/indian-express-tamil/media/media_files/Rg5fjeaQDiv82ue1n0NB.jpg)
IE Tamil Updates
பெட்ரோல், டீசல் விலை
624-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2634 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 773 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 491 மில்லியன் கன அடியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Feb 04, 2024 23:56 IST
தனித்து போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் - தம்பிதுரை
பாஜகவுடன் கூட்டணி இல்லாமல் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என அதிமுக நிர்வாகிகளுக்கு தம்பிதுரை அறிவுறுத்தியுள்ளார்.
-
Feb 04, 2024 23:53 IST
வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு
நெல்லை, வாஞ்சி மணியாச்சி அருகே சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதில் 9 பெட்டிகள் சேதமடைந்துள்ளது. கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்தும் இருப்பு பாதை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Feb 04, 2024 21:16 IST
போக்குவரத்துக்கும் இடையூறு : அண்ணாமலை உட்பட 10 பேர் மீது வழக்கு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் சென்றதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Feb 04, 2024 20:28 IST
இளைய கலைஞர், சின்னவர் என என்னை அழைப்பதில் உடன்பாடில்லை : உதயநிதி ஸ்டாலின்
சென்னையில் நடைபெறும் பாகநிலை முகவர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேலத்தில் திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்டி உள்ளோம். வாழும் பெரியார், இளைய கலைஞர், சின்னவர் என என்னை அழைப்பதில் உடன்பாடில்லை. நான் எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளை கைதட்டினால் மட்டும் போதாது, கைகோர்த்து செயல்பட வேண்டும். அமைச்சர், இளைஞரணி செயலாளர் பதவிகள் வரும் போகும்.
ஒவ்வொரு மண்டலத்திலும் கட்சியின் பாகநிலை முகவர்கள் கூட்டம் நடைபெறும். இன்று சென்னை கிழக்கு மாவட்ட திமுகவில் துவங்கி உள்ளோம் அனைத்து தொகுதி நிர்வாகிகளையும் வரவழைத்து தினமும் 2 மணி நேரம் வரை சந்தித்தோம் என தெரிவித்துள்ளார்.
-
Feb 04, 2024 20:19 IST
திருநாவுக்கரசர் மீது திமுகவினர் அதிருப்தி
அண்ணா அறிவாலயம், சென்னை திருச்சி நாடாளுமன்ற நிர்வாகிகளுடன் நடைபெற்ற திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நிறைவு பெற்றது. இதில் திருச்சி தொகுதி காங். எம்.பி., திருநாவுக்கரசர் மீது திமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தி
-
Feb 04, 2024 20:16 IST
பாஜக அரசை கண்டித்து மார்க். கம்யூ. போராட்டத்தில் திமுக பங்கேற்கும் என அறிவிப்பு
மாநில உரிமைகள் காத்திட மத்திய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் சார்பில் வரும் 8-ம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது. அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பாஜக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு
-
Feb 04, 2024 20:13 IST
கடலுக்குள் அம்மோனியா வாயு கசிந்த விவகாரம் : தொழிற்சாலைக்கு தமிழக அரசு உத்தரவு
மிக்ஜாம் புயல் காரணமாக கடலுக்குள் குழாயில் சேதம் ஏற்பட்டு அம்மோனியா வாயு கசிந்ததாக கண்டறியப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை"மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.5.92 கோடியை உடனடியாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, நிபந்தனைகளை செயல்படுத்தாத தொழிற்சாலைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
-
Feb 04, 2024 19:06 IST
மக்களவை தேர்தலில் கே.என். நேரு மகன் போட்டி?
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் கே.என். நேரு மகன் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தொகுதி கடந்த முறை இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. பாரிவேந்தர் போட்டியிட்டு வென்றார் என்பது நினைவு கூரத்தக்கது.
-
Feb 04, 2024 18:51 IST
திமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பிப்.12 பேச்சுவார்த்தை
“கூட்டணி குறித்த இறுதிக்கட்ட ஆலோசனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்த பிறகு முடிவு செய்யப்படும்; திமுக- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடனும் வரும் பிப்.12ம் தேதி தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது” என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். -
Feb 04, 2024 18:49 IST
ரசிகர்களை சந்தித்த விஜய்
புதுச்சேரியில் GOAT படப்பிடிப்பின் இடையே நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்தார். -
Feb 04, 2024 17:53 IST
அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் இல்லை: எஸ்வி சேகர்
தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் இல்லை; தமிழக மக்கள் மட்டுமின்றி டெல்லி தலைவர்களையும் அவர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்” என நடிகர் எஸ்.வி. சேகர் விமர்சித்துள்ளார். -
Feb 04, 2024 17:32 IST
நீலகிரி மக்களவை தொகுதியில் பாஜக வெல்லும்: எல். முருகன்
“நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வெல்வது 100% உறுதி செய்யப்பட்டது; நீலகிரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா எம்.பி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்;
15 வருடம் நீலகிரி எம்.பியாக இருந்தும் மக்களை சந்தித்து குறைகளை நிவர்த்தி செய்வது போன்ற அடிப்படை தேவைகளை இதுவரை செய்ததில்லை” என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேசினார். -
Feb 04, 2024 16:59 IST
தி.மு.க தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுடன் மு.க. ஸ்டாலின் காணொளியில் ஆலோசனை
தி.மு.க தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுடன் ஸ்பெயினில் இருந்தவாறே முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளியில் ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் உதயநிதி, கே.என். நேரு, எ.வ. வேலு, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.
-
Feb 04, 2024 16:01 IST
பா.ஜ.க-வில் சேரச் சொல்லி அழுத்தம் தருகிறார்கள் - அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
பா.ஜ.க-வில் சேரச் சொல்லி அழுத்தம் தருகிறார்கள் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பா.ஜ.க அரசு எங்களுக்கு எதிராக எந்தவிதமான சதி செய்ய முயன்றாலும் அடிபணிய மாட்டேன்” என கெஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
Feb 04, 2024 15:29 IST
துரோகத்தை வீழ்த்த வந்த சின்னம் குக்கர் - டி.டி.வி. தினகரன்
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், “குக்கர் சின்னத்தின் மூலம்தான் நமது இயக்கத்தை மீட்டெடுக்க முடியும்; துரோகத்தை வீழ்த்த வந்த சின்னம்தான் குக்கர். நாடாளுமன்றத் தேர்தலில் தீய மற்றும் துரோக சக்திகளை வீழ்த்திக் காட்ட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
-
Feb 04, 2024 15:25 IST
லாரி ஓட்டுநர்களுக்கு நவீன வசதியுடன் தங்கும் மையம் - தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு
நெடுஞ்சாலை ஓரத்தில் லாரி ஓட்டுநர்களுக்காக நவீன வசதியுடன் தங்கும் மையம் அமைக்கப்படுகிறது; நாடு முழுவதும் மையங்கள் அமைக்கப்பட உள்ள நிலையில் முதல் கட்டமாக 1,000 மையங்கள் அமைக்கப்படும் என்று லாரி ஓட்டுநர்களுக்கான தங்கும் மையங்கள் அமைக்கும் அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ளது.
-
Feb 04, 2024 15:21 IST
ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் ரஜினியின் 'வேட்டையன்' படப்பிடிப்பு
ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் ரஜினியின் 'வேட்டையன்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'வேட்டையன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடப்பாவில் கல்குவாரிகள் அமைந்துள்ள பகுதியில் நடந்து வருகிறது. ரஜினியை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.
-
Feb 04, 2024 14:47 IST
10 ஆண்டுகளாக இந்தியாவின் நிலைமை மாறியிருக்கிறது; மோடி
10 ஆண்டுகளாக இந்தியாவின் நிலைமை மாறியிருப்பது திருப்தி அளிக்கிறது என அஸ்ஸாமில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
-
Feb 04, 2024 14:13 IST
'லால் சலாம்' திரைப்படம் புதிய போஸ்டர் வெளியீடு
ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஜால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'லால் சலாம்' திரைப்படம் வரும் 9ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் புதிய போஸ்டரை பட நிறுவனம் வெளியிட்டுள்ளது.
-
Feb 04, 2024 13:49 IST
சுப்மன் கில் சதம்
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர் சுப்மன் கில் சதம் விளாசினார்
-
Feb 04, 2024 13:28 IST
அரசியல் கட்சி தொடங்கியதற்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி - நடிகர் விஜய்
அரசியல் கட்சி தொடங்கியதற்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்
-
Feb 04, 2024 13:16 IST
ஆரணி தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்க கூடாது; தி.மு.க நிர்வாகிகள் எதிர்ப்பு
ஆரணி காங்கிரஸ் எம்.பி.விஷ்ணு பிரசாத்திற்கு தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆரணி நாடாளுமன்ற தொகுதியை இந்த முறையும் காங்கிரஸுக்கு ஒதுக்க கூடாது என தி.மு.க தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிடம், ஆரணி தி.மு.க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்
-
Feb 04, 2024 12:51 IST
ஆருத்ரா மோசடி - 7,000 ஏஜென்ட்களிடம் விசாரணை
ஆருத்ரா மோசடி - 7,000 ஏஜென்ட்களிடம் விசாரணை .ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் 7,000 ஏஜென்ட்கள் அடையாளம் காணப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை.
-
Feb 04, 2024 12:47 IST
நாளை முதல் மக்களிடம் கருத்து கேட்க உள்ளோம்
நாளை முதல் மக்களிடம் கருத்து கேட்க உள்ளோம்" தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களை சந்தித்து கருத்துக் கேட்க உள்ளோம் 5 ஆம் தேதி வேலூர் மண்டலம், 6ஆம் தேதி விழுப்புரம் மண்டலத்தில் மக்களை சந்திக்கிறோம்.பாஜக இல்லாத மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
-
Feb 04, 2024 12:09 IST
அதிமுக தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை
அதிமுக தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனை நாளை முதல் மக்களை சந்தித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தவுள்ள நிலையில் ஆலோசனை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற 2வது ஆலோசனை கூட்டம்
-
Feb 04, 2024 12:08 IST
பிப்.12ல் திமுகவுடன் விசிக பேச்சுவார்த்தை
பிப்.12ல் திமுகவுடன் விசிக பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு தொடர்பாக விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுடன் வரும் 12ஆம் தேதி ஆலோசன மக்கள் நீதி மய்யம் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது குறித்து திமுக தலைவர் முடிவு செய்வார் - அமைச்சர் ஐ.பெரியசாமி
-
Feb 04, 2024 11:35 IST
திமுகவிடம் 2 தொகுதிகளை கேட்ட மதிமுக
நாடாளுமன்ற தேர்தல் - திமுக உடன் மதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை 2 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை பதவியை மதிமுக கேட்டுள்ளது.
-
Feb 04, 2024 11:27 IST
வாணியம்பாடி அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே வளையம்பட்டு ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்ற கார், தடுப்பு வேலி மீது மோதிய விபத்தில் ஒருவர் பலி. 4 பேர் படுகாயம். போலீசார் விசாரணை. இந்த விபத்து காரணமாக பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
Feb 04, 2024 11:25 IST
அதிமுக மகளிரணி செயலாளர் வளர்மதி தலைமையில் நடைபெற்ற மகளிரணி நிர்வாகிகள் கூட்டம்
சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக மகளிரணி செயலாளர் வளர்மதி தலைமையில் நடைபெற்ற மகளிரணி நிர்வாகிகள் கூட்டம் நிறைவு. ஆலோசனைக் கூட்டத்தில் 7 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்! முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செம்மலை, ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன், ஜெயக்குமார் ஆகியோரும் பங்கேற்பு.
-
Feb 04, 2024 11:00 IST
தாய் கண்டித்ததால் மாணவர் தற்கொலை
தாய் கண்டித்ததால் மாணவர் தற்கொலை. சென்னை கோடம்பாக்கத்தில், நீண்ட நேரமாக பப்ஜி கேம் விளையாடிய கல்லூரி மாணவரை தாய் கண்டித்ததால் தற்கொலை
-
Feb 04, 2024 10:47 IST
திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது
பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது
திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது
கூடுதல் தொகுதிகளில் போட்டியிட திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளோம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
-
Feb 04, 2024 10:26 IST
கூட்டணி தொடர்பாக பேச டெல்லி செல்கிறேன் - ஜி.கே.வாசன்
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசுவதற்காக டெல்லி செல்கிறேன். தமிழகத்தில் புதிய கட்சிகள் வருவதால் வாக்காளர்களை கணிக்க முடியாது. அரசியலுக்கு வந்துள்ள விஜய் வாக்காளர்களின் எண்ணம் போல் செயல்பட்டால் வெல்ல முடியும்- தமாக தலைவர் ஜி.கே.வாசன்
-
Feb 04, 2024 09:17 IST
ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்
ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று காலை 11 மணிக்கு டெல்லி பயணம்
மத்திய உள்துறை அமைச்சக மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆளுநர் ஆலோசனை நடத்துவார் என தகவல்
-
Feb 04, 2024 09:10 IST
திமுக தேர்தல் அறிக்கை - நாளை முதல் கருத்து கேட்பு
திமுக தேர்தல் அறிக்கை - நாளை கருத்து கேட்பு
கனிமொழி எம்.பி., தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தாயாரிப்பு குழு
நாளை தூத்துக்குடியில் பொதுமக்களை சந்தித்து கருத்துகளை கேட்க உள்ளனர்
நாளை முதல் 23ம் தேதி வரை திமுக தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம்
-
Feb 04, 2024 09:09 IST
நாடாளுமன்ற தேர்தல் - பாஜக இன்று ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தொகுதி பொறுப்பாளர்களுடன் பாஜக இன்று ஆலோசனை
தேர்தல் கூட்டணி, பிரசார வியூகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்
-
Feb 04, 2024 07:49 IST
தமிழக மீனவர்கள் 23 பேர் கைது
தமிழக மீனவர்கள் 23 பேர் கைது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது. 2 படகுகள் பறிமுதல்.
கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றது இலங்கைக் கடற்படை. இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் கவலை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.