scorecardresearch

News Highlights: விவசாயிகள் நாளை பந்த்; தமிழகத்தில் திமுக கூட்டணி- கமல்ஹாசன் ஆதரவு

Tamil News பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் 1,200 போலீசாரும், புறநகர் பகுதிகளில் 1,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

kamal haasan press meet, kamal haasan, makkal nidhi maiam, bjp b team mnm, kamal haasan object, கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பு, கமல்ஹாசன், பாஜக பி டீமா கமல்ஹாசன், கமல்ஹாசன் மறுப்பு, தமிழகத்தின் மூன்றாவது அணி மநீம, மக்கள் நீதி மய்யம், kamal haasan, mnm

Tamil News Today : விவசாயிகள் போராட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் கோரிக்கையை ஏற்று, இந்திய அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற விவசாயிகளின் குரலுக்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில், நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமுல் உள்பட 14 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மநீம தலைவர் கமல் ஹாசனும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக நிவர் மாற்று புரெவி புயல் காரணமாகத் தமிழகத்தில் கடலோர பகுதிகளில் மிக கனமான மழை பெய்து வருகிறது. புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆங்காங்கே முகாம்களும் அமைக்கப்பட்டன. வலுவிழந்த புயலினால் பாதிப்புகள் குறைவு என்றாலும், விடாமல் பெய்யும் மழையால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது. அதுபோன்று பாதிக்கப்பட்ட இடங்களை இன்று ஆய்வு செய்ய வருகிறது மத்தியக் குழு. தென் சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளை மத்தியக் குழு இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளது. இந்நிலையில் தேவையான நிவாரண உதவிகளை பெற திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான மூன்று 20 ஓவர் போட்டித் தொடரில், ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. இந்நிலையில், சிட்னியில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை வெல்லும் நோக்கத்தில் இந்தியா களமிறங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.40 மணியளவில் இந்தப் போட்டி தொடங்கவுள்ளது. இதனிடையே, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு தசைப்பிடிப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மீதமுள்ள இரண்டு 20 ஓவர் போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
Highlights

  21:52 (IST)06 Dec 2020
  விவசாயிகள் போராட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் கோரிக்கையை ஏற்று, இந்திய அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற விவசாயிகளின் குரலுக்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் டிசம்பர் 8ம் தேதி நடக்கவிருக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் என்று கமல் ஹாசன் தெரிவித்தார்.

  20:51 (IST)06 Dec 2020
  ஆயுஷ் ஏற்றுமதி வளர்ச்சி குழு அமைக்க மத்திய அரசு முடிவு

  ஆயுஷ் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் ஆயுஷ் ஏற்றுமதி வளர்ச்சி குழு ஒன்றை அமைக்க மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகமும், ஆயுஷ் அமைச்சகமும் முடிவு செய்துள்ளன.
  கோவிட்-19 பரவலை தடுப்பதற்கான பணிகளில் ஆயுஷ்துறை முக்கிய பங்காற்றியுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

  20:46 (IST)06 Dec 2020
  ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டம் : நாளை கட்டுமானப் பணிகள் தொடக்கம்

  ஆக்ரா மெட்ரோ ரயில் திட்ட கட்டுமான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி நாளை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார். மொத்தம் 29.4 கிலோ மீட்டர் தொலைவில் இரண்டு வழித்தடங்களில், இந்த மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் முக்கிய சுற்றுலா தலங்களான தாஜ்மகால், ஆக்ரா கோட்டை, சிக்கந்தரா ஆகிய இடங்களுக்கு எளிதில் பயணிக்கும் வகையில், சுமார் எட்டாயிரத்து 379 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது.

  20:21 (IST)06 Dec 2020
  நாளை கல்லூரிகள் திறக்கப்படுவது உறுதி – அமைச்சர் அன்பழகன்</div>

  தமிழகத்தில் நாளை கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மீண்டும் தெரிவித்தார்.  

  20:19 (IST)06 Dec 2020
  சட்ட துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நியமனம்

  கடலூர் மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்பு பணிகளை மேற்கொள்ள கூடுதலாக சட்ட துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

  19:36 (IST)06 Dec 2020
  பாரத் பந்த் வேலை நிறுத்தத்திற்கு 14 கட்சிகள் ஆதரவு

  நவம்பர் 8-ம் தேதி விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமுல் உள்பட 14 கட்சிகள் ஆதரவு

  19:35 (IST)06 Dec 2020
  தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 50 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது

  நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஐந்து யூனிட்டுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆயிரத்து 50 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

  19:34 (IST)06 Dec 2020
  கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

  மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  19:21 (IST)06 Dec 2020
  சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4,03,248

  இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4,03,248 ஆக இன்று பதிவாகியுள்ளது. கடந்த 138 நாட்களில் இதுவே குறைவான எண்ணிக்கையாகும். கடந்த ஜூலை 21-ஆம் தேதி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,02,529 ஆக இருந்தது.

  18:39 (IST)06 Dec 2020
  ராணிப்பேட்டை பாலாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

  ராணிப்பேட்டை பாலாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. சித்தூர் கலவகுண்டா அணையில் 12,000 கன அடிக்கு மேல் நீர் திறக்க உள்ளதாக வந்த தகவலை அடுத்து ராணிப்பேட்டை பாலாறு ஆற்றங்கரையோர மகக்ளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலாறு ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். வேலூர் பொன்னை நதி கரையோரம் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

  18:06 (IST)06 Dec 2020
  இந்தியா 2வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி; டி20 தொடரைக் கைப்பற்றி பதிலடி

  இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே இன்று சிட்னியில் நடைபெற்ற டி20 தொடரின் 2வது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-0 என்று முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

  16:52 (IST)06 Dec 2020
  திருவள்ளூர் மாவட்டத்தில் 3840 ஹெக்டர் நெற்பயிர் சேதம் – ஆட்சியர் பொன்னையா தகவல்

  திருவள்ளூர் மாவட்டத்தில் 3840 ஹெக்டர் நெற்பயிர், 571 ஹெக்டர் தோட்டக்கலைப் பயிர்கள் கனமழையால் சேதம் – மத்திய குழுவினர் ஆய்விற்கு பின் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

  16:50 (IST)06 Dec 2020
  வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை; விவாதிக்கத் தயார் – மாஃபா பாண்டியராஜன்

  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்பது பற்றி நாங்கள் விவாதிக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார்.

  15:53 (IST)06 Dec 2020
  அம்பேத்கர் நினைவு தினம்; முதல்வர் பழனிசாமி ட்வீட்

  அம்பேத்கரின் நினைவு தினத்தில் முதல்வர் பழனிசாமி அம்பேத்கரை நினைவுகூர்ந்து ட்வீட் செய்துள்ளார். “இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுத்தலைவர், பாரத ரத்னா அண்ணல் அம்பேத்கர் அவர்களை நினைவு கூர்கிறேன். அம்பேத்கர் நினைவுதினத்தையொட்டி சமூக நீதி புரட்சியாளர், தீண்டாமை ஒழிய அரும்பாடுபட்டவர், பன்முகத்தன்மையாளர்” என்று முதல்வர் பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்.

  15:45 (IST)06 Dec 2020
  சூரப்பா விவகாரம்; உண்மை நிலை தெரியாமல் பேசுகிறார் கமல் – அமைச்சர் கே.பி.அன்பழகன்

  அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவாக மநீம தலைவர் கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பாகன், “சூரப்பா விவகாரத்தில் உண்மை நிலை என்ன என்பது குறித்து தெரியாமல் கமல்ஹாசன் பேசிக்கொண்டிருக்கிறார். அரசு மீது குற்றம்சாட்ட வேண்டும் என்பதற்காகவே கமல் பேசிக்கொண்டிருக்கிறார்” என்று விமர்சித்துள்ளார்.

  15:23 (IST)06 Dec 2020
  புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை – ஸ்டாலின் குற்றச்சாட்டு

  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை. மத்திய அரசின் உதவிக்காக காத்திராமல் தமிழக அரசு மக்களுக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

  14:26 (IST)06 Dec 2020
  ஐதராபாத் புறப்பட்டார் ரஜினிகாந்த்

  நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஐதராபாத் புறப்பட்டார். ரஜினி பிறந்தநாளன்று போயஸ் இல்லத்திற்கு ரசிகர்கள் வரவேண்டாம் என ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  14:12 (IST)06 Dec 2020
  சென்னை அய்யப்பன்தாங்கலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் தீ விபத்து

  சென்னை அய்யப்பந்தாங்கலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் தீ விபத்து; கண்ணாடி கதவுகளை உடைத்து தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து வருகின்றனர்.

  14:09 (IST)06 Dec 2020
  ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதை திருப்பி ஒப்படைப்பேன் – குத்து சண்டை வீரர் விஜேந்தர் சிங்

  வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிடில் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதை திருப்பி ஒப்படைப்பேன் என்று குத்து சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

  14:07 (IST)06 Dec 2020
  முதல்வர் பழனிசாமி தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்திப்பு

  முதல்வர் பழனிசாமிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்து, அண்மையில் முதல்வரின் தாயார் மறைவுக்கு நேரில் ஆறுதல் கூறினார்.

  13:59 (IST)06 Dec 2020
  பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு

  மதுரையில் தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மீது மேலூர் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  13:38 (IST)06 Dec 2020
  ரஜினி கட்சி தொடங்குவதற்காக காத்திருக்கிறோம் – எல்.முருகன்

  செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன், “ரஜினி கட்சி தொடங்குவதற்காக காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

  12:54 (IST)06 Dec 2020
  புதிய ஜனநாயக இந்தியாவை கட்டமைக்க அடித்தளம் அமைத்தவர் அம்பேத்கர் – திருமாவளவன்

  விசிக தலைவர் திருமாவளவன்: “டிசம்பர் 06 புரட்சியாளர் அம்பேத்கர் நினைவுநாள்: பழைய சனாதன இந்தியாவைத் தகர்த்துப் புதிய சனநாயக இந்தியாவைக் கட்டமைக்க அடித்தளம் அமைத்தவர். சாதிய தடுப்புச்சுவரைத் தவிடுபொடியாக்கி சமத்துவத்தை நிரவி ஒப்புரவு சமூகத்தை உருவாக்க வழிவகுத்தவர்.
  புரட்சியாளருக்கு எமது வீரவணக்கம்.” என்று தெரிவித்துள்ளார்.

  12:50 (IST)06 Dec 2020
  திருவாரூரில் அம்பேத்கர் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மாரியாதை

  அம்பேத்கர் நினைவு தினத்தில் திருவாரூரில் கலைஞர் இல்லத்தில் அம்பேத்கர் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “அறிவுச் சூரியன், இந்நூற்றாண்டின் புதிய புத்தர்! எல்லோருக்குமான வழிகாட்டி பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவுநாளில், அவர் காட்டிய சமூகநீதிப் பயணத்தில் நடை போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் திருவாரூர் இல்லத்தில் அண்ணல் அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செலுத்தினேன்” என்று புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

  12:46 (IST)06 Dec 2020
  அம்பேத்கர் நினைவு தினம்; சமத்துவ சமுதாயத்தை உருவாக்க உறுதி கொள்வோம் – ஓ.பி.எஸ்

  அம்பேத்கரின் 64-ஆவது நினைவு தினத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “விடுதலைஇந்தியாவின் முதல் சட்ட அமைச்சரும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையுமான பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளில் சமநீதி, சமத்துவம் தழைத்தோங்க பாடுபட்ட டாக்டர் அம்பேத்கர் அவர்களை வணங்கி, அவரது வழியில் ஏற்றத் தாழ்வுகளற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட உறுதி கொள்வோம்.” என்று தெரிவித்துள்ளார்.

  12:36 (IST)06 Dec 2020
  நாகையில் மழை சேதங்களை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்

  நாகை மாவட்டம் கொளப்பாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மழை சேதங்களை பார்வையிட்டு வருகிறார்.

  12:24 (IST)06 Dec 2020
  பாஜகவின் முகம் ரஜினி: திருமாவளவன் விமர்சனம்

  காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “பாஜக, சங்பரிவார்களின் அச்சுறுத்தலால் தான் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குகிறார். பாஜகவின் மற்றொரு முகம்தான் ரஜினிகாந்த்” என்று விமர்சனம் செய்துள்ளார்.

  12:20 (IST)06 Dec 2020
  சென்னையில் காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார் காரை தடுத்து நிறுத்திய போலீஸ்; தொண்டர்கள் மறியல்

  அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றபோது சென்னை துறைமுகம் அருகே காங்கிரஸ் எம்.பி ஜெயகுமார் காரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  11:57 (IST)06 Dec 2020
  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா; மருத்துவமனையில் அனுமதி

  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு இன்று பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் சிகிச்சைக்காக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  11:56 (IST)06 Dec 2020
  மத்தியக் குழுவினருடன் சென்ற ஆட்சியர் காரை மறித்து பொது மக்கள் வாக்குவாதம்

  சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மத்தியக் குழுவினர் நிவர் புயல் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது, சென்னை பெரும்பாக்கத்தில் மத்தியக் குழுவினருடன் சென்ற மாவட்ட ஆட்சியரின் காரை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினர் பார்வையிடவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டு வைத்துள்ளனர்.

  11:31 (IST)06 Dec 2020
  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரிக்கு கொரோனா

  கொரோனா தொற்று உறுதியானதால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  10:08 (IST)06 Dec 2020
  பெண்களுக்கான மய்யம் மாதர் படை துவக்கம் – கமல்ஹாசன்

  பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் “மய்யம் மாதர் படை துவக்கம்” எனும் பெண்களுக்கான பிரத்தியேக பிரிவு ஆரம்பிக்கப்படும் என்றும் அதில் கட்சியில் இல்லாத சமூகத்தை சீரமைக்கும் நோக்கம் கொண்ட யார் வேண்டுமானாலும் இணைந்து பணியாற்றலாம் என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

  10:03 (IST)06 Dec 2020
  பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சைக்கிளில் சென்று அமைச்சர் ஆய்வு

  திருவாரூரில் புயல் பாதிக்கப்பட்ட இடங்களை இருசக்கர வாகனத்தில் சென்று தீவிரமாக ஆய்வு செய்துகொண்டிருக்கிறார் அமைச்சர் காமராஜ். அங்கு, 162 முகாம்களில் 30,500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

  09:57 (IST)06 Dec 2020
  குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த புரெவி

  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து அதே இடத்தில் புரெவி உள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரி, கேரளா பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

  Latest Tamil News : ரஜினி அரசியலில் போட்டியிடுவரா? போட்டியிட்டால் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதை தன்னால் தெரிவிக்க முடியாது என்று கூறிய தமிழருவி மணியன் , ” ரஜினிகாந்த் வெறுப்பு அரசியலில் ஈடுபட மாட்டார் என்றும், அதிமுக, திமுகவை விமர்சித்து ரஜினி அரசியல் செய்ய மாட்டார் என்றும் தெரிவித்தார்.

  ரஜினியின் ஆன்மீக அரசியல் எல்லா மதத்தினருக்கும் பொதுவானது என்று கூறிய அவர், “ஆன்மீகத்திற்கு மதமே கிடையாது. உலகத்து உயிர்கள் அனைத்திலும் தன்னை காண்பதும், உலகத்து உயிர்கள் அனைத்தையும் தன்னுள் காண்பதுமாக எவன் இருக்கிறானே அவன் தான்  ஆன்மீகவாதி. அனைத்து மக்களயையும் அன்பினால் ஆரத்தழுவி கொள்வது தான் ஆன்மிகம். அதைத் தான் ரஜினி செய்யப் போகிறார்” என்று குறிபிட்டார்.

   

  Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

  Web Title: Tamil news today live tamil nadu politics crime weather corona eps ops stalin cricket score