Advertisment

Tamil News Updates: மிக்ஜாம் புயல் பாதித்த பகுதிகளில் மத்திய குழு இன்று 2வது நாளாக ஆய்வு

Tamil News Today Live, Tamil News Today, Chennai floods, India news- 12 December 2023: இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cyclone

IE Tamil News LIVE

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 570-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

Tamil news updates 

மத்திய குழு இன்று ஆய்வு  

மிக்ஜாம் புயல் பாதித்த பகுதிகளில் இரண்டாவது நாளாக மத்திய குழு இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். பாதிப்புகள் தொடர்பாக முதலமைச்சருடன் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

தென்னாப்பிரிக்கா அணி வெற்றி

இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி முன்னிலை பெற்றுள்ளது. முதல் போட்டி மழை காரணமாக ரத்தானது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

 

  • Dec 12, 2023 20:18 IST
    ஆளுநருக்கு எதிராக கூடுதல் மனுத்தாக்கல்

     

    மசோதாக்களை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.
    அதில், நவ.18-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர்,  குடியரசுத்தலைவருக்கு அனுப்பியது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Dec 12, 2023 19:25 IST
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நடவடிக்கை எடுக்கப்பட்டதா? நீதிமன்றம் கேள்வி


    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அடையாளப்படுத்திய  அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா அல்லது கைவிடப்பட்டதா? என சிபிஐ விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • Dec 12, 2023 19:01 IST
    வர்தா புயலின்போது 2 நாட்களில் சீரமைக்கப்பட்டது - எஸ்.பி. வேலுமணி

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி: “2016 வர்தா புயலின்போது சென்னையில் 6 லட்சம் மரங்கள் சாய்ந்த நிலையில், பாதித்த பகுதிகள் போர்க்கால அடிப்படையில் 2 நாட்களில் சீரமைக்கப்பட்டது. 25 ஆயிரம் மின் கம்பங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழந்தபோதும் இரண்டே நாட்களில் சீரமைக்கப்பட்டன; சமூக வலைதளங்களை முடக்கும் நோக்கில் திட்டமிட்டு மின்சாரத்தை தி.மு.க அரசு வழங்கவில்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.



  • Dec 12, 2023 18:58 IST
    பொன்முடி வழக்கு: தனி நீதிபதியின் தேவையற்ற கருத்துகளை நீக்க வேண்டும் - ஓய்வுபெற்ற நீதிபதி 

    அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் தனக்கு எதிராக தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்த தேவையற்ற கருத்துகளை நீக்க வேண்டும் - வேலூர் மாவட்ட நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு பதில் அளித்துள்ளார். மொத்தம் 40 நாட்கள் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. இது தொடர்பான உத்தரவுகளை பார்க்காமல் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று ஓய்வு பெற்ற நீதிபதி தெரிவித்துள்ளார். எனது தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விமர்சித்துள்ளார்.  ஒரே உத்தரவில், 28 ஆண்டுகள் கட்டிக்காத்த பணி நேர்மை பறிக்கப்பட்டது என்று ஓய்வு பெற்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.



  • Dec 12, 2023 18:52 IST
    பெயர் மாற்றம் செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா ராஜேஷ் 

    ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா ராஜேஷ், தனது பெயரை டாக்டர் பீலா வெங்கடேசன் என்று மாற்றம் செய்தார்.  இனி வரும் காலங்களில் தான் பீலா வெங்கடேசன் என்றே அறியப்படுவேன் எனவும் தெரிவித்துள்ளார். அவர் தன் பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் பெயருக்கு பதிலாக தந்தையின் பெயரை சேர்த்துள்ளார்.



  • Dec 12, 2023 18:51 IST
    பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தினால் பொருளாதார பின்னடைவு ஏற்படும் - ரிசர்வ் வங்கி

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தினால் பொருளாதார பின்னடைவு ஏற்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.



  • Dec 12, 2023 18:49 IST
    ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி: நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் 7 மணி நேர விசாரணை நிறைவு

    ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் நடைபெற்ற 7 மணி நேர விசாரணை நிறைவடைந்தது. 2 நாள் முன்பு துபாயிலிருந்து சென்னை வந்த ஆர்.கே.சுரேஷ், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜரானார்.



  • Dec 12, 2023 18:46 IST
    சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு  

    பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவனையை சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ளது. சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு  பிப்ரவரி 15-ம் தேதி தொடங்குகிறது. சி.பி.எஸ்.இ பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. 



  • Dec 12, 2023 18:40 IST
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? சி.பி.ஐ-க்கு ஐகோர்ட் கேள்வி

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து சி.பி.ஐ விளக்கம் தர உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற அருணா ஜெகதீசன் ஆணையம் அடையாளப்படுத்திய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இல்லை கைவிடப்பட்டதா என சி.பி.ஐ-க்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.



  • Dec 12, 2023 18:33 IST
    தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது - எல். முருகன் பேச்சு

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குள் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது என்று தெரிவித்துள்ளார். 

    எல். முருகன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “கோயிலுக்கு வரும் பக்தர்களை அநாகரீகமாக நடத்துவதையும், இந்து கோயில் பாரம்பரியத்தை சீர்குலைப்பதிலும்  தொடர்ந்து முழு முச்சுடன் செயல்பட்டு வரும் அறநிலையத்துறைக்கும், தமிழக அரசுக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் பக்தர்கள் மீது சரமாரி தாக்குதல்..! கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம் பறிக்கும் அறநிலையத்துறை..! தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையே தேவையில்லை. இந்துக்களை பிடிக்காத தி.மு.க அரசிடம் வேறு எதை எதிபார்க்க முடியும்..! தமிழகத்தில் பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது.” என்று தெரிவித்துள்ளார்.



  • Dec 12, 2023 18:08 IST
    எண்ணூரில் கசிந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியைத் தொடங்கியது தமிழக அரசு

     

    சென்னை எண்ணூர் பகுதியில் கசிந்துள்ள எண்ணெய் கழிவுகளை இயண்திரங்கள், ஆட்களைக் கொண்டு அகற்றும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. மிதக்கும் எண்ணெய்களை உறிஞ்சுவதற்காக நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.



  • Dec 12, 2023 17:13 IST
    சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டபோது ஜம்மு காஷ்மீர் மக்களின் கருத்தை கேட்டிருக்க வேண்டும் - ஆ. ராசா பேச்சு 

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவின் மீது மக்களவையில் பேசிய ஆ. ராசா: “சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டபோது ஜம்மு காஷ்மீர் மக்களின் கருத்தை கேட்டிருக்க வேண்டும்; சமூகத்தின் விருப்பங்களை முறையாக அணுக வேண்டும்; ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது” என்று கூறினார்.



  • Dec 12, 2023 16:40 IST
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சென்னை வெள்ள நிவாரணம்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ₹10 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கினார் அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்



  • Dec 12, 2023 16:37 IST
    ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில்  ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



  • Dec 12, 2023 16:02 IST
    சட்டவிரோதமான கட்டிடம் : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

    சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த மதன்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,  அனுமதியற்ற கட்டுமானங்களால் மக்கள் நிம்மதியற்ற வாழ்க்கையை வாழ நேரிடுகிறது. இதனை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இதுபோன்ற கட்டுமானங்களை மேற்கொள்வோர் மீது கிரிமினல் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமீறலுக்குத் துணைபோகும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.



  • Dec 12, 2023 15:58 IST
    ரஜினிகாந்த் பவுண்டேஷன் மற்றும் ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் நிவாரணம்

    மிக்ஜாம் புயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரஜினிகாந்த் பவுண்டேஷன் மற்றும் ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டது.



  • Dec 12, 2023 15:55 IST
    வெள்ளத்தில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் : பசுமைத் தீர்ப்பாயம் புதிய உத்தரவு

    எண்ணூரில் வெள்ளத்தில் கச்சா எண்ணெய் கலந்து வந்த விவகாரத்தில் கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெய்யை அகற்றும் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டு வழக்கை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தது பசுமைத் தீர்ப்பாயம்!



  • Dec 12, 2023 15:29 IST
    நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோயில்' பாலபிஷேகம்

    நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்காக கட்டப்பட்டுள்ள கோயிலில் உள்ள சிலைக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்! மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் என்பவர் 'அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோயில்' என்ற பெயரில் கோயில் ஒன்றை கட்டியுள்ளார்



  • Dec 12, 2023 15:08 IST
    ரூ. 2 கோடிக்கான காசோலையை, மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் எ.வ.வேலு

    மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் நிதியிலிருந்து ரூ. 2 கோடிக்கான காசோலையை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு!



  • Dec 12, 2023 14:24 IST
    வெள்ள மீட்பு பணியை சிறப்பாக மேற்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டு: மத்தியக் குழு

    வெள்ள மீட்பு பணியை சிறப்பாக மேற்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டு- மத்திய குழுவின் தலைமை மழை அதிகமாக பெய்ததால், தண்ணீர் அதிக அளவில் தேங்கி உள்ளது- மத்திய குழுவின் தலைமை



  • Dec 12, 2023 14:10 IST
    கொடநாடு வழக்கு: நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    கொடநாடு வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு . அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியங்களை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமனம் சாட்சியப்பதிவு செய்ய வழக்கறிஞர் எஸ்.கார்த்திகை பாலனை நியமனம் செய்து உத்தரவு . சாட்சியப்பதிவை ஒரு மாதத்தில் முடிக்க வழக்கறிஞர் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் ஆணை



  • Dec 12, 2023 14:08 IST
    ஆருத்ரா பண மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் இரண்டு மணி நேரமாக விசாரணை

    ஆருத்ரா பண மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் இரண்டு மணி நேரமாக விசாரணை.  சென்னை அசோக்நகர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடைபெறும் விசாரணை வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  ரூசோ, ஹாரிஸ் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் கைப்பற்றப்பட்ட வங்கி பரிவர்த்தனை விவரங்கள் குறித்தும் ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை என தகவல்



  • Dec 12, 2023 14:07 IST
    எண்ணெய் கசிவை தடுப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்

    எண்ணூர் பகுதியில் எண்ணெய் கசிந்த விவகாரத்தில் ஒரு மணி நேரத்தை கடந்தும் விசாரணை தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்.  எண்ணெய் கசிவை தடுப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - மீனவர்கள் தரப்பு



  • Dec 12, 2023 13:39 IST
    மழை வெள்ளத்தால் பட்டாளம் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மத்திய குழு ஆய்வு

    மழை வெள்ளத்தால் பட்டாளம் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மத்திய குழு ஆய்வு டெமெல்லோஸ் சாலை, ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட இடங்களை பார்வையிடும் மத்திய குழு மத்திய குழு உடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தமிழக அதிகாரிகளும் வருகை வெள்ள பாதிப்பு, சேத விவரங்களை மத்திய குழுவிடம் விவரிக்கும் அரசு அதிகாரிகள் புகைப்படங்கள் மூலம் வெள்ள பாதிப்பின் தீவிரத்தை எடுத்துரைக்கும் அரசு அதிகாரிகள்



  • Dec 12, 2023 13:20 IST
    நசரத்பேட்டையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி தீவிரம்

    சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி தீவிரம்.  நிலக்கரி சுரங்கத்தில் பயன்படுத்தக்கூடிய மிதவையுடன் கூடிய ராட்சத மின் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றம். 600 குதிரை திறன் கொண்ட மிதவை மின் மோட்டார் மூலம் உறிஞ்சி எடுக்கப்படும் தண்ணீர். 



  • Dec 12, 2023 13:18 IST
    மருத்துவரின் இறப்பிற்கான முழுமையான காரணம் முறையான உறுப்பு பரிசோதனைகள் முடிந்த பின்னரே தெரியவரும்

    சென்னையில் மருத்துவர் உயிரிழந்த விவகாரத்தில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தரப்பு விளக்கம் மருத்துவர் மருது பாண்டியனுக்கு 36 மணிநேர தொடர் பணி வழங்கப்படவில்லை. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் போது மருத்துவர் மருதுபாண்டியன் தாமாகவே சுய விருப்பத்தின் அடிப்படையில் அறுவை அரங்கிற்கு வந்தார். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர் மருதுபாண்டியனுக்கு எந்த ஒரு பணியும் வழங்கப்படவில்லை. மருத்துவர் மருது பாண்டியன் 36 மணி நேரம் பணிபுரிந்ததாக வெளியாகும் தகவல் தவறானது. மருத்துவரின் இறப்பிற்கான முழுமையான காரணம் முறையான உறுப்பு பரிசோதனைகள் முடிந்த பின்னரே தெரியவரும். 



  • Dec 12, 2023 13:16 IST
    3, 429 தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ. 4000 ஊக்கத்தொகை வழங்கிய ஸ்டாலின்

    மிக்ஜாம் புயல்: 3, 429 தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ. 4000 ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



  • Dec 12, 2023 12:57 IST
    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவு

    சென்னை எண்ணூர் பகுதிகளில் எண்ணெய் கசிவுகள் தேங்கியதற்கு CPCL நிறுவன வளாகத்தில் மழைநீர் வடிகால் மேலாண்மை இல்லாததே காரணம்.

    விரிவான செயல் திட்ட அறிக்கையை தயார் செய்து அனுப்ப சிபிசிஎல் நிறுவனத்திற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவு



  • Dec 12, 2023 12:57 IST
    வெள்ள பாதிப்பு

    'மிக்ஜாம்' புயல், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்னை வந்துள்ள மத்திய குழு நாளை மறுநாள் டிச.14ம் தேதி மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளன



  • Dec 12, 2023 12:56 IST
    உத்தவ் தாக்கரே வரவேற்பு

    காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை நீக்கியது செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே வரவேற்பு



  • Dec 12, 2023 12:56 IST
    கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வரும் 27ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.



  • Dec 12, 2023 12:56 IST
    கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வரும் 27ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.



  • Dec 12, 2023 12:54 IST
    நீதிமன்றம் அனுமதி

    அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விவாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதி!

    திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற புகாரில் அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார்.



  • Dec 12, 2023 12:07 IST
    ரஜினிக்கு இ.பி.எஸ். பிறந்தநாள் வாழ்த்து



  • Dec 12, 2023 12:06 IST
    ப.சிதம்பரம் கருத்து

    "சட்டப்பிரிவு 370 நீக்கம்; உச்சநீதிமன்ற தீர்ப்பில் எங்களுக்கு உடன்பாடு இல்லை" - ப.சிதம்பரம் கருத்து



  • Dec 12, 2023 11:29 IST
    ‘மிக்ஜாம்’ புயல்- நகல் சான்றிதழ் பெற 46 இடங்களில் இன்று சிறப்பு முகாம்

    மிக்ஜாம்புயல் மழை வெள்ளத்தினால் ஆவணங்கள், சான்றிதழ்களை இழந்தோர் நகல் சான்றிதழ் பெற சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 46 இடங்களில் இன்று (டிச.12) சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.



  • Dec 12, 2023 11:28 IST
    தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை

    மிக்ஜாம் பேரிடரில் சிறப்பாக செயல்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 3,429 பேருக்கு தலா ரூ. 4000 ஊக்கத் தொகை வழங்கினார் மு.க.ஸ்டாலின் 

     



  • Dec 12, 2023 11:27 IST
    ஆஜரானார் நடிகர் ஆர்.கே.சுரேஷ்

    ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜரானார் நடிகர் ஆர்.கே.சுரேஷ்



  • Dec 12, 2023 11:27 IST
    பி.டி.ஓ. அதிகாரி இடமாற்றம்- மாவட்ட ஆட்சியர் உத்தரவு

    மிக்ஜாம் புயலால் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை, சென்னீர்குப்பம், பாரிவாக்கம் ஆகிய‌ ஊராட்சிகளில் மழைநீரை அகற்ற முறையான நடவடிக்கை மேற்கொள்ளாத பி.டி.ஓ. அதிகாரி ஸ்டாலினை திருத்தணிக்கு மாற்றம் செய்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு



  • Dec 12, 2023 11:26 IST
    கோவை நகைக்கடை கொள்ளை

    கோவை நகைக்கடையில் கொள்ளையடித்த விஜய் சென்னை கோயம்பேடு அருகே செல்போன் சிம் வாங்க முயன்ற போது கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 5.15 கிலோ நகைகள் பறிமுதல்.

    கோவை காந்திபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான விஜய் கைது குறித்து கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஸ் செய்தியாளர்கள் சந்திப்பு



  • Dec 12, 2023 11:01 IST
    ராமஜெயம் கொலை வழக்கு: ஆஜராகவிருந்த நபர் கொலை

    திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகவிருந்த ரவுடி பிரபு 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை. 



  • Dec 12, 2023 11:00 IST
    ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை: முக்கிய குற்றவாளி கைது

    கோவை நகைக்கடையில் கொள்ளையடித்த விஜய் சென்னை கோயம்பேடு அருகே செல்போன் சிம் வாங்க முயன்ற போது கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 5.15 கிலோ நகைகள் பறிமுதல். 

     கோவை காந்திபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான விஜய் கைது குறித்து கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஸ் செய்தியாளர்கள் சந்திப்பு



  • Dec 12, 2023 10:59 IST
    சுகாதாரத் துறை மீது தவறு எதுவும் இல்லை: மா.சுப்பிரமணியன்

    "கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை அட்டை பெட்டியில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைத்த விவகாரத்தில் சுகாதாரத் துறை மீது தவறு எதுவும் இல்லை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

    "இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை பணியாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்"

    "தொடர்ந்து மூன்று பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவினர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்"

    "பச்சிளம் குழந்தையின் தந்தை தாமே இயற்கை முறையில் மனைவிக்கு பிரசவம் செய்ய முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியிட்டுள்ளார்"

    "இயற்கை முறை சிகிச்சை காரணமாகவே பச்சிளம் குழந்தை இறந்து பிறந்துள்ளது"



  • Dec 12, 2023 10:59 IST
    சுகாதாரத் துறை மீது தவறு எதுவும் இல்லை: மா.சுப்பிரமணியன்

    "கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை அட்டை பெட்டியில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைத்த விவகாரத்தில் சுகாதாரத் துறை மீது தவறு எதுவும் இல்லை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

    "இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை பணியாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்"

    "தொடர்ந்து மூன்று பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவினர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்"

    "பச்சிளம் குழந்தையின் தந்தை தாமே இயற்கை முறையில் மனைவிக்கு பிரசவம் செய்ய முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியிட்டுள்ளார்"

    "இயற்கை முறை சிகிச்சை காரணமாகவே பச்சிளம் குழந்தை இறந்து பிறந்துள்ளது"



  • Dec 12, 2023 10:08 IST
    எண்ணெய் கழிவு தேங்கியதற்கு சி.பி.சி.எல் நிறுவனமே காரணம்

    சென்னை எண்ணூரில் எண்ணெய் கழிவு தேங்கியதற்கு சி.பி.சி.எல் நிறுவனமே காரணம்- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை

    சி.பி.சி.எல் வளாகத்தில் போதுமான மழை நீர் வடிகால் மேலாண்மை இல்லாததை கண்டறிந்த வல்லுநர் குழு

    சி.பி.சி.எல்  நிறுவனத்திற்கு சில வழிகாட்டுதல்களை வழங்கிய மாசு கட்டுப்பாட்டு வாரியம்

    எண்ணெய் கழிவு தாக்கம் ஏற்பட்ட பகுதிக்கான விரிவான செயல் திட்ட அறிக்கையை தயார் செய்து அனுப்ப சி.பி.சி.எல் நிறுவனத்திற்கு உத்தரவு



  • Dec 12, 2023 10:08 IST
    எண்ணெய் கழிவு தேங்கியதற்கு சி.பி.சி.எல் நிறுவனமே காரணம்

    சென்னை எண்ணூரில் எண்ணெய் கழிவு தேங்கியதற்கு சி.பி.சி.எல் நிறுவனமே காரணம்- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை

    சி.பி.சி.எல் வளாகத்தில் போதுமான மழை நீர் வடிகால் மேலாண்மை இல்லாததை கண்டறிந்த வல்லுநர் குழு

    சி.பி.சி.எல்  நிறுவனத்திற்கு சில வழிகாட்டுதல்களை வழங்கிய மாசு கட்டுப்பாட்டு வாரியம்

    எண்ணெய் கழிவு தாக்கம் ஏற்பட்ட பகுதிக்கான விரிவான செயல் திட்ட அறிக்கையை தயார் செய்து அனுப்ப சி.பி.சி.எல் நிறுவனத்திற்கு உத்தரவு



  • Dec 12, 2023 09:49 IST
    கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் - பரபரப்பு

    நேற்று நள்ளிரவில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட நபர், மிரட்டல் விடுத்ததாக புகார்

    உடனடியாக ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

    சோதனையில் அபாயம் விளைவிக்கும் விதமாக எந்த விதமான பொருளும் கைப்பற்றப்படவில்லை



  • Dec 12, 2023 09:46 IST
    தண்டவாள விரிசல் சரிசெய்யப்பட்டது

    சென்னை மீனம்பாக்கம்- திரிசூலம் இடையே தண்டவாளத்தில் ஏற்பட்ட  விரிசல் சரிசெய்யப்பட்டது. தண்டவாளத்தில் ஏற்பட்ட  விரிசலை ரயில்வே ஊழியர்கள் சுமார் 1 மணி நேரத்தில் சரி செய்தனர். ரயில்கள் தாமதமாக இயக்கம் 



  • Dec 12, 2023 09:06 IST
    விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவ முகாம் 

    சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்த உள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு.  சென்னையின் 25 இடங்களில் நடைபெறும் இந்த சிறப்பு முகாம்கள் வரும் 14-ம் தேதி காலை 8.05 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெறும். 



  • Dec 12, 2023 09:03 IST
    ராஜஸ்தானில் இன்று பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

    ராஜஸ்தானில் தேர்தல் முடிவு வெளியாகி ஒரு வாரம் கடந்த பின்னரும் அம்மாநில முதலமைச்சரை பாஜக அறிவிக்காமல் உள்ள நிலையில், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. 

    இக்கூட்டத்தில் ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சராக இருந்த  வசுந்தரா ராஜே மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.



chennai flood tamilnadu news
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment