Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்
தமிழ்நாட்டில் ஜூலை 13, 15, 16 ஆகிய 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7- 11 செ.மீ. அளவிற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Jul 14, 2024 07:46 ISTசென்னை மாதவரத்தில் ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம், விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது; தப்பிக்க முயன்றதால் சுட்டுக்கொலை
-
Jul 14, 2024 07:03 ISTடொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு
நவம்பரில் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள டிரம்ப், பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் டிரம்ப் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்தில் இருந்த நபர் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். இதில் டொனால்டு டிரம்ப் காதில் ரத்த காயம் ஏற்பட்டது.
இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, துப்பாக்கி சூடு நடத்திய நபர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொன்றனர்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த டிரம்ப் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் தற்போது நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 13, 2024 21:47 ISTவிமானப்படையில் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
அக்னிவீரர் பணிக்கு திருமணமாகாத ஆண் மற்றும் பெண்களிடம் இருந்து தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய விமானப்படை அறிவிப்பு!
ஜூலை 28ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 18ம் தேதி ஆன்லைன் வழியாக தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் விவரங்களை agnipathvayu.cdac.in என்ற தளத்தில் பெறலாம்.
-
Jul 13, 2024 21:37 ISTமக்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி : திருமாவளவன்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றியை வழங்கியுள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள விசிக தலைவர் திருமாவளவன் "இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு மாபெரும் வெற்றியை வழங்கியுள்ள மக்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Jul 13, 2024 20:39 ISTகபினி அணையில் இருந்து 20,000 கனஅடி நீர் திறப்பு!
கர்நாடக மாநிலம் கபினி அணையிலிருந்து காவிரியில் 20,000 கன அடி நீர் திறப்பு. 84 அடியாக உள்ள அணையின் நீர்மட்டம் தற்போது 83.30 அடியாக குறைந்துள்ளது. கேரள மாநிலம் வயநாடு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி அணைக்கு நீர்வரத்து 19,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
Jul 13, 2024 20:34 ISTஅறுந்து கிடந்த மின்கம்பியால் 2 பெண்கள் பலி
விழுப்புரம் மாவட்டம் புளிச்சபள்ளம் கிராமத்தில் கனமழை காரணமாக விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியால் 2 பெண்கள் உயிரிழப்பு
-
Jul 13, 2024 20:33 ISTஅரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம்
தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
Jul 13, 2024 20:32 ISTதனியார் பள்ளி வாகனம் விபத்து
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து - 16க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்
-
Jul 13, 2024 19:27 ISTஅமலுக்கு வந்த மதுவிலக்கு திருத்த சட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா 2024 அமலுக்கு வந்ததாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஆயுள் தண்டனையுடன், ரூ.10 லட்சம் வரை அபராதம், ஜாமினில் வெளியே வர முடியாத வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
-
Jul 13, 2024 18:57 ISTபெருமைக்கொள்ள என்ன இருக்கிறது? மு.க. ஸ்டாலினுக்கு அன்புமணி கேள்வி
“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்தும், தேர்தல் ஆணையம் கண்டுக்கொள்ளவில்லை. பணப்பொருள்கள், பரிசுப் பொருள்கள் தந்து இடைத்தேர்தலை திமுக ஜனநாயக கேலிக்கூத்தாக்கிவிட்டது. 33 அமைச்சர்கள், 30 எம்.பி.க்கள் முகாமிட்டு தேர்தலை சந்தித்துள்ளனர். சுமார் ரூ.200 கோடிக்கும் மேல்திமுக செலவிட்டுள்ளது” என அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.
-
Jul 13, 2024 18:46 ISTமக்கள் நேர்மறை அரசியலை விரும்புகின்றனர்; ப்ரியங்கா காந்தி
“மக்கள் நேர்மறை அரசியலை விரும்புகின்றனர்; தவறாக வழிநடத்தும் அரசியல் நாட்டுக்கு பயன்தராது என மக்கள் புரிந்துக்கொண்டுள்ளனர்” என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். -
Jul 13, 2024 18:15 ISTதமிழகத்தில் இன்றிரவு ஜில்ஜில் ஆகப் போகும் மாவட்டங்கள்!
தமிழகத்தில் இரவு 7 மணிவரை திருவள்ளூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்கடி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Jul 13, 2024 17:44 ISTபட்டியலின மக்களை திமுக ஏமாற்றுகிறது; எல். முருகன்
“பட்டியலின மக்களை ஏமாற்றி அவர்களை தங்களின் வாக்கு இயந்திரமாக திமுக பயன்படுத்துகிறது” என அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.
-
Jul 13, 2024 17:42 ISTபா.ம.க-வுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்; செல்வபெருந்தகை
“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.கவுக்கு மககள் சரியான பாடம் புகட்டியுள்ளனர்” என காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை கூறியுள்ளார்.
-
Jul 13, 2024 16:22 ISTசீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
கலைஞர் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புகார் மனு
சென்னை காவல் ஆணையரிடம் தபெதிக சென்னை மாவட்டச் செயலாளர் ச.குமரன் புகாரளித்துள்ளார்.
-
Jul 13, 2024 15:41 ISTதிரிணாமுல் காங்கிரஸ் வெற்றி
மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் அனைத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
-
Jul 13, 2024 15:04 ISTசென்னை - அயோத்தி விமானங்கள் ரத்து
சென்னை - அயோத்தி, அயோத்தி - சென்னை இடையே இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானங்கள் போதிய சீட்டுகள் விற்பனை ஆகாததால் இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு அவர்கள் விரும்பும் வேறு தேதிக்கு டிக்கெட்டை மாற்றிக் கொடுப்பதாகவும், இல்லையென்றால் முன்பதிவு பணத்தைத் திருப்பி வழங்குவதாக நிறுவனம் அறிவிப்பு
-
Jul 13, 2024 14:50 IST11 தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் வெற்றி
13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 11 தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது.
-
Jul 13, 2024 14:18 ISTவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
-
Jul 13, 2024 14:18 ISTபொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றி: மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் 2019 முதல் இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது. விக்கிரவாண்டியில் சாதனை வெற்றியை வழங்கிய தொகுதி மக்களுக்கும் – உழைத்த அனைவருக்கும் நன்றி.
திமுக மீதும், தன் மீதும் அவதூறு பரப்பியது பாஜக அணி. பாஜகவின் பகல் வேஷப்பரப்புரையை மக்கள் மதிக்கவில்லை. தோல்விகளில் இருந்து பாஜக பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
திமுக கழக வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியும் அமைந்துள்ளது
திமுக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதற்கான சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது. மக்களோடு இருக்கிறோம், மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்.
- மு.க.ஸ்டாலின்
-
Jul 13, 2024 14:09 ISTதமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்
தமிழ்நாட்டில் ஜூலை 13, 15, 16 ஆகிய 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7- 11 செ.மீ. அளவிற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Jul 13, 2024 14:08 ISTஆம் ஆத்மி கட்சி வெற்றி
பஞ்சாபின் ஜலந்தர் மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் மொஹிந்தர் பகாத் 37325 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
-
Jul 13, 2024 14:08 ISTமனோ தங்கராஜ் பேட்டி
துணை முதலமைச்சர் ஆவதற்கான எல்லா தகுதியும் உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கிறது. தொண்டர்களும், மக்களும் விரும்புகிறார்கள். அவர் எப்போது துணை முதலமைச்சர் ஆனாலும் எங்களுக்கு அது மகிழ்ச்சியான விஷயம்
- மதுரையில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
-
Jul 13, 2024 14:08 ISTஅறிவுரை கூற திமுகவுக்கு தகுதியில்லை: சீமான்
அவதூறு கருத்துக்கள் குறித்து அறிவுரை கூற திமுகவுக்கு தகுதியில்லை. கந்தசஷ்டி கவசத்தில் கூட சண்டாளன் என்ற வார்த்தை உள்ளது. சண்டாளன் என்ற வார்த்தையை கருணாநிதியும் பயன்படுத்தியுள்ளார்
- கருணாநிதி குறித்த அவதூறு பாடலுக்கு சீமான் விளக்கம்
-
Jul 13, 2024 14:07 ISTடேரா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி
இமாச்சலப் பிரதேசம் மாநிலம் டேரா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் கம்லேஷ் தாக்கூர் 9,399 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.