பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 585-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பு இல்லை
மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பு இல்லை. தூத்துக்குடியில் ஆய்வு செய்த பின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Dec 27, 2023 23:05 ISTதமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் புதிய வகை கொரோனா பரவல்
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், மதுரை, திருவள்ளூர் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புதிய வகை கொரோனாவான ஜேஎன்1 பெருந்தொற்று பரவல் உறுதியாகி உள்ளது.
இதற்கிடையில் டெல்லியில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தியுள்ள மத்திய சுகாதாரத் துறை மக்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
-
Dec 27, 2023 21:50 ISTபார்க்கிங் ஹாட் ஸ்டால் ஓடிடி தளத்தில் வெளியீடு
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பார்க்கிங் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், டிச.30ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
-
Dec 27, 2023 21:48 ISTகுரூப் 7ஏ தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
Group 7A தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் http://TNPSC.GOV.IN என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம் என தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது.
-
Dec 27, 2023 20:57 ISTஅயோத்தி ரயில் நிலையம் பெயர் மாற்றம்
அயோத்தி ரயில் நிலையம் அயோத்தி தாம் நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் ஜன.22ஆம் தேதி திறக்கப்படுகிறது.
Ayodhya Railway Junction renamed to Ayodhya Dham Junction. pic.twitter.com/z2jNMkez9h
— Press Trust of India (@PTI_News) December 27, 2023 -
Dec 27, 2023 20:45 ISTராமநாதபுரம்: நிர்மலா சீதாராமன் பெயரில் சாலை
ராமநாதபுரத்தில் உள்ள கிராமம் ஒன்றில், ரூ.17 கோடியில் மேம்பாலம் பெற்று கொடுத்ததற்கு கிராம மக்கள் நன்றி தெரிவிக்கும் வகையில் சாலைக்கு நிர்மலா சீதாராமன் சாலை என பெயரிட்டுள்ளனர்.
-
Dec 27, 2023 20:35 ISTதூத்துக்குடி: ஆவணங்களை பெற சிறப்பு முகாம்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த ஆவணங்கள், சான்றுகளை பெற ஏதுவாக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இந்த முகாம்கள் டிச.28 மற்றும் 29 தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. -
Dec 27, 2023 20:17 ISTசென்னை: பாய்லர் வெடித்து உயிரிழப்பு - ரூ.5 லட்சம் நிவாரணம்
சென்னை தண்டையார்பேட்டையில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்ட நிலையில், உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. -
Dec 27, 2023 19:44 ISTபெசன்ட் நகர் கடற்கரையில் வெடிகுண்டு? மர்ம நபர் மின்னஞ்சல்
சென்னையில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உள்பட 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு மர்ம நபர் மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.
இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள் பெசன்ட் நகர் கடற்கரைக்கு விரைந்துள்ளனர். அங்கு சோதனைகள் நடைபெறுகின்றன. -
Dec 27, 2023 19:39 ISTடெல்லியில் ஜே.என்.1 முதல் பாதிப்பு கண்டுபிடிப்பு
டெல்லியில் கோவிட்-19 பெருந்தொற்றின் துணை வகையான ஜேஎன்1 பாதிப்பு முதன் முதலில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பு ஏற்கனவே கேரளம் மற்றும் தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. -
Dec 27, 2023 19:34 ISTமும்பை: ரசிகர்களை சந்தித்த சல்மான் கான்
நடிகர் சல்மான் கான், தனது பிறந்த நாளை முன்னிட்டு மும்பையில் இன்று ரசிகர்களை சந்தித்தார்.
சல்மான் கான் இன்று தனது 58வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். -
Dec 27, 2023 19:34 ISTமும்பை: ரசிகர்களை சந்தித்த சல்மான் கான்
நடிகர் சல்மான் கான், தனது பிறந்த நாளை முன்னிட்டு மும்பையில் இன்று ரசிகர்களை சந்தித்தார்.
சல்மான் கான் இன்று தனது 58வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். -
Dec 27, 2023 19:34 ISTமும்பை: ரசிகர்களை சந்தித்த சல்மான் கான்
நடிகர் சல்மான் கான், தனது பிறந்த நாளை முன்னிட்டு மும்பையில் இன்று ரசிகர்களை சந்தித்தார்.
சல்மான் கான் இன்று தனது 58வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். -
Dec 27, 2023 19:34 ISTமும்பை: ரசிகர்களை சந்தித்த சல்மான் கான்
நடிகர் சல்மான் கான், தனது பிறந்த நாளை முன்னிட்டு மும்பையில் இன்று ரசிகர்களை சந்தித்தார்.
சல்மான் கான் இன்று தனது 58வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். -
Dec 27, 2023 19:08 ISTரஷ்ய அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்தோ-பசிபிக், உக்ரைன் மோதல்கள், காசா நிலைமை, ஆப்கானிஸ்தான் மற்றும் பிற பிரச்னைகள் குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் விவாதித்தார்.
A wide ranging and useful meeting with FM Sergey Lavrov of Russia.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) December 27, 2023
As strategic partners, discussed the international situation and contemporary issues. Exchanged views on Indo-Pacific, the Ukraine conflict, the Gaza situation , Afghanistan and Central Asia, BRICS, SCO, G20 and… pic.twitter.com/Uk9VTbZm5y -
Dec 27, 2023 18:38 ISTஇறுதி வாக்காளர் பட்டியல் ஜன. 22-ல் வெளியிடப்படும் - தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்தாண்டு ஜனவரி 22ம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
-
Dec 27, 2023 18:36 ISTசங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் பலி!
சங்ககிரி காவல் நிலையத்தில் மர்ம பொருள் வெடித்ததில் தகரம் சிதறி மேலே பட்டடஹல் நியாமதுல்லா (47) என்பவர் பலி. பரத் என்பவர் படுகாயம். விபத்து நடந்த இடத்தில் சேலம் மாவட்ட எஸ்.பி அருண் கபிலன் நேரில் விசாரணை நடத்தினார். காவல் நிலையத்தில் பழைய பொருட்களை எரித்தபோது விபத்து நடந்துள்ளது. காயமடைந்த பரத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
Dec 27, 2023 18:26 ISTகாங்கிரஸ் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்
2024 மக்களவைத் தேர்தலுக்கான தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளராக பாவியா நரசிம்ம மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரளா காங்கிரஸ் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளராக லாவண்யா பல்லால் ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திரா காங்கிரஸ் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளராக அனில் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தெலங்கானா காங்கிரஸ் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளராக சுஜாதா பால் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
-
Dec 27, 2023 18:19 ISTசேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சோதனை
பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் கைதானதைத் தொடர்ந்து, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் 3 குழுக்களாகப் பிரிந்து சோதனை செய்து வருகின்றனர். துணை வேந்தரின் அலுவலகம், இல்லம் ஆகியவற்றிலும் சோதனை நடைபெறுகிறது.
-
Dec 27, 2023 18:14 ISTஅமோனியா வாயுக் கசிவு: கோரமண்டல் தொழிற்சாலை செயல்படத் தடை விதித்து நோட்டீஸ் - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் தொழிற்சாலை மீண்டும் செயல்படத் தடை விதித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் ஒட்டியுள்ளது. இன்று காலை கோரமண்டல் தொழிற்சாலையில் இருந்து அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டதால் சுற்றுவட்டாரத்திலிருந்த பலருக்கும் மூச்சுத் திணறல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
-
Dec 27, 2023 18:10 ISTM.Phil படிப்புகளை நிறுத்தியது யு.ஜி.சி
மாணவர்கள் எம்.பில் (M.Phil) படிப்புகளில் சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக மாணியக் குழுவான யு.ஜி.சி அறிவுறுத்தியுள்ளது. எம்.பில் படிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர் சேர்க்கையை நிறுத்த கல்லூரிகளுக்கு யு.ஜி.சி உத்தரவிட்டுள்ளது.
-
Dec 27, 2023 17:38 ISTசென்னையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது எப்படி? நிபுணர் குழு களத்தில் ஆய்வு
சென்னையில் எண்ணூர் தொழிற்சாலையில் இருந்து கடலில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது எப்படி என்று ஐ.ஐ.டி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிபுணர் குழுவினர் களத்தில் ஆய்வு செய்தனர். ஆய்வின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
-
Dec 27, 2023 17:32 ISTஎண்ணூர் அமோனியா வாயுக்கசிவு முற்றிலும் நிறுத்தம்; மக்கள் அச்சப்பட வேண்டாம் - மாசு கடுப்பாட்டு வாரியம்
எண்ணூர் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய அமோனியா வாயுக்கசிவு 20 நிமிடங்களில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. எனவே மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பாதிக்கப்பட்ட இடங்களில் மக்களுக்கு மருத்துவ பராமரிப்பு மற்றும் சுகாதார ஆலோசனைகளை வழங்குவதற்காக 5 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
-
Dec 27, 2023 16:46 ISTசிறை தண்டனைக் கைதிகள் விடுப்பு கோரும் மனுக்கள் : நீதிபதி புதிய தகவல்
சிறை தண்டனைக் கைதிகள் விடுப்பு கோரும் மனுக்களில் பரோல் என்பதை குறிப்பிடக் கூடாது; சாதாரண விடுப்பு அல்லது அவசரகால விடுப்பு என்ற இரண்டு வார்த்தைகளே பயன்பாட்டில் உள்ளன என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பிற மாநிலங்களில் உள்ள விதிகளில் பரோல் என்ற வார்த்தை உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் தண்டனை நிறுத்திவைப்புச் சட்டத்தில் வேறு விதிகள் உள்ளன. பரோல் என்ற வார்த்தையும், அதன் விதிமுறைகளும் இங்கு கடைபிடிக்கப்படவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
-
Dec 27, 2023 16:43 IST"M.Phil படிக்க மாணவர்களை சேர்க்காதீர்" : மானியக் குழு சுற்றறிக்கை
வரும் கல்வியாண்டில், M.Phil படிப்பிற்கு மாணவர்களை சேர்க்கக்கூடாது. M.Phil அங்கீகரிக்கப்பட்ட பட்டம் இல்லை, கடந்த ஆண்டு இதற்கான அரசாணை வெளியீடு.
சில பல்கலை., கல்லூரிகள் M.Phil-க்கு மாணவர்களை சேர்ப்பதாக வந்த புகாரை அடுத்து, மானியக் குழு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
-
Dec 27, 2023 16:01 ISTபாய்லர் வெடித்து விபத்து - வழக்கு பதிவு
சென்னை, தண்டையார்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவுகளின் கீழ் ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு
-
Dec 27, 2023 16:00 ISTசினிமா சண்டை பயிற்சியாளர் ஜூனியர் சோமு மரணம்
நடிகர்கள் பிரபு, பாண்டியன், டி.ராஜேந்தர் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றிய ஜூனியர் சோமு என்கிற எஸ்.எஸ். கோபால் வயது மூப்பு காரணமாக இன்று காலை 11 மணிக்கு காலமானார்.
-
Dec 27, 2023 15:59 ISTபெரியார் பல்கலை. துணை வேந்தர் ஜெகநாதன் தொடர்புடைய 7 இடங்களில் சோதனை
ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் காரணமாக நேற்று கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலை. துணை வேந்தர் ஜெகநாதன் தொடர்புடைய 7 இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். துணைவேந்தர் அறை, அவரது இல்லம், விருந்தினர் விடுதி, பதிவாளர் அலுவலகம், பதிவாளர் இல்லம் மற்றும் சூரமங்கலம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெறுகிறது
-
Dec 27, 2023 15:27 ISTஆமையைக் கொன்று சமைத்த வீடியோ : தமிழக வனத்துறை விளக்கம்
வனப்பகுதியில் சிறப்பு படையினர் ஆமையைக் கொன்று சமைப்பதாக சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ, 4 ஆண்டுகள் பழைய வீடியோ, தமிழ்நாட்டில் நடந்தது அல்ல என வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.
-
Dec 27, 2023 15:23 ISTகொரோனா - கூலித் தொழிலாளி பலி
புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 58 வயதான கூலித் தொழிலாளி பலி
-
Dec 27, 2023 15:00 ISTதொகுதி பங்கீடு - காங். 2 நாள் ஆலோசனை
தொகுதி பங்கீடு - காங். 2 நாள் ஆலோசனை. திமுகவுடன் கூட்டணியில் உள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது தமிழக காங். தலைவர் கே.எஸ். அழகிரி, செல்வப் பெருந்தகை, மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்டோருக்கு அழைப்பு
-
Dec 27, 2023 14:11 ISTவிரைவில் ஓபிஎஸ் சிறைக்கு செல்வார் : எடப்பாடி பழனிசாமி
விரைவில் ஓபிஎஸ் சிறைக்கு செல்வார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி சில ரகசியங்களை வெளியிட்டால், எடப்பாடி பழனிசாமி சிறை செல்ல நேரிடும் என ஓபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில் ஈபிஎஸ் பதிலடி ஓபிஎஸ் மீதான வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது, அதில் அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் - ஈபிஎஸ் ஜெயலலிதாவிற்கு ₨2 கோடி கடன் கொடுத்ததாக ஓபிஎஸ் சொன்னது மோசமான வார்த்தை - ஈபிஎஸ்
-
Dec 27, 2023 14:10 ISTபாய்லர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஐ.ஓ.சி நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
-
Dec 27, 2023 14:10 ISTகன்னியாகுமரி, திருநெல்வேலி : 31ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வரும் 31ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Dec 27, 2023 13:26 ISTஅம்மோனியா வாயு கசிவு : ஆளுநர் ஆர்.என்.ரவி கவலை
சென்னை எண்ணூரில் நிகழ்ந்த அம்மோனியா வாயு கசிவு சம்பவம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கவலை. எண்ணூரில் உள்ள தொழிற்சாலையில் நிகழ்ந்த வாயுக்கசிவு துரதிருஷ்டவசமானது - ஆளுநர் ஆர்.என்.ரவி பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் - ஆளுநர் ஆர்.என்.ரவி
-
Dec 27, 2023 13:23 ISTஎண்ணூர் கோரமண்டல் நிறுவனத்திற்கு வர இருந்த 8 டன் அம்மோனியா நிறுத்தம்
சென்னை எண்ணூர் கோரமண்டல் நிறுவனத்திற்கு வர இருந்த 8 டன் அம்மோனியா நிறுத்தம். எண்ணூர் துறைமுகத்திலிருந்து தொழிற்சாலைக்கு நாளை கொண்டுவரப்பட இருந்த அம்மோனியா நிறுத்தம் அம்மோனியா கசிவை தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கோரமண்டல் நிறுவன பொது மேலாளர் அறிவிப்பு. தமிழ்நாடு கடல் சார் வாரியத்திற்கு கோரமண்டல் நிறுவனம் தரப்பில் கடிதம்.
-
Dec 27, 2023 13:21 ISTபாய்லர் வெடித்து பயங்கர விபத்து 4 பேர் படுகாயம்
சென்னை தண்டையார்பேட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஆயில் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்ததால் 4 பேர் படுகாயம்
-
Dec 27, 2023 12:30 ISTபஜ்ரங் புனியாவுடன் மல்யுத்தம் விளையாடிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுடன் மல்யுத்தம் விளையாடிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் மீதான பாலியல் வழக்கில் அரசு நடவடிக்கை எடுக்காததால் தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக பஜ்ரங் புனியா அறிவித்து இருந்த நிலையில், ஹரியானாவில் அவரை சந்தித்து உரையாடியுள்ளார் ராகுல் காந்தி
वर्षों की जीतोड़ मेहनत, धैर्य एवं अप्रतिम अनुशासन के साथ अपने खून और पसीने से मिट्टी को सींच कर एक खिलाड़ी अपने देश के लिए मेडल लाता है।
— Rahul Gandhi (@RahulGandhi) December 27, 2023
आज झज्जर के छारा गांव में भाई विरेंद्र आर्य के अखाड़े पहुंच कर ओलंपिक पदक विजेता बजरंग पूनिया समेत अन्य पहलवान भाइयों के साथ चर्चा की।
सवाल… pic.twitter.com/IeGOebvRl6 -
Dec 27, 2023 12:28 ISTநிர்மலா சீதாராமனின் பதில் பொறுப்பற்றது- திருமாவளவன்
தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பதில் பொறுப்பற்றது. பிரதமரிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவிப்பது ஏற்புடையது அல்ல;
நிர்மலா சீதாராமன் பிரதமரின் ஒப்புதலோடு பேசுகிறாரா அல்லது தான்தோன்றித்தனமாக பேசுகிறாரா அல்லது கொள்கை முடிவாக இதை பேசுகிறார்களா..?;
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும்; மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை- நெல்லையில் திருமாவளவன் பேச்சு
-
Dec 27, 2023 12:27 ISTசென்னை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் விபத்து
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஆயில் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்ததால் இருவருக்கு காயம்
ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்ததால் பரபரப்பு
-
Dec 27, 2023 12:01 ISTகாங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய நீதிப் பயணம்
காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய நீதிப் பயணம் வரும் ஜனவரி 14 அன்று மணிப்பூரில் தொடங்கி மார்ச் 20ல் மும்பையில் முடிவுபெறும்;
14 மாநிலங்களில் 6,200 கி.மீ நடைப் பயணத்தை தொடங்க காங்.கட்சி திட்டம்
-
Dec 27, 2023 11:58 ISTஅமோனியா வாயுக் கசிவு- தாமாக முன்வந்து விசாரிக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
எண்ணூர் கோரமண்டல் ஆலையால் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு தொடர்பாக தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முடிவு!
விடுமுறை முடிந்து ஜனவரி 2ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்படவுள்ளது.
-
Dec 27, 2023 11:25 ISTசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் நிறுத்தம்
செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 2 மாதங்களாக வெளியேற்றப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டது.
ஏரிக்கு நீர் வரத்து குறைந்ததால் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம்
24 அடி கொண்ட ஏரியின் நீர் மட்டம் 22.24 அடியாக உள்ளது
-
Dec 27, 2023 11:22 ISTஅம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த மா.சு
அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மக்களை சந்தித்து நலம் விசாரித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
-
Dec 27, 2023 11:22 ISTஅம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ முகாம்
எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை மாநகராட்சியின் சார்பில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
Dec 27, 2023 11:21 ISTமு.க.ஸ்டாலின் பேச்சு
சமூக நீதி, சமத்துவம், சமதர்மம் ஆகிய மானிட நெறிகளை தமிழ்நாட்டில் நிலைநாட்ட உழைத்து வருகிறோம்;
டாக்டர்.அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடி வருகிறோம்;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் நலனுக்காக அயராது உழைப்பவர்களுக்கு விருதும் பரிசு தொகையும் வழங்கப்படுகிறது;
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் சமூகம், கல்வி, பொருளாதார நிலையை உயர்த்த பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வருகிறோம்
மக்கள் மனதில் இருந்து சமூக வளர்ச்சியும், சிந்தனை வளர்ச்சியும் ஏற்பட்டாலே மாற்றம் சாத்தியமாகும்;
இது எளிதல்ல இதற்கான விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறோம்”
- சென்னை கலைவாணார் அரங்கத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
Dec 27, 2023 11:00 ISTகோரமண்டல் ஆலையின் செயல்பாடு நிறுத்தி வைப்பு: அமைச்சர்
வாயுக் கழிவு ஏற்பட்ட கோரமண்டல் ஆலையின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு ஆலையில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். நள்ளிரவில் ஏற்பட்ட வாயுக் கசிவால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை- அமைச்சர் மெய்யநாதன்
-
Dec 27, 2023 10:11 ISTஆலைகளில் பாதுகாப்புத் தணிக்கை வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
ஆலைகளில் பாதுகாப்புத் தணிக்கை வேண்டும்.எண்ணூர் உர ஆலையில் அமோனியா வாயுக்கசிவால் மக்கள் பாதிப்பு.
அனைத்து ஆலைகளிலும் பாதுகாப்புத் தணிக்கை மேற்கொள்ள வேண்டும் - தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்...
-
Dec 27, 2023 10:08 ISTஅமோனியா வாயு: பாதிக்கப்பட்ட மக்களிடம் மா.சுப்ரமணியன் நலம் விசாரிப்பு
எண்ணூரில் அமோனியா வாயு கசிவினால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
-
Dec 27, 2023 10:06 ISTகோரமண்டல் ஆலையை தற்காலிகமாக மூட அரசு உத்தரவு
எண்ணூரில் வாயுக் கசிவு ஏற்பட்ட கோரமண்டல் ஆலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவு
ஆய்வுக்குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழ்நாடு அரசு
-
Dec 27, 2023 10:06 ISTகோரமண்டல் ஆலையை தற்காலிகமாக மூட அரசு உத்தரவு
எண்ணூரில் வாயுக் கசிவு ஏற்பட்ட கோரமண்டல் ஆலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவு
ஆய்வுக்குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழ்நாடு அரசு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.