Advertisment

Tamil Breaking News Highlights: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு

Tamil Nadu News Update Today- 25 June 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rahul Gandhi speech on Agniveer scheme PM Modi in Delhi Tamil News

Tamil news

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: மம்தா பானர்ஜி

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தற்போதைய நீட் தேர்வு நடைமுறை பெரும் ஊழலுக்கு வழிவகுப்பதாக உள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மாநிலங்களே நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். நீட் தேர்வு என்பது வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே பயனடையும் வகையில் உள்ளது.

2017க்கு முன்பு இருந்த மருத்துவ மாணவர் சேர்க்கை முறை சுமூகமானதாக இருந்தது.

-மம்தா பானர்ஜி, மேற்குவங்க முதலமைச்சர்       

  • Jun 26, 2024 07:05 IST
    வால்பாறை, நீலகரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு

    னமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று (ஜுன் 26)  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

    மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் அறிவிப்பு

    இதேபோல் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

    மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு



  • Jun 26, 2024 07:05 IST
    வால்பாறை, நீலகரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு

    னமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று (ஜுன் 26)  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

    மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் அறிவிப்பு

    இதேபோல் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

    மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு



  • Jun 25, 2024 22:40 IST
    திகார் சிறையில் பரபரப்பு; அரவிந்த் கெஜ்ரிவால்-ஐ கைது செய்த சி.பி.ஐ

    டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ அதிகாரிகள் கைதுசெய்தனர்.
    விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு தடை விதித்த டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், டெல்லி மதுக் கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலை திகார் சிறையில் இருந்து மத்திய புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது. டெல்லி மதுக் கொள்கை பணமோசடி வழக்கில் கெஜ்ரிவால் தற்போது சிறையில் உள்ளார்.



  • Jun 25, 2024 20:20 IST
    எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி - கைது செய்ய சி.பி.சி.ஐ.டி தீவிரம்

    கரூரில் ரூ. 100 கோடி மதிப்புள்ள சொத்தை போலி ஆவணங்கள் மூலம் மிரட்டி வாங்கிய வழக்கு தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள அவரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 



  • Jun 25, 2024 19:49 IST
    அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் 

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 



  • Jun 25, 2024 18:59 IST
    தமிழக அரசுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

    கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? கள்ளக்குறிச்சியில் நடைபெற்றுள்ள சம்பவம் ஒரு இருண்ட நிகழ்வு. போதைப் பொருளுக்கு இளைஞர்கள் அடிமையாவதன் மூலம் நம் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. "போதைப் பொருளால் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை நம் நாடு பார்த்துள்ளது, அதற்கு எடுத்துக்காட்டு பஞ்சாப். " நான் தமிழகம் வந்த நாள் முதல், பெற்றோர்கள் தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பெற்றோர்கள் Synthetic drugs உள்ளது என கூறுகின்றனர். அவர்களுக்கு தெரிவது இங்கு உள்ள அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் உள்ளது தமிழக அரசுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Jun 25, 2024 18:56 IST
    கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு: தேசிய மகளிர் ஆணைய விசாரணை குழு அமைப்பு

    கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் 6 பெண்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்தி அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ள நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.



  • Jun 25, 2024 18:54 IST
    தமிழ்நாடு போக்குவரத்துத்துறைக்கு ₹18,178 கோடி கடன் இருப்பதாக தகவல்

    தமிழ்நாடு போக்குவரத்துத்துறைக்கு ₹18,178 கோடி கடன் இருப்பதாக போக்குவரத்துத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் குறைவாகவே உள்ளது. 2018ல் கடைசியாக தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டது.

    கர்நாடகாவில் 2020ம் ஆண்டிலும், ஆந்திராவில் 2022ம் ஆண்டிலும் கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டது. கடும் நிதி நெருக்கடியிலும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு குறைந்த கட்டணத்திலேயே பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 25, 2024 18:53 IST
    மரக்காணம் கார் விபத்து : புதுச்சேரி காவலர் மரணம்

    மரக்காணம் வெண்ணாங்கப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த காவலர் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவருடன் வந்த 3 பேர் படுகாயங்களுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Jun 25, 2024 18:52 IST
    சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு : இளைஞருக்கு 35 ஆண்டுகள் சிறை

    கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு உதவி செய்வது போல நடித்து 13 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் கைதான ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்த ஜீவா (25) என்ற நபருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிறுமியை கடத்திய வழக்கில் 10 ஆண்டுகள், பாலியல் துன்புறுத்தலுக்கு 20 ஆண்டுகள் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டியதற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



  • Jun 25, 2024 17:41 IST
    700 மாணவர்களுக்கு நீட் வினாத்தாள் விற்க திட்டமிட்டதாக விசாரணையில் தகவல்

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ₹300 கோடி வரை இலக்கு நிர்ணயித்து செயல்பட்டதாகவும், 700 மாணவர்களுக்கு வினாத்தாளை விற்க திட்டமிட்டதாகவும் மோசடிக் கும்பலின் மூளையாகச் செயல்பட்ட பிஜேந்தர் குப்தா பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார்.

    ஆர்.எஸ்.எஸ், பாஜகவை ஆதரிப்பவர்கள், வினாத்தாள் மோசடி கும்பலை ஊக்குவிப்பதாகவும், இந்தியாவில் அரசு தேர்வுகள் மாஃபியா கும்பலின் தயவில் நடப்பதாகவும் காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் குற்றம் சாட்டியுள்ளார்.



  • Jun 25, 2024 16:46 IST
    செந்தில் பாலாஜியின் காவல் 41வது முறையாக நீட்டிப்பு - நீதிமன்றம் உத்தரவு

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காணொலி வழியாக ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றக் காவலை ஜூலை 1-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை 41வது முறையாக நீட்டித்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Jun 25, 2024 16:39 IST
    யார் பெயரையும் குறிப்பிடாமல் உறுதிமொழி ஏற்ற தி.மு.க-வின் சீனியர் எம்.பி.க்கள்

    தி.மு.க எம்.பி.க்கள் கதிர் ஆனந்த், ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் கலைஞர், மு.க. ஸ்டாலின், உதயநிதி ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு மக்களவை உறுப்பினராக பதவியேற்ற நிலையில், தி.மு.க-வின் சீனியர் எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, கனிமொழி ஆகியோர் யார் பெயரையும் குறிப்பிடாமல் மக்களவை உறுப்பினராக உறுதிமொழி ஏற்றனர்.



  • Jun 25, 2024 16:35 IST
    தெலுங்கில் உறுதிமொழி எடுத்த கிருஷ்ணகிரி எம்.பி கோபிநாத்

    கிருஷ்ணகிரி எம்.பி கோபிநாத் மக்களவை உறுப்பினராக தெலுங்கில் உறுதிமொழி ஏற்றார். கடைசியில் `நன்றி வணக்கம்' என தமிழில் கூறி முடித்தார். 



  • Jun 25, 2024 16:30 IST
    மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை; மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

    இலங்கை கடற்படை கைது செய்த 47 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், இலங்கை கடற்படையால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

     



  • Jun 25, 2024 15:30 IST
    ‘வாழ்க தமிழ், வாழ்க கலைஞர், வாழ்க தளபதி, வாழ்க உதயா’ - ஜெகத்ரட்சகன் உறுதிமொழி ஏற்பு

    மக்களவை உறுப்பினராக உறுதிமொழி ஏற்ற தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன், வாழ்க தமிழ், வாழ்க கலைஞர், வாழ்க தளபதி, வாழ்க உதயா என கூறி பதவியேற்றார்.



  • Jun 25, 2024 15:28 IST
    ‘வாழ்க ஜனநாயகம், வாழ்க அரசியல் சாசனம்’ - திருமாவளவன் உறுதிமொழியேற்பு

    வி.சி.க தலைவர் திருமாவளவன், வாழ்க ஜனநாயகம், வாழ்க அரசியல் சாசனம் எனக்கூறி எம்.பியாக உறுதிமொழி ஏற்றார்.

    மயிலாடுதுறை எம்.பி. சுதா, “தமிழ்க்கடவுள் முருகன் மீது ஆணையாக..” என உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.



  • Jun 25, 2024 15:15 IST
    தி.மு.க எம்.பி.க்கள் பதவியேற்பு: மக்களவையில் ஒலித்த கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி பெயர்கள்

    தமிழக எம்.பி.க்கள் மக்களவையில் பதவியேற்றனர். அப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதி பெயர்களைக் குறிப்பிட்டு மக்களவையில் தி.மு.க எம்.பி.க்கள் பதவியேற்றனர். தி.மு.க எம்.பி.க்கள் சிலர் வருங்காலம் எங்கள் உதயநிதி என்று கூறி பதவியேற்றனர்.

    தி.மு.க எம்.பி கதிர் ஆனந்த் மக்களவை உறுப்பினராக பதவியேற்றார். தாய், தந்தைக்கு வணக்கம், வாழ்க தளபதி, எங்கள் வருங்காலம் உதயநிதி என பதவியேற்றார்.



  • Jun 25, 2024 14:56 IST
    மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் தயாநிதி

    மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் தயாநிதி மாறன் வாழ்க தமிழ், வாழ்க அண்ணா, வாழ்க கருணாநிதி, வாழ்க ஸ்டாலின் என கூறினார் தயாநிதி மாறன் வேண்டாம் நீட், பேட் நீட் எனக்கூறி தயாநிதி மாறன் முழக்கம்



  • Jun 25, 2024 14:41 IST
    தமிழில் பதவியேற்றார் திருவள்ளூர் எம்.பி., சசிகாந்த் செந்தில்

    மக்களவை உறுப்பினர்களாக தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்பு தமிழில் பதவியேற்றார் திருவள்ளூர் எம்.பி., சசிகாந்த் செந்தில்,



  • Jun 25, 2024 14:40 IST
    கள்ளக்குறிச்சி விஷ சாராய தமிழ்நாடு அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

    கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் ஒரு வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு உத்தரவு. 



  • Jun 25, 2024 14:21 IST
    ஈஷா யோகா மையம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கேள்வி ஈஷா மையம் யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ளதா?

    ஈஷா யோகா மையம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கேள்வி ஈஷா மையம் யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ளதா? - அமைச்சர் துரைமுருகன் கேள்வி ஆய்வு செய்த பிறகே தெரியவரும் அதன் பின் பதில் கூறுகிறேன் - அமைச்சர் மதிவேந்தன் 3 ஆண்டுகளாக அது குறித்து ஆய்வு செய்யாமல் இருக்கிறீர்களா? - அமைச்சர் துரைமுருகன்



  • Jun 25, 2024 14:19 IST
    2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

     நீலகிரி, கோவை, திருப்பூர்,  தேனி,  திண்டுக்கல்,  தென்காசி,  நெல்லை,  கன்னியாகுமரி சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்  . 



  • Jun 25, 2024 13:53 IST
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில், வேளாங்கண்ணி ஆலயத்தை மேம்படுத்த : ரூ.3 கோடி ஒதுக்கீடு

    "மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் வேளாங்கண்ணி ஆலயத்தை, காலநிலை மீள் திறன்கொண்ட கோயில்களாக மாற்ற ரூ.3 கோடி ஒதுக்கீடு" - பேரவையில் அமைச்சர் மெய்யநாதன் தகவல்



  • Jun 25, 2024 13:51 IST
    நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 



  • Jun 25, 2024 13:44 IST
    மாஞ்சோலை தொழிலாளர் மறுவாழ்வு: நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி அரசு நடவடிக்கை எடுக்கும்

    மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர் மறுவாழ்வு விவகாரம் தொடர்பாக, நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி அரசு நடவடிக்கை எடுக்கும் - பேரவையில் அமைச்சர் மதிவேந்தன் தகவல்



  • Jun 25, 2024 13:41 IST
    வன்னியர் இட ஒதுக்கீடு மறுப்பு;ராமதாஸ் அறிக்கை

    தேசியளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் மட்டும் தான் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்; வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று மனதளவில் உறுதி ஏற்றுக்கொண்டு, அதற்கு சாக்கு சொல்வது கண்டிக்கத்தக்கது; திமுகவின் சமூக அநீதி கோரமுகம் அம்பலமாகிவிட்டது" - பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை



  • Jun 25, 2024 13:40 IST
    விஷ சாராயம் : 112 பேரிடம் தனித்தனியாக வாக்குமூலம்

    விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 112 பேரிடம் தனித்தனியாக வாக்குமூலம் பெறும் சிபிசிஐடி போலீசார். 



  • Jun 25, 2024 13:02 IST
    பணி நியமன ஆணைகளை வழங்கிய ஸ்டாலின்

    டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 95 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்



  • Jun 25, 2024 13:01 IST
    வனத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை வேண்டும்: இ.பி.எஸ்

    "வனத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த வேண்டும்"

    உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதா ?

    "தற்போது நடைபெறும் கள்ளச்சாராய ரெய்டுகளை முன்கூட்டியே செய்திருக்கலாம்"

    "மாநில போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது  -  ஆளுநரை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி பேட்டி 



  • Jun 25, 2024 12:41 IST
    சபாநாயகர் தேர்தல்: சுதந்திரத்திற்கு பிறகு முதல் தேர்தல்

    சபாநாயகர் தேர்தல் - சுதந்திரத்திற்கு பிறகு முதல் தேர்தல்.

    மக்களவை சபாநாயகர் தேர்தலில் ஓம் பிர்லாவை வேட்பாளராக நிறுத்தியது தேசிய ஜனநாயகக் கூட்டணி. இந்தியா கூட்டணி சார்பில், கொடிக்குனில் சுரேஷ் வேட்பு மனு தாக்கல்



  • Jun 25, 2024 12:26 IST
    ஆளுநருடன் இ.பி.எஸ் சந்திப்பு

    ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு. 

    கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் தொடர்பாக, ஆளுநரிடம் ஈபிஎஸ் மனு

    விஷச் சாராய விவகாரத்தில், ஈபிஎஸ் சிபிஐ விசாரணை கோரி வரும் நிலையில் ஆளுநருடன் சந்திப்பு



  • Jun 25, 2024 12:24 IST
    சபாநாயகர் தேர்தல்: எதிர்க்கட்சிகளும் போட்டி

    மக்களவை சபாநாயகர் தேர்தலில் எதிர்க்கட்சிகளும் போட்டி

    இந்தியா கூட்டணி சார்பில், கொடிக்குனில் சுரேஷ் வேட்பு மனு தாக்கல்



  • Jun 25, 2024 11:40 IST
    துணை சபாநாயகர் பதவி: ராகுல் உறுதி

    மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குவதாக இருந்தால் சபாநாயகர் தேர்தலில் ஆளுங்கட்சி முன்னிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவளிப்போம்- காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உறுதி



  • Jun 25, 2024 11:39 IST
    கர்நாடகா நீதிமன்றத்தில் உதயநிதி ஆஜர்

    சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பான வழக்கு

    பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆஜர்

    ஏற்கனவே 2 முறை ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஆஜராகவில்லை

    இன்றும் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் நேரில் ஆஜர்



  • Jun 25, 2024 11:23 IST
    அ.தி.மு.க உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

    சட்டப்பேரவைக்கு குந்தகம் விளைவித்ததால் அ.தி.மு.க உறுப்பினர்கள் இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் - சபாநாயகர் அப்பாவு 



  • Jun 25, 2024 10:52 IST
    தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,680-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,440-க்கும் விற்பனையாகிறது.



  • Jun 25, 2024 10:30 IST
    90 பேரின் உடல் நிலையில் முன்னேற்றம்

    விஷச் சாராயம் குடித்து மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சையில் உள்ள 156 பேரில் 90 பேரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.



  • Jun 25, 2024 10:01 IST
    கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி

    கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. மக்களவைத் தேர்தலில் 40/40 வெற்றி பெற்றது அவர்களின் கண்களை உறுத்துகிறது. திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அதிமுகவினர் அவையில் அமளியில் ஈடுபடுகின்றனர்.

    சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • Jun 25, 2024 09:45 IST
    அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்: சபாநாயகர் உத்தரவு

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மூன்றாவது நாளாக கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    அவைக்கு குந்தகம் விளைவித்ததால் அதிமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இன்று ஒரு நாள் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அதிமுக உறுப்பினர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • Jun 25, 2024 08:53 IST
    தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Jun 25, 2024 08:53 IST
    கள்ளக்குறிச்சி பலி எண்ணிக்கை 59 ஆக உயர்வு

    கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜான்பாஷா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது.



  • Jun 25, 2024 08:53 IST
    கெஜ்ரிவால் ஜாமின்: இன்று தீர்ப்பு

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியதை எதிர்த்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்



  • Jun 25, 2024 08:05 IST
    நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்தது

    நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 10 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    ராமேஸ்வரத்தை சேர்ந்த 22 மீனவர்களை ஏற்கனவே கைது செய்த நிலையில் மேலும் 10 மீனவர்களை இன்று இலங்கை கடற்படை சிறை பிடித்தது



  • Jun 25, 2024 08:05 IST
    விஷச்சாராய வழக்கு: 7 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்

    கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் மெத்தனால் வழங்கிய ஆலை உரிமையாளர்கள் பென்சிலால், கெளதம் மற்றும் சடையன், ரவி, செந்தில், ஏழுமலை ஆகிய 7 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து, கள்ளக்குறிச்சி 2வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டார்.

    நீதிமன்றக் காவலில் உள்ள 7 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டம்



  • Jun 25, 2024 07:50 IST
    கள்ளக்குறிச்சி விவகாரம் மேலும் 7 பேர் கைது

    கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் பென்சிலால், சடையன், ரவி, செந்தில், ஏழுமலை, கௌதம், சிவக்குமார்  கைது செய்யப்பட்ட 7 பேரையும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட 7 பேரும் மெத்தனாலை பெரிய நிறுவனங்களிடம் இருந்து வாங்கி தனி நபர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக தகவல்



  • Jun 25, 2024 07:33 IST
    ஆளுநர் கூறியதாக பரவும் செய்தி போலியானது

    குல தெய்வ வழிபாட்டை தடை செய்யவேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக பரவும் செய்தி போலியானது என ஆளுநர் மாளிகை விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.



  • Jun 25, 2024 07:33 IST
    இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை: நவீன் பட்நாயக் அறிவிப்பு

    ராஜ்யசபாவில் உள்ள ஒன்பது எம்பிக்களும் வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுவார்கள். நாடாளுமன்றத்தில் மாநில மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கு பட்நாயக் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை.  எதிர்க்கட்சி மட்டுமே. ஒடிசாவின் நலன்களைப் பாதுகாக்க நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம். பாஜகவை ஆதரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை

    பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக்      



  • Jun 25, 2024 07:32 IST
    ஜூன் 3ம் தேதி செம்மொழி நாள்

    அடுத்த ஆண்டு முதல் ஜனவரி 25ம் நாள் தாய் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்.

    அடுத்த ஆண்டு முதல் ஜூன் மூன்றாம் தேதி செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும்.

    பள்ளி கல்லூரி மாணவர்களிடையே கட்டுரை, பேச்சுப்போட்டி, மாவட்ட மாநில அளவில் நடத்தி பரிசுத்தொகை வழங்கப்படும். இதற்காக ஒரு கோடியே 88 லட்சத்து 57 ஆயிரம் வழங்கப்படும்.

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருது தோற்றுவிக்கப்படும் ரூபாய் 17 லட்சம் ஆண்டுதோறும் வழங்கப்படும்.

    -சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு   



  • Jun 25, 2024 07:32 IST
    அண்ணாமலைக்கு நாராயணசாமி கேள்வி

    புதுச்சேரியில் இருந்துதான் தமிழ்நாட்டுக்கு மெத்தனால் சென்றிருக்கிறது. அதனால் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை ராஜினாமா செய்யச் சொல்லி கோரிக்கை வைப்பாரா அண்ணாமலை? இரட்டை வேடம் போடுகிறது பாஜக.

    -புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment