Advertisment

Tamil News Updates: குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

IE tamil Updates

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 618-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும்,  டீசல் லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2715 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 779 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரியின் நீரிருப்பு 494 மில்லியன் கன அடியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Jan 29, 2024 22:01 IST
    வெண்மணியில் 127 பயனாளிகளுக்கு வீடு கட்ட அனுமதி - அமைச்சர் ஐ. பெரியசாமி

    அமைச்சர் ஐ. பெரியசாமி: “நாகை வெண்மணி ஊராட்சியில் பிரதமர் ஊரக குடியிருப்புத் திட்டத்தில் 127 வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 75 பயனாளிகள் வீடுகளைக் கட்டி முடித்த நிலையில், 52 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. நாகை மாவட்டத்திற்கு மத்திய அரசால், 31, 051 வீடுகள் மட்டும் வழங்கப்பட்டு 23,110 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில்தான், பிரதமர் குடியிருப்பு திட்ட பயனாளிகளுக்கு அதிக தொகை தரப்படுகிறது. திட்ட நிதியில் மட்திய அரசு ரூ.72,000 மட்டும் தரும் நிலையில், மாநில அரசுதான் ரூ.1.68 லட்சம் தருகிறது. ஊர்க வேலை உறுதித் திட்டம் மூலம் ரூ. 26,460, தூய்மை பாரதம் இயக்கம் மூலம் ரூ.12,000 சேர்த்து தரப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரு வீட்டின் அலகுத் தொகை ரூ. 2,78,460 ஆக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.



  • Jan 29, 2024 21:11 IST
    பிப்ரவரி 1 முதல் டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

    கலால் வரி உயர்வால் பிப்ரவரி 1-ம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்த்தபடுகிறது. 180 மி.லி அளவு சாதாரண நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ. 10, 180 மி.லி அளவு உயர்தர மதுபானங்களின் விலை ரூ.20, 650 மி.லி அளவு பீர் வகைகளின் விலை ரூ. 10 உயர்த்தப்படுகிறது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • Jan 29, 2024 20:29 IST
    செந்தில்பாலாஜி ஜாமீன் மனு நாளை விசாரணை

    அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் ஜாமீன் கோரி 2-ம் முறையாக செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.



  • Jan 29, 2024 20:20 IST
    கோயம்பேடு பேருந்து முனையத்தில் லுலு மால்... முற்றிலும் வதந்தி - தமிழக அரசு விளக்கம்

    கோயம்பேடு பேருந்து முனையம் இருந்த இடத்தில் லுலு மால் அமைக்க நிலம் தரப் போவதாக சமூக வலைதளங்களில் வதந்தி என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.



  • Jan 29, 2024 20:17 IST
    பேசின் பாலம் ரயில் நிலையத்தில் பிப். 2 வரை ரயில்கள் நிற்காது 

    சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் பிப்ரவரி 2-ம் தேதி வரை புறநகர் ரயில்கள் நின்று செல்லாது. பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.



  • Jan 29, 2024 19:38 IST
    தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமையாது - திருமாவளவன்

    வி.சி.க தலைவர் திருமாவளவன்: “தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமையாது; பா.ஜ.க ஒரு பொருட்டே அல்ல. தி.மு.க, அ.தி.மு.க-தான் இங்கே முக்கியம்” என்று கூறியுள்ளார்.



  • Jan 29, 2024 19:29 IST
    கோயம்பேட்டில் லுலு மால் என்பது முற்றிலும் வதந்தி; தமிழக அரசின் உண்மை சரி பார்ப்புக்குழு 

    கோயம்பேடு பேருந்து முனையம் இருந்த இடத்தில் லுலு மால் அமைக்க நிலம் தரப் போவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவுகிறது. இது அடிப்படை ஆதாரமற்ற தகவல் என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரி பார்ப்புக்குழு தெரிவித்துள்ளது.



  • Jan 29, 2024 19:27 IST
    சென்னை வந்த ஹிமாலயன் கழுகு


    விலங்குகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து 10 அனுமன் குரங்குகள், 5 மர ஆந்தைகள், ஒரு ஜோடி ஹிமாலயன் கிரிபோன் கழுகுகள் மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன.



  • Jan 29, 2024 19:27 IST
    பட்ஜெட் கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

    பட்ஜெட் கூட்டத்தொடர்ஐ சுமுகமாக நடத்துவது குறித்து நாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளாது.  காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.



  • Jan 29, 2024 19:17 IST
    சென்னை; ஒப்பனை அறை திறப்பு

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வால் டாக்ஸ் சாலையில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒப்பனை அறையை அமைச்சர் சேகர்பாபு, எம்.பி. தயாநிதி மாறன், மேயர் பிரியா ஆகியோர் திறந்து வைத்தனர்.



  • Jan 29, 2024 18:45 IST
    பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு தொல்லை; ராஜேஷ் தாஸூக்கு 3 ஆண்டு சிறை

    பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கில், முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    இந்த நிலையில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டு வழக்கை மாற்றக்கோரி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.



  • Jan 29, 2024 18:21 IST
    மோடி பிரதமரானால் தேர்தல் இருக்காது; மல்லிகார்ஜுன கார்கே

     

    மோடி மீண்டும் பிரதமரானால் அடுத்த தேர்தலுக்கு வாய்ப்பு இருக்காது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.



  • Jan 29, 2024 18:19 IST
    கண்மாய்களில் மேம்பால பணி; நீதிமன்றம் முக்கிய உத்தரவு

    கண்மாய்களில் மேம்பால பணிக்கு அனுமதி தர முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.



  • Jan 29, 2024 18:18 IST
    அதிமுக பேனர் விழுந்து பெண் காயம்

    திருத்தணி பைபாஸ் சாலையில் அதிமுக பேனர் காற்றில் பறந்து விழுந்ததில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.



  • Jan 29, 2024 17:30 IST
    அரசின் திட்டங்களை விமர்சனம் செய்வதா? ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி கேள்வி

    தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விடுத்துள்ள அறிக்கையில், “ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ‘மீடியா மேனியா’ நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது;
    நாகை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தைப் பற்றி விமர்சித்துள்ளார்;
    வீடுகள் சரியில்லை என்றும், இதற்குக் காரணம் தமிழ்நாடு அரசின் நிர்வாக அக்கறையின்மை என்றும், ஊழல் என்றும் வாய்க்கு வந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்;
    அரசு திட்டத்தில் ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால் அதுகுறித்துக் கேட்டறியலாம்; தை விட்டு விட்டு எதிர்க்கட்சியைப் போல மீடியாக்களில் விமர்சனம் செய்யக் கிளம்புவதுதான் ஒரு ஆளுநருக்கு அழகா?” எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.



  • Jan 29, 2024 16:42 IST
    புதுச்சேரி தலைமைச் செயலாளர் மாற்றம்

    புதுச்சேரி தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த ராஜீவ் வர்மா சண்டிகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தில் பணியாற்றி வந்த சரத் சவுகான் புதுச்சேரி தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்



  • Jan 29, 2024 16:29 IST
    பும்ரா மீது ஐ.சி.சி நடவடிக்கை

    இங்கிலாந்து உடனான முதல் டெஸ்ட் போட்டியில் ஐ.சி.சி விதிகளை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா மீறியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து பும்ராவிற்கு ஒரு டீ-மெரிட் புள்ளியை வழங்கி ஐ.சி.சி நடவடிக்கை எடுத்துள்ளது.



  • Jan 29, 2024 16:04 IST
    கமலிடம் ஆதரவு கோருவோம்; வானதி ஸ்ரீனிவாசன்

    ரஜினி, கமல் என யாராக இருந்தாலும், நடிகர்களிடம் ஆதரவு கோருவது எங்கள் கடமை. ஆதரவு அளிப்பதும், அளிக்காததும் அவரவர் விருப்பம் என  சென்னை வேளச்சேரியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்



  • Jan 29, 2024 15:48 IST
    செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்; அமலாக்கத் துறை பதில் மனு

    வழக்கின் விசாரணையை முடக்கும் நோக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய குற்றப்பிரிவின் வழக்கு நிலுவையில் உள்ளதால், அமலாக்கத் துறை விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோர முடியாது என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது



  • Jan 29, 2024 15:28 IST
    முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

    பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மாவட்ட நீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டு வழக்கை மாற்றக்கோரி முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் மார்ச்சுக்குள் விசாரணையை முடிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • Jan 29, 2024 15:09 IST
    கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழக்கு; ஐகோர்ட்க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

    சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தானாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்டதற்கு தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டதா? என சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • Jan 29, 2024 15:01 IST
    நடிகர் இளவரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

    காவல்துறை மீது தவறான குற்றச்சாட்டை சுமத்திய விவகாரத்தில், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என நடிகரும் ஒளிப்பதிவாளருமான இளவரசுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது



  • Jan 29, 2024 14:47 IST
    TNSTC பேருந்துகள் நாளை முதல் கோயம்பேடு செல்லாது

    TNSTC பேருந்துகள் நாளை முதல் கோயம்பேடு செல்லாது. கிளாம்பாக்கம் மற்றும் மாதவரத்தில் இருந்து தென்மாவட்ட பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது



  • Jan 29, 2024 14:30 IST
    ஆளுநர் ரவியின் சித்தன்னவாசல் பயணம்

    புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலுக்கு ஆளுநர் ரவி இன்று பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் வருகைக்கு எதிராக பல கட்சியினர் போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது



  • Jan 29, 2024 14:18 IST
    56 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

    உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில், 56 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது



  • Jan 29, 2024 14:06 IST
    ஸ்பெயின் தொழில் நிறுவனங்களை சந்திக்கும் ஸ்டாலின்

    ஸ்பெயின் வந்தடைந்தேன்! ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பிய பயணம்! இன்று மாலை ஸ்பெயின் நாட்டின் தொழில் அமைப்புகள், பெரும் தொழில் நிறுவனங்களைச் சந்திக்கிறேன் தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்க உள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்



  • Jan 29, 2024 13:22 IST
    செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17வது முறையாக நீட்டிப்பு

     செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17வது முறையாக நீட்டிப்பு. அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு. 



  • Jan 29, 2024 13:08 IST
    பட்ஜெட் - நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

     பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிப்.1ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்



  • Jan 29, 2024 12:42 IST
    ஆளுநர் நிகழ்ச்சி - பங்கேற்காத அமைச்சர்

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக 34வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு ஆளுநர் பங்கேற்றுள்ள நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்கவில்லை



  • Jan 29, 2024 12:42 IST
    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வரவேற்ற ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர்

    தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டின், மேட்ரிட் சென்றடைந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே. பட்நாயக் மலர்கொத்து வழங்கி வரவேற்றார்



  • Jan 29, 2024 12:32 IST
    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டென்னிஸ் ஜாம்பவான் ஜோக்கோவிச்

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டென்னிஸ் ஜாம்பவான் ஜோக்கோவிச்.  அரசுமுறை பயணமாக ஸ்பெயின் செல்லுபோது விமானத்தில் சந்தித்ததாக முதலமைச்சர் X தளத்தில் பதிவு. 



  • Jan 29, 2024 12:23 IST
    பொன்முடி வழக்கு: தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

    சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்ந்த மனு; 4 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது; லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்கு வரை பொன்முடி சரணடைவதில் இருந்து விலக்கு தொடரும் என நீதிபதி அபய்.எஸ்.ஓஹா உத்தரவு



  • Jan 29, 2024 12:04 IST
    'சங்கி' என்பது கெட்டவார்த்தை இல்லை: ரஜினிகாந்த்

    'சங்கி' என்பது கெட்டவார்த்தை இல்லை. சங்கி என்பது கெட்டவார்த்தை என்று ஐஸ்வர்யா சொல்லவில்லை" -  ரஜினிகாந்த்



  • Jan 29, 2024 11:39 IST
    வடக்கில் இந்தியா கூட்டணிக்கு ஏற்பட்ட நிலைமைதான் தமிழ்நாட்டிலும் ஏற்படும்

    “வடக்கில் இந்தியா கூட்டணிக்கு ஏற்பட்ட நிலைமைதான் தமிழ்நாட்டிலும் ஏற்படும்; தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பாஜக உடன் அதிமுக கூட்டணி இல்லை; விரைவில் அதிமுக உடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவோம்” - சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு



  • Jan 29, 2024 11:23 IST
    3வது புதிய மாவட்ட ஆட்சியராக எஸ்.அருண் ராஜ் பதவியேற்பு

    செங்கல்பட்டு மாவட்டத்தின் 3வது புதிய மாவட்ட ஆட்சியராக எஸ்.அருண் ராஜ் ஐஏஎஸ் இன்று பதவியேற்பு



  • Jan 29, 2024 11:23 IST
    3வது புதிய மாவட்ட ஆட்சியராக எஸ்.அருண் ராஜ் பதவியேற்பு

    செங்கல்பட்டு மாவட்டத்தின் 3வது புதிய மாவட்ட ஆட்சியராக எஸ்.அருண் ராஜ் ஐஏஎஸ் இன்று பதவியேற்பு



  • Jan 29, 2024 11:21 IST
    பிப்.4ம் தேதி மதிமுகவுடன் திமுக பேச்சுவார்த்தை

    நாடாளுமன்றத் தேர்தல் - பிப்.4ம் தேதி தொகுதி பங்கீடு குறித்து மதிமுகவுடன் திமுக பேச்சுவார்த்தை



  • Jan 29, 2024 11:03 IST
    பிப்.4-ல் தி.மு.க - மார்க்சிஸ்ட் கம்யூ. பேச்சுவார்த்தை

    திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே பிப்.4ம் தேதி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை. 2019 நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை, மதுரை என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. 



  • Jan 29, 2024 11:02 IST
    திமுக நிர்வாகிகளோடு தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை

    சிவகங்கை, விருதுநகர் தொகுதி திமுக நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தி வரும் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு

    அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு மற்றும் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்பு



  • Jan 29, 2024 11:01 IST
    செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக எஸ்.அருண் ராஜ் பதவியேற்பு

    செங்கல்பட்டு மாவட்டத்தின் 3வது புதிய மாவட்ட ஆட்சியராக எஸ்.அருண் ராஜ் ஐஏஎஸ் இன்று பதவியேற்பு



  • Jan 29, 2024 10:22 IST
    தி.மு.க- சி.பி.ஐ இடையே வரும் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை 

    மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக, திமுக - இந்திய கம்யூனிஸ்ட் இடையே வரும் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை 



  • Jan 29, 2024 10:02 IST
    தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹40 உயர்ந்து ஒரு சவரன் ₹46,760க்கு விற்பனையாகிறது



  • Jan 29, 2024 09:20 IST
    விபத்தில் பள்ளி மாணவர்கள் 4 பேர் பலி 

    கர்நாடகாவின் பாகல்கோட்டை மாவட்டத்தில் பள்ளி பேருந்தும், டிராக்டரும் மோதிக் கொண்ட விபத்தில் 4 மாணவர்கள் பலி 



  • Jan 29, 2024 09:18 IST
    ஹஜ் புனித பயணம் செல்வோர் குறித்து இன்று தேர்வு

    இந்தாண்டுக்கான ஹஜ் புனித பயணம் செல்வோரை தேர்வு செய்வதற்கான குலுக்கல் டெல்லியில் இன்று காலை நடைபெற உள்ளது. இதில் தேர்வாகும் பயணிகளுக்கு SMS மூலம் தகவல் தெரிவிக்கப்படும். 



  • Jan 29, 2024 09:14 IST
    மக்களை சந்திக்கும் அ.தி.மு.க தேர்தல் அறிக்கை குழு 

    2024 லோக்சபா தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட அதிமுக குழு, பிப்ரவரி 5 முதல் 10 வரை 6 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களை சந்தித்து கருத்துகளை கேட்கும் 



  • Jan 29, 2024 09:05 IST
    பேருந்துகளில் யு.பி.ஐ மூலம் டிக்கெட் பெறும் வசதி

    சென்னை மாநகர பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட் பெறும் வசதி சோதனை முறையில் அறிமுகம். முதல் கட்டமாக பல்லாவரம் பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளில் அறிமுகம்



  • Jan 29, 2024 08:39 IST
    ஸ்பெயின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்பு

    ஸ்பெயினில் இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு. பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு



India Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment