Advertisment

Tamil News Updates: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

Tamil News Today Live Tamil news Today Pongal chennai Rahul yatra-18 January 2024- இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu rains

IE Tamil Update

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 607-வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

மழைக்கு வாய்ப்பு

நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

  • Jan 19, 2024 07:05 IST
    பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை

    கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைக்க  பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    சென்னை,  கோவை,  மதுரை,  திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.  18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடத்தப்படும் இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்று முதல் ஜனவரி 31 வரை நடைபெற உள்ளது.  கேலோ இந்தியா போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    மொத்தம் 27 வகையான பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகிறது.  பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையை முன்னிட்டு திருச்சி மற்றும் சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • Jan 18, 2024 23:08 IST
    குஜராத் எரியில் படகு கவிழ்ந்து 16 பேர் மரணம்

    குஜராத் மாநிலம் வதோதராவில் ஹர்னி மோத்நாத் ஏரியில் சுமார் 35 பேர் பயணம் செய்த படகு,  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 12 மாணவர்கள் உட்பட 16 பேர் மரணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கும் 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என்று குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.

    அதேபோல் படக்கு கவிழ்ந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.



  • Jan 18, 2024 22:56 IST
    அயோத்தி ராமர் கோவில் திறப்பு : மத்திய அரசு நிறுவனங்களுக்கு அரைநாள் விடுமுறை

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு தினமான ஜனவரி 22-ந் தேதி இந்தியாவில், அனைத்து பொதுத்துறை வங்கிகள், மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு மதியம் 2.30 மணிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களுக்கும் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Jan 18, 2024 22:52 IST
    தனுஷ்கோடி செல்கிறார் பிரதமர் மோடி

    ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்தை தொடர்ந்து தனுஷ்கோடி செல்கிறார் பிரதமர் மோடி. கோதண்டராமர் சுவாமி கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்கிறார் அதன் பின், அரிச்சல் முனை பகுதிக்கும் செல்கிறார்.



  • Jan 18, 2024 22:51 IST
    ரயில் பாலம் சரிந்தது ஏன்? - ரயில்வே விளக்கம்

    ஹைட்ராலிக் ஜாக்குகளைப் பயன்படுத்தி ஏவும்போது, கர்டர் ஒரு முனையில் தவறி கீழே விழுந்ததால் விபத்து சென்னை, ஆதம்பாக்கம் அருகே ரயில் மேம்பாலம் சரிந்து விழுந்தது தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கம்



  • Jan 18, 2024 20:50 IST
    மோடி அரசின் நிதி குறைப்பு- சித்த ராமையா பதில்

    "நிதி குறைப்பில் ஈடுபடும் மோடி அரசின் அநீதிக்கு எதிராக எப்போதும் குரல் எழுப்பி வருகிறோம்" என கர்நாடக முதல் அமைச்சர் சித்த ராமையா கூறியுள்ளார்.



  • Jan 18, 2024 20:44 IST
    மு.க. ஸ்டாலினை சந்தித்த தா.மோ. அன்பரசன்

     

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, மத்திய அரசின் "ஸ்டார்ட் அப் இந்தியா" வெளியிட்ட 2022ம் ஆண்டிற்கான தரவரிசைப்பட்டியலில் சிறந்த புத்தொழில் சூழமைவினை கட்டமைக்கும் மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட முதல் தரவரிசை பிரிவிற்கான "Best Performer" சான்றிதழை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.



  • Jan 18, 2024 20:31 IST
    சென்னை: பாலம் இடிந்து விபத்து: உயிரிழப்புகள் இல்லை

     

    சென்னை வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை செல்லக்கூடிய பறக்கும் ரயில் பாதை கட்டுமான பணியின் போது மேம்பாலம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.
    பாரம் தாங்காமல் மேம்பாலம் திடீரென கீழே சரிந்து விழுந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில், நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
    விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.



  • Jan 18, 2024 20:20 IST
    விஜயவாடா அம்பேத்கர் சிலை நாளை திறப்பு

    உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சிலை நாளை (ஜன.19,2024) திறக்கப்பட உள்ளது.



  • Jan 18, 2024 19:57 IST
    கோடநாடு பங்களா, ஜெயலலிதாவுக்கு பூஜை; சசிகலா பேட்டி


     
    “கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு, ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையைப் பெற்றுத் தருவார் என நம்புகிறேன்.
    கோடநாடு பங்களாவில் ஜெயலலிதாவிற்குப் பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். அதிமுக ஒன்றுபடத் தொடர்ந்து முயன்று வருகிறேன். அந்த முயற்சி விரைவில் வெற்றி பெறும்" என கோடநாட்டில் சசிகலா கூறினார்.
    மேலும், 'அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டுத் தர வேண்டும்” எனவும் கூறினார்.



  • Jan 18, 2024 19:47 IST
    ஸ்ரீ ராம ஜென்ம பூமி ஆலய சிறப்பு தபால் தலைகள் வெளியீடு

    பிரதமர் நரேந்திர மோடி, ஸ்ரீ ராம ஜென்ம பூமி ஆலயம் தொடர்பான சிறப்பு தபால் தலைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.



  • Jan 18, 2024 19:34 IST
    ஜல்லிக்கட்டு, அரசுப் பணி; அமீர் கோரிக்கை

    ஜல்லிக்கட்டில் வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு இயக்குனர் அமீர் கோரிக்கை விடுத்துள்ளார்.



  • Jan 18, 2024 19:22 IST
    சென்னை பறக்கும் ரயில் கட்டுமானப் பணியில் விபத்து

    சென்னை தில்லை நகர் கங்கா நகரில் பறக்கும் ரயில் பாலம் கட்டுமானப் பணியின்போது இடிந்து விபத்து ஏற்பட்டது.



  • Jan 18, 2024 19:18 IST
    மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறு; கன்னியாகுமரி இளைஞருக்கு முன்ஜாமின் மறுப்பு

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பதிவிட்டதாக கன்னியாகுமரியை சேர்ந்த விஜல் ஜோன்ஸ் மீது புகார் அளிக்கப்பட்டது.
    இவரின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. வழக்கு விசாரணையின் போது நீதிபதி, “முதலமைச்சர், அமைச்சர்கள் குறித்து அவதூறாக பதிவு செய்துவிட்டு இனி அப்படி செய்ய மாட்டேன் எனக் கூறுவதை ஏற்க முடியாது. மனுதாரர் சிறைக்குதான் செல்ல வேண்டும்” எனக் கூறியுள்ளார்.



  • Jan 18, 2024 18:32 IST
    அ.தி.மு.க எம்.பி. சி.வி. சண்முகத்திற்கு எதிரான அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி மனு; தீர்ப்பு தள்ளிவைப்பு

    அ.தி.மு.க எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு எதிராக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது. இயந்திரத்தனமாக அவதூறு வழக்குகளை தாக்கல் செய்வதாக சி.வி.சண்முகம் தரப்பு குற்றம் சட்டியுள்ளது. அரசின் மீதும் முதலமைச்சர் மீதும் நேரடி தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், எப்படி அவதூறு கருத்து இல்லை என குறிப்பிட முடியும் என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.



  • Jan 18, 2024 18:27 IST
    பிரதமர் வருகையையொட்டி, ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றியுள்ள கடைகள் இன்று மாலை முதல் மூடல்

    பிரதமர் மோடி ஜனவரி 200ம் தேதி, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தரவுள்ளதால், கோயிலை சுற்றியுள்ள கடைகள் இன்று மாலை முதல் மூடப்படுகிறது. சனிக்கிழமை மதியம் வரை கடைகளை மூட வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இன்றும், நாளையும் கடைகளுக்கு விடுமுறை என உரிமையாளர்கள்
    பேப்பரில் எழுதி ஒட்டியுள்ளனர். பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க நாளை (ஜனவரி 19) சென்னை வருகிறார்.



  • Jan 18, 2024 17:57 IST
    வெளிநாட்டவருக்கு வீடு வாடகைக்கு கொடுத்தால் கடும் நடவடிக்கை - வேலூர் எஸ்.பி எச்சரிக்கை

    அனுமதியின்றி பங்களாதேஷ் மற்றும் இதர வெளிநாட்டவர்களுக்கு வீடு வாடகைக்கு கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



  • Jan 18, 2024 17:54 IST
    மதுரையில் புதிய அரங்கத்தில் ஜல்லிக்கட்டு - நாளை முன்பதிவு

    மதுரை, கீழக்கரையில் அமைந்துள்ள புதிய மைதானத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு நாளை முதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காளைகள், வீரர்கள் பங்கேற்க நாளை பிற்பகல் 12 மணி முதல் நாளை மறுநாள் பிற்பகல் 12 மணி வரை முன்பதிவு செய்யலாம். http://madurai.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24-ம் தேதி, அரங்கத்தை திறந்து வைத்து, ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுகிறார்.



  • Jan 18, 2024 17:14 IST
    நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கு: நீலம் ஆசாத் ஜாமின் மனு தள்ளுபடி

    நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கில் கைதாகியுள்ள நீலம் ஆசாத்தின் மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மக்களவையில் வண்ன புகைகுண்டு வீசிய வழக்கில் கைதான நீலம் ஆசாட் உள்பட 6 பேர் நீதிமன்றக் காவலில் உள்ளனர்.



  • Jan 18, 2024 17:11 IST
    தே.மு.தி.க அலுவலகத்தில் ஜன. 24-ம் தேதி மறைந்த விஜயகாந்த்தின் படத்திறப்பு

     


    மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் படத்திறப்பு விழா, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வரும் 24ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Jan 18, 2024 16:51 IST
    கலங்கரை விளக்கம் - போட் கிளப்; மெட்ரோ சுரங்கம் அமைக்கும் பணி தொடக்கம்

    சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்ட திட்டத்தில் கலங்கரை விளக்கம் - போட் கிளப் வரை சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது. ‘கழுகு’ என பெயரிடப்பட்ட இயந்திரம் 2026 அக்டோபரில் போட் கிளப் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது



  • Jan 18, 2024 16:31 IST
    மோடி வருகை; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

    சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன



  • Jan 18, 2024 16:22 IST
    காலில் விழுந்து போராட்டத்திற்கு அழைப்பு

    மத்திய அரசின் புதிய "ஹிட் அண்டு ரன்" சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க டிரைவர்களின் காலில் விழுந்து ஓட்டுனர் சங்கத்தினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்



  • Jan 18, 2024 16:00 IST
    ராமர் கோயில் திறப்பு; மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

    அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 22ம் தேதி பிற்பகல் 2.30 மணி வரை விடுமுறை என மத்திய அரசு அறிவித்துள்ளது



  • Jan 18, 2024 15:43 IST
    நாடாளுமன்ற தேர்தல்; தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழுவை அறிவித்தது காங்கிரஸ்

    நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழுவை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கே.எஸ். அழகிரி தலைமையிலான குழுவில் 35 பேர் இடம் பிடித்துள்ளனர்



  • Jan 18, 2024 15:35 IST
    `லால் சலாம்'; டப்பிங் பணியை நிறைவு செய்தார் விஷ்ணு விஷால்

    நடிகர் விஷ்ணு விஷால் `லால் சலாம்' படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார்



  • Jan 18, 2024 15:27 IST
    கொடநாடு புறப்பட்டார் சசிகலா; ஜெ மறைவிற்கு பின் முதல் முறை

    சென்னையில் இருந்து கொடநாடு புறப்பட்ட சசிகலா இன்று கொடநாடு பங்களாவில் தங்குகிறார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் முதல் முறையாக கொடநாடு செல்கிறார் சசிகலா



  • Jan 18, 2024 15:10 IST
    பத்திரிகையாளருக்கு எதிராக இ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு; பிப்ரவரி 8-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

    பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிராக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை பிப்ரவரி 8ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஜன.30, 31ல் ஆஜராக இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளதாக இ.பி.எஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது



  • Jan 18, 2024 14:51 IST
    பிரதமர் மோடி வருகையை ஒட்டி, சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

    பிரதமர் மோடி வருகையை ஒட்டி, சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்க நாளை சென்னை வரும் பிரதமர் மோடி விழா நடைபெறும் இடங்களை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு

     

    Image



  • Jan 18, 2024 14:00 IST
    பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு நீதிபதி கேள்வி

    பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு நீதிபதி கேள்வி. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தொடர்ந்த வழக்கு புலன் விசாரணை நடந்து வரும் நிலையில் எப்படி தலையிட முடியும்? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி பணப்பரிமாற்றம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து



  • Jan 18, 2024 13:59 IST
    "துருவ நட்சத்திரம்" படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டம்

    நடிகர் விக்ரம் நடித்துள்ள "துருவ நட்சத்திரம்" படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டம் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல்



  • Jan 18, 2024 13:59 IST
    தமிழகத்திற்கு ஜனவரி மாத பங்காக 2.76 டிஎம்சி நீரை திறந்து விட பரிந்துரை

    காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஜனவரி மாத பங்காக 2.76 டிஎம்சி நீரை திறந்து விட பரிந்துரை. காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பரிந்துரைத்துள்ள காவிரி ஒழுங்காற்று குழு.



  • Jan 18, 2024 13:39 IST
    உயர்ந்த பொறுப்புக்குச் சிறிதும் தகுதியில்லாமல் தரம்தாழ்ந்த அரசியல் செய்வதை இந்தியா இப்போதுதான் காண்கிறது

    ஆளுநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்குச் சிறிதும் தகுதியில்லாமல் தரம்தாழ்ந்த அரசியல் செய்வதை இந்தியா இப்போதுதான் காண்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தொண்டர்களை ஆயத்தப்படுத்தும் பயிற்சிப் பாசறையாக அமையவிருக்கிறது சேலம் இளைஞரணி மாநில மாநாடு. திருவள்ளுவரில் தொடங்கி தெருவில் நடந்து போவோர் வரை எல்லார் மீதும் காவிச் சாயம் பூசுவதை ஒன்றிய ஆட்சியாளர்களே முன்னின்று செய்கின்றனர். ஒன்றிய ஆட்சியாளர்களின் மூர்க்கத்தனமான அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை திமுகவிற்கு உண்டு



  • Jan 18, 2024 13:33 IST
    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் போட்டியாக ஆளுநர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைப்பதா?: ஸ்டாலின்

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் போட்டியாக, நியமனப் பதவியில் உள்ள ஆளுநர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைப்பதா?" ஆளுநர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைக்கும் எதேச்சதிகாரப் போக்கு இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானது - முதல்வர் ஸ்டாலின்



  • Jan 18, 2024 13:14 IST
    2 நாட்களுக்கு அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 2 நாட்களுக்கு அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Jan 18, 2024 12:42 IST
    நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

    செங்கோட்டை திமுக நகராட்சி தலைவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி;

    நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த திமுக கவுன்சிலர்கள் வராததால் தீர்மானம் தோல்வி என அறிவிப்பு

                                                                     



  • Jan 18, 2024 12:42 IST
    அம்பேத்கர் சிலை திறப்பு

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலையை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி;

    206 அடி உயரம்  கொண்ட உலகிலே மிக உயரமான அம்பேத்கர் சிலைக்கு 'சமத்துவத்தின் சிலை' (Statue of Social Justice) என்று பெயரிடப்பட்டுள்ளது



  • Jan 18, 2024 12:02 IST
    கடலூரில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சு

    போக்குவரத்து தொழிலாளர்களுடான  நாளை (ஜன.19)  பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது;

    பேச்சுவார்த்தைக்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்;

    1 வாரத்திற்குள் சிறப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து ருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்

    - கடலூரில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சு   



  • Jan 18, 2024 12:00 IST
    கொச்சி விமான நிலையத்தில் Drums வாசித்த சிவமணி



  • Jan 18, 2024 11:20 IST
    பிரதமர் மோடி நாளை சென்னை வருகை – நகர் முழுவதும் 22 ஆயிரம் போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு

     'கேலோ இந்தியா' போட்டிகளை துவங்கி வைக்க, நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

    பிரதமர் வருகையையொட்டி, சென்னை நகர் முழுவதும் 22,000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

    சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை

    சென்னையில் நடைபெறும் விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி,  முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்



  • Jan 18, 2024 10:51 IST
    மோடி நாளை தமிழகம் வருகை: தலைமைச் செயலகத்தில் ஆலோசனை

    பிரதமர் வருகையையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் தலைமையில் ஆலோசனை

    சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் மற்றும் உயர் காவல் அதிகாரிகள், மத்திய அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்பு

    'கேலோ இந்தியா' போட்டிகளை துவங்கி வைக்க, நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

    சென்னையில் நடைபெறும் விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி,  முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.



  • Jan 18, 2024 10:43 IST
    மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக நிறுத்தம்

    சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில், திடீர் இயந்திரக் கோளாறு. ஓடு பாதையில் புறப்பட்ட நிலையில், விமானம் அவசரமாக நிறுத்தம்.

    விமானியின் சாமர்த்தியத்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, 148 பயணிகள் உட்பட 160 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். 



  • Jan 18, 2024 10:41 IST
    15 யானைகள் தஞ்சம் - வனத்துறை எச்சரிக்கை

    கிருஷ்ணகிரி ஓசூர் சாணமாவு பகுதியில் 15 யானைகள் தஞ்சம் அடைந்துள்ளதால் வனத்துறை எச்சரிக்கை. சாணமாவு, தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, அஞ்செட்டி பகுதிகளில் சுற்றி வரும் யானை கூட்டம் 



  • Jan 18, 2024 10:29 IST
    தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைவு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு. தங்கம் ஒரு கிராம் ரூ.5,780க்கும், ஒரு சவரன் ரூ.46,240க்கும் விற்பனை



  • Jan 18, 2024 10:26 IST
    அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரைவில் காலை உணவு திட்டம்

    அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டத்தை விரிவுப்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்க முதல்வர் ஸ்டாலின் திட்டம். வரும் பட்ஜெட் கூட்டத்தில் இது குறித்து சாதகமான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 



  • Jan 18, 2024 10:18 IST
    வடகலை - தென்கலை பிரிவினரிடையே மீண்டும்  மோதல் 

    காஞ்சிபுரம் வடகலை - தென்கலை பிரிவினரிடையே மீண்டும்  மோதல். பழையசீவரம் பகுதியில் பார்வேட்டை உற்சவத்தில் வடகலை - தென்கலை பிரிவினரிடையே மீண்டும்  மோதல் 



  • Jan 18, 2024 09:25 IST
    திமுக இளைஞரணி மாநாடு சுடர் தொடர் ஓட்டம்

    திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டம் - தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

    சேலத்தில் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ள திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டம் 

    சென்னை, அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகில் அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்



  • Jan 18, 2024 09:25 IST
    திமுக இளைஞரணி மாநாடு சுடர் தொடர் ஓட்டம்

    திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டம் - தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

    சேலத்தில் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ள திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டம் 

    சென்னை, அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகில் அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்



  • Jan 18, 2024 09:17 IST
    டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 : தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

    டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 பணியிடங்களுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சமான கல்வித் தகுதியை நிர்ணயிப்பது குறித்து பரிசீலனை செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 



  • Jan 18, 2024 09:08 IST
    புகையிலை விற்பனை: கடைகளுக்கு உடனடியாக சீல்

    தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனையைத் தடுக்க மாநிலம் முழுவதும் 247 குழுக்கள் மூலம் கண்காணிப்பு, நடவடிக்கைகள் தீவிரம். 

    இதற்கு முன்பு விதிகளுக்குப் புறம்பாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது உடனடியாக கடைக்கு சீல் வைக்க முடிவு -மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தகவல்



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment