/indian-express-tamil/media/media_files/zjTSaaFpKzMFat3DzLPP.jpg)
IE Tamil Updates
Tamilnadu | India | பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 582-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்
புழல் ஏரியில் நீர்இருப்பு 3010 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 46 கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 777 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 28 கனஅடி.
கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு முழு கொள்ளவை எட்டி 21-வது நாளாக உபரிநீர் வழிந்தோடுகிறது. நீர்வரத்து 13 கனஅடியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Dec 24, 2023 22:42 IST
அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்தும்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
-
Dec 24, 2023 21:56 IST
தூத்துக்குடியில் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 8 பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கனமழை பாதிப்பு காரணமாக வரும் 26 முதல் 30ம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது
-
Dec 24, 2023 21:26 IST
தமிழக மழை வெள்ள பாதிப்பு; ஸ்டாலினிடம் கேட்டறிந்த மோடி
சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மழை, வெள்ள பாதிப்புக்கு நிவாரண நிதி வழங்குமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
Dec 24, 2023 20:41 IST
மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக குழு; ஒலிம்பிக் சங்கத்திடம் மத்திய அரசு கோரிக்கை
ஞாயிற்றுக்கிழமை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) அமைப்பை இடைநீக்கம் செய்த பிறகு, விளையாட்டு அமைச்சகம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை கூட்டமைப்பின் விவகாரங்களை நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் தற்காலிக குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டது.
-
Dec 24, 2023 20:38 IST
டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 காலி பணியிடங்கள் 5,860ஆக அதிகரிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 காலி பணியிடங்கள் 5,860ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலில் 5240 காலியிடங்கள் இருந்தநிலையில், தற்போது புதிதாக 620 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, காலியிடங்கள் 5,860 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
Dec 24, 2023 20:24 IST
தென் மாவட்ட பள்ளி மாணவர்கள் கல்வி பாதிக்காத வண்ணம் நடவடிக்கை
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இந்த மாவட்டங்களில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அவரின் அறிவுரையின்படி இந்த 4 மாவட்டங்களிலும் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வண்ணம் இருக்க பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள் மற்றும் கூடுதலாக 2 இணைச் சீருடைகள் ஆகியவை அருகாமையிலுள்ள மாவட்டங்களிலிருந்து பெற்று வழங்கப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித்துறை செயலர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
-
Dec 24, 2023 19:51 IST
முட்டை கொள்முதல் விலை உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில் ரூ.5.75 காசுகளாக உயர்ந்துள்ளது
-
Dec 24, 2023 19:39 IST
தூத்துக்குடியில் டிச.31 வரை சுங்கக் கட்டண விலக்கு; மாவட்ட ஆட்சியர் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 31 வரை சுங்கக் கட்டண விலக்களித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்
-
Dec 24, 2023 19:05 IST
தமிழ்நாட்டில் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 20 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். -
Dec 24, 2023 18:49 IST
தயாநிதி மாறன் பேச்சுக்கு காங்கிரஸ் மௌனம் காப்பது ஏன்? கைலாஷ் கேள்வி
“நாட்டில் பிளவை ஏற்படுத்த நினைப்பவர்கள் அம்பலமாகி வருகின்றனர். அவர்கள் ஐஎன்டிஐஏ கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர்.
தயாநிதி மாறனின் கருத்துக்கு காங்கிரஸ் மௌம் காப்பது துரதிருஷ்டவசமானது” என பாஜக மூத்தத் தலைவர் கைலாஷ் திமுக எம்பி தயாநிதி மாறனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். -
Dec 24, 2023 18:21 IST
மகள்களின் மானத்தை விட விருது பெரிதல்ல- பஜ்ரங் புனியா
“நம் சகோதரிகள் மற்றும் மகள்களின் மரியாதையை விட விருது பெரிதல்ல. எங்களுக்கு முதலில் நீதி கிடைக்க வேண்டும்” என மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.
-
Dec 24, 2023 18:19 IST
ரயில்வே ஊழியருக்கு பாராட்டு
பெருமழையின்போது, தூத்துக்குடி மாவட்டம் தாதன்குளம் ரயில்வே தண்டவாளம் பாதிக்கப்பட்டதை சரியான நேரத்தில் தகவல் கொடுத்து 800 பேரின் உயிரை காப்பாற்றிய ரயில்வே ஊழியர் செல்வக் குமாருக்கு ரூ.5 ஆயிரம் சன்மானம் வழங்கி ரயில்வே பாராட்டு தெரிவித்துள்ளது. -
Dec 24, 2023 16:57 IST
மத்திய ரயில்வே மண்லத்தில் 50 ரயில் நிலையங்களில் பி.எம். மோடி செல்ஃபி பாயிண்ட் அமைக்க ரூ. 1.62 கோடி செலவு
மத்திய ரயில்வே மண்லத்தில் 50 ரயில் நிலையங்களில் பி.எம். மோடி செல்ஃபி பாயிண்ட் அமைக்க ரூ. 1.62 கோடி செலவு
மத்திய ரயில்வே மண்லடத்துக்கு உட்பட்ட 50 ரயில் நிலையங்களில் பிரதமர் மோடியின் படத்துடன் கூடிய செல்ஃபி பாயிண்ட்களை அமைக்க ரூ. 1.62 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ-யில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே மண்டலம் தெரிவித்துள்ளது.
-
Dec 24, 2023 16:45 IST
பகுத்தறிவுப் பாதையில் நடைபோடச் செய்த தந்தை பெரியாரின் புகழைப் போற்றுவோம் - மு.க. ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பண்பாட்டு ரீதியாக ஒடுக்கப்பட்டு, அடையாளங்கள் சிதைக்கப்பட்ட தமிழினத்தின் சுயமரியாதையைத் தட்டியெழுப்பி, சமத்துவ நெறியே தமிழர் நெறி எனப் பகுத்தறிவுப் பாதையில் நம்மையெல்லாம் நடைபோடச் செய்த தந்தை பெரியாரின் புகழைப் போற்றுவோம்.
கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு எதிர்பார்க்கும் தலைவர் பெரியார் என்று பாவேந்தர் பாடியதைக் காலந்தோறும் முழங்குவோம், வீறுகொண்டு எழுந்த நாம் ஒருபோதும் வீழமாட்டோம் எனச் சூளுரைத்து வீணர்களை வீழ்த்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.
-
Dec 24, 2023 16:36 IST
'அரசியலில் உதயநிதி ஒரு கத்துக்குட்டி' - எல்.முருகன் விமர்சனம்
மத்திய இணையமைச்சர் எல். முருகன்: “உதயநிதி ஒன்றும் கருணாநிதி கிடையாது; அரசியலில் உதயநிதி ஒரு கத்துக்குடி; அவர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது, அரசியலில் பக்குவப்பட்ட தலைவராக நடந்துகொள்ள வேண்டும். மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசுக்கு வேலை செய்யும்போது தமிழக அரசுக்குதான் நல்ல பலன் கிடைக்கும்; அதைவிட்டுவிட்டு அவர் கேலி, கிண்டலோடு பேசி அமைச்சருக்கான தராதரத்தைக் குறைத்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
-
Dec 24, 2023 15:24 IST
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வேண்டாம்... டிச. 29-ல் வி.சி.க ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வேண்டாம்; மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டிசம்பர் 29-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் வி.சி.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வி.சி.க தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
-
Dec 24, 2023 14:45 IST
மின் ஊழியர் உயிரிழப்பு
தொடர் கனமழை வெள்ளத்தால் துண்டிக்கபட்டு இருந்த மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மின் ஊழியர் அண்டோ முருகன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.
-
Dec 24, 2023 14:26 IST
சகோதரத்துவத்தைப் போற்றும் யாவருக்கும் எனது மனம் நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்: திருமா
“இயேசு பெருமானின் போதனைகள் வெறுப்பு அரசியலுக்கு, உயர்வு - தாழ்வு என்னும் பாகுபாட்டுக்களுக்கு சாதி, மதம், மொழி, இனம், தேசம் போன்ற அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் சகோதரத்துவத்தால் இணைக்கக்கூடியது சகோதரத்துவத்தைப் போற்றும் யாவருக்கும் எனது மனம் நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்” - விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி
-
Dec 24, 2023 14:21 IST
விசைப்படகு திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
பாம்பன்: கடலில் நிறுத்தி வைத்திருந்த விசைப்படகு திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
-
Dec 24, 2023 13:57 IST
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் விரைவில் முழுமையாக மின் விநியோகம்
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் விரைவில் முழுமையாக மின் விநியோகம் - தங்கம் தென்னரசு.
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் விரைவில் முழுமையாக மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் விரைந்து முடிக்க வேண்டிய பணிகள் குறித்து இன்று காலை தூத்துக்குடி… pic.twitter.com/owP2eWKOAH
— Thangam Thenarasu (@TThenarasu) December 24, 2023 -
Dec 24, 2023 13:55 IST
வெள்ளத்தில் அடித்து சென்ற இருவர் சடலமாக மீட்பு
திருச்செந்தூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருவர் சடலமாக மீட்பு கடந்த 18ஆம் தேதி, நாசரேத் திருவள்ளுவர் காலனியை சேர்ந்த முத்துலிங்கம், டேவிட்சன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர் குரும்பூர் அடுத்த காரவிளையில் வெள்ளத்தில் இருவரும் அடித்து செல்லப்பட்ட நிலையில், இன்று சடலமாக கண்டெடுப்பு வெள்ளக்கோவில் வாய்க்கால் அருகே முத்துலிங்கம் உடலும், சுகந்தலை காலனி அருகே டேவிட்சன் உடலும் மீட்பு இருவரின் உடல்களையும் மீட்டு போலீசார் விசாரணை.
-
Dec 24, 2023 13:52 IST
தமிழகம், புதுச்சேரியில் வரும் 30ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
30ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு. தமிழகம், புதுச்சேரியில் வரும் 30ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும் -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
-
Dec 24, 2023 13:27 IST
எம்ஜிஆரின் நினைவிடத்தில் ஓ.பி.எஸ் மரியாதை
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
-
Dec 24, 2023 12:55 IST
கிறிஸ்துமஸ் பண்டிகை- அன்புமணி வாழ்த்து
மன்னிப்பே மனிதவாழ்வின் சிறந்த குணம் என்பதை போதித்த இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
-
Dec 24, 2023 12:48 IST
நெல்லையில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி
70 குடிநீர் நீரேற்று நிலையங்கள் பழுது ஏற்பட்டதில் 34 சரி செய்யப்பட்டுள்ளன; இன்னும் 36 குடிநீர் திட்டங்கள் சரி செய்யப்பட வேண்டி உள்ளது, அதற்காக பணிகள் விரைவில் தொடங்கும்; தூத்துக்குடியில் சில பகுதிகளில் போக்குவரத்தை சீர்செய்வதில் சிக்கல் உள்ளது; போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெறும்” - நெல்லையில் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி
-
Dec 24, 2023 12:44 IST
இயல்பு நிலைக்கு திரும்பிய திருச்செந்தூர் முருகன் கோயில்
6 நாட்களுக்கு பின், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த திருச்செந்தூர், தற்போது, அனைத்து ஊர்களுக்கும் பொது போக்குவரத்து தொடங்கியதால் பக்தர்கள் வருகை
-
Dec 24, 2023 12:44 IST
மொத்தம் 750 குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளன- சிவ்தாஸ் மீனா
கூட்டு குடிநீர் திட்டத்தில் மாற்று வழியில் குடிநீர் வழங்க ஏற்பாடு
நெல்லை, தூத்துக்குடியில் மொத்தம் 750 குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளன. 328 குளங்கள் தற்போது உடைந்த நிலையில் உள்ளன. 2 மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
2 மாவட்டங்களில் 175 இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன.
போக்குவரத்து சரிசெய்ய முடியாத இடங்களில் மாற்று ஏற்பாடு செய்யப்படுகிறது. வெள்ள பாதிப்பு கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்த பின், முதல்வர் அறிவித்த நிவாரணம் வழங்கப்படும். அரசால் முடிந்த அளவிற்கு இன்சூரன்ஸ் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்யப்படும்-தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா
-
Dec 24, 2023 12:37 IST
மேலும் 10 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்
மொத்தமாக 45 போலீஸ் டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்
-
Dec 24, 2023 12:37 IST
மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து
கோபமும் பொறாமையும் மனிதனைக் கொன்றுவிடும் சக்தி படைத்தவை” என்பன போன்ற தனி மனிதரின் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் போதனைகளை வழங்கியவர் புனிதர் இயேசுநாதர்;
அவர் பிறந்த திருநாளில் அனைத்துச் சமுதாய மக்களையும் அரவணைத்து அன்பு காட்டிடும் இந்த அரசின் சார்பில் கிறித்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
- மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து
-
Dec 24, 2023 12:35 IST
ஜெயக்குமார் பேட்டி
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பான முறையில் தனது கருத்துகளை தெரிவிக்க வேண்டும் - ஜெயக்குமார் பேட்டி
-
Dec 24, 2023 12:01 IST
இந்திய மல்யுத்த கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம்
பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு மல்யுத்த வீரர்கள் எதிர்ப்பு;
இந்திய மல்யுத்த கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் நடவடிக்கை
-
Dec 24, 2023 11:59 IST
நெல்லையில் சிவ்தாஸ் மீனா ஆய்வு
நெல்லை: பெருமழை வெள்ளத்தால் தாமிரபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கட்டமைப்புகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பார்வையிட்டார்.
பாதிப்புகளை விரைந்து சரி செய்து குடிநீர் வழங்கும் பணிகளை தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவு
-
Dec 24, 2023 11:51 IST
மத்தியக்குழு வந்த பிறகே டிச.21ல் முதல்வர் தூத்துக்குடி சென்றார்- அண்ணாமலை
மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் முனைப்பில் திமுக உள்ளது. நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தாமல் மத்திய அரசை உதயநிதி வம்புக்கு இழுக்கிறார்.
மத்தியக்குழு வந்த பிறகே டிச.21ல் முதல்வர் தூத்துக்குடி சென்றார்- அண்ணாமலை
-
Dec 24, 2023 11:49 IST
உதயநிதி ஸ்டாலின் கேள்வியால்தான் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி செல்கிறார் -வைகோ
உதயநிதி கேள்வி எழுப்பியதாலேயே ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய தூத்துக்குடி செல்கிறார்- வைகோ
-
Dec 24, 2023 11:47 IST
துரோகியை வீழ்த்தி மீண்டும் ஜனநாயகத்தை நிலை நாட்டுவோம்
"தொண்டர்கள்தான் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பொதுநல நோக்கில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கப்பட்ட விதியை தன்னலத்திற்காக மாற்றிய துரோகியை வீழ்த்தி மீண்டும் ஜனநாயகத்தை நிலை நாட்டுவோம் என உறுதி ஏற்போம்
- சென்னை எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஓ.பி.எஸ் அணியினர் உறுதிமொழி
-
Dec 24, 2023 11:46 IST
தொல் திருமாவளவன் பேட்டி
தமிழக அரசு கோரிய பேரிடர் நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. ஆண்டுதோறும் தரக்கூடிய பேரிடர் நிதியைத் தான் மத்திய அரசு வழங்கியது. சிறப்பு நிதி எதுவும் வழங்கவில்லை- தொல் திருமாவளவன் பேட்டி
-
Dec 24, 2023 11:46 IST
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இபிஎஸ் அஞ்சலி
மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களும் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
-
Dec 24, 2023 11:39 IST
தந்தை பெரியாரின் நினைவு நாள்- கமல்ஹாசன் ட்வீட்
பேதம் பார்ப்போருக்கும், பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பித்துப் பிழைப்போர்க்கும், ஆணெனப் பெண்ணென ஆதிக்கம் செலுத்துவோருக்கும் இன்றைக்கும் சிங்கக் கனவாக இருக்கும் தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று அவர்தம் சிந்தனையையும் உரைகளையும் எழுத்துகளையும் முன்னெடுக்க உறுதி எடுப்போம். அவரது…
— Kamal Haasan (@ikamalhaasan) December 24, 2023 -
Dec 24, 2023 11:28 IST
8 நாட்களுக்கு பின் போக்குவரத்து தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தரைமட்ட பாலம் தற்காலிக சீரமைப்பு
400க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் உழைப்பால் 8 நாட்களுக்கு பின் போக்குவரத்து தொடக்கம்
-
Dec 24, 2023 11:19 IST
நடிகர் 'போண்டா' மணி மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்!
பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன். என் மீது மிகுந்த அன்பும், நட்பும், மரியாதையும் கொண்ட நல்ல மனிதர்.
— Vijayakant (@iVijayakant) December 24, 2023
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மற்றும் (1-2) #போண்டாமணி pic.twitter.com/6v2CgrYd3a -
Dec 24, 2023 11:15 IST
பெரியாரின் உருவ சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை
தந்தை பெரியாரின் 50வது நினைவு தினத்தை ஒட்டி அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் உருவ சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
உடன் அமைச்சர்கள் துரை முருகன், சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்
-
Dec 24, 2023 11:14 IST
அந்த தவிப்பும் ஆற்றாமையும்தான் மனிதனுக்கான அடையாளம்- எம்.பி., சு.வெங்கடேசன்
உணவுப்பொட்டலங்களை வழங்குவதில் இருக்கும் பிரச்சனை பற்றி ஹெலிகாப்டரை இயக்கும் விமானிகளோடு பேசிக்கொண்டிருந்தேன்.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) December 24, 2023
“நாங்கள் மக்களுக்கு நெருக்கமாகத்தான் போக முயற்சிக்கிறோம்.
கீழே இறங்கினால் மரங்கள் சாய்கின்றன. கூரைகளும் ஓடுகளும் பறக்கின்றன. மேலே உயரம் போனால் உணவுப்பொட்டலங்கள் விழுந்து… pic.twitter.com/5SeGyBAO9i -
Dec 24, 2023 10:45 IST
ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
8 நாட்கள் கழித்து மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் வலைகளை சேதப்படுத்தி இலங்கை கடற்படை அட்டூழியம்
மீன் பிடிக்க முடியாமல் கவலையில் கரை திரும்பிய மீனவர்கள். படகு ஒன்றிற்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை நஷ்டம்
-
Dec 24, 2023 10:38 IST
சாக்ஷி மாலிக்கை பார்க்கையில் இதயம் நொறுங்கியது: ரித்திகா சிங்
சாக்ஷி மாலிக்கை பார்க்கையில் இதயம் நொறுங்கியது -நடிகை ரித்திகா சிங் வேதனை
சாக்ஷி மாலிக் போன்ற ஒரு வீராங்கனையை இப்படி பார்க்கையில் இதயம் நொறுங்கியது. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஒரு வீராங்கனை, தனது கடின உழைப்பு, கனவு, நம்பிக்கைகளை கைவிட்டு நான் விலகுகிறேன் என்று கூறுவது மிகக் கொடுமையானது. போராட்டத்தின் போதும் சரி, இப்போதும் சரி அவருக்கு ஏற்பட்டுள்ள அவமரியாதை மிகவும் கொடூரமானது- ரித்திகா சிங்
-
Dec 24, 2023 10:27 IST
தொடர் விடுமுறையால் பழனியில் குவிந்த பக்தர்கள்
கார்த்திகை மாதம் மற்றும் தொடர் விடுமுறையால் பழனியில் குவிந்த பக்தர்கள்
கூட்ட நெரிசலால் மலைப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம். பொது தரிசனத்தில் 3 - 4 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்
மொட்டை போடும் இடம், ரோப் கார் நிலையம் என அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
-
Dec 24, 2023 09:57 IST
இந்து மகா சபா நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு
கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் அகில பாரத இந்து மகா சபா நிர்வாகி பெரி.செந்தில் வீட்டில்
பெட்ரோல் குண்டுவீச்சு. நள்ளிரவு 12 மணியளவில் பெட்ரோல் குண்டுவீச்சு வீசப்பட்டதில் வீட்டின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை -
Dec 24, 2023 09:53 IST
ஹவுதி அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாக தகவல்
மங்களூர் நோக்கி வந்த வணிக கப்பல் மீது நடந்த ட்ரோன் தாக்குதல் - புதிய வீடியோ
வணிக கப்பலில் உள்ள 22 பேரில், 21 பேர் இந்தியர்கள், ஒருவர் வியட்நாம் நாட்டை சேர்ந்தவர். தாக்குதலுக்கு ஆளான கப்பல் இருக்கும் இடத்தில் ஹெலிகாப்டர் மூலம் பறந்து சோதனை.
வணிக கப்பலின் மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் -இந்திய கடற்படை அதிகாரி தகவல்
ஏமனை சேர்ந்த ஹவுதி அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாக தகவல்
-
Dec 24, 2023 09:50 IST
கார்கேவுக்கு தன்கர் மீண்டும் கடிதம்: நேரில் சந்திக்க அழைப்பு
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் மீண்டும் கடிதம் எழுதி உள்ளார். நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் கூண்டாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இவை தொடர்பாக கார்கே தன்கருக்கு கடிதம் எழுதிய நிலையில் தற்போது தன்கர் மீண்டும் ஒரு கடிதத்தில் தன்னை நேரில் சந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
-
Dec 24, 2023 09:24 IST
சென்னையில் ஐ.டி பெண் ஊழியர் கொடூர கொலை
சென்னையில், ஐ.டி. பெண் ஊழியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பெண்ணின் முன்னாள் காதலன் கைது
காதலுக்கு மறுத்ததால் திட்டம் போட்டு கை, கால்களை அறுத்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை
காதலித்து வந்த வெற்றி திருநங்கை என்று தெரிந்ததால், காதலை நந்தினி கைவிட்டதாக தகவல்
பிறந்தநாள் சர்ப்ரைஸ் தருகிறேன் என்று அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்த முன்னாள் காதலன்
மதுரையை சேர்ந்த 28 வயது இளம்பெண் நந்தினி கேளம்பாக்கம் அருகே சங்கிலியால் கட்டி கை, கால்களை அறுத்து எரித்து கொலை
நேற்று பெண்ணின் பிறந்தநாள் என்பதால், முன்னாள் காதலன் வெற்றி, கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு கூட்டி சென்றுவிட்டு இரவில் கொலை
கைதான வெற்றியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Dec 24, 2023 09:12 IST
திருச்செந்தூர் ரயில்கள் டிச.31 வரை இயங்காது
திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா பயணிகள் ரயில் டிசம்பர் 31-ம் தேதி வரை இயங்காது. கனமழை காரணமாக செய்துங்கநல்லூர்- வைகுண்டம் இடையே பலத்த சேமடைந்த இருப்புப் பாதையை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் ரயில்கள் ரத்து- தெற்கு ரயில்வே
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.