Advertisment

Tamil News Today: போகிப் பண்டிகை: சென்னையில் விமான சேவை பாதிப்பு

Tamil News Today TN MPs Amitshah Pongal INDIA- இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bhogi Festival

பெட்ரோல், டீசல் 

Advertisment

சென்னையில் 602-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

இந்தியா கூட்டணி 

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெறுகிறது. ஒருங்கிணைப்பாளர் தேர்வு, பரப்புரையை தொடங்குவது குறித்து விவாதிக்க வாய்ப்பு. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

  • Jan 13, 2024 21:50 IST
    5ஜி சேவைகளுக்கு தனி கட்டணம்!

    5ஜி சேவைகளுக்கு 5% முதல் 10% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க `ஜியோ' மற்றும் `ஏர்டெல்' நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4ஜி சேவை கட்டணத்தில் வழங்கப்பட்ட 5ஜி சேவை நடப்பு ஆண்டில் கட்டண உயர்வை சந்திக்கலாம் என கூறப்படுகிறது.



  • Jan 13, 2024 21:47 IST
    மனித - வனவிலங்கு மோதல் உயிரிழப்புக்கு நிவாரணத் தொகை உயர்வு

    மனித - வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர இயலாமைக்கான நிவாரணத் தொகை ரூ  ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் மு..ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



  • Jan 13, 2024 20:38 IST
    சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா : சென்னையில் தொடங்கி வைத்த முதல்வர்

    சென்னை தீவுத்திடலில் "சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா" தமிழகத்தின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் 40 வகையான கலைகள் சென்னை மாநகரில் 18 இடங்களில் 4 நாட்களுக்கு சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்



  • Jan 13, 2024 20:36 IST
    மணிகண்டன் நடிப்பில் லவ்வர் திரைப்படம்

    அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், கௌரி பிரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள LOVER திரைப்படம், பிப்ரவரி 9ம் தேதி வெளியாகும் என பட நிறுவனம் அறிவிப்பு!



  • Jan 13, 2024 19:58 IST
    சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா

    சென்னை தீவுத்​திடலில் "சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா" நிகழ்வை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

    தமிழகத்தின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும்  40 வகையான கலைகள், சென்னை மாநகரில் 18 இடங்களில் 4 நாட்களுக்கு சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நடைபெற உள்ளது. 



  • Jan 13, 2024 19:27 IST
    துணைவேந்தருடன் சந்திப்பு - ஆளுநருக்கு கேள்வி

    மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள துணைவேந்தர் ஜெகநாதனை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை பொது தகவல் அதிகாரிக்கு, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

    ஆளுநர் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு சென்றது அலுவல் ரீதியிலா? தனிப்பட்ட முறையிலா?. இருவரும் நெருங்கிய நண்பர்களா? ஜெகநாதன் ஜாமினில் விடுவிக்கப்பட்ட பிறகு அவரிடம் ஆளுநர் எத்தனை முறை பேசினார்?

    இருவரும் மோசடி வழக்கு குறித்து பேசினார்களா? மோசடியில் ஆளுநருக்கு பங்கு உள்ளதா? ஜெகநாதனுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று ஆளுநர் எவரையேனும் நிர்பந்தித்தாரா? என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. 



  • Jan 13, 2024 18:23 IST
    'பொங்கலுக்கு பிறகு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை' -  ஸ்டாலின் தகவல்

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 



  • Jan 13, 2024 18:04 IST
    தமிழக அரசின் விருதுகள்

    திருவள்ளுவர் விருது - தவத்திரு பாலமுருகனடிமை சுவாமி; பேரறிஞர் அண்ணா விருது - பத்தமடை பரமசிவம்; பெருந்தலைவர் காமராசர் விருது - உ.பலராமன்; மகாகவி பாரதியார் விருது -  கவிஞர் பழநிபாரதி; பாவேந்தர் பாரதிதாசன் விருது  - எழுச்சிக் கவிஞர் முத்தரசு; தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது - ஜெயசீல ஸ்டீபன்; முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது - முனைவர் ரா.கருணாநிதி 

    மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்கும் இன்று விருதுகள், ரூ.5 லட்சத்திற்கான காசோலை மற்றும் தங்கப்பதக்கங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

     



  • Jan 13, 2024 18:03 IST
    டாக்டர் அம்பேத்கர் விருது

    2023-ம் ஆண்டுக்கான ‘டாக்டர் அம்பேத்கர் விருதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சண்முகம் பெற்றுக் கொண்டார். 



  • Jan 13, 2024 18:03 IST
    டாக்டர் அம்பேத்கர் விருது

    2023-ம் ஆண்டுக்கான ‘டாக்டர் அம்பேத்கர் விருதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சண்முகம் பெற்றுக் கொண்டார். விருதுடன் ரூ. 5 லட்சம் தொகை மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. 



  • Jan 13, 2024 17:47 IST
    தந்தை பெரியார் விருது 

    திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியனுக்கு தந்தை பெரியார் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விருதுடன் ரூ. 5 லட்சம் தொகை மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.



  • Jan 13, 2024 17:21 IST
    புதிய வகை வண்ணத்துப்பூச்சி 

    ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை கோட்டத்தில் கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன் (Cloud Forest Silverline) என்ற புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனம் கண்டறியப்பட்டுள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனமாகும். இதன்மூலம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வண்ணத்துப்பூச்சி இனங்களின் எண்ணிக்கை 337ஆக உயர்ந்துள்ளது.



  • Jan 13, 2024 16:54 IST
    ஆயி பூரணம் அம்மாளுக்கு நன்றி கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்

    மதுரை கொடிக்குளம் அரசு பள்ளிக்கு ரூ.7 கோடி சந்தை மதிப்பிலான நிலத்தை வழங்கிய ஆயி பூரணம் அம்மாளுக்கு தொலைபேசியில் அழைத்து அமைச்சர் அன்பில் மகேஷ் நன்றி கூறினார்



  • Jan 13, 2024 16:42 IST
    சென்னை வேப்பேரியில் வெடிகுண்டு மிரட்டல்

    சென்னை வேப்பேரியில் உள்ள வசந்தி திரையரங்கம் அருகே உள்ள வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த தகவலின் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மருந்து மொத்த வியாபாரம் செய்யும் நிர்மல் என்பவர் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அருகிலுள்ள அனைத்து வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்



  • Jan 13, 2024 16:17 IST
    27ம் தேதிக்குள் நிவாரணம் வழங்கப்படும் என அமித்ஷா உறுதி அளித்துள்ளார்; டி.ஆர்.பாலு

    தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு, விரைந்து நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தினோம். மேலும் சுமார் 37,000 கோடியை மத்திய அரசு உடனடியாக தருமாறு, கோரிக்கை வைத்தோம். 27ம் தேதிக்குள் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார் என தி.மு.க எம்.பி., டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்



  • Jan 13, 2024 15:52 IST
    வெள்ள நிவாரணம்; அமித்ஷா உடன் தமிழக எம்.பி.க்கள் குழு சந்திப்பு

    தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு நிவாரணம் அளிக்க வலியுறுத்தி, தி.மு.க எம்.பி., டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக எம்.பி.க்கள் குழு மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது. அப்போது சுமார் ரூ.37,000 கோடி மத்திய அரசிடம் நிவாரண நிதியாக வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது



  • Jan 13, 2024 15:36 IST
    இனிய பொங்கல் இந்திய பொங்கல் ஆகட்டும்; ஸ்டாலின் வாழ்த்து

    இனிய பொங்கல் இந்திய பொங்கல் ஆகட்டும்! மடல் இயற்கைப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பதிலும், மீட்டெடுப்பதிலும் திராவிட மாடல் அரசு அர்ப்பணிப்புடன் செயலாற்றியது. கடுமையான நிதி நெருக்கடி நிலவிய சூழலிலும் ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைப் புறந்தள்ளாமல் பரிசீலித்தேன். தமிழ்நாட்டு மக்களின் நலனை தி.மு.க அரசு தொடர்ந்து காக்கும் என தொண்டர்களுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்



  • Jan 13, 2024 15:11 IST
    உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்பது வதந்தியே; ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்பது வதந்தியே. என் உடல்நிலை குறித்து பொய் தகவல்களைப் பரப்பினர் அந்த பொய் உடைந்து நொறுங்கியதால் `துணை முதல்வர் பதவி' வதந்தி பரப்புகின்றனர். எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாகத்தான் இருக்கிறோம் என பதிலடி கொடுத்து வதந்தி பரப்பியோரின் வாயை அடைத்துவிட்டார் உதயநிதி. என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்



  • Jan 13, 2024 14:51 IST
    ஜோர்டானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மத்திய அரசை அணுகியுள்ளோம்; அமைச்சர் செஞ்சி மஸ்தான்

    ஜோர்டானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு வர மத்திய அரசை அணுகியுள்ளோம். அரசு செலவில் அவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்



  • Jan 13, 2024 14:41 IST
    நாளை தொடங்குகிறது ஆஸ்திரேலிய ஓபன்

    2024 ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் நாளை தொடங்குகிறது



  • Jan 13, 2024 14:27 IST
    தமிழகம், புதுச்சேரியில் வரும் 19ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்; வானிலை ஆய்வு மையம்

    தமிழகம், புதுச்சேரியில் வரும் 19ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும். தென் தமிழகம் மற்றும் டெல்டாவில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Jan 13, 2024 14:00 IST
    ‘இந்தியா' கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு!

    எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா' கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு!



  • Jan 13, 2024 13:58 IST
    தேர்வு குளறுபடி - விசாரணைக்குழு அமைக்க உத்தரவு

    அரசுப்பணிக்கு தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும்

    ஒரு மாதத்தில் விசாரணைக்குழு அமைக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு



  • Jan 13, 2024 13:38 IST
    திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் சோதனை

    திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை



  • Jan 13, 2024 13:36 IST
    நாளை விலகும் வடகிழக்கு பருவமழை

    வடகிழக்கு தென்னிந்திய பகுதிகளில் இருந்து நாளை மறுநாள் விலக வாய்ப்புள்ளது.

    தென் தமிழ்நாடு, காரைக்கால் பகுதிகளில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.



  • Jan 13, 2024 13:27 IST
    சிவ்தாஸ் மீனா ஆய்வு

    சென்னை கிளாம்பாக்கம் "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில்" தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு

    உடன் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் சமயமூர்த்திசென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் திரு.அன்சூல் மிஸ்ராதாம்பரம் காவல் ஆணையாளர் / கூடுதல் தலைமை இயக்குநர் அமல்ராஜ்உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.



  • Jan 13, 2024 12:59 IST
    நெல்லை மழை வெள்ள பாதிப்பு

    திருநெல்வேலியில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கருப்பன் துறை பகுதியில் மத்திய குழுவினர் ஆய்வு செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது மத்திய குழுவைச் சேர்ந்த அதிகாரி பாலாஜி கூறுகையில்திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளில் தமிழ்நாடு அரசின் பணிகள் சிறப்பாக உள்ளதுஎன கூறினார்.



  • Jan 13, 2024 12:57 IST
    ஆணவக் கொலை - மேலும் 3 பேர் கைது

    தஞ்சாவூர்: வாட்டாத்திக்கோட்டையில் நடந்த ஆணவக் கொலையில் மேலும் பேர் கைது

    ஏற்கெனவே பெற்றோர் உட்பட பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இளம்பெண்ணின் உறவினர்களான ரங்கசாமி, பிரபு, சுப்பிரமணியன் ஆகியோர் கைது



  • Jan 13, 2024 12:27 IST
    சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு சிஇஓ நியமனம்

    நில நிர்வாக ஆணையரகத்தில் இணை ஆணையராக  இருந்த ஜெ.பார்த்திபனை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தலைமை நிர்வாக அலுவலராக நியமித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு



  • Jan 13, 2024 12:27 IST
    எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து

    தை பிறந்தால் வழி பிறக்கும்தடைகள் தகரும்நிலைகள் உயரும்

    நினைவுகள் நிஜமாகும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரும் உடல் நலத்தையும்மகிழ்ச்சியையும்என்றும் குறையாத அன்பையும் பெற்று வளமோடும்நலமோடும் இன்புற்று வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துமக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்

    -எடப்பாடி பழனிசாமி



  • Jan 13, 2024 12:25 IST
    I.N.D.I.A கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம்

    I.N.D.I.A கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக தொடங்கியது

    நாடாளுமன்ற தேர்தல் குறித்து I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

                                                                                                 



  • Jan 13, 2024 12:03 IST
    டி.டி.வி. தினகரன் பொங்கல் வாழ்த்து

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உலகெங்கும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அறுவடைத் திருநாளாம் இந்த பொங்கல் திருநாளில் தமிழ்நாடு மக்கள் அனைவரின் வாழ்விலும்அன்பும் அமைதியும் நிலவி நலமும் வளமும் பெருக வேண்டும் என வாழ்த்தி எனது உள்ளம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

    -டி.டி.வி. தினகரன் பொங்கல் வாழ்த்து 



  • Jan 13, 2024 11:45 IST
    சென்னை தீ விபத்து-கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

    சென்னை புழல் அருகே தனியார் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

    தீயணைப்பு வீரர்களின்  மணி நேர தொடர் போராட்டத்தால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது

    தீ விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் அதிகாரிகள்

    தீ முழுவதுமாக அணைந்தால் மட்டுமே தடயம் சேகரிக்கும் பணிகள் தொடங்கும் என தகவல்



  • Jan 13, 2024 11:45 IST
    போக்குவரத்து நெரிசல்

    தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு படையெடுத்து  வரும் பொதுமக்கள்

    செங்கல்பட்டு அருகே மாமண்டூர் பாலாற்று பாலம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்

    தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்களால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

    கி.மீ. தொலைவிற்கு சாலையில் அணிவகுத்து செல்லும் வாகனங்கள்

    போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போலீசார் தீவிரம்



  • Jan 13, 2024 11:37 IST
    அன்புமணி ராமதாஸ் பேட்டி

    தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிதி நிறுவன மோசடிகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் பணத்தைப் பெற்றுத் தர எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை

    மக்கள் சிறுகச் சிறுக சேர்த்து செலுத்திய பணத்தை மீட்கும் விஷயத்தில் காவல்துறை காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் மோசடி நிறுவனங்கள் காளான்களைப் போல உருவெடுத்து மக்களை ஏமாற்றுவதற்கான காரணங்களில் மக்களின் விழிப்புணர்வின்மை  என்றால் மீதமுள்ள காவல்துறையின் அலட்சியம் தான்.

    அன்புமணி ராமதாஸ் பேட்டி



  • Jan 13, 2024 11:21 IST
    அமைச்சர் சேகர் பாபு பேட்டி

    இன்னும் ஓராண்டுக்கு கோயம்பேடு பேருந்து நிலையம் தேவைப்படுகிறது

    அமைச்சர் சேகர் பாபு



  • Jan 13, 2024 11:17 IST
    டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 4வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கலால் கொள்கை வழக்கில் நான்காவது முறையாக அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியுள்ளது. அவர் ஜனவரி 18ம் தேதி மத்திய புலனாய்வு முகமை முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

    அதேநேரம் தேர்தல் ஏற்பாடுகளை மேற்பார்வையிட முதல்வர் ஜனவரி 18 முதல் 20 வரை கோவாவில் இருப்பார்.

    கலால் கொள்கை வழக்கு- டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்



  • Jan 13, 2024 11:11 IST
    மக்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட திருவள்ளூர் ஆட்சியர்



  • Jan 13, 2024 11:11 IST
    அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

    தமிழ்நாட்டில் 2022-ம் ஆண்டு 156 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்

    2023-ல் 178 பேரும் இந்த ஆண்டு இதுவரை 11  பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்

    உடல் உறுப்பு தானம் வழங்குவோர் எண்ணிக்கை தொடர்ந்து  அதிகரித்து வருகிறது

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி      

     



  • Jan 13, 2024 10:55 IST
    இன்று டெல்லி செல்கிறார் அண்ணாமலை

    டெல்லியில் நாளை (ஜன.14) மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்க இன்று மாலை டெல்லி செல்கிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. பிரதமர் மோடி. உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரை நாளை அண்ணாமலை சந்திக்க உள்ளதாக தகவல் 



  • Jan 13, 2024 10:40 IST
    தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

    தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல். அலுவலக நேரம் என்பதால் சாலையில் அணிவகுத்து செல்லும் வாகனங்கள். பெருமளவு பேருந்துகள் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் என தகவல் 



  • Jan 13, 2024 10:26 IST
    சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

    சென்னையில் ஜனவரி 16,25,26 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள், கிளப் மற்றும் பார்கள் அனைத்தும் மூடப்படும்- ஆட்சியர் ரஷ்மி அறிவிப்பு 



  • Jan 13, 2024 10:23 IST
    தங்கம் சவரனுக்கு ரூ.200 உயர்வு

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு. தங்கம் ஒரு கிராம் ரூ.5,845க்கும், ஒரு சவரன் ரூ.46,760க்கும் விற்பனை



  • Jan 13, 2024 09:53 IST
    கிளாம்பாக்கத்தில் தலைமைச் செயலாளர் ஆய்வு

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு. பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள குடிநீரை அருந்திய சிவ்தாஸ் மீனா, கிளாம்பாக்கத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் போதுமானதாக இருக்கிறதா என பயணிகளிடம் கேட்டறிந்தார். 



  • Jan 13, 2024 09:38 IST
    உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருச்சி செல்லும் உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. 



  • Jan 13, 2024 09:28 IST
    பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா 

    பொள்ளாச்சி அருகே ஆச்சிபட்டியில் 9-வது சர்வதேச பலூன் திருவிழா 

    இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து 10 வெப்ப காற்று பலூன்கள் வருகை

    ஜன.16 வரை நடைபெறும் பலூன் திருவிழா - ஹெலிகாப்டரில் பொள்ளாச்சி அழகை ரசிக்க ஏற்பாடு



  • Jan 13, 2024 09:26 IST
    உழவர் சந்தையில் களைகட்டிய காய்கறி விற்பனை

    பொங்கல் பண்டிகையை ஒட்டி நெல்லை உழவர் சந்தையில் களைகட்டிய காய்கறி விற்பனை. அதிகாலை முதலே காய்கறி வாங்க ஆர்வமுடன் குவிந்த பொதுமக்கள். தொடர் மழை, விளைச்சல் பாதிப்பால் காய்கறி விலை கடும் உயர்வு



  • Jan 13, 2024 08:44 IST
     வெள்ளி கவசத்தில் அருள்பாலித்த சனீஸ்வர பகவான்

    திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நளன் தீர்த்த குளத்தில் புனித நீராடி 2 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம்



  • Jan 13, 2024 08:15 IST
    2.17 லட்சம் பயணிகள் சொந்த ஊருக்கு பயணம்

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணித்த பொதுமக்கள். நேற்று இரவு 12 மணி நிலவரப்படி 1,260 சிறப்பு பேருந்துகளுடன் மொத்தம் 3,946 பேருந்துகள் இயக்கம்.

    3946 பேருந்துகளில் 2,17,030 பயணிகள் சொந்த ஊருக்கு பயணித்துள்ளனர். மேலும் இதுவரை 1,96,310 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் - போக்குவரத்து துறை தகவல்



  • Jan 13, 2024 08:14 IST
    பிளாஸ்டிக், ரப்பர் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

    சென்னை, சூரப்பட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து. 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் 6 மணி நேரமாக ஈடுபட்டுள்ளனர் 



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment