Advertisment

Tamil News Updates: இந்தியாவின் மிக நீள 'அடல் சேது' கடல் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

Tamil News Updates

 பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 600-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.

102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

லோக்சபா தேர்தல் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், டெல்லியில் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி இன்று மற்றும் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

  • Jan 11, 2024 22:23 IST
    சென்னையில் தனியார் நிறுவனத்தின் 10வது மாடியில் வேலை செய்த 13 பேருக்கு திடீர் மயக்கம் 

    சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் 10வது மாடியில் பணியாற்றிக் கொண்டிருந்த 240 பேரில் 13 பேர் திடீரென மயக்கமடைந்ததால் பரபரப்பு. அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஏசியில் இருந்து வாயு கசிந்ததால், மயக்கம் ஏற்பட்டிருப்பதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.



  • Jan 11, 2024 21:38 IST
    எனக்கு கால் வலி இருக்கிறது, வாய்ப்பிருந்தால் அயோத்தி கும்பாபிஷேகத்துக்கு செல்வேன் - இ.பி.எஸ்

    ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: “யார் வேணாலும் பங்கேற்கலாம், அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி, மதத்திற்கும் சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி அ.தி.மு.க; இதில் யார் விருப்பப்பட்டாலும் ராமர் கோயிலுக்குச் செல்லலாம். அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்றாலும் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்றாலும், ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்குச் செல்லலாம். வாய்ப்பு இருந்தால் நான் கலந்துகொள்வேன், எனக்கு கொஞ்சம் கால் வலி இருக்கிறதால், கொஞ்சம் சிரமமிருக்கிறது. அதைப் பொறுத்துதான் முடிவு செய்யப்படும்.” என்று கூறினார்.



  • Jan 11, 2024 20:25 IST
    மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி: தற்காலிக கட்டடத்திற்கு மாற்ற முடிவு

    மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியை தற்காலிக கட்டடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வரும் நிலையில், மதுரைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.



  • Jan 11, 2024 19:54 IST
    மு.க. ஸ்டாலின் உடன் சிங்கப்பூர் அமைச்சர் சந்திப்பு

     

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் சிங்கப்பூர் சட்டம் மற்றும் அள்துறை அமைச்சர் கே. சண்முகம் சந்தித்தார். சிங்கப்பூர் சென்றபோது நான் விடுத்த அழைப்பை ஏற்று வந்த சண்முகத்தை வரவேற்றேன். எங்களின் சந்திப்பு, கல்வி, பண்பாடு, தொழில் என வளர்ந்து நாட்டுக்கு பயனளிக்கும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • Jan 11, 2024 19:52 IST
    நடிகர் சுரேஷ் கோபி மகள் திருமணம்; பிரதமர் மோடி பங்கேற்பு

     

    கேரளாவைச் சேர்ந்த நடிகரும் முன்னாள் மாநிலங்களைவை உறுப்பினருமான சுரேஷ்கோபியின் மகள் திருமண விழா ஜனவரி 17-ம் தேதி கேரளாவில் புகழ்பெற்ற குருவாயூரப்பன் கோயிலில் நடைபெறும் திருமண விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.



  • Jan 11, 2024 19:39 IST
    வெள்ள நிவாரணம்: அமித்ஷாவை சந்திக்கும் தமிழக எம்.பி.க்கள் குழு

    தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழு வெள்ள நிவாரண நிதி வழங்கக் கோரி ஜனவரி 13-ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார்கள். நாளை மறுநாள் (13.01.2024)  பிற்பகல் 3.30 மணியளவில் வெள்ள நிவாரணம் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்வுடன் சந்திக்க உள்ளனர்.



  • Jan 11, 2024 19:36 IST
    சென்னையில் 450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    பொங்கல் பண்டிகையை ஒட்டி, சென்னையில் கூடுதலாக 450 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. சிறப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளடு.  கிளாம்பாக்கம் உள்பட 6 பேருந்து நிலையங்களுக்கு சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Jan 11, 2024 19:35 IST
    போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அரசாணை வெளியீடு

    அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 200 நாட்கள், அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 151 நாட்கள் முதல் 199 நாட்கள் வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.195 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 91 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு ரூ.85 வழங்க உத்தரவிடப்படுள்ளது.



  • Jan 11, 2024 19:33 IST
    துணை முதல்வர் குறித்து கேள்வி; உதயநிதி ஸ்டாலின் பதில்

    துணை முதல்வர் பதவி குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருப்போம்” என்று கலகலப்பான பதில் அளித்தார்.



  • Jan 11, 2024 19:24 IST
    தி.மு.க-வை கண்டித்து ஜன. 20-ல் தே.மு.தி.க உண்ணாவிரதப் போராட்டம் - பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

    விஜயகாந்த்தின் மக்கள் பணிகளை அழிக்கத் துடிக்கும் தி.மு.க-வினர் மற்றும் அதற்கு துணைபோகும் அரசு அதிகாரிகளைக் கண்டித்து ஜனவரி 20-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட தே.மு.தி.க சார்பில் உண்ணாவிரப் போராட்டம் நடைபெறும் என்று தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.



  • Jan 11, 2024 18:27 IST
    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு : மம்தா பானர்ஜி கடிதம்

    ஒரே நாடு ஒரு தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மத்தா பானர்ஜி, இது குறித்து முன்னாள் முடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில் அந்தந்த மாநிலத்திற்கு அந்தந்த நேரத்தில் தேர்தல் நடந்த்துவது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு என்று தெரிவித்துள்ளார்.



  • Jan 11, 2024 17:44 IST
    அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவல் வரும் 24ம் தேதி வரை நீட்டிப்பு

    திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் ₹20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவல் வரும் 24ம் தேதி வரை நீட்டிப்பு



  • Jan 11, 2024 17:42 IST
    வேளாண்மை பல்கலைகழகத்தில் மாணவ, மாணவிகள் பொங்கல் கொண்டாட்டம்

    கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் மாணவ, மாணவிகள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். கோலப்போட்டி, கயிறு இழுத்தல், உரியடித்தல், வள்ளி கும்மியாட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



  • Jan 11, 2024 17:42 IST
    லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது

    கடலூர் மாவட்டம் மதலப்பட்டு கிராம நிர்வாக அதிகாரி பிரபாகரன் லஞ்சம் வாங்கிய போது கைது

     பட்டாவில் பெயர் மாறுதல் செய்ய ₹40,000 லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

    அவரின் வீடு, அலுவலகத்தில் சோதனை நடந்து வருகிறது



  • Jan 11, 2024 17:39 IST
    திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது அயலான்

     

    நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம், திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது. அயலான் திரைப்படத்திற்கான இடைக்கால தடையை நீக்கியது சென்னை உயர்நீதிமன்றம்.  தங்களுக்கு தர வேண்டிய ரூ.1 கோடியை வழங்காமல் படத்தை வெளியிட கூடாது என எம்.எஸ்.சேலஞ்ச் என்ற திரைப்பட விளம்பர நிறுவனம் வழக்கு தொடர்ந்த நிலையில், அந்நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் திரும்ப செலுத்திய பட தயாரிப்பு நிறுவனம் மீதமுள்ள ரூ.50 லட்சத்தை ஏப்ரல் 10ம் தேதிக்குள் செலுத்துவதாக உத்தரவாதம்



  • Jan 11, 2024 16:43 IST
    மாணவர்களுக்கு ஒதுக்கிய நிதியில் முறைகேடு;

    சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் ‘DDUGKY’- திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஒதுக்கிய நிதியில் முறைகேடு;

    முறைகேட்டில் ஈடுபட்ட பயிற்சி மைய ஊழியர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்



  • Jan 11, 2024 16:35 IST
    சு. வெங்கடேசன் எம்.பி புகழாரம்

    ஆயி பூரணம் அம்மாவின்னுடைய கைகளை பற்றிக்கொள்ளவில்லை என்றால் நான் ஒரு மக்கள் பிரதிநிதி இல்லை. அள்ளிக் கொள்வதற்கென்று நிறைய கைகள் உள்ளது? ஆனால் அள்ளிக் கொடுப்பதற்கு என்று சில கைகள் தான் உள்ளது!” -சு. வெங்கடேசன் எம்.பி X தளத்தில் புகழாரம்!



  • Jan 11, 2024 16:03 IST
    அயலான் திரைப்படம் வெளியாக விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்

    அயலான் திரைப்படம் வெளியாக விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்- சென்னை உயர்நீதிமன்றம்

    தங்களுக்கு தர வேண்டிய ₹1 கோடியை செலுத்தாமல் படம் வெளியாக தடை கேட்டு எம்.எஸ் சேலஞ்ச் என்ற திரைப்பட விளம்பர நிறுவனம் வழக்கு

    எம்.எஸ் சேலஞ்ச் நிறுவனத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் ₹50 லட்சம் திரும்ப செலுத்தியது. மீதமுள்ள ₹50 லட்சத்தை ஏப்ரல் 10ம் தேதிக்குள் செலுத்துவதாகவும் உத்தரவாதம்



  • Jan 11, 2024 16:02 IST
    ரயில்வே வாரியம் அனுமதி

    அம்ரித் பாரத் விரைவு ரயில் சோதனை அடிப்படையில் கூடுதலாக பக்கூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது



  • Jan 11, 2024 16:02 IST
    ரயில்வே வாரியம் அனுமதி

    அம்ரித் பாரத் விரைவு ரயில் சோதனை அடிப்படையில் கூடுதலாக பக்கூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது



  • Jan 11, 2024 15:33 IST
    பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறை சோதனை

    ஆளுநர் ஆர்.என்.ரவி ஜாமீனில் வந்த துணை வேந்தருடனான ஆலோசனைக்கு பிறகு சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறை சோதனை நடத்தினர்;

    இந்த சோதனையில் ஏராளமான கோப்புகளை கைப்பற்றிய காவல்துறை விசாரணை



  • Jan 11, 2024 15:32 IST
    டெல்லியில் லேசான நில அதிர்வு

    ஆஃப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

    டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம்



  • Jan 11, 2024 15:27 IST
    நெல்லை மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்

    நெல்லை மேயருக்கு எதிரான நாளை நடைபெறவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கவுன்சிலர்கள் புறக்கணிக்க முடிவு;

    கட்சி தலைமையின் உத்தரவை ஏற்று முடிவு செய்துள்ளனர்;

    மேலும் நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் விருதுநகருக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது



  • Jan 11, 2024 15:14 IST
    வரும் 15ஆம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை நிறைவு

    தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், கேரளா, ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வரும் 15ஆம் தேதியுடன் நிறைவடைய வாய்ப்பு உள்ளது

    - இந்திய வானிலை ஆய்வு மையம்



  • Jan 11, 2024 14:45 IST
    வெள்ள தடுப்பு பணிகள்; விரைவில் அறிக்கை வெளியிட தமிழ்நாடு அரசு முடிவு

    திருப்புகழ் குழு அறிக்கையின் அடிப்படையில் நடைபெற்ற வெள்ள தடுப்பு பணிகள் தொடர்பான அறிக்கையை விரைவில் வெளியிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. திருப்புகழ் கமிட்டி அறிக்கையின்படி எடுத்த நடவடிக்கை குறித்து அரசிடம், சென்னை மாநகராட்சி அறிக்கை சமர்ப்பித்தது. நெடுஞ்சாலை, பொதுப்பணி, நீர்வளத்துறை உள்ளிட்ட பல துறைகள் சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. திருப்புகழ் கமிட்டி அறிக்கையின் படி மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதனால் ஏற்பட்ட தாக்கம் குறித்த விவரங்களையும் வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது



  • Jan 11, 2024 14:26 IST
    வரும் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை விலகக் கூடிய சாதகமான சூழல் உள்ளது; வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் வரும் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை விலகக் கூடிய சாதகமான சூழல் நிலவி வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Jan 11, 2024 13:53 IST
    டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நேர்காணல் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  



  • Jan 11, 2024 13:28 IST
    அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15 வது முறையாக நீட்டிப்பு

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 22ஆம் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஜாமின் கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது நாளை தீர்ப்பு வரவுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ல் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார்



  • Jan 11, 2024 13:12 IST
    நெல்லை மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்; நாளை வாக்கெடுப்பு

    நெல்லை மேயர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தநிலையில், நெல்லை மாமன்ற உறுப்பினர்கள் மூன்று குழுக்களாக வெளியூர் அழைத்து செல்லப்படுகின்றனர். நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்படுகிறது. பாளையங்கோட்டை எம்.எல்.ஏ அப்துல் வகாப் தலைமையில் பெரும்பான்மையான கவுன்சிலர்கள் வெளியூர் அழைத்து செல்லப்படுகின்றனர். மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இரண்டு குழுக்களாக மற்ற கவுன்சிலர்களும் வெளியூர் பயணம் செல்கின்றனர். வெளியூர் பயணத்தில் திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்களும் இணைந்துள்ளனர்



  • Jan 11, 2024 12:57 IST
    80 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம்

    நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திண்டுக்கல்லில் பணியாற்றி வந்த 80 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து திண்டுக்கல் சரக டிஐஜி அபினவ் குமார் உத்தரவு



  • Jan 11, 2024 12:56 IST
    போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது

     சேலம் பெரியார் பல்கலை. முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவரணி மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் உள்ளிட்டவர்களை காவல்துறை கைது செய்தனர்



  • Jan 11, 2024 12:55 IST
    அன்னபூரணி’ திரைப்படம் நீக்கம்

    மத உணர்வுகளை புண்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, நயன்தாரா நடிப்பில் வெளியான ’அன்னபூரணி’ திரைப்படம் , நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கம். சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு மீண்டும் படம் வெளியிடப்படும் என படத்தயாரிப்பு நிறுவனம் அறிக்கை.  



  • Jan 11, 2024 12:31 IST
    நெல்லை மேயருக்கு எதிராக ஆலோசனை

    நெல்லை மாநகராட்சி திமுக மேயர் பி.எம்.சரவணனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு மற்றும் விவாதம் நாளை நடைபெற உள்ளது; ரகசிய இடங்களுக்கு 3 பிரிவுகளாக பிரிந்து சென்ற மாமன்ற உறுப்பினர்கள் ரகசிய ஆலோசனை;



  • Jan 11, 2024 12:27 IST
    சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சாமி தரிசனம்

    ஆஞ்சேநேயர் ஜெயந்தியையொட்டி சென்னை நங்கநல்லூர் கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சாமி தரிசனம்



  • Jan 11, 2024 12:22 IST
    வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் துறை: உதயநிதி

    பல்வேறு நாடுகளில் படிப்பு, பணிக்காக சென்றுள்ள தமிழர்கள் 135 நாடுகளில் தமிழர் வாழ்கிறார்கள். தமிழர் இல்லாத நாடே இல்லை.  வெளிநாடு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும் அயலக தமிழர் நலத்துறை வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் துறை.  வெளிநாட்டில் இறந்து போகும் தமிழர்களின் உடல் 8 நாட்களுக்குள் தமிழகம் கொண்டுவரப்படுகிறது அயலகத் தமிழர் தின விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு 



  • Jan 11, 2024 12:05 IST
    40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும்

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் பயணித்தால் நாடாளுமன்றம் செல்லலாம் என சிலர் தப்பு கணக்கு போட்டு வைத்துள்ளனர்; எடப்பாடி பழனிசாமி சிறுபான்மை மக்களின் நலன்களை பற்றி கூறும் வார்த்தைகளில் உண்மை துளியும் இருந்ததில்லை; 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும்” - நாகையில், மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேச்சு



  • Jan 11, 2024 12:04 IST
    பாஜகவுக்கு எந்தவிதமான கொள்கைகளும் கோட்பாடுகளும் இல்லை

    “பாஜகவுக்கு எந்தவிதமான கொள்கைகளும் கோட்பாடுகளும் இல்லை; தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ளவில்லை; பாஜகவின் கோட்பாடுகள் சமூக நல்லிணக்கத்திற்கு எதிரானது; பாஜக மாநில தலைவர் அண்ணாமலை யாத்திரை செல்லக்கூடிய இடங்களில் மக்கள் எதிர்ப்பு அலை பலமாக வீசுகிறது” - நாகையில், மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவஹருல்லா பேச்சு



  • Jan 11, 2024 11:45 IST
    ஆளுநருக்கு எதிராக போராட்டம்

    ஆளுநருக்கு எதிராக போராட்டம் .திமுக, திராவிடர் கழகம், மதிமுக மாணவரணி , மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிராக சேலம் பெரியார் பல்கலை.முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



  • Jan 11, 2024 11:11 IST
    தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு தங்கம் ஒரு கிராம் ரூ.5,810க்கும், ஒரு சவரன் ரூ.46,480க்கும் விற்பனை



  • Jan 11, 2024 10:55 IST
    பெரியார் பல்கலை.யில் போலீசார் சோதனை

    சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் போலீசார் சோதனை. துணைவேந்தர் அலுவலகம், பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை



  • Jan 11, 2024 10:54 IST
    தனி நீதிபதி முன் உரிய மனு தாக்கல் செய்யலாம்

    அதிமுக பெயர்,கொடி,சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஓபிஎஸ் மனு
    தள்ளுபடி

    ஓபிஎஸ் தரப்பு,  தனி நீதிபதி முன் உரிய மனு தாக்கல் செய்யலாம்

    - நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு உத்தரவு 



  • Jan 11, 2024 10:54 IST
    ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

    ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். அதிமுக கொடி, சின்னம், லெட்டர் ஹெட் உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு 



  • Jan 11, 2024 10:17 IST
    செந்தில் பாலாஜியின் தம்பி வீட்டில் ஐ.டி ஆய்வு

    கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வு

    கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகரில் அசோக்குமார் மனைவி பெயரில் பங்களா கட்டி வருகிறார்

    வருமான வரித்துறை அதிகாரிகள் குழு, பங்களா கட்டிடத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

    நேற்று ரெட்டிபாளையம் பகுதியில் கொங்கு மெஸ் உணவக கட்டிடத்தில் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.



  • Jan 11, 2024 10:15 IST
    ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

    அனுமன் ஜெயந்தி - பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம். 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2000 லிட்டர் பால் மற்றும் திவ்ய பொருட்களால் அபிஷேகம். 



  • Jan 11, 2024 10:14 IST
    ரஜினிகாந்தை சந்தித்த துரை வைகோ

    சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த துரை வைகோ



  • Jan 11, 2024 10:13 IST
    அனைத்து மாநில அலங்கார ஊர்திகளுக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் வாய்ப்பு

    அனைத்து மாநில அலங்கார ஊர்திகளுக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் வாய்ப்பு - பாதுகாப்பு அமைச்சகம் புதிய திட்டம்.

    குடியரசு தின அணிவகுப்பில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்த புதிய திட்டத்தை வகுத்துள்ளது பாதுகாப்பு அமைச்சகம். இதன் படி ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அணிவகுப்பில் பகேற்கும் வகையில் சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. 

    ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 அலங்கார ஊர்திகள் தேர்வாகிறது. சில மாநிலங்களின் ஊர்திகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் புதிய திட்டம் அறிமுகம். 



  • Jan 11, 2024 09:04 IST
    அயோத்தி ராமர் கோயில் விழா: சமாஜ்வாதி கட்சி புறக்கணிப்பு

    அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பை புறக்கணித்தது அகிலேஷ் யாதவின்  சமாஜ்வாதி கட்சி. காங்கிரஸ், சி.பி.எம் கட்சிகளைத் தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியும் பங்கேற்காது என அறிவிப்பு.  தேர்தல் லாபத்துக்காக பா.ஜ.க- ஆர்.எஸ்.எஸ் நடத்தும் நிகழ்ச்சி என எதிர்க்கட்சிகள் விமர்சனம் 



  • Jan 11, 2024 09:02 IST
    மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லத் தடை

    தூத்துக்குடியில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடை

    வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீன் பிடிக்க தடை



  • Jan 11, 2024 07:53 IST
    சிபிசிஐடி அலுவலகத்தில் சயான் இன்று ஆஜர்

    கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று ஆஜராகிறார் சயான். 



  • Jan 11, 2024 07:52 IST
    தாம்பரம் - நெல்லை இடையே இன்று சிறப்பு ரயில் 

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தாம்பரம் - நெல்லை இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்

    ரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றம்.



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment