நாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.
பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். பாமக சிறப்பு பொதுக்குழு பிப்ரவரி 25ம் தேதி நடைபெறும் என்று ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் காவேரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை தொடங்கிவைத்துப் பேசிய முதல்வர் பழனிசாமி, “எந்த பணி கொடுத்தாலும் சூப்பராக செய்ய கூடியவர்; இந்த மண்ணின் மைந்தர்; அதனால் தான் இந்த பணியை விஜயபாஸ்கரிடம் கொடுக்க நினைத்தேன்” என்று அமைச்சர் விஜயபாஸ்கரைப் பாராட்டினார்.
புதுச்சேரியில் மழை வெள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஹசினா பேகம் என்ற பெண் அடித்துச் செல்லப்பட்டார். அவரை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிபிஎஸி பாடநூஇல் வெளியிடப்பட்டுள்ள திருவள்ளுவர் படத்தை உடனே அகற்ற வேண்டும். திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசி, ஆரிய சித்தாந்தவாதி ஆக்கத் துடிக்கும் முயற்சி முறியடிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத் தொடக்க விழாவில் பேசிய துணை முதல்வர் பன்னீர் செல்வம், “100 ஆண்டுகளில் செய்யவேண்டிய திட்டங்களை அம்மாவின் அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்து காட்டியுள்ளது. 10 ஆண்டுகள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக தமிழகத்துக்கு செய்தது என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நெல்லை, சேலம், தேனி, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ருப்பூரில் திமுக கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “முதல்வர் பழனிசாமி ஆட்சி முடியும் நேரத்தில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். தேர்தல் வருகிறது என்ற காரணத்தால் மக்களிடம் பொய் வாக்குறுதி கொடுத்து வருகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.
ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு இணைப்பு திட்ட முதல் கட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
விவசாயிகளின் தொடர் போராட்டம், பாஜக ஆட்சியின் தோல்வியை வெளிப்படுத்துகிறது என்றும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட அடிக்கல்லையே காணவில்லை என்றும் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
நூல் விலை உயர்வும், விநியோக வீழ்ச்சியும் சிறு, குறு, நடுத்தர தொழில்துறையை பாதித்துள்ளது என்றும் ஜவுளித்துறையின் நூல் பற்றாக்குறைக்கு தீர்வு காணவேண்டும் என்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய பெர்சவரென்ஸ் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நாசா அமைப்பின் நிர்வாகக் குழு தலைவர் ஸ்டீவ் ஜுர்சிக்கை, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார்.
சேலத்தில் இன்று நடைபெறும் பாஜக மாநில இளைஞர் அணி மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் அடுத்தடுத்து தமிழகம் வந்ததை அடுத்து, இன்று ராஜ்நாத் சிங் தமிழகம் வருகிறார்.