Advertisment

Tamil News Updates: அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று ஆலோசனை

Tamil News Today Tamil News Today Madurai Jallikattu Omni bus-24 January 2024- இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

IE Tamil Updates

Jallikattu | tamilnadu: பெட்ரோல், டீசல் விலை  

Advertisment

சென்னையில் 613-வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தேர்தல் ஆணையம் விளக்கம்

ஏப்ரல் 16-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் எனப் பரவும் வதந்திக்கு தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி. உத்தேச தேதியை நிர்ணயம் செய்வது வழக்கமான நடைமுறை தான் எனவும் விளக்கம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Jan 24, 2024 22:41 IST
    மமதா பானர்ஜி விரைவில் குணமடைய விழைகிறேன் - ஸ்டாலின்

    கார் விபத்தில் மமதா பானர்ஜி காயமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். விரைவில் குணமடைய விழைகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்



  • Jan 24, 2024 22:24 IST
    ஆம்னி பேருந்துகள் இயக்கம்; சி.எம்.டி.ஏ விளக்கம்

    கடந்த மாதமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டனர். பொங்கல் கழித்து கிளாம்பாக்கத்திற்கு மாறி விடுவோம் என்று உறுதி அளித்திருந்தனர் என CMDA உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளார்



  • Jan 24, 2024 22:10 IST
    கோயம்பேட்டில் சி.எம்.டி.ஏ அலுவலர் மீது தாக்குதல்

    கோயம்பேட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆம்னி பேருந்து உதவியாளர், சி.எம்.டி.ஏ அலுவலரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க கூடாது என கூறியதால் இந்த வாக்குவாதம் ஏற்பட்டது



  • Jan 24, 2024 21:40 IST
    மேகதாது திட்டம் கட்டாயம் செயல்பாட்டிற்கு வந்தே தீரும்; டி.கே.சிவக்குமார்

    கர்நாடகாவில் மேகதாது திட்டம் கட்டாயம் செயல்பாட்டிற்கு வந்தே தீரும். தற்போதைய காங்கிரஸ் ஆட்சி காலம் நிறைவடைவதற்குள் மேகதாது திட்டம் நிறைவேறும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்



  • Jan 24, 2024 21:15 IST
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கூடுதல் மாநகரப் பேருந்துகள்

    கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி, கூடுதலாக மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது



  • Jan 24, 2024 20:59 IST
    கர்பூரி தாக்கூரின் பாரத ரத்னா வருங்கால தலைமுறைக்கு உத்வேகம்; அமித் ஷா


    கர்பூரி தாக்கூரின் பாரத ரத்னா வருங்கால தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.



  • Jan 24, 2024 20:38 IST
    தமிழ்நாடு; 2 கூடுதல் வழக்குரைஞர்கள் ராஜினாமா

     

    தமிழ்நாடு அரசின் இரண்டு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் சிலம்பண்ணன் மற்றும் அருண் ஆகியோர் தங்களின் பதவியை  ராஜினாமா செய்தனர்.
    மொத்தம் 11 பேர் கூடுதல் தலைமை வழக்கறிஞர்களாக இருந்த நிலையில் தற்போது இருவர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். 



  • Jan 24, 2024 20:37 IST
    தர்மபுரி- தொப்பூர் விபத்து; 3 பேர் உயிரிழப்பு

     

    தருமபுரி - தொப்பூர் இரட்டை பாலத்தில் நடந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.



  • Jan 24, 2024 20:08 IST
    அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு

    பாரதிய பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    இவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி நுழைந்து தாக்குதல், காயப்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • Jan 24, 2024 19:22 IST
    ஜல்லிக்கட்டு; அபிசித்தருக்கு கார் வழங்கிய அமைச்சர்

    மதுரை கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 10 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அபிசித்தருக்கு ரூ.1 லட்சம் ரொக்கத்துடன், முதலமைச்சர் சார்பாக வழங்கப்படும் மஹிந்திரா தார காரும் வழங்கப்பட்டது.



  • Jan 24, 2024 19:04 IST
    விஜயகாந்த் படம் திறப்பு

    தேமுதிக அலுவலகத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் திருவுருவப் படம் திறக்கப்பட்டது. இந்தப் படத்தை பிரேமலதா விஜயகாந்த் திறந்துவைத்தார்.



  • Jan 24, 2024 18:27 IST
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அவசரகதியில் திறக்கப்பட்டதால் மக்கள் அவதி - இ.பி.எஸ்

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி: “நீட் தேர்வு ரத்து என்ற தி.மு.க-வின் வாக்குறுதி என்பது நாடகம். நீட் தேர்வு ரத்து செய்வதற்கு முதல் கையெழுத்திடுவேன் என்று ஸ்டாலின் வாக்குறுதி தந்தார். தி.மு.க இளைஞரணி மாநாட்டு தீர்மானம் ஒன்றுகூட மக்களுக்கு பயனுள்ளதாக இல்லை. கோயிலைக் கட்டினால், மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்றால் எடப்பாடியில் அ.தி.மு.க போட்டியின்றி வெற்றி பெறும். அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம்.  அவசரகதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.” என்று கூறியுள்ளார். 



  • Jan 24, 2024 18:01 IST
    விருதுநகர் வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின்

    விருதுநகர் வச்சகாரப்பட்டியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் முக. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார். உயிரிழந்த வீரக்குமார், காளிராஜ் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவித்தார். விபத்தில் காயமடைந்த சரவணகுமார் சுந்தரமூர்த்திக்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி அறிவித்தார். விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள இருவருக்கும் சிறப்பு சிகிச்சை தர முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.



  • Jan 24, 2024 17:43 IST
    ரூ. 6,000 வெள்ள நிவாரணம்: விண்ணப்பித்தவர்களில், தகுதியானவர்களுக்கு வழங்கப்படும் - சேகர் பாபு

    அமைச்சர் சேகர் பாபு: “மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ரூ. 6000 வெள்ள நிவாரணம் கோரி விண்ணப்பித்தவர்களில், தகுதியானவர்களுக்கு விரைவில் நிவாரணத் தொகை வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.



  • Jan 24, 2024 17:14 IST
    கார் விபத்தில் சிக்கிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி காயம்

    மேற்குவங்கத்தில் பர்தாவான் பகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற கார், மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானர். இந்த விபத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது. மோசமான வானிலையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



  • Jan 24, 2024 17:06 IST
    பட்டாசு ஆலை வெடி விபத்து : உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம்

    விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சம் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு



  • Jan 24, 2024 17:05 IST
    அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் 4-வது முறையாக நீடிப்பு

    மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் 4-வது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரது காவல் பிப்ரவரி 17-ந் தேதி வரை நீடித்து திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Jan 24, 2024 17:03 IST
    ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் பேட்டி 

    அறிவிப்பு செய்த இரு நாட்களுக்குள் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்குவது இயலாத காரியம்" - அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் பேட்டி 



  • Jan 24, 2024 16:57 IST
    சிறந்த டி20 வீரர் : தொடர்ந்து 2-வது முறையாக வென்ற சூர்யகுமார் யாதவ்

    2023-ம் ஆண்டுக்கான சிறந்த டி-20 வீரருக்கான ஐசிசி விருதை வென்றார் சூர்ய குமார் யாதவ். 2022, 2023 என இரண்டு முறை இந்த விருதை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.



  • Jan 24, 2024 16:53 IST
    வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 6 ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க தூதரக ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்



  • Jan 24, 2024 16:51 IST
    கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் : போக்குவரத்து ஆணையர் உத்தரவு

    இன்று இரவில் இருந்து கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் சென்னை மாநகரில் பேருந்துகளில் பயணிகளை ஏற்றவோ அல்லது இறக்கவோ ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்படாது என்றும்,  ஈ.சி.ஆர் சாலையை தவிர மற்ற அனைத்து சாலைகள் வழியாக செல்லும் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே புறப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.



  • Jan 24, 2024 15:57 IST
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் : இந்திய அணியில் ரஜத் படிதார்

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் வீரர் ரஜத் படிதாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறித்து பேசியுள்ள கேப்டன் ரோகித் சர்மா, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதற்காக ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட்டார். இளம் வீரர்கள் நேரடியாக வெளிநாட்டு தொடர்களில் களமிறக்கப்படமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.



  • Jan 24, 2024 15:20 IST
    ஈரோடு - நெல்லை இடையேயான ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு

    ஈரோடு - நெல்லை இடையேயான முன்பதிவில்லா விரைவு ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு. ஈரோடு ரயில் நிலையத்தில் மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயிலானது இரவு 11.10 மணிக்கு செங்கோட்டை சென்று அடையும்



  • Jan 24, 2024 15:15 IST
    பஞ்சாப் மாநிலத்தின் 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டி

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவது இல்லை என்று அறிவித்துள்ள, பஞ்சாப் மாநிலத்தின் 13 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.



  • Jan 24, 2024 14:55 IST
    சிறுமி சித்ரவதை  - அ.தி.மு.க போராட்டம் அறிவிப்பு

    அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 1ம் தேதி ஆர்ப்பாட்டம் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

    பல்லாவரம் திமுக எம்.எல்.ஏவின் மகனையும், மருமகளையும் இதுவரை கைது செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர் கொத்தடிமை முறையை ஒரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ குடும்பம் நடைமுறைப்படுத்தி உள்ளது என்றும், குற்றவாளிகளை காப்பாற்ற நினைக்கும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் என்றும்  எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 



  • Jan 24, 2024 14:46 IST
    திரிணாமுல் கட்சி தனித்து போட்டி - மம்தா அறிவிப்பு

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக மம்தா அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும், இந்தியா கூட்டணியில் திரிணாமுல் இருந்தாலும், மேற்கு வங்கத்தில் தனித்தே போட்டி என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

    மம்தாவின் தனித்து போட்டியிடும் முடிவால், இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 



  • Jan 24, 2024 14:10 IST
    குமரியில் தலைமறைவான பாதிரியார் சரண் 

    கன்னியாகுமரியில் தேவாலய வளாகத்தில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய பாதிரியார் ராபின்சன் திருச்செந்தூர்  நீதிமன்றத்தில் சரணடைந்தார். தலைமறைவான பாதிரியாரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 

     



  • Jan 24, 2024 14:09 IST
    உயர்சிறப்பு மருத்துவ நீட் - கட் ஆப் குறைப்பு 

    உயர்சிறப்பு மருத்துவ படிப்புக்கான நீட் கட் ஆப் மதிப்பெண்ணைப் பூஜ்ஜியமாக குறைத்தது தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. 

     



  • Jan 24, 2024 14:07 IST
    கொடுமையை மறைக்கவே வீடியோ - பாதிக்கப்பட்ட பெண் பேச்சு  

    "கொடுமைகளை மறைக்கவே வீடியோக்களை வெளியிடுகின்றனர். குடும்பத்தினர் முன்பு நன்றாக கவனித்துக் கொள்வது போல் நடிப்பார்கள். என்னை அடித்தது உண்மை, கொடுமைப்படுத்தியதை மறைக்கவே சந்தோஷமாக வைத்திருப்பது போல் வீடியோ. பரிசு அளித்த பொருட்களை திரும்ப வாங்கிக் கொண்டார்கள். பிறந்த நாள் கேக் வெட்டியது உண்மை தான்" என்று தி.மு.க எம்.எல்.ஏ மகன், மருமகள் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

     



  • Jan 24, 2024 13:44 IST
    அ.தி.மு.க தேர்தல் அறிக்கை முதல் கூட்டம்

    நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. 



  • Jan 24, 2024 12:58 IST
    மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும்

    மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும்" திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி அறிவிப்பு காங்கிரஸ் கட்சியுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ.க.வை நாங்கள் தனியாக தோற்கடிப்போம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இந்தியா கூட்டணியில் தான் உள்ளது ராகுல் காந்தியின் யாத்திரை மேற்குவங்கம் வழியாக செல்கிறது, ஆனால் அது குறித்து எங்களுக்குத் தெரிவிக்கவில்லை மம்தா பானர்ஜி எனக்கு நெருக்கமான தலைவர் என ராகுல் காந்தி நேற்று கூறியிருந்த நிலையில், இன்று மம்தா அதிரடி.



  • Jan 24, 2024 12:51 IST
    கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துளை இயக்க முடியாது

    2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துளை இயக்க முடியாது" அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் பேட்டி



  • Jan 24, 2024 12:49 IST
    கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று நிறைவு

    முதல்வர் தொடங்கிவைத்த கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று நிறைவு



  • Jan 24, 2024 12:15 IST
    திமுக எம்.எல்.ஏவின் மருமகள் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை

    வீட்டு வேலைக்கு வந்த சிறுமியை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் தீவிரமடையும் போலீஸ் விசாரணை.  பல்லாவரம் திமுக எம்.எல்.ஏவின் மருமகள் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை. 



  • Jan 24, 2024 11:55 IST
    சி.வி.சண்முகம் மீதான இரு அவதூறு வழக்குகள் ரத்து

    அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு எதிரான இரு அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 4 அவதூறு வழக்குகளில் 2 வழக்குகளை ரத்து செய்த உயர்நீதிமன்றம் மேலும் இரு வழக்குகளை ரத்து செய்ய மறுப்பு  



  • Jan 24, 2024 11:46 IST
    ஏறு தழுவுதல் அரங்கத்தை கட்டியவர் ஸ்டாலின் என்று வரலாற்றில் இடம்பெற்றுவிட்டேன்

    "ஏறு தழுவுதல் அரங்கத்தை கட்டியவர் ஸ்டாலின் என்று வரலாற்றில் இடம்பெற்றுவிட்டேன். மதுரையில் கீழடி, கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம் அமைந்துள்ளது. போட்டி என்று வந்துவிட்டால் தோல்வியை தூள், தூளாக்கும் நகரம் மதுரை. தை மாதம் வந்தாலே அமைச்சர் மூர்த்தி, ஜல்லிக்கட்டு மூர்த்தியாக மாறிவிடுவார். சென்னையில் விரைவில் கலைஞர் நினைவகம் திறக்கப்பட உள்ளது. சிந்து சமவெளி நாகரிகத்தில் திமில் கொண்ட காளைகள் இருந்தன. திமுக அரசின் தீவிர முயற்சியால், நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி பெற்றோம். மத்திய அரசு மதுரையில் 2016ல் அறிவித்து அடிக்கல் நாட்டிய பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை" - முதலமைச்சர் ஸ்டாலின்



  • Jan 24, 2024 11:44 IST
    பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 2 பேர் உயிரிழப்பு

    விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 2 பேர் உயிரிழப்பு. ஆர்.ஆர்.நகரில் உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில், 3 அறைகள் தரைமட்டம் காளிராஜ், வீராக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி மீட்பு பணிகளில் தீயணைப்புத் துறையினர் தீவிரம்.



  • Jan 24, 2024 11:12 IST
    ஏறு தழுவுதல் அரங்கத்தின் வாயிலில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்

    மதுரை கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தின் வாயிலில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்



  • Jan 24, 2024 11:11 IST
    கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

    மதுரை கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்



  • Jan 24, 2024 10:56 IST
    தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு. தங்கம் ஒரு கிராம் ரூ.5,835க்கும், ஒரு சவரன் ரூ.46,680க்கும் விற்பனை. 



  • Jan 24, 2024 10:43 IST
    ஆளுநர் தேநீர் விருந்து: காங், சி.பி.ஐ, சி.பி.எம் புறக்கணிப்பு

    குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவிப்பு



  • Jan 24, 2024 10:30 IST
    ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வாக்குறுதிக்கு ஏற்றது போல் செயல்பட வேண்டும்

    இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். மக்களுடைய தேவை, மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தான் அரசு செயல்பட முடியும். ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஏற்கனவே ஒத்து கொண்டது போல், செயல்பட வேண்டும். ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நிபந்தனைக்கு உட்பட்டு அளித்த வாக்குறுதிக்கு ஏற்றது போல் செயல்பட வேண்டும் - அமைச்சர் சேகர்பாபு 



  • Jan 24, 2024 10:28 IST
    ராகுல் யாத்திரையில் மோதல்: அமித் ஷாவுக்கு கார்கே கடிதம்

    அசாமில் தேசிய ஒற்றுமை நீதிக்கான பயணத்தை மேற்கொள்ளும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம்



  • Jan 24, 2024 10:20 IST
    எனக்கு இந்தி தெரியாது- நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

    IPC, CrPc, IEA ஆகிய குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் இந்தியில் மாற்றப்பட்டாலும் நான் ஐ.பி.சி என்றே குறிப்பிடுவேன். எனக்கு இந்தி தெரியாது. அதனால் புதிய பெயர்களை சரியாக உச்சரிப்பது கடினம்- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்



  • Jan 24, 2024 09:56 IST
    மக்களவைத் தேர்தல்: திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை

    நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக வரும் 28-ம் தேதி திமுக - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை

    திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர், காங்கிரஸ் கமிட்டி குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது.



  • Jan 24, 2024 09:54 IST
    புதுச்சேரி கடற்கரைகளில் குளித்தால் அபராதம்

    புதுச்சேரியில் உள்ள கடற்கரைகளில் தடையை மீறி குளித்தால் அபராதம் விதிக்க பரிந்துரை. மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்துள்ள சுற்றுலாத்துறை

    அண்மை காலமாக கடலில் மூழ்கி உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் நடவடிக்கை. கடந்த ஆண்டு மட்டும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு கடற்கரைகளில் மூழ்கி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

    கடந்த புத்தாண்டு அன்று 4 மாணவர்கள், அடுத்தடுத்து 2 பேர் என கடந்த 20 நாட்களில் 6 பேர் உயிரிழப்பு



  • Jan 24, 2024 09:53 IST
    காமராஜர் சாலையில் குடியரசு தின விழா இறுதிகட்ட ஒத்திகை

    சென்னை காமராஜர் சாலையில் நடைபெறும் குடியரசு தின விழாவுக்கான இறுதிகட்ட ஒத்திகை.

    முப்படை, காவல்துறை, தேசிய மாணவர் படை, தீயணைப்பு படையின் அடுத்தடுத்த அணிவகுப்பு. ஆளுநர், முதல்வர் வருவதுபோலவும், அவர்களுக்கு மரியாதை செய்வது போலவும் ஒத்திகை 



  • Jan 24, 2024 09:03 IST
    அசாமில் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு

    அசாமில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, வேணுகோபால், கன்னையா குமார் ஆகியோர் மீது வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு. அசாமில் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில் நேற்று மோதல் ஏற்பட்டதால் வழக்குப்பதிவு



  • Jan 24, 2024 09:03 IST
    அசாமில் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு

    அசாமில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, வேணுகோபால், கன்னையா குமார் ஆகியோர் மீது வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு. அசாமில் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில் நேற்று மோதல் ஏற்பட்டதால் வழக்குப்பதிவு



  • Jan 24, 2024 08:58 IST
    பழனி கோயிலில் புதிய மின் இழுவை ரயில்

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய மின் இழுவை ரயில்.

    மின் இழுவை ரயிலை பக்தர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார் அமைச்சர் சக்கரபாணி. ஒரே நேரத்தில் 72 பேர் பயணிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய மின் இழுவை ரயில். 



Jallikattu tamilnadu news
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment