Advertisment

Tamil News Updates: தமிழ்நாட்டில் எப்போதும் திராவிட மாடல் ஆட்சி தான் என்ற நிலையை உருவாக்குவோம்: முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேச்சு

Tamil Nadu News Update Today- 15 June 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chief Minister M K Stalin campaigned in Trichy

Tamil news live

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

அண்ணாமலை பேட்டி

ஈரோடு இடைத்தேர்தல் போல், விக்கிரவாண்டி தேர்தல் இருக்கக் கூடாது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் மிகக் கடுமையாக நடத்த வேண்டும். இடைத்தேர்தலில் பெரும்பாலும் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும், ஆனால் வரலாறு மாறும்பாமக போட்டியிட்டாலும், பாஜக களத்தில் இறங்கி பணியாற்றும்." என்று சென்னை, கமலாலயத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Jun 15, 2024 22:01 IST
    மோடிக்கு கிடைத்தது தோல்வியே - முதல்வர்

     

    "ஒடிசா, உத்தரப்பிரதேசத்தில் தமிழர்களை கொச்சைப்படுத்தி பேசினார்கள்" "இவ்வளவு செய்தும் பாஜகவுக்கு கிடைத்தது வெறும் 240 இடங்களே, இது மோடிக்கு கிடைத்த தோல்வி" என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • Jun 15, 2024 21:08 IST
    தமிழ்நாட்டு மக்களுக்காக இன்னும் இன்னும் உழைக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்

    "நம்முடைய உழைப்பு வீண் போகவில்லை என்ற மனநிறைவைக் கொடுத்திருக்கிறது; தமிழ்நாட்டிற்காக, தமிழ்நாட்டு மக்களுக்காக இன்னும் இன்னும் உழைக்க வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறது!" –என 40க்கு 40 வெற்றி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.



  • Jun 15, 2024 20:18 IST
    பாஜக எண்ணத்திற்கு தடையாக இருந்தவர் மு.க.ஸ்டாலின் : முத்தரசன்

    கோவையில் நடைபெற்று வரும் திமுக முப்பெரும் விழாவில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசுகையில், உறியில் இருக்கும் கருவாட்டை எடுக்கக் காத்திருக்கும் பூனைபோல, தமிழ்நாட்டில் 1 கருவாட்டையாவது எடுத்துவிடலாம் என பாஜக பார்த்தது ஆனால் அது நடக்கவில்லை. அதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என கூறியுள்ளார்.



  • Jun 15, 2024 20:11 IST
    அரிவாள் வெட்டு - பரபரப்பு சிசிடிவி காட்சி

    சென்னை, அண்ணா நகரில் பாஜக நிர்வாகியின் கணவர் சீனிவாசன் துரத்தித் துரத்தி வெட்டப்பட்ட சம்பவம் கொடூரமாக வெட்டப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



  • Jun 15, 2024 20:10 IST
    ஹரிதுவார் விபத்து : ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்த பிரதமர்

    `உத்தரகாண்ட்' ஹரிதுவார் நெடுஞ்சாலை பகுதியில் அலெக்நந்தா ஆற்றில் டெம்போ ட்ராவலர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 10 பேருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.



  • Jun 15, 2024 19:29 IST
    நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை சரிவு

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிந்துள்ளது. ஒரு முட்டையின் விலை, ஐந்து ரூபாய் 10 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 



  • Jun 15, 2024 19:24 IST
    "மழைக்கால தவளை போல் ஒருவர் தாமரை மலரும் மலரும் என்று கத்திக் கொண்டே இருக்கிறார்" -திருமாவளவன்

    "தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு காரணம் முதலமைச்சர் ஸ்டாலினின் வியூகம்தான். சோனியா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களை இங்கே அழைத்து வந்து அவருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும். மழைக்கால தவளை போல் ஒருவர் தாமரை மலரும் மலரும் என்று கத்திக் கொண்டே இருக்கிறார்" என்று கோவையில் நடைபெற்று வரும் தி.மு.க முப்பெரும் விழாவில் வி.சி.க தலைவர் திருமாவளவன் உரையாற்றி வருகிறார். 



  • Jun 15, 2024 18:31 IST
    'கொங்கு மண்டலத்தை மேம்படுத்தனும்': கொ.ம.தே.க தலைவர் ஈஸ்வரன் 

    "கொங்கு மண்டலத்தின் கட்டமைப்பை  மேம்படுத்த வேண்டும், மாசுபடும் காற்றை சுத்தப்படுத்த வேண்டும். எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொங்கு மண்டலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். கட்டமைப்பை மேம்படுத்த சிறப்பு நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்க வேண்டும்" என்று கோவையில் நடைபெறும் தி.மு.க முப்பெரும் விழாவில் கொ.ம.தே.க தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். 



  • Jun 15, 2024 18:17 IST
    பரந்தூர் விமான நிலையம் - கிராம மக்கள் அதிரடி முடிவு

    பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழ்நாட்டை விட்டு வெளியேற ஏகனாபுரம் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட மறுத்து நிலம் எடுப்பு பணிகளை மேற்கொள்வதாக கிராம மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்  அண்டை மாநிலமான ஆந்திர மாநில அரசிடம் தஞ்சம் கேட்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.



  • Jun 15, 2024 18:14 IST
    விளைநிலத்தில் இருந்து வெளியேறிய எரிவாயு

    ஆந்திர மாநிலம் சிந்தலப்பள்ளி கிராமத்தில் விளை நிலத்தில் போடப்பட்ட ஆழ்துளை கிணற்றிலிருந்து பீய்ச்சி அடித்து எரிவாயு வெளியேறியது. சுமார் 15 மீட்டர் உயரத்திற்கு, பீய்ச்சி அடித்து வெளியேறிய எரிவாயுவால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர் 

     



  • Jun 15, 2024 17:04 IST
    புதுச்சேரி பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றம்

    புதுச்சேரி பேருந்து நிலையம் தற்காலிகமாக ஏ.எப்.டி மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால், அப்பணிகள் முடியும் வரை புதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ள ஏ.எப்.டி மைதானத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என புதுச்சேரி நகராட்சி தெரிவித்துள்ளது



  • Jun 15, 2024 16:27 IST
    விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; அ.தி.மு.க புறக்கணிப்பு

    தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதால் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்



  • Jun 15, 2024 16:20 IST
    கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

    கர்நாடக அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரி உயர்வால் பெட்ரோல் விலை ரூ.3, டீசல் விலை ரூ.3.50 அதிகரிக்கிறது.



  • Jun 15, 2024 15:53 IST
    சென்னை ஏர்போர்ட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

    சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என பேசிவிட்டு மர்ம நபர் தொடர்பை துண்டித்துவிட்டார். மிரட்டலை அடுத்து சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



  • Jun 15, 2024 15:26 IST
    விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; வேட்பாளர் தேர்வு தொடர்பாக இ.பி.எஸ் ஆலோசனை

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.



  • Jun 15, 2024 15:02 IST
    ஜெகன் மோகனின் வீட்டின் முன்புறம் இடிப்பு

    ஹைதராபாத் நகரில், லோட்டஸ் சர்க்கிள் பகுதியில் உள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின், வீட்டின் முன்புறம் இடிக்கப்பட்டுள்ளது. நடைபாதையை மறித்து பாதுகாவலர்கள் தங்குவதற்காக அறை கட்டப்பட்டிருந்ததாக ஹைதராபாத் மாநகராட்சிக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்



  • Jun 15, 2024 14:38 IST
    சத்தீஸ்கர் என்கவுண்டரில் 8 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை; ஒரு ராணுவ வீரர் மரணம்

    சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த என்கவுன்டரில் குறைந்தது ஒரு பாதுகாப்புப் படை வீரர் மற்றும் 8 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.



  • Jun 15, 2024 14:15 IST
    ரிஷிகேஷ் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் டெம்போ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து

    உத்தரகாண்டில் ரிஷிகேஷ் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் டெம்போ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது. 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது



  • Jun 15, 2024 13:57 IST
    மினிவேன் கவிழ்ந்து விபத்து: 21 பேர் படுகாயம்

    கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை அருகே மினி வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து - 21 பேர் படுகாயம்

    எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் இருந்து சிவானூர் நோக்கி துக்க நிகழ்ச்சிக்காக சென்ற போது விபத்து

    பகண்டை அடுத்த அத்தியூர் கேஸ் குடோன் வளைவு பாதையில் வேகமாக திரும்பிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த மினிவேன்

    மினி வேனில் பயணித்த பெண்கள் உள்பட 21 பேருக்கு படுகாயம் - சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு 

    தீவிர காயம் அடைந்த 5 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ப்பு



  • Jun 15, 2024 13:54 IST
    பால புரஸ்கார், யுவ புரஸ்கார் விருது அறிவிப்பு

    தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடெமி பால புரஸ்கார் விருதுக்கு, எழுத்தாளர் யூமா வாசுகி தேர்வு

    தன்வியின் பிறந்தநாள் என்ற கதைத்தொகுப்பிற்காக பால சாகித்ய புரஸ்கார் விருது பெறுகிறார், யூமா வாசுகி

    யூமா வாசுகிக்கு பால புரஸ்கார் விருது

    தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடெமியின் யுவ புரஸ்கார் விருது பெறுகிறார், லோகேஷ் ரகுராமன்

    லோகேஷ் ரகுராமனுக்கு யுவ புரஸ்கார் விருது



  • Jun 15, 2024 13:30 IST
    கடலோர மாவட்ட மக்களே உஷார்

    தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய கடற்கரையில் சுமார் 2.2மீ வரை அலைகள் எழும்ப வாய்புள்ளதால், நாளை இரவு 11 மணி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என இந்திய கடல்சார் மையம் எச்சரிக்கை 



  • Jun 15, 2024 13:08 IST
    'இனி நாங்கள் மெலோடி' - இத்தாலி பிரதமர் பதிவு

    "இனி நாங்கள் மெலோடி" - பிரதமர் மோடி உடனான செல்ஃபி வீடியோவை பகிர்ந்து இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி பதிவு 

    இத்தாலியில் உள்ள அபுலியாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். நேற்று நடைபெற்ற கருத்தரங்கு நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடியுடன் ஜியார்ஜியா செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

    இனி நாங்கள் 'மெலோடி டீம்' என குறிப்பிட்டிருந்தார் ஜியார்ஜியா மெலோனி. 

    இருவரின் பெயர்களிலும் உள்ள எழுத்துகளை ஒன்றிணைத்து மெலோடி டீம் என குறிப்பிட்டுள்ள ஜியார்ஜியா மெலோனி

     



  • Jun 15, 2024 12:56 IST
    ஓசூர் : மேலும் 17 பேருக்கு வாந்தி, மயக்கம்

    ஓசூர் மாநகராட்சி 4-வது வார்டில் குடிநீர் குடித்த மேலும் 17 பேருக்கு வாந்தி, மயக்கம். நேற்றுவரை 45 பேருக்கு  உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், மேலும் 17 பேர் மருத்துவமனையில் அனுமதி 



  • Jun 15, 2024 12:43 IST
    ஸ்டாலின் கோவை வருகை

    கோவை கொடிசியா வளாகத்தில் இன்று நடைபெறுகிறது, திமுக முப்பெரும் விழா

    முப்பெரும் விழாவில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் வருகை

    கோவை வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு



  • Jun 15, 2024 11:57 IST
    விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமக வேட்பாளர் அறிவிப்பு 

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் அறிவிப்பு 

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டி- பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடுகிறது. 

    விக்கிரவாண்டியில் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயாவும் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவிப்பு

    அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. 



  • Jun 15, 2024 11:42 IST
    படகு பழுது: கடலில் மூழ்கி 2 மீனவர்கள் பலி

    மீன்பிடிக்கச் சென்ற படகு பழுதாகி கடலில் மூழ்கியதில் 2 மீனவர்கள் உயிரிழப்பு

    ராமேஸ்வரம் மண்டபத்தில் இருந்து நேற்று மீன்பிடிக்கச் சென்ற படகு பழுதாகி கடலில் மூழ்கியதில் 2 மீனவர்கள் உயிரிழப்பு. 5 பேர் படகில் சென்ற நிலையில் 2 பேர் அருகில் இருந்த படகில் உதவி கேட்டு தரைக்கு திரும்பியுள்ளனர். 



  • Jun 15, 2024 11:16 IST
    உணவுப் பொட்டலங்கள் பறிமுதல் செய்து அழிப்பு


    திருநள்ளாறில் பக்தர்களுக்கு கெட்டுப்போன உணவுப்பொருட்கள் விற்கப்படுவதாக புகார். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.

    800-க்கும் மேற்பட்ட கெட்டுப்போன உணவுப் பொட்டலங்கள் பறிமுதல் செய்து அழிப்பு.



  • Jun 15, 2024 11:15 IST
    இந்தியா Vs கனடா அணிகள் மோதல்

    இன்றைய டி.20 போட்டி = இந்தியா Vs கனடா

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் இந்தியா மற்றும் கனடா அணிகள் மோதல்.

    ஃபுளோரிடாவில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.



  • Jun 15, 2024 10:57 IST
    போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

    திருவண்ணாமலை, போளூர் பைபாஸ் சாலையில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட விஜயகுமார் மணிகண்டன் மற்றும் வைரமணி ஆகியோரை போளூர் போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் மற்றும் சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்

     



  • Jun 15, 2024 10:21 IST
    தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

    2015ல் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், விழுப்புரத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுந்தர்ராஜன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் தேவிகா, இடைத்தரகர் முருகன்3 பேரின் வீடுகளிலும் 2 மணிநேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை



  • Jun 15, 2024 09:45 IST
    தங்கம் விலை உயர்வு

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.6,705-க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.53,640-க்கும் விற்பனையாகிறது.



  • Jun 15, 2024 09:44 IST
    யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

    ஈரோடு: பவானிசாகர் அருகே சுஜில்குட்டை முனியப்பன் கோயில் பகுதியில் விவசாய பயிர்களை பாதுகாக்க இரவு காவலில் இருந்த நம்பியூரைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் யானை தாக்கி உயிரிழப்பு;

    யானை தாக்குல் சம்பவம் தொடர்பாக பவானிசாகர் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்



  • Jun 15, 2024 09:13 IST
    சாதி மறுப்பு திருமணம்: கட்சி அலுவலகம் சூரையாடிய 13 பேர் கைது

    சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூரையாடப்பட்ட விவகாரத்தில் திருமணம் செய்த பெண்ணின் தாய் சரஸ்வதி, தந்தை முருகவேல், வெள்ளாளர் முன்னேற்றக் கழக தலைவர் பந்தல் ராஜா உட்பட 13 பேர் கைது

    9 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை



  • Jun 15, 2024 08:15 IST
    திருப்பத்தூர் நகரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 15) விடுமுறை

    திருப்பத்தூர் நகரில் நேற்று சிறுத்தை புகுந்ததால் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவு



  • Jun 15, 2024 07:51 IST
    பிரதமர் மோடி ஜூன் 20 ஆம் தேதி சென்னை வருகை

    பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20 ஆம் தேதி சென்னைக்கு வருகை தருகிறார் - சென்னை - நாகர்கோவில் மற்றும் மதுரை - பெங்களூரு ஆகிய இரண்டு வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி, பல திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

    எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் நடைபெறும் விழாவில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் கலந்து கொள்கிறார்.



  • Jun 15, 2024 07:41 IST
    லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது

    திருவண்ணாமலை: ரூ.10,000 லஞ்சம் பெற்ற ஆரணி வட்டாட்சியர் மற்றும் இரவு காவலர் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்



  • Jun 15, 2024 07:27 IST
    11 மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுத்தை பிடிபட்டது

    திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தனியார் பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கில் பதுங்கியிருந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனவிலங்கு மற்றும் மருத்துவ குழுவினர்



  • Jun 15, 2024 07:26 IST
    அதிமுக ஒருங்கிணைப்புக் குழு கடிதம்

    "மறப்போம், மன்னிப்போம் என்ற மாபெரும் தத்துவத்தை மனதில் கொண்டு ஒன்றுபட வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய நால்வருக்கும் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு கடிதம்

    அதிமுக முன்னாள் நிர்வாகிகளான ஜே.சி.டி.பிரபாகர், கே.சி.பழனிசாமி, புகழேந்தி ஆகியோர் ஒருங்கிணைப்புக் குழுவை தொடங்கியுள்ளனர்



  • Jun 15, 2024 07:26 IST
    தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

    மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 2024-25ம் ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு தகுதியுள்ளவர்கள் ஜூலை 8ம் தேதிக்குள் http://boat-srp.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என MTC அறிவிப்பு



  • Jun 15, 2024 07:26 IST
    இரு பாலர் பயிலும் கல்லூரி ஆகும் சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி

    2024-25 கல்வியாண்டில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை மற்றும் மாணவியர் பயனடையும் வகையில் சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரியை இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றி உயர் கல்வித்துறை உத்தரவு

    'அரசு கலைக்கல்லூரி, நந்தனம்' எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியீடு



  • Jun 15, 2024 07:25 IST
    போப் ஆண்டவரை கட்டியணைத்து நலம் விசாரித்த பிரதமர் மோடி



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment