Advertisment

Tamil News Today: பொங்கல் பண்டிகை: அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி

Tamil News Today Tamil News Today Bhogi Pongal Rahul Yatra- அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
 For the first time in Srilanka Jallikattu competition Tamil News

Tamil News

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 603-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை

இந்திய ஒற்றுமை நீதிக்கான பயணத்தை இன்று தொடங்குகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. மணிப்பூரில் இருந்து மும்பை வரை 14 மாநிலங்கள் வழியாகப் பயணம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil 

 

  • Jan 14, 2024 22:09 IST
    ஜெய்ஸ்வால், துபே அரை சதம்; 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி,  15.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து, வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணி தரப்பில் ஷிவம் துபே,  SSV ஜெய்ஸ்வால் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.

    முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்திருந்தது.



  • Jan 14, 2024 21:45 IST
    142/2 இந்தியா அதிரடி

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 11.2 ஓவரில்  இரண்டு விக்கெட் இழப்புக்கு 142 ரண்கள் எடுத்துள்ளது.



  • Jan 14, 2024 21:42 IST
    சென்னை ஆவடியில் விரைவு ரெயில் நிறுத்தம்!

    சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற விரைவு ரயில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆவடியில் நிறுத்தப்பட்டது. இஞ்சின் பிரேக்கில் ஆயில் கசிவு காரணமாக பழுது ஏற்பட்டு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக கடந்த 1 மணி நேரமாக திருவள்ளூர் மார்க்கத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. சென்னை பேசின்பிரிட்ஜ் பகுதியிலிருந்து மாற்று இன்ஜின் வரவழைத்து விரைவு ரயிலை அனுப்ப திட்டமிடப் பட்டுள்ளது.



  • Jan 14, 2024 20:48 IST
    172 ரன்கள் விளாசிய ஆப்கானிஸ்தான்: குல்பதீன் நயீப் அரை சதம்!

    இந்தியாவுக்கு எதிராக 2வது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் குவித்துள்ளது. அநத அணியிள் குல்பதீன் நயீப் அதிரடியாக ஆடி 57 ரன்கள் குவித்தார்.
    173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்ய உள்ளது.



  • Jan 14, 2024 20:26 IST
    டி-20 கிரிக்கெட் போட்டி; பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து


    ஹாமில்டனில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில், நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது.
    பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்து தோலவியை தழுவியது.



  • Jan 14, 2024 20:22 IST
    ஆட்டோமொபைல் ஏற்றுமதி சரிவு

    2023ம் ஆண்டில் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் ஏற்றுமதி 21% குறைந்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.



  • Jan 14, 2024 19:57 IST
    சாலை பாதுகாப்பு கல்வி முக்கியம்; மு.க. ஸ்டாலின்

    ‘சாலை பாதுகாப்பு மாதம்’ நடைபெறும் நிலையில் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “உயிர் வாழ்வதற்கான மற்ற அடிப்படைத் திறன்களை போல சாலைப் பாதுகாப்புக் கல்வியும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து, சாலை விதிகளை முழுமையாகக் கடைபிடித்து விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடைய நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்படுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.



  • Jan 14, 2024 19:28 IST
    வேட்டி சட்டை அணிந்து பொங்கல் கொண்டாடிய ஆளுநர்

    சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவி வேட்டி சட்டை அணிந்து பொங்கல் கொண்டாடினார்.



  • Jan 14, 2024 18:58 IST
    உங்கள் வலி புரிகிறது; அமைதி திரும்பும்: மணிப்பூரில் ராகுல் காந்தி


    உங்கள் வலியை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது; விரைவில் அமைதி திரும்பும் என மணிப்பூரில் ராகுல் காந்தி பேசினார்.



  • Jan 14, 2024 18:56 IST
    டாஸ் வென்ற இந்தியா; பீல்டிங் தேர்வு


    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்ற நிலையில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.



  • Jan 14, 2024 18:25 IST
    ஒடிசா கடற்கரையில் திருவள்ளூவர் சிற்பம்

    ஒடிசாவின் பூரி கடற்கரையில் திருவள்ளுரின் மணற்சிற்பத்தை வடித்து மணற்சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயக் மரியாதை செலுத்தியுள்ளார். தமிழ்நாட்டில், நாளை மறுநாள் (ஜன.16) திருவள்ளுவர் நாளாக கொண்டாடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.



  • Jan 14, 2024 17:45 IST
    இந்திய ராணுவ வீரர்கள் அனைவரும் மார்ச் 15-ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் - மாலத்தீவு அரசு அறிவிப்பு

    மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் அனைவரும் மார்ச் 15-ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ரேடார்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்களை நிர்வகிக்க இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் உள்ளனர். 



  • Jan 14, 2024 17:39 IST
    மணிப்பூரில் திரும்பவும் நல்லிணக்கம், அமைதியை கொண்டு வருவோம் - ராகுல் காந்தி

    மணிப்பூரில் பாரத் நியாய யாத்திரையைத் தொடங்கிய  காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி: லட்சக் கணக்கான மக்கள் இங்கே இழப்புகளை சந்தித்திருக்கிறார்கள். ஆனால், பிரதமர் மோடி இங்கே வந்து உங்களது கண்ணீரைத் துடைக்கவில்லை. மணிப்பூர் மக்களின் வலியை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். உங்களது சோகமும் வலியும் எங்களுக்கு புரியும். மணிப்பூரில் திரும்பவும் நல்லிணக்கம் அமைதியை கொண்டு வருவோம்” என்று கூறினார்.



  • Jan 14, 2024 16:31 IST
    சென்னை வளசரவாக்கத்தில் மோசமான அளவில் காற்றின் தரக் குறியீடு

    கோகி கொண்டாட்டத்தின் விளைவாக, சென்னை வளசரவாக்கத்தில் அதிகபட்சமாக காற்றின் தரக் குறியீடு மோசமான அளவாக 270 பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக அண்ணா நகரில் 131 ஆகவும் (மிதமான அளவு) பதிவாகி உள்ளது.



  • Jan 14, 2024 15:47 IST
    மணிப்பூரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை தொடங்கியது

    காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் 2-ம் கட்ட நடைபயணமான பாரத் ஜோடோ நியாய யாத்திரை மணிப்பூர் தௌபாலில் இருந்து தொடங்கியது. இந்த யாத்திரை மும்பை வரை 15 மாநிலங்கள் வழியாக 6,713 கி.மீ தூரம் 67 நாட்கள் நடைபெறுகிறது.



  • Jan 14, 2024 15:12 IST
    தமிழக பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியது

    தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், கடலோர ஆந்திரா  பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியது; கடந்த அக்டோபர் 21-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இருந்து விலகியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Jan 14, 2024 14:51 IST
    தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும் - தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

    தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும் என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றிய அறிவை ஊட்டுவதற்காக மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, செயற்கை நுண்ணறிவு பற்றி ஆசிரியர்களுக்கும் மாணவரகளுக்கும் கற்பிப்பதற்கு நாட்டிலேயே முதல்முறையாக தமிழக அரசு டீல்ஸ் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது  என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இது தேசிய கல்விக் கொள்கையில் உள்ளதாகவும் வெகு விரைவில் தமிழக அரசு மும்மொழிக் கொள்கையையும் ஏற்றுக்கொள்ளும் என்று  தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதற்கு தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும் என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பெரியார் காட்டிய பாதையில் தமிழ்நாடு அரசு முற்போக்கு பாதையில் செல்லும் அரசாகவே செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.



  • Jan 14, 2024 14:07 IST
    வழக்கை ரத்து செய்யக் கோரி பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் மனு தாக்கல்

    பெரியார் பல்கலை. துணைவேந்தர் மனு தங்களுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தனியார் நிறுவனம் தொடங்கி, முறைகேட்டில் ஈடுபட்டதாக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், இணை பேராசிரியர் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் துணைவேந்தர் ஜெகநாதன் கைதாகி ஜாமினில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், பதிவாளர், பேராசிரியர் தலைமறைவாக உள்ளனர். மூவரும் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் 18ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது



  • Jan 14, 2024 13:24 IST
    “2 நாட்களில் அதிகப்படியான பேருந்துகள் இயக்கம்“ : அமைச்சர் சிவசங்கர் தகவல்

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் இதுவரை இல்லாத அளவில் அதிகப்படியான பேருந்துகள் இயக்கம். பேருந்து நிலையங்களில் கடந்த 2 நாட்கள் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு மக்கள் பாதுக்காபான பயணம் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. மொத்தமாக 1.44 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர் கடந்த ஆண்டை விட கூடுதலாக 23 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.



  • Jan 14, 2024 12:36 IST
    காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதல்வர் உத்தரவு

    பொங்கல் திருநாளையொட்டி 3,184 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும்



  • Jan 14, 2024 12:34 IST
    தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

    சென்னை விமான நிலையம் முதல் அண்ணா சாலை வழியாக விம்கோ நகர் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு. இதனால் தேனாம்பேட்டை டிஎம்எஸ் - சென்ட்ரல் வரை மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.  ஒற்றை பாதை ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • Jan 14, 2024 12:28 IST
    பொங்கல் விழாவில் பிரதமர் மோடி : தமிழில் வாழ்த்து

    டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி வேஷ்ட்டி சட்டை அணிந்து பங்கேற்பு. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு. இந்த நிகழ்ச்சியில்இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்என தமிழில் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி



  • Jan 14, 2024 11:28 IST
    கிளாம்பாக்கத்தில் ஆகாய நடைபாதை அமைக்க நிலஎடுப்பு பணிக்கு அறிவிப்பு

    ஆகாய நடைபாதை - நில எடுப்பு பணிக்கு அறிவிப்பு

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க நிலஎடுப்பு பணிக்கு அறிவிப்பு வெளியீடு. 5900 சமீ நிலத்தை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிட்டார் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர். கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்படவுள்ளது



  • Jan 14, 2024 11:03 IST
    ஓ.பி.எஸ் பிறந்தநாள்: டிடிவி தினகரன் வாழ்த்து

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் வாழ்த்து.



  • Jan 14, 2024 11:03 IST
    திருமாவளவன் பொங்கல் வாழ்த்து

    பொங்கல் திருநாளை முன்னிட்டு விசிக தலைவர் திருமாவளவன் பொதுமக்களுக்கு வாழ்த்து. 



  • Jan 14, 2024 10:27 IST
    91% பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் 

    தமிழகத்தில் நேற்று வரை 91% பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பச்சரிசி, சர்க்கரை உள்ளிடவை வழங்கப்படுகிறது- தமிழ்நாடு உணவுத்துறை



  • Jan 14, 2024 09:53 IST
    ஜல்லிக்கட்டு போட்டி: மதுக்கடைகளை மூட உத்தரவு

    ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி வருகிற 15, 16, 17 தேதிகளில் மதுக்கடைகளை மூடுமாறு மதுரை ஆட்சியர் உத்தரவு.

    நாளை 15ஆம் தேதியன்று அவனியாபுரம் பகுதிகளில் மதுக்கடைகளை மூட உத்தரவு. நாளை மறுநாள் 16ஆம் தேதியன்று பாலமேடு பகுதியில் மதுக்கடைகளை மூட உத்தரவு. வருகிற 17ஆம் தேதியன்று அலங்காநல்லூர் பகுதியில் மதுக்கடைகளை மூட உத்தரவு. மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதால் மதுரை ஆட்சியர் சங்கீதா நடவடிக்கை



  • Jan 14, 2024 09:47 IST
    இரும்பு மூடிகளை திருடிய ஆட்டோ ஓட்டுநர் கைது

    கன்னியாகுமரி: நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான இரும்பு மூடிகளை நள்ளிரவில் திருடிய ஆட்டோ ஓட்டுநரான சாத்தையன் கைது; மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். 



  • Jan 14, 2024 09:47 IST
    இரும்பு மூடிகளை திருடிய ஆட்டோ ஓட்டுநர் கைது

    கன்னியாகுமரி: நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான இரும்பு மூடிகளை நள்ளிரவில் திருடிய ஆட்டோ ஓட்டுநரான சாத்தையன் கைது; மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். 



  • Jan 14, 2024 09:44 IST
    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

    அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் அப்பகுதிக்கு உட்பட்ட 10 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு. 



  • Jan 14, 2024 09:37 IST
    இந்தியா - ஆப்கன் 2வது டி20 போட்டி

    இந்தூரில் இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் 2வது டி20 போட்டி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது



  • Jan 14, 2024 08:55 IST
    24-ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் 

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வரும் 24ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு



  • Jan 14, 2024 08:55 IST
    24-ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் 

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வரும் 24ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு



  • Jan 14, 2024 08:19 IST
    பொங்கல் பண்டிகை - 4.34 லட்சம் பேர் பயணம்

    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 4.34 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்

    மொத்தம் 7,474 அரசு பேருந்துகளில் 4.34 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாகவும், 2.30 லட்சம் பேர் முன்பதிவு செய்ததாகவும் போக்குவரத்துத்துறை தகவல்

    நேற்று ஒரே நாளில் மட்டும் 2,210 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல்



  • Jan 14, 2024 07:48 IST
    போகிப் பண்டிகை: சென்னையில் விமான சேவை பாதிப்பு

    போகிப் பண்டிகையின் புகைமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில், விமான சேவை பாதிப்பு. சிங்கப்பூர், லண்டன் விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியவில்லை. ஹைதராபாத்துக்கு விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.



  • Jan 14, 2024 07:48 IST
    போகி கொண்டாட்டம்: சென்னையில் காற்று மாசு

    போகி பண்டிகையொட்டி சென்னை முழுவதும் பழைய பொருட்களை எரித்து கொண்டாட்டத்தை வெளிப்படுத்திய பொதுமக்கள். சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வில் தகவல்



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment