/indian-express-tamil/media/media_files/Q85bKAih2KeiOsoRO6qy.jpg)
Tamil news live
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
முதல் முறையாக தேர்தல் அரசியலில் பிரியங்கா காந்தி
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல்காந்தி, வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jun 18, 2024 22:16 IST
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்கான ஆப்களை தொடங்கி வைத்தார் உதயநிதி
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்கான ஆப்களை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். www.pocsoportal.tn.gov.in என்ற போக்சோ இணையதளத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். போக்சோ இணைய முகப்பு, தனிநபர் பராமரிப்பு இல்லங்களை ஆய்வு செய்யும் செயலிகள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை தொடங்கிவைத்தார். www.tnwidowwelfareboardtn.gov.in இணையதளம் மூலம் கைம்பெண், ஆதரவற்ற பெண்கள் விவரம் பதிவிடலாம்.
-
Jun 18, 2024 21:26 IST
மத்தியில் பா.ஜ.க எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியாது - செல்வப் பெருந்தகை
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: “சந்திரபாபு நாயுடுவையும், நிதிஷ்குமாரையும் இருபுறமும் வைத்துக்கொண்டு மத்தியில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது; இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியாது” என்று தெரிவித்துள்ளார்.
-
Jun 18, 2024 20:38 IST
குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு; அமித்ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்
மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் குற்றவியல் திருத்த சட்டங்களை அமல்படுத்துவதில் மாநில அரசுகளின் கருத்தைக் கேட்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் அமல்படுத்தக் கூடாது. அதுவரை புதிய சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும். குற்றவியல் திருத்த சட்டங்களை அமல்படுத்துவதில் மாநில அரசுகளின் கருத்தைக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
-
Jun 18, 2024 19:45 IST
தேர்வுகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் - பினராயி விஜயன்
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்: “நீட் தேர்வு முறைகேடுகள், நமது தேர்வு முறையின் மீதான நம்பகத்தன்மையை குறைக்கிறது. தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் விடுத்த நோட்டீஸ், இப்பிரச்னையின் தீவிரத்தைக் காட்டுகிறது. மாநில அளவிலான தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, ஒரே நுழைவு தேர்வாக்கிய ஒன்றிய அரசு இதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
Jun 18, 2024 19:42 IST
அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பருப்பு, எண்ணெய் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும் - அமைச்சர் சக்கரபாணி
உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி: “மே மற்றும் ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு, எண்ணெய் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படும். மே மாதத்திற்கான பருப்பு மற்றும் எண்ணெய்யை ஜூன் கடைசி வரை பெறலாம்” என்று உறுதியாகக் கூறியுள்ளார்.
-
Jun 18, 2024 18:31 IST
பி.எம் கிசான் திட்டம்; விவசாயிகளுக்கு ரூ.20000 கோடியை வழங்கிய மோடி
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தனது தொகுதியான வாரணாசிக்கு தனது முதல் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிஎம்-கிசான் திட்டத்தின் 17வது தவணையின் கீழ் 9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை வழங்கினார். 30,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சுய உதவிக் குழுக்களில் (SHGs) சான்றிதழ்களையும் வழங்கினார்.
-
Jun 18, 2024 17:43 IST
பீகாரில் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்த பாலம்
பீகாரில் அராரியா மாவட்டத்தில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்தது. இந்தப் பாலம் சுமார் 7.89 கோடியில் கட்டப்பட்டது
-
Jun 18, 2024 17:26 IST
ஆந்திர எம்.பி., மகள் ஓட்டி வந்த கார் விபத்து; இளைஞர் மரணம்
சென்னை பெசன்ட் நகரில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் நடைமேடையில் படுத்திருந்த சூர்யா என்ற இளைஞர் உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியது ஆந்திர ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி., பீடா மஸ்தான் ராவின் மகள் என தெரிய வந்துள்ளது
-
Jun 18, 2024 17:02 IST
இந்தி 'சூரரைப் போற்று' டிரெய்லர் வெளியீடு
சுதா கொங்கரா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள சர்ஃபிரா (SARFIRA) பட டிரெய்லர் வெளியானது. 'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக்கான இதில் சூர்யா, சரத்குமார் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.
-
Jun 18, 2024 16:41 IST
8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை
அடுத்த 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், கரூர், தேனி, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
Jun 18, 2024 16:39 IST
சென்னையில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை - மேயர் பிரியா வேண்டுகோள்
சென்னையில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லைகள் குறித்து பொதுமக்களுக்கு மாநகராட்சி மேயர் பிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை மைலாப்பூரில் தெரு நாய் கடித்து காயமடைந்த சிறுவனை நேரில் சந்தித்து மேயர் பிரியா ஆறுதல் தெரிவித்தார்
-
Jun 18, 2024 16:37 IST
கலைஞர் கனவு இல்லம் திட்டம் - அடுத்த மாதம் தொடக்கம்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தை தமிழ்நாடு அரசு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. பயனாளர்களை தேர்வு செய்யும் பணியை வரும் 25ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலை வரும் 30ம் தேதி நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும்.
தொடர்ந்து ஜூலை 10ம் தேதிக்குள் வீடு கட்டும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ. 3100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
-
Jun 18, 2024 16:33 IST
பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு - கணவர் கைது
காஞ்சிபுரத்தில் பெண் காவலரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் பெண் காவலர் டில்லி ராணியின் கணவர் மேகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் இருந்து காஞ்சிபுரம் நீதிமன்றத்திற்கு சரணடைய வந்த மேகநாதனை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர்.
-
Jun 18, 2024 15:45 IST
புதுக்கோட்டை மீனவர்கள் கைது - இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டம் ஜெகர்காபட்டினம் மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், "புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களுக்கு ஜூலை 2ம் தேதி வரை நீதிமன்றக் காவல்" என இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Jun 18, 2024 15:43 IST
பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல்: தமிழக அரசு ரூ. 4.27 கோடி ஒதுக்கீடு
பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கிட தமிழக அரசு ரூ. 4.27 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது. சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு, முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளன்று மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதற்கு ஆகும் கூடுதல் செலவினம் ரூ.4.27,19,530/-ஐ 2024-2025-ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்துள்ளது.
-
Jun 18, 2024 14:47 IST
பள்ளி, கல்லூரிகளில் சாதி வன்முறை: அறிக்கையை சமர்ப்பித்த நீதியரசர் கே.சந்துரு குழு
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே ஏற்படும் சாதி வன்முறைகளை தடுப்பதற்கு பரிந்துரைகள் வழங்க தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு குழு, அதன் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. உடனடியாக செய்ய வேண்டியவை, நீண்டகால செயல்திட்டங்கள் என 2 விதமாக பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
-
Jun 18, 2024 14:46 IST
ஸ்மார்ட்போனின் பிடியில் இளைஞர்கள்: ஆய்வில் வெளியான தகவல்கள்!
ஸ்மார்ட்போன் உபயோகிக்காமல் இருக்கும் சேலஞ்சில் பங்கேற்ற இளைஞர்கள் நிறைய புதிய விஷயங்களை கற்பதுடன், பலருடன் எளிதாக உரையாடுகின்றனர். தங்களின் கற்பனைத்திறன் மீண்டும் செயல்பட தொடங்கியதாக உணர்கின்றனர். ஸ்மார்ட்போன் இல்லாத நேரத்தில் தங்களின் ஸ்னாப் ஸ்ட்ரீக் குறித்து கவலைக்குள்ளாவதாகவும், இணைய உலகத்தின் தொடர்பில் இருந்து வெளியேறிவிடுவோம் எனவும் பயப்படுகின்றனர்
-
Jun 18, 2024 14:45 IST
கொடைக்கானலில் பலத்த மழை
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. வில்பட்டி, பள்ளங்கி, பூம்பாறை ஆகிய பல மலைக்கிராமங்களில் காய்கறிகள் நடவு செய்யும் காலம் என்பதால், மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
Jun 18, 2024 14:29 IST
"சமூகத்தில் சாதி இல்லை" - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
"ஆங்கிலேயர் காலத்தில் சமூகத்தில் 4 பிரிவினர் மற்றும் இஸ்லாமியர்கள்தான் இருந்தார்கள். சமூகத்தில் சாதி இல்லை" என்று சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
-
Jun 18, 2024 14:28 IST
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தி.மு.க-விற்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க-விற்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Jun 18, 2024 14:28 IST
"5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம்
வருகிற 22ஆம் தேதி 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Jun 18, 2024 13:36 IST
ரேஷன் கடைகளில் பொருட்களை சீராக விநியோகம் செய்க : இ.பி.எஸ்
ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் சீராக விநியோகிப்பதை உறுதி செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் விநியோகம் இல்லை என வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. ரேஷன் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு அவலநிலைக்கு கடும் கண்டனம்- இ.பி.எஸ்
-
Jun 18, 2024 12:43 IST
பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு ஜாமின்
பாலியல் புகாரில் சிக்கி கைதான பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு ஜாமின் வழங்கியது கர்நாடக உயர்நீதிமன்றம்
சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது, போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என நிபந்தனை
-
Jun 18, 2024 12:43 IST
விதிகளை மீறி இயங்கும் ஆம்னி பேருந்து: அரசுக்கு ரூ.34.56 கோடி இழப்பு
விதிகளை மீறி இயங்கும் ஆம்னி பேருந்துகளால், அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.34.56 கோடி இழப்பு ஏற்படுகிறது"
சட்டத்திற்குப் புறம்பாக இயக்கப்படும் ஆம்னிப் பேருந்துகளின் இயக்கத்தை இனியும் அனுமதிக்க இயலாது- தமிழக போக்குவரத்துத் துறை அறிக்கை
-
Jun 18, 2024 12:41 IST
மாட்டின் உரிமையாளர்களிடம் ரூ.43.05 லட்சம் அபராதம் வசூல்
மாட்டின் உரிமையாளர்களிடம் ரூ.43.05 லட்சம் அபராதம் வசூல்
சென்னையில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களிடமிருந்து இந்த ஆண்டு இதுவரை ரூ.43.05 லட்சம் அபராதம் வசூல்- சென்னை மாநகராட்சி தகவல்
-
Jun 18, 2024 12:40 IST
கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கொந்தகை, வெம்பக்கோட்டை, கீழ்நமண்டி, மருங்கூர் உள்பட 8 இடங்களில் 10ஆம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் பெரும்பாலை அகழாய்வு ஆய்வறிக்கை நூல்
138 கல்வெட்டுகளில் விளக்க உரைகள் அடங்கிய நூல்கள் வெளியீடு
-
Jun 18, 2024 12:12 IST
நீட் தேர்வு வழக்கு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில், தேசிய தேர்வு முகமை, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
நீட் தேர்வில் 0.001% அலட்சியம் இருந்தாலும், அதனை முழுமையாக ஆராய வேண்டும் - உச்சநீதிமன்றம்
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதால் சர்ச்சை
ஒருசில மையங்களில் முன்கூட்டியே வினாத்தாள் கசிந்ததாகவும் குற்றச்சாட்டு
-
Jun 18, 2024 12:12 IST
நீட் தேர்வு வழக்கு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில், தேசிய தேர்வு முகமை, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
நீட் தேர்வில் 0.001% அலட்சியம் இருந்தாலும், அதனை முழுமையாக ஆராய வேண்டும் - உச்சநீதிமன்றம்
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதால் சர்ச்சை
ஒருசில மையங்களில் முன்கூட்டியே வினாத்தாள் கசிந்ததாகவும் குற்றச்சாட்டு
-
Jun 18, 2024 11:54 IST
பேருந்து மறு பதிவு செய்ய சிறப்பு முகாம் வேண்டும்
வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடையை மீறி இயக்க திட்டமில்லை.
தமிழகத்தில் மறு பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பேருந்தை பதிவு செய்வதற்கே ஒரு மாதம் கால அவகாசம் எடுப்பதால், சிறப்பு முகாம் அமைக்க வேண்டும்.
விரைவாக மறுபதிவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் -அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்
-
Jun 18, 2024 11:46 IST
2026 வரை எந்த தேர்தலிலும் போட்டியில்லை: த.வெ.க
2026 வரை எந்த தேர்தலிலும் போட்டியில்லை - விஜய்யின் த.வெ.க அறிவிப்பு
2026 சட்டமன்றத் தேர்தல் வரை எந்த தேர்தலிலும் போட்டியில்லை. இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தல் உள்பட எந்த தேர்தலிலும் த.வெ.க போட்டியிடாது. 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது தான் எங்களின் பிரதான இலக்கு- தமிழக வெற்றிக் கழகம்
த.வெ.க. கொள்கை, கோட்பாடுகள் மாநில மாநாட்டில் வெளியிடப்படும் - கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்
-
Jun 18, 2024 11:33 IST
எண்ணெயில் இறந்து கிடந்த எலி: 8 பேர் பாதிப்பு
சென்னையில் சமையல் எண்ணெய் கேனில் எலி இறந்து கிடந்ததை கவனிக்காததால் விபரீதம்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு வாந்தி, மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி
-
Jun 18, 2024 11:13 IST
சென்னையில் விமான சேவை பாதிப்பு
சென்னை விமான நிலையத்தில் தொடர் மழை காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன
ஒரு மணி நேரம் பெய்த மழையின் காரணமாக, 15 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதி
-
Jun 18, 2024 10:44 IST
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை: தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு.
2026 சட்டமன்ற தேர்தலே எங்கள் இலக்கு. இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட எதிலும் தவெக போட்டியிடாது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை
-புஸ்ஸி ஆனந்த் அறிக்கை
-
Jun 18, 2024 10:17 IST
ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
மேற்கு வங்கம், டார்ஜிலிங் மாவட்டத்தின் பன்ஜிதேவா பகுதியில் நேற்று கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில், மீட்பு பணிகள் நிறைவுற்றது. இதையடுத்து பன்ஜிதேவா பகுதியில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது
-
Jun 18, 2024 09:48 IST
547 ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயங்காது
வெளிமாநில பதிவெண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயங்காது
ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் முடிவு
-
Jun 18, 2024 09:26 IST
தமிழ்நாட்டில் மினி பஸ்களை இயக்க மீண்டும் அனுமதி?
தமிழ்நாட்டில் மினி பஸ்களை இயக்க மீண்டும் அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
எந்தெந்த வழித்தடத்தில் மினி பஸ் சேவைகளுக்கு அனுமதி வழங்குவது என RTO-க்கள் முடிவு செய்யலாம். அதிகபட்சமாக 25 கி.மீ தூரம் வரை மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்படும். அனைத்து மினி பஸ்களிலும் GPS வசதி பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொதுமக்கள் ஜூலை 14ம் தேதிக்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.
-
Jun 18, 2024 08:53 IST
6 வயது குழந்தையை கடித்த தெரு நாய்
சென்னை, மயிலாப்பூரில் 6 வயது குழந்தையை தெரு நாய் கடித்த நிலையில், முகம் மற்றும் தோள்பட்டையில் காயங்களுடன் குழந்தை எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
-
Jun 18, 2024 08:53 IST
சென்னையில் விமான சேவை பாதிப்பு
சென்னை விமான நிலையத்தில் தொடர் மழை காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாமால் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன
ஒரு மணி நேரம் பெய்த மழையின் காரணமாக, 15 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதி.
-
Jun 18, 2024 08:20 IST
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
மேட்டூர் அனல் மின் நிலையத்தின் 2வது பிரிவில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
-
Jun 18, 2024 07:43 IST
தமிழக மீனவர்கள் 4 பேர் கைது
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
கைதான மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
-
Jun 18, 2024 07:43 IST
அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு புதிய பொறுப்பு
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமனம் செய்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
-
Jun 18, 2024 07:34 IST
சென்னையில் பல பகுதிகளில் விடியவிடிய கொட்டித் தீர்த்த மழை
சென்னை தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, நந்தனம், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், பெசண்ட் நகர், அடையாறு, மந்தைவெளி, பட்டினப்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சென்னை முழுவதும்குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
-
Jun 18, 2024 07:25 IST
பிரியங்கா காந்தி பேட்டி
வயநாடு தொகுதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவது மிகவும் மகிழ்ச்சி. ராகுல் காந்தி இல்லை என்ற உணர்வை வயநாடு மக்களுக்கு அளிக்க மாட்டேன். வயநாடு தொகுதி மக்களுக்காக கடினமாக உழைத்து, நல்ல பிரதிநிதியாக இருந்து என்னால் முடிந்ததை செய்வேன். ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகள் உடனான உறவு அவ்வளவு எளிதில் முடிவு பெறாது
- டெல்லியில் பிரியங்கா காந்தி வத்ரா பேட்டி
-
Jun 18, 2024 07:25 IST
ராகுல் காந்தி பேட்டி
வயநாடு மற்றும் ரேபரேலி மக்களவைத் தொகுதிகளுடன் எனக்கு உணர்வுபூர்வமான தொடர்பு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்தேன். வயநாடு தொகுதி மக்களுக்காக எப்போதும் குரல் கொடுப்பேன். வயநாடு மக்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி”
- டெல்லியில் ராகுல் காந்தி பேட்டி
-
Jun 18, 2024 07:24 IST
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இங்கிலாந்து நாட்டில் பயிற்சி முடித்த மாணவர்கள்
சென்னை, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இங்கிலாந்து நாட்டில் பயிற்சி முடித்த மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
#JUSTIN | நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் உள்ள Durham பல்கலைக்கழகத்தில் ஒருவார பயிற்சி முடித்துவிட்டு சென்னை திரும்பிய மாணவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
— Sun News (@sunnewstamil) June 17, 2024
லண்டனில் பெற்ற அனுபவங்களை முதலமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர். சர்வதேச… pic.twitter.com/urD41lUwF9 -
Jun 18, 2024 07:24 IST
மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
பயணிகளின் தேவைகளை கவனத்தில் கொள்வதில்லை, ரயில்வே துறை அதிகாரிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் பற்றி எந்த கவலையும் மத்திய ரயில்வே துறைக்கு இல்லை. அதனால் தான் பெரும் விபத்துகளை மத்திய ரயில்வே துறை சந்தித்து வருகிறது.
ஆனால் மத்திய பாஜக அரசை பொறுத்தவரை தேர்தல் மட்டும் தான் மிக முக்கியம். தேர்தல் நேரங்களில் எப்படி முறைகேடு, ஹேக்கிங், உண்மைக்கு மாறாக செயல்படுவது உள்ளிட்டவை மட்டுமே மத்திய அரசிற்கு முக்கியமாக இருக்கிறது.
- மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.