பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 617-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மக்களுக்கு பா.ஜ.க என்ன செய்தது?- அ.தி.மு.க நத்தம் விஸ்வநாதன்
மக்களுக்கு பா.ஜ.க அரசு என்ன செய்தது. ராமர் கோயில் கட்டி உள்ளது. அதனால் வாக்குகள் பெறுவோம் என நம்புகிறார்கள். ஆனால் அது வாக்குகளாக மாறக்கூடாது. ராமர் கோயில் கட்டியதற்காக பாஜகவுக்கு ஓட்டுப் போட வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு மதத்தை முன் நிறுத்தி அரசியல் செய்யக் கூடாது- அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விமர்சனம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jan 28, 2024 21:28 ISTகாந்தி குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி கூறியது வன்மம் கலந்த நோக்கத்துடன் தான் - ஸ்டாலின் விமர்சனம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: “மதநல்லிணக்கத்தின் அடையாளமான அண்ணல் காந்தியடிகள் அவர்கள் மதவெறியர்களால் கொல்லப்பட்ட ஜனவரி 30-ஆம் நாளை, நாடு முழுவதும் மதநல்லிணக்க நாளாகக் கடைப்பிடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். ஒற்றை மதவாத தேசியவாதத்தை அவர் ஏற்கவில்லை. அதனாலேயே மதவெறிக்கு அவர் பலியானார். 75 ஆண்டுகள் ஆனபிறகும் அண்ணல் காந்தியார் மீதான கோபம், வகுப்புவாதிகளுக்கு குறையவில்லை. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் காந்தியாரை வலதுசாரி சக்திகள் இழிவுபடுத்துவது தொடர்கதை. காந்தியால் இந்த நாட்டுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை' என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லி இருப்பதும் இதே வன்மம் கலந்த நோக்கத்துடன்தான்” என்று தெரிவித்துள்ளார்.
-
Jan 28, 2024 20:55 ISTபீகார் முதல்வராக 9-வது முறையாக பதவியேற்ற நிதீஷ் குமார்; பா.ஜ.க-வில் இருந்து 2 துணை முதல்வர்கள்
பீகார் முதல்வராக நிதிஷ்குமார் ஒன்பதாவது முறையாக பதவியேற்றார். பத்தாண்டில், ஐந்தாவது முறையாக கூட்டணியை மாற்றிய ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி கூட்டணியில் இருந்து விலகி 18 மாதங்களுக்குள் ஞாயிற்றுக்கிழமை என்.டி.ஏ கூட்டணிக்கு திரும்பி, ஒன்பதாவது முறையாக பீகார் முதலமைச்சராக பதவியேற்றார். பாஜக தலைவர்களான சாம்ராட் சௌத்ரி மற்றும் முன்னாள் சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
-
Jan 28, 2024 20:39 ISTசொக்கம்பட்டி அருகே லாரி - கார் மோதி விபத்து: உயிரிழந்த 6 பேர் குடும்பத்தினருக்கு நிதி உதவி அறிவிப்பு
தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி அருகே புன்னைபுரத்தில் சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
Jan 28, 2024 20:37 ISTஇட ஒதுக்கீடு நீக்கம் தொடர்பான யு.ஜி.சி அறிவிப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு
உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு நீக்கம் தொடர்பான யு.ஜி.சி அறிவிப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை நீக்கி, அதனைப் பொதுப் பிரிவின் கீழ் நிரப்பலாம் என வழிகாட்டுதல்களை யு.ஜி.சி வெளியிட்டிருந்தது. கடும் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, யு.ஜி.சி-க்கு மறுப்பு தெரிவித்து, இடஒதுக்கீடு தொடர்பான 2019-ம் ஆண்டு சட்டத்தையே தொடர்ந்து பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
Jan 28, 2024 20:27 ISTஆம்னி பஸ் டிக்கெட்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை - அன்சுல் மிஸ்ரா
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பஸ் டிக்கெட்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். டிக்கெட்களை கூடுதலாக விற்கும் இடைத்தரகர்கள் மீது காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயல்ர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
-
Jan 28, 2024 20:00 ISTஇலங்கை கிரிக்கெட் அணி மீதான தடை நீக்கம்
இலங்கை கிரிக்கெட் விவகாரத்தில் அரசு தலையீட்டைக் கண்டித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஐ.சி.சி இலங்கை கிரிக்கெ அணியின் மீதான தடையை நீக்கியது.
-
Jan 28, 2024 19:57 ISTகிராமங்கள் மோசமான வறுமை நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன் - ஆளுநர் ஆர்.என். ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, “கிராமங்கள் மோசமான வறுமை நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். சகோதர, சகோதரிகள் சமூக, பொருளாதார நீதிக்காக இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும். நாகையில் மீனவர்கள் வசிக்கும் நம்பியார் நகர், பட்டியலினத்தவர் வசிக்கும் ஜீவா நகரைப் பார்வையிட்டேன். கீழ்வெண்மணிக்கு சென்று 1968 படுகொலையில் உயிர்பிழைத்த ஒரே நபரான பழனிவேலை சந்தித்தேன்.” என்று கூறியுள்ளார்.
-
Jan 28, 2024 19:16 ISTதி.மு.க - காங். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை; பிப். 9-க்குப் பிறகு நடைபெறும் - டி.ஆர். பாலு
தி.மு.க பொருளாளர் டி.ஆர். பாலு, “நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற உள்ளதால், தி.மு.க - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு குறித்து அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை பிப்ரவரி 9-ம் தேதிக்குப் பிறகு நடைபெறும்” என்று கூறினார்.
-
Jan 28, 2024 18:12 ISTதாக்கப்பட்ட செய்தியாளருக்கு அண்ணாமலை ஆறுதல்
சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செய்தியாளரிடம் அண்ணாமலை நலம் விசாரித்தார்.
இது குறித்து ட்விட்டரில், “சமூக விரோதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டு, கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும்
@news7tamil
ஊடகவியலாளர், சகோதரர் திரு. நேசபிரபு அவர்களை, இன்று மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து, ஆறுதல் கூறினோம்.சகோதரர் நேசபிரபு அவர்களின் குடும்பத்தாரிடமும் தைரியம் கூறி,
@BJP4Tamilnadu
அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளித்தோம்.நேர்மையான ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்குள்ளாகும் குற்றச் சம்பவங்கள், இனி நிகழாமல் பார்த்துக்கொள்வது தமிழக அரசின் கடமை” என வலியுறுத்தியுள்ளார்.
-
Jan 28, 2024 17:39 ISTஇந்தி பேச வேண்டும் எனக் கூறியவர் நிதீஷ் குமார்; டி ஆர் பாலு
" இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறியதால் எந்த பின்னடைவும் ஏற்படப் போவதில்லை; இந்தி பேச வேண்டும் என்ற ஒன்றை மட்டும் முன்னிறுத்தியவர் அவர்.
நிதீஷ் குமார் பல தடைகளை ஏற்படுத்தினார்; கூட்டணியில் இருந்ததால் அமைதியாக இருந்தோம்" என டி ஆர் பாலு கூறியுள்ளார். -
Jan 28, 2024 16:54 IST10 ஆண்டு காலம் ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கியவர் மோடி; டிடிவி தினகரன்
10 ஆண்டு காலம் ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கியவர் பிரதமர் மோடி என சேலத்தில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்
-
Jan 28, 2024 16:25 ISTதி.மு.க உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது; கே.எஸ்.அழகிரி
தி.மு.க.,வுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது என பேச்சு வார்த்தைக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்
-
Jan 28, 2024 16:19 ISTஉச்ச நீதிமன்ற வைரவிழா சிறப்பு அமர்வு
உச்ச நீதிமன்றத்தின் வைரவிழா கொண்டாட்ட சிறப்பு அமர்வு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் நடைபெறுகிறது. உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளும், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளும் பங்கேற்கின்றனர்
-
Jan 28, 2024 16:06 IST21 தொகுதிகள் கேட்கவில்லை - காங்கிரஸ்
தி.மு.க.,விடம் 21 தொகுதிகள் கேட்பதாக வெளியான செய்திக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. அதுபோல் எந்த பட்டியலும் தயாரிக்கப்படவும் இல்லை, கொடுக்கப்படவும் இல்லை என காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது
-
Jan 28, 2024 15:34 ISTகாமராஜருக்கு பிறகு வந்தவர்கள் எந்த ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை - அன்புமணி
காமராஜருக்கு பிறகு வந்தவர்கள் எந்த ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை; நம்ம ஆளணும், அவர்கள் ஆண்டது போதும் என நாடார் மஹாஜன சங்க 72 ஆவது மாநாட்டில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்
-
Jan 28, 2024 15:20 ISTதி.மு.க - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. டி.ஆர்.பாலு தலைமையிலான 5 பேர் கொண்ட குழு காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. காங்கிரஸ் போட்டியிட விரும்பும் 21 தொகுதிகளின் பட்டியலை தி.மு.க.,விடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது
-
Jan 28, 2024 14:59 ISTநிதீஷ் குமாருக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்; திரிணாமுல் காங்கிரஸ்
நிதீஷ் குமாரின் செயல் சரியல்ல; அவரது அரசியல் செயல்பாடுகளுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சவுதா ராய் தெரிவித்துள்ளார்.
-
Jan 28, 2024 14:08 ISTஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமன் ஆனது
-
Jan 28, 2024 13:40 ISTதென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 31 முதல் மழைக்கு வாய்ப்பு
தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வரும் 31ம் தேதி முதல் பிப்.2ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Jan 28, 2024 13:39 ISTஅண்ணாவின் 55வது நினைவுநாளையொட்டி, திமுக அமைதி பேரணி
அண்ணாவின் 55வது நினைவுநாளையொட்டி, திமுக அமைதி பேரணி பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் பிப்.3ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
-
Jan 28, 2024 13:18 ISTநாமக்கல் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்காமல் திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும்
நாமக்கல் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்காமல் திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும்" திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு உடனான ஆலோசனையில், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தல் கடந்த முறை கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சிக்கு ஒதுக்கிய நிலையில் இந்த முறை திமுக வேட்பாளரை நிறுத்த கோரிக்கை
-
Jan 28, 2024 13:18 ISTகாங்கிரஸ் 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை இன்று மாலை திமுகவிடம் ஒப்படைக்கிறது
நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தும் .காங்கிரஸ் 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை இன்று மாலை திமுகவிடம் ஒப்படைக்கிறது காங்கிரஸ் விருப்ப தொகுதிகள் பட்டியலில் இருந்து 14 தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் கோரிக்கை.
-
Jan 28, 2024 12:53 ISTபீகாரில் புதிய இரண்டு துணை முதல்வர்கள் நியமனம்: மாலையில் பதவியேற்பு
பீகாரில் புதிய இரண்டு துணை முதல்வர்கள் நியமனம். பாஜகவை சேர்ந்த விஜய் சின்ஹா மற்றும் சாம்ராட் சவுத்ரி இருவரும் துணை முதலமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
-
Jan 28, 2024 12:43 IST’இதுபோல ராமர்கள் வருவார்கள், போவார்கள்’: மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்
”இதுபோல ராமர்கள் வருவார்கள். போவார்கள் . இதுபோல பல மனிதர்கள் இந்த நாட்டில் உள்ளனர்.” காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
-
Jan 28, 2024 12:24 IST’அயோதியில் இருக்கும் ராமர்: பீகாரில் இருக்கும் பல்டி ராமர்’: சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்
அயோதியில் ராமர், பீகரில் பல்டி ராமர்’ என்று சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் உள்ள சிவசேனா எம். பி சஞ்சய் ராவத் கூறுகையில் “ அயோதியில் இருக்கும் ராமர். பீகாரில் இருக்கும் பல்டி ராமர். நிதிஷ் குமார், லல்லு பிரசாத் யாதவ் உடன் கூட்டணி வைத்தபோது பாஜக மற்றும் அமித்ஷா ஆகியோர் , இவரை பல்டி ராமர் என்று அழைத்தனர். நிதிஷ் குமாருக்கு பாஜகவின் கதவுகள் மூடப்பட்டுள்ளது என்று அமித்ஷா கூறுனார். ஆனால் இப்போது என்ன நடந்திருக்கிறது என்று பாருங்கள். பாஜகவை சேர்ந்தவர்கள்தான் பெரிய பல்டி ராமர்கள். நிதிஷ் குமார் சரியான மனநிலையில் இல்லை. அவருக்கு மறதி நோய் இருக்கிறது. தற்போது அவர் தனது நினைவை இழந்துவிட்டார். மீண்டும் நினைவு வரும்போது அவர் இந்தியா கூட்டணியில் இணைவார். என்று அவர் கூறினார்.
-
Jan 28, 2024 11:57 ISTஇந்தியா கூட்டணியுடன் 1.5 வருடங்களாக கூட்டணி அமைக்க முயற்சி செய்தோம் , பயனில்லை: நிதிஷ் குமார்
” இந்தியா கூட்டணி உடன் கடந்த 1.5 வருடங்களாக கூட்டணி அமைக்க முயற்சி செய்தோம் ஆனால் எதுவும் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் புதிய கூட்டணி அமைக்க உள்ளோம்” - நிதிஷ் குமார்
#WATCH | Patna | Bihar outgoing CM and JD(U) president Nitish Kumar says, "Today, I have resigned as the Chief Minister and I have also told the Governor to dissolve the government in the state. This situation came because not everything was alright...I was getting views from… pic.twitter.com/wOVGFJSKKH
— ANI (@ANI) January 28, 2024 -
Jan 28, 2024 11:24 ISTநிதிஷ் குமார் மீண்டும் இன்று மாலை பாஜக ஆதரவுடன் முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்
பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். நிதிஷ் குமார் மீண்டும் இன்று மாலை பாஜக ஆதரவுடன் முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்
-
Jan 28, 2024 11:22 ISTபீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஜினாமா
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்
-
Jan 28, 2024 10:16 ISTதமிழகத்திலேயே முதல்முறையாக பனைமரம் வெட்டியவர் மீது வழக்கு
தமிழகத்திலேயே முதல்முறையாக பனைமரம் வெட்டியவர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது
தமிழகத்திலேயே முதல்முறையாக பனைமரம் வெட்டியவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாநில மரமான பனைமரத்தை வெட்டியதற்காக பிரிவு 427-ன் கீழ் குன்னலூர் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் பூமிநாதன் மீது எடையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு. பனை மரங்களை வெட்டுவதற்கு ஆட்சியரின் அனுமதி தேவை- பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம்.
-
Jan 28, 2024 10:14 ISTஅறுபடை வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் அரசின் புதிய திட்டம்
60 வயதை எட்டியவர்கள் முருகனின் அறுபடை வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் புதிய திட்டம் இன்று தொடக்கம் -சேகர்பாபு, இந்து அறநிலையத்துறை அமைச்சர்
-
Jan 28, 2024 10:07 ISTகோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி
நாகை: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
கல்லூரி மாணவர்கள் மற்றும் வனத்துறையினர் 12 குழுக்களாக பிரிந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
#Watch | நாகை: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
— Sun News (@sunnewstamil) January 28, 2024
கல்லூரி மாணவர்கள் மற்றும் வனத்துறையினர் 12 குழுக்களாக பிரிந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்#SunNews | #Nagapattinam | #BirdsSurvey pic.twitter.com/4NgE2iJFEn -
Jan 28, 2024 10:07 ISTகோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி
நாகை: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
கல்லூரி மாணவர்கள் மற்றும் வனத்துறையினர் 12 குழுக்களாக பிரிந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
#Watch | நாகை: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
— Sun News (@sunnewstamil) January 28, 2024
கல்லூரி மாணவர்கள் மற்றும் வனத்துறையினர் 12 குழுக்களாக பிரிந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்#SunNews | #Nagapattinam | #BirdsSurvey pic.twitter.com/4NgE2iJFEn -
Jan 28, 2024 09:28 ISTஐரோப்பிய நாடுகளின் முதலீடுகளை ஈர்ப்பதே நோக்கம்- ஸ்டாலின்
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் புறப்பட்டு சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின்
ஸ்பெயின் நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த உள்ளதாக முதல்வர் அறிவிப்பு
ஐரோப்பிய நாடுகளின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதே தனது பயணத்தின் நோக்கம் என்றும் விளக்கம்
-
Jan 28, 2024 09:28 ISTஐரோப்பிய நாடுகளின் முதலீடுகளை ஈர்ப்பதே நோக்கம்- ஸ்டாலின்
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் புறப்பட்டு சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின்
ஸ்பெயின் நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த உள்ளதாக முதல்வர் அறிவிப்பு
ஐரோப்பிய நாடுகளின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதே தனது பயணத்தின் நோக்கம் என்றும் விளக்கம்
-
Jan 28, 2024 09:27 ISTஇலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை. 5 விசைப்படகுகளின் வலைகளை வெட்டி சேதம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை. ஒரு விசைப்படகுக்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் என மீனவர்கள் கவலை
-
Jan 28, 2024 08:40 ISTதென்காசி: லாரி - கார் மோதி விபத்து 6 பேர் பலி
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் சிமெண்ட் லாரி - கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து
கார் அப்பளம் போல் நொறுங்கியதில், காருக்குள் இருந்த 6 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு
குற்றாலத்தில் குளித்துவிட்டு காரில் சொந்த ஊர் திரும்பியபோது விபத்து
விபத்தில் உயிரிழந்த 6 பேரும் புளியங்குடியைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்
சிங்கிலிப்பட்டி, தென்காசி பயங்கர விபத்து - 6 பேர் உயிரிழப்பு
-
Jan 28, 2024 08:39 ISTபீகார் ஆளுநரை சந்திக்கும் நிதிஷ் குமார்
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று பீகார் ஆளுநரை சந்திக்க அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அம்மாநில ஆளுநரை இன்று சந்திக்க உள்ளதாக தகவல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.