Mk Stalin: பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 616-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு
சென்னையில் 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சியில் தற்போது 10.070 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 83.48%, புழல் - 83.03%, பூண்டி - 93.22%, சோழவரம் - 72.25%
கண்ணன்கோட்டை - 98.8%
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jan 27, 2024 22:43 IST12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியராக பிருந்தா தேவி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக தட்பகராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், வேலூர் மாவட்ட ஆட்சியராக சுப்புலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், வேளாண்துறை இயக்குநராக முருகேஷ், தோட்டக்கலைத்துறை இயக்குநராக குமாரவேல் பாண்டியன், உயர்கல்வித்துறை துணைச்செயலாளராக ரவிச்சந்திரன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநராக லட்சுமி, வருவாய் நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக நடராஜன், வேளாண்வணிகத்துறை முதன்மைச்செயலாளராக பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
Jan 27, 2024 21:59 ISTஅந்தியூர் வனப்பகுதிக்கு உட்பட்ட நீர்நிலைப் பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதிக்கு உட்பட்ட நீர்நிலைப் பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் பாம்புண்ணி கழுகு, தடித்த அழகு மீன்கொத்தி, வானம்பாடி, மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, தேன் பருந்து, குக்ருவாள், செந்நீல கொக்கு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பறவைகள் தென்பட்டன. அதிலும் குறிப்பாக இமயமலை பகுதியில் இருக்கும் சாம்பல் நிற வாலாட்டி, செம்பட்டை தகைவிளான், வெர்டிட்டர் பிளைட் கேட்ச்சர் பறவைகள் இங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
-
Jan 27, 2024 21:10 IST8 நாள் அரசுமுறை பயணமாக ஸ்பெயின் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலீடுகளை ஈர்ப்பதற்காக 8 நாள் அரசுமுறை பயணமாக ஸ்பெயின் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! சென்னை விமான நிலையத்தில் ஸ்பெயின் செல்வதற்கான காரணங்களை பட்டியலிட்டார்.
-
Jan 27, 2024 20:14 ISTமாற்றுத்திறன் தடகள வீரரக்கு செயற்கைக் கால்கள் வசதி : நிதி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
மாற்றுத்திறன் தடகள வீரர் ராஜேஷ்க்கு செயற்கைக் கால்கள் வசதியை ஏற்படுத்த தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து ₹12 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
-
Jan 27, 2024 19:25 ISTஏழுமலையான் கோவிலில் அருள்நிதி சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் அருள்நிதி குடும்பத்தினருடன் சாமி தரிசனம். தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசிர்வாதங்கள் முழங்க தீர்த்த மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது
-
Jan 27, 2024 19:24 ISTபுதுவையில் நாளை டிரோன்கள் பறக்க தடை
நாளை துணை குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி, புதுச்சேரியில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் செல்லும் சாலை, தங்கும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்து புதுச்சேரி காவல்துறை நடவடிக்கை
-
Jan 27, 2024 19:21 ISTமகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை : ஆளுனர் விளக்கம்
1942க்கு பிறகு மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் பலனளிக்கவில்லை என ஆளுநர் பேசியது சர்ச்சையான நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், “மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை. காந்தியை நான் பெரிதும் மதிக்கிறேன். அவரது போதனைகள் என் வாழ்க்கைக்கு ஒளியாக இருந்து வருகிறது என கூறியுள்ளார்.
-
Jan 27, 2024 18:28 ISTஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: போபண்ணா - எப்டன் ஜோடி சாம்பியன்
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இந்திய, ஆஸ்திரேலிய ஜோடி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. இத்தாலியின் பொலேலி - வவசோரி ஜோடியை 7-6, 7-5 செட் கணக்கில் போபண்ணா - எப்டன் ஜோடி வென்றது
-
Jan 27, 2024 17:26 ISTபாடகி பவதாரிணி உடல் நல்லடக்கம்
இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
-
Jan 27, 2024 17:10 ISTஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 2வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றார் சபலென்கா
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்
-
Jan 27, 2024 16:43 ISTபாடகி பவதாரிணி உடலுக்கு இயக்குனர் அமீர் அஞ்சலி
பாடகி பவதாரிணி உடலுக்கு இயக்குனர் அமீர் அஞ்சலி செலுத்தினார். தேனி, லோயர் கேம்ப் பகுதியில் நேரில் சென்று அமீர் அஞ்சலி செலுத்தினார்.
-
Jan 27, 2024 16:24 ISTபாடகி பவதாரிணி உடலுக்கு இறுதிச்சடங்கு
தேனி, லோயர் கேம்ப் பகுதியில் பவதாரிணி உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்று வருகிறது. பவதாரிணியின் உடலுக்கு உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தாய், பாட்டியின் நினைவிடம் அருகே பவதாரிணியின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
-
Jan 27, 2024 15:59 ISTநாடாளுமன்ற தேர்தல்; முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நாம் தமிழர் கட்சி
நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. நெல்லை தொகுதி வேட்பாளராக, மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா.சத்யா, தென்காசி தொகுதி வேட்பாளராக மயிலை ராஜன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்
-
Jan 27, 2024 15:29 ISTகேரள ஆளுநருக்கு `இசட் பிளஸ்' பாதுகாப்பு
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு `இசட் பிளஸ்' பாதுகாப்பு உள்துறை அமைச்சகம் வழங்கியது. கேரள அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் நாளுக்குநாள் வலுத்துவரும் நிலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
Jan 27, 2024 15:28 ISTசிவகங்கையில் 500 ஏக்கர் கரும்புகள் தீயில் எரிந்து நாசம்
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி வடக்கு பகுதியில் மின் கசிவு காரணமாகக் கரும்பு தோட்டத்தில் தீ பற்றியுள்ளது. 3 மணி நேரமாக கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைக்க முடியாமல் விவசாயிகள் தவித்துள்ளனர். இதனால் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த கரும்புகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
-
Jan 27, 2024 15:10 ISTஉ.பி-யில் காங்., சமாஜ்வாதி கூட்டணி உறுதி - அகிலேஷ் அறிவிப்பு
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி உறுதியானது. இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளில் போட்டியிடும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் அறிவித்துள்ளார்.
இது குறித்து அகிலேஷ் யாதவ் பேசுகையில்,"உத்தரப் பிரதேசத்தில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படும் 11 தொகுதிகளில் காங்கிரசுடன் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது; 11 தொகுதிகளில் உடன்பாடு எட்டியதை போலவே எஞ்சிய தொகுதிகளிலும் சுமூக உடன்பாடு எட்டப்படும் என நம்பிக்கை உள்ளது; பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர் நலனை கருத்தில் கொண்டு உத்தரப்பிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் வகுக்கப்படும்." என்று அவர் கூறியுள்ளார்.
-
Jan 27, 2024 15:01 IST11 மாவட்ட எஸ்பி-க்கள் இடமாற்றம்
தமிழகத்தில் 11 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் எஸ்.பி சாமிநாதன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம். திருவள்ளூர் எஸ்.பி. பாகெர்லா கல்யாண், சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக நியமனம். திருவள்ளூர் எஸ்.பியாக சீனிவாசபெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
Jan 27, 2024 15:00 ISTவடக்குப்பட்டி ராமசாமி சர்ச்சை: சந்தானம் விளக்கம்
"படத்தில் சர்ச்சையான விஷயங்கள் எதுவும் இல்லை, முழுக்க முழுக்க ரசிகர்களை சிரிக்க வைக்க மட்டுமே. நிஜத்தில் ராமசாமினு ஒரு கதாப்பாத்திரம் இருக்கு.. அதை மையப்படுத்தி எடுத்த படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி" என்று நடிகர் சந்தானம் விளக்கம் அளித்துள்ளார்.
-
Jan 27, 2024 13:18 ISTதேநீர் கடையில் அமர்ந்து ஆளுநர் ஆரிப் தர்ணா
கேரள மாநிலம் கொல்லத்தில் ஆளுநர் ஆரிப் கானுக்கு இந்திய மாணவர் சங்கத்தினர் கருப்புக்கொடி காட்டி முற்றுகையிட்டனர். திடீரென காரில் இருந்து இறங்கிய ஆளுநர், போராட்டக்காரர்களை நோக்கிச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேநீர் கடைக்கு சென்று அமர்ந்த ஆளுநர் ஆரிப் கான், போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் வரை இங்கிருந்து நான் செல்லப்போவதில்லை என தர்ணாவில் ஈடுபட்டார்.
-
Jan 27, 2024 12:54 ISTகேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தர்ணா போராட்டம்
கொல்லத்தில் சாலையோரம் அமர்ந்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தர்ணா போராட்டம் ஈடுபட்டுள்ளார்.
ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் கருப்புக்கொடி ஏந்தி முழக்கமிட்ட நிலையில், காவல்துறையினர் தடுக்கவில்லை என குற்றம்சாட்டி கேரள ஆளுநர் சாலையோரம் அமர்ந்து தர்ணா ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Jan 27, 2024 12:53 ISTபிரதமரின் பயணம் - ஆர்.டி.ஐ மூலம் கேள்வி
பிரதமர் மோடியின் திருச்சி, ராமேஸ்வரம் பயணம் தனிப்பட்ட முறையிலானதா? அலுவல் ரீதியானதா? என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Jan 27, 2024 12:17 ISTசட்டம் - ஒழுங்கு சீர்கேடு: இ.பி.எஸ் குற்றச்சாட்டு
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு தொடர்கதையாகி வருகிறது. காவல்துறை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
-
Jan 27, 2024 12:01 ISTபவதாரிணி உடல் இன்று நல்லடக்கம்
இசையமைப்பாளர் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பகுதிக்கு வந்தது பாடகி பவதாரிணியின் உடல்.
பண்ணை வீட்டில் உள்ள இளையராஜாவின் தாயார் மற்றும் மனைவியின் நினைவிடங்களுக்கு அருகிலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
-
Jan 27, 2024 12:01 ISTதமிழ்நாட்டில் 4,200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன
தமிழ்நாட்டில் தற்போது 4,200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன -சிவசங்கர், போக்குவரத்துத்துறை அமைச்சர்
தமிழ்நாட்டில் தற்போது 4,200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன. கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரத்திற்கு 2 நிமிட இடைவெளியிலும், கிண்டிக்கு 3 நிமிட இடைவெளியிலும், கோயம்பேட்டிற்கு 5 நிமிட இடைவெளிகளிலும் மாநகர பேருந்துகள் இயக்கம் திருவாரூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி.
-
Jan 27, 2024 11:17 ISTபவதாரிணியின் உடல் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது
மறைந்த பாடகி பவதாரிணியின் உடல், சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது. தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள பண்ணை வீட்டில் அடக்கம் செய்ய ஏற்பாடு
-
Jan 27, 2024 11:01 ISTமகள் பவதாரணி இறுதி சடங்கில் பங்கேற்க இளையராஜா புறப்பட்டார்
மகளின் இறுதி சடங்கில் பங்கேற்க தனி விமானத்தில் மதுரை புறப்பட்டார் இளையராஜா. மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் தேனி செல்கிறார் இளையராஜா
-
Jan 27, 2024 10:57 ISTதிமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை
நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்
அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அடங்கிய திமுக குழு ஆலோசனை
-
Jan 27, 2024 10:57 ISTவழக்கமான நடைமுறையே - காவல்துறை விளக்கம்
சென்னை காவல் ஆணையர் அலுவலகம் மூடப்படவில்லை வழக்கமான பாதுகாப்பு நடைமுறையே. அமலாக்கத்துறை சோதனை என பரவிய தகவலையடுத்து காவல்துறை தரப்பில் விளக்கம்
-
Jan 27, 2024 10:57 ISTசாந்தன் மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பின்னர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன், மஞ்சள் காமாலை சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி.
-
Jan 27, 2024 10:16 ISTதமிழ்நாட்டில் எழும் சர்ச்சைகளுக்கு ஆளுநர் ரவியே காரணம்
தமிழ்நாட்டில் எழும் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளுநர் ரவியே காரணமாக இருந்து கொண்டிருக்கிறார்.
1857-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் 3 பல்கலைக்கழங்களில் ஒன்று சென்னை பல்கலைக்கழகம். அதற்கு 5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் இருப்பதற்கு காரணமும் அளுநர் ரவிதான் -ப.சிதம்பரம், ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர்
-
Jan 27, 2024 10:15 ISTநிதிஷ் இந்தியா கூட்டணியில் தொடர வேண்டும் என விரும்புகிறேன்
இந்தியா கூட்டணியுடன் வலுவாக நின்றிருந்தால், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பிரதமர் ஆகியிருக்கலாம். அவர் இந்தியா கூட்டணியில் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். ஏனென்றால் அக்கூட்டணியை முயற்சி எடுத்து உருவாக்கியது அவரே- சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்
-
Jan 27, 2024 09:49 ISTஇந்து மதத்தில் சனாதனம் என்று சொன்னாலே போராட்டம்
இந்து மதத்தில் சனாதனம் என்று சொன்னாலே போராட்டம் நடத்துகிறார்கள்- லால் சலாம் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
-
Jan 27, 2024 09:14 ISTகுமரி, கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கம்
கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கம். குமரி சிறப்பு ரயில் இரவு 8.30 மணிக்கும், கோவை சிறப்பு ரயில் இரவு 11.30 மணிக்கும் புறப்படுகிறது.
-
Jan 27, 2024 08:38 ISTசென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இ.டி சோதனை?
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்த வர உள்ளதாக பரவிய தகவல்
காவல் ஆணையர் அலுவலகத்தின் 4 வாயில்களும் மூடப்பட்டதால் பரபரப்பு- உயர் அதிகாரிகளின் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி
-
Jan 27, 2024 08:31 ISTஸ்டாலின் இன்று வெளிநாடு பயணம்
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்றிரவு ஸ்பெயின் நாட்டிற்கு புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஜனவரி 7, 8-ல் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ₹6.64 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதன் தொடர்ச்சியாக மேலும் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் செல்கிறார் முதலமைச்சர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.