Advertisment

Tamil News Highlights: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வப் பெருந்தகை நியமனம்

Tamil News Today INSAT F14 DMK Lok Sabha polls-17 February 2024- இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

Tamilnadu: பெட்ரோல்,டீசல் விலை 

Advertisment

சென்னையில் 637-வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம். 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2,451 மில்லியன் கனஅடியாக உள்ளது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 760 மில்லியன் கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 482 மில்லியன் கனஅடியாக உள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Feb 17, 2024 22:34 IST
    செல்வப்பெருந்தகைக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்



  • Feb 17, 2024 21:06 IST
    தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்

    தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார். கே.எஸ் அழகிரிக்குப் பதிலாக சட்டமன்றக் குழு தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்



  • Feb 17, 2024 20:45 IST
    குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது



  • Feb 17, 2024 20:21 IST
    நீட் விவகாரத்தில் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும் - அமைச்சர் உதயநிதி

    ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை, அவர் மறைந்ததும், அ.தி.மு.க ஆட்சியில் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்தது. நீட் விவகாரத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும். நம் பிள்ளைகள் படிக்க கூடாது என்பதற்காக புதிய புதிய தேர்வுகளை திணிக்கிறார்கள். நீட் தேர்வு ரத்து தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்த இருக்கிறோம், தமிழ்நாட்டில் இருந்து என்றைக்கு நீட்தேர்வு விலக்கு ஏற்படுமோ, அதுதான் முதல் வெற்றி என ராமநாதபுரம் தி.மு.க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்



  • Feb 17, 2024 19:45 IST
    தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு பறவைக் காய்ச்சல் அலர்ட்

    தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு பறவை காய்ச்சல் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் கடந்த 17ஆம் தேதி 10 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் உயிரிழந்துள்ளது. பறவை காய்ச்சல் காரணமாகவே பறவைகள் உயிரிழந்திருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 5 அண்டை மாவட்டங்களிலும் தீவிரமாக கண்காணிக்கும் படி தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்



  • Feb 17, 2024 19:15 IST
    பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டம்

    பாகிஸ்தான் பொதுத்தேர்தல் முடிவுகளுக்கு எதிராக அந்நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், அதனையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் மோசடி நடந்ததாக ஒப்புக்கொண்டுள்ள தேர்தல் அதிகாரி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.



  • Feb 17, 2024 18:41 IST
    விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி - எப்14 ராக்கெட்; இன்சாட் -3டி.எஸ் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

    ஜி.எஸ்.எ.ல்வி - எப்14 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இன்சாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறியும் இன்சாட்-3டிஎஸ் அதிநவீன செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.



  • Feb 17, 2024 17:22 IST
    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பின் : இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி

    வரலாற்றிலேயே முதல்முறையாக இந்திய மகளிர் பேட்மிண்டன் அணி ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. மலேசியாவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் அணியை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டியில் தாய்லாந்து அணியுடன் மோதுகிறது!



  • Feb 17, 2024 17:19 IST
    பா.ஜ.க தேசிய பொதுக்குழு கூட்டம் துவங்கியது

    டெல்லியில் பா..க தேசிய பொதுக்குழு கூட்டம் துவங்கியது பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்பட பா..க மூத்த தலைவர்கள் பலரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.



  • Feb 17, 2024 16:35 IST
    இன்சாட்-3டிஎஸ் அதிநவீன செயற்கைக்கோள் : மாலை 5.35 மணிக்கு விண்ணில் பாய்கிறது

    வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறியும் இன்சாட்-3டிஎஸ் அதிநவீன செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி - எப்14 ராக்கெட் மூலம் திட்டமிட்டபடி மாலை 5.35 மணிக்கு விண்ணில் பாய்கிறது. 25 வகையான கருவிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் 2,274 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வு கருவிகள் பொருத்தபட்டுள்ளன



  • Feb 17, 2024 16:34 IST
    நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது தி.மு.க.!

    தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியாவின் தென் முனையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இந்தக் குரல், வடக்கிலும் எதிரொலிக்கும், இந்தியாவின் பெருமைகளை மீட்டெடுக்கும்! பாசிசம் வீழும்! இந்தியா வெல்லும்! என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளாார்.



  • Feb 17, 2024 15:35 IST
    தடம் புரண்ட ரயில் என்ஜின்

    சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே தடம்  ரயில் என்ஜின் புரண்டது. இதனால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில்கள் தாமதமாகியுள்ளது. 2 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

     



  • Feb 17, 2024 15:14 IST
    நாளை 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

    சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    நாளை காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை குறிப்பிட்ட இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படாது.கோடம்பாக்கம் முதல் தாம்பரம் வரையிலான வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின்சார ரயில்கள் ரத்து. இன்று முதல் 22ம் தேதி வரை இரவு 10.45 மணி முதல் காலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயான புறநகர் மின்சார ரயில்கள் ரத்து என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 



  • Feb 17, 2024 15:05 IST
    நம்பிக்கை வாக்கெடுப்பு - ஆம் ஆத்மி வெற்றி

    டெல்லி சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவாக 54 வாக்குகளும் எதிராக 1 வாக்கும் பதிவாகியது 

     



  • Feb 17, 2024 14:07 IST
    பஞ்சுமிட்டாய் விற்க தடை - கண்காணிக்க தமிழக அரசு உத்தரவு

    தடை செய்யப்பட்ட பஞ்சுமிட்டாய் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிறதா? என  கண்காணிக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

    தமிழக முழுவதும் மாவட்ட வாரியாக தொடர் சோதனையில் ஈடுபடவும், திரையரங்குகள், பூங்காக்கள், பள்ளிகள் கடற்கரைகள், கோவில் விழாக்களை அதிகாரிகள் கண்காணிக்கவும், சட்டத்திற்கு புறம்பாக விற்பனையாகும் தடை செய்யப்பட்ட பஞ்சுமிட்டாயை யாரும் வாங்கி உண்ண வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



  • Feb 17, 2024 13:42 IST
    'அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்' - ஸ்டாலின் பேச்சு 

    "ஒன்றிய அமைச்சர் ஒருவர், 'பிரிவினையைத் தூண்டுகிறது திராவிட மாடல்' என்று சொல்லி இருக்கிறார். திராவிட மாடல் என்பது யாரையும் பிரிக்காது, பிளவுபடுத்தாது, உயர்வு தாழ்வு கற்பிக்காது. அனைவருக்கும் அனைத்தையும் கிடைக்கச் செய்யும் ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சியாகும்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். 



  • Feb 17, 2024 13:42 IST
    டெல்லியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

     

    ஜாகிரா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது சரக்கு ரயிலில் இருந்து  எட்டு பெட்டிகள் தடம் புரண்டது. 

    சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சரக்கு ரயில் தடம் புரண்ட போது எடுக்கப்பட்ட பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது



  • Feb 17, 2024 13:29 IST
    மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கீடு - கர்நாடக அரசுக்கு இ.பி.எஸ் கண்டனம்!

    "மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடகா அரசுக்கு கண்டனம்" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

    "உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி செயல்படும் கர்நாடகா அரசின் செயல்பாடுகளை திமுக அரசு வேடிக்கை பார்க்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், "மேகதாதுவில் அணை கட்டினால் 20 மாவட்ட மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம். டெல்டா மாவட்ட விளைநிலங்கள் நீரின்றி பாலைவனமாகும்" என்றும் கூறியுள்ளார். 

     



  • Feb 17, 2024 13:03 IST
    2024ம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு பணி 

    நெல்லை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்டத்தில் புலிகள் 2024ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. வரும் பிப்.20 முதல் 27 வரை மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் வனச்சோதனை சாவடி மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். 



  • Feb 17, 2024 13:02 IST
    கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க தமிழக மீனவர்கள் முடிவு

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறை தண்டனை வழங்குவதை கண்டித்து நாளை முதல் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். 

    நாளை முதல் படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளனர். வரும் 20ஆம் தேதி மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்த இருப்பதாகவும், 3 நாட்கள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாகவும் மீனவர்கள் அறிவித்துள்ளனர். 



  • Feb 17, 2024 12:38 IST
    டெல்லி விவசாயிகள் போராட்டம்: தஞ்சாவூரில் விவசாயிகள் ரயில் மறியல்

    டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூரில் விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். ரயில்நிலையத்தில் நுழைந்த போது விவசாயிகள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் ரயில்நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 



  • Feb 17, 2024 12:35 IST
    டெல்லியில் பா.ஜ.க. தேசிய பொதுக்குழு கூட்டம்

    டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறும் பா.ஜ.க.வின் தேசிய பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். 

    பா.ஜ.க தேசிய பொதுக்குழு கூட்டத்தில்  நாடு முழுவதும் இருந்து 11, 500 நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். மக்களவை தேர்தல் பணி, பிரசாரம் உள்ளிட்டவை குறித்து நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட உள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் 2 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றவும் பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. 



  • Feb 17, 2024 12:34 IST
    புதுக்கோட்டை: கிணற்றுக்குள் கிடந்த அரசுப் பள்ளி சீருடை

    புதுக்கோட்டை மாவட்டம் அக்கச்சிப்பட்டி கிராமத்தில் கிணற்றுக்குள் அரசுப்பள்ளி சீருடை கிடந்துள்ளன. 100க்கும் மேலான பண்டல்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீருடைகள் இருந்துள்ளன. 2018 - 2019ம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சீருடைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Feb 17, 2024 12:31 IST
    ரூ.1,264.54 கோடி மதிப்பிலான திட்டம்: ஸ்டாலின் தொடங்கி வைப்பு 

    தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.1,264.54 கோடி மதிப்பிலான திட்டங்களை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 



  • Feb 17, 2024 12:00 IST
    மாற்றுத்திறனாளிகளோடு அமைச்சர் கீதாஜீவன் பேச்சுவார்த்தை

    சென்னையில் மாற்றுத்திறனாளிகளோடு அமைச்சர் கீதாஜீவன் பேச்சுவார்த்தை

    மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தை

    மாற்றுதிறனாளிகளுக்கான 4% இடஒதுக்கீட்டில் பார்வையற்றவர்களுக்கு 1% ஒதுக்க வேண்டும் என கோரிக்கை

    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பார்வையற்றவர்களுக்கு நியமன தேர்வில் விலக்கு தேவை என வேண்டுகோள்

    "அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பார்வையற்றவர்களுக்கென சிறப்பு தேர்வு நடத்த வேண்டும்



  • Feb 17, 2024 11:59 IST
    தேனாம்பேட்டை அருகே மாற்றுத்திறனாளிகள் சாலைமறியல்

    சென்னை தேனாம்பேட்டை அருகே மாற்றுத்திறனாளிகள் சாலைமறியல். 

    மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு. மறியல் போராட்டம் காரணமாக தேனாம்பேட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு.  9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்



  • Feb 17, 2024 11:39 IST
    குழந்தை கடத்தல் வதந்தி- போலீஸ் எச்சரிக்கை

    "குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்று சமூக வலைதளங்களில் வீண் வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை" - சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை

     "குழந்தை கடத்தல் தொடர்பாக பொய்யான வதந்தி பரப்புவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்" மக்களுக்கு சந்தேகம் இருந்தால் காவல்துறை உதவி எண் 100, 112 ஐ தொடர்பு கொள்ள அறிவுறுத்தல் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு சந்தேகங்களை மக்களை கேட்டறிந்து கொள்ளலாம்- காவல்துறை



  • Feb 17, 2024 11:34 IST
    தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அதிரடி தடை

    தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அதிரடி தடை

    தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அதிரடி தடை விதிக்கப்பட்டது.  பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் Rhodamine-B எனப்படும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவது உறுதி செய்யப்பட்டதால் தமிழ்நாடு அரசு நடவடிக்கை 



  • Feb 17, 2024 11:18 IST
    கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு-டெல்லி கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றம் உத்தரவு

    இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதை சுட்டிக்காட்டி நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரியது கெஜ்ரிவால் தரப்பு

    கெஜ்ரிவால் தரப்பு கோரிக்கையை ஏற்ற டெல்லி நீதிமன்றம், விலக்கு அளித்து, விசாரணையை மார்ச் 16ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது

    மதுபான கொள்கை முறைகேடு புகார்- விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் மனு



  • Feb 17, 2024 10:58 IST
    வள்ளலார் பன்னாட்டு மையம்: பாமக போராட்டம் அறிவிப்பு

    சத்திய ஞானசபை பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்க எதிர்ப்பு

    பாமக போராட்டம் அறிவிப்பை தொடர்ந்து, வடலூரில் போலீசார் குவிப்பு

    சர்வதேச மையம் அமைப்பதால் தைப்பூசத்திற்கு வரும் மக்கள் பாதிக்கப்படுவார்கள்- பாமக 

    வடலூரில் வேறு இடத்தில் மையத்தை அமைக்க வேண்டும் - பாமக கோரிக்கை

    தண்ணீரை பீச்சியடிக்கும் வஜ்ரா வாகனமும் பாதுகாப்பிற்காக நிறுத்தம்



  • Feb 17, 2024 10:56 IST
    தமிழகத்தில் பஞ்சுமிட்டாய்க்கு தடையா?

    புற்றுநோய் செல்லை உருவாக்கும் வேதிபொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தடை விதிக்க வாய்ப்பு

    விரைவில் உணவு பாதுகாப்புத்துறை அறிக்கை வெளியாகும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

    இன்று முதலமைச்சரை சந்தித்து பஞ்சுமிட்டாய் ஆய்வு குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க மக்கள் நலவாழ்வுத்துறை திட்டம்

    உணவு பாதுகாப்புத்துறை பரிந்துரை அடிப்படையில், பஞ்சுமிட்டாய்க்கு தமிழகத்தில் தடை விதிக்க வாய்ப்பு



  • Feb 17, 2024 10:16 IST
    கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க மீனவர்கள் முடிவு

    தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதை கண்டித்து கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க மீனவர்கள் முடிவு. இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களுக்கு சிறை  தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து காலவரையற்ற போராட்டம் நடத்தவும் திட்டம் 



  • Feb 17, 2024 10:10 IST
    சப்ஸ்டிட்யூட் ஃபீல்டராக படிக்கல் களமிறக்கம்

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இருந்து ரவிச்சந்திரன் அஷ்வின் விலகிய நிலையில் சப்ஸ்டிட்யூட் ஃபீல்டராக தேவ்தத் படிக்கல் களமிறக்கம். 



  • Feb 17, 2024 10:10 IST
    சப்ஸ்டிட்யூட் ஃபீல்டராக படிக்கல் களமிறக்கம்

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இருந்து ரவிச்சந்திரன் அஷ்வின் விலகிய நிலையில் சப்ஸ்டிட்யூட் ஃபீல்டராக தேவ்தத் படிக்கல் களமிறக்கம். 



  • Feb 17, 2024 09:50 IST
    கர்நாடக அரசுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்

    மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்



  • Feb 17, 2024 09:43 IST
    மிட்டாய் என நினைத்து மாத்திரை உண்ட குழந்தைக்கு சிகிச்சை 

    மிட்டாய் என நினைத்து மாத்திரை உண்ட குழந்தைக்கு சிகிச்சை 

    சென்னை அபிராமபுரத்தில் மிட்டாய் என நினைத்து மாத்திரைகளை உட்கொண்ட குழந்தைக்கு உடல்நலக்குறைவு. மாத்திரை சாப்பிட்ட 2 வயது குழந்தை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி. 



  • Feb 17, 2024 09:28 IST
    அ.தி.மு.க நிர்வாகிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த வனத்துறை

    கோவை பொள்ளாச்சி எடுத்த ஆனைமலை வனப்பகுதிக்குள் உயர் ஒளியுடன், ஆபத்தான முறையில் காரை ஓட்டி, யானையை விரட்டிய அதிமுக பிரமுகர் மிதுனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது வனத்துறை. மிதுன் அதிமுகவின் இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளராக உள்ளார்.  

    வாகனத்தைக் கண்டு மிரண்டு ஓடும் யானையை வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் மிதுன். இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மீது நடவடிக்கை. 



  • Feb 17, 2024 09:07 IST
    பிரபல கார் ஷோரூமில் நள்ளிரவில் தீ விபத்து

    கர்நாடகாவில் பிரபல கார் ஷோரூமில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து

    பல லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் தீயில் எரிந்து சேதம்

    2 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள்



  • Feb 17, 2024 08:49 IST
    இன்சாட்-3 டி.எஸ் செயற்கைக்கோள் இன்று ஏவுதல்

    வானிலை நிலவரத்தை கணிக்கும் இஸ்ரோவின் இன்சாட்-3 டி.எஸ் செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது

    இன்சாட்-3 டிஎஸ் செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி எப்-14 ராக்கெட் மூலமாக இன்று மாலை 5.35 மணியளவில் ஏவப்படுகிறது. 

     



  • Feb 17, 2024 08:27 IST
    சென்ட்ரல்- அரக்கோணம் மின்சார ரயில்கள் இன்று ரத்து

    ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்ட்ரல்- அரக்கோணம் செல்லும் 10 மின்சார ரயில்கள் இன்று இரவு ரத்து. இரவு 9.45 மணி முதல் இரவு 11.55 மணி வரை இயக்கப்படும் 10 மின்சார ரயில்கள் ரத்து- தெற்கு ரயில்வே 



  • Feb 17, 2024 07:43 IST
    3வது டெஸ்ட் போட்டியில் அஷ்வின் விலகல்

    இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து அஷ்வின் விலகல்

    குடும்ப மருத்துவ அவசர நிலை காரணமாக இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்டில் இருந்து ஆர். அஸ்வின் விலகல்

    இந்த சவாலான நேரத்தில், கிரிக்கெட் வாரியமும், இந்திய அணியும் அஸ்வினுக்கு துணை நிற்கும் - பிசிசிஐ

    ராஜ்கோட்டில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை பதிவு செய்து அசத்தி இருந்தார்



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment