Advertisment

Tamil News highlights : திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று திறந்திருக்கும்

Tamil News Today Live Tamil News Today TN Pongal Jallikattu Rahul Yatra-15 January 2024- இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
saaa

பெட்ரோல், டீசல் விலை 

Advertisment

சென்னையில் 604-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

தமிழ்நாடு முழுவதும் இன்று பொங்கல் திருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு தை மகளை வரவேற்கும் தமிழர்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil 

 

 • Jan 15, 2024 21:28 IST
  மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : 9 பேருக்கு பலத்த காயம்

  மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 152 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சிறு காயமடைந்த 93 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பலத்த காயமடைந்த 9 பேர், மேல் சிகிச்சைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். • Jan 15, 2024 21:23 IST
  ஆந்திர பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து கிடுகு ருத்ர ராஜு ராஜினாமா

  ஆந்திர பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து கிடுகு ருத்ர ராஜு ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அண்மையில் கட்சியில் இணைந்த முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. • Jan 15, 2024 21:21 IST
  அன்னப்பூரணி திரைப்படத்தின் சர்ச்சை குறித்து இயக்குனர் வெற்றிமாறன் கருத்து

  "தணிக்கைக் குழு (CBFC) அனுமதி வழங்கிய ஒரு படத்தை, புற அழுந்தங்களால் OTTல் இருந்து நீக்க வைப்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது" என அன்னப்பூரணி திரைப்படத்தின் சர்ச்சை குறித்து இயக்குனர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்துள்ளார். • Jan 15, 2024 19:56 IST
  அயோத்தி ராமர் கோவில் அருகே வீட்டுமனை வாங்கிய அமிதாப் பச்சன்

  அயோத்தி ராமர் கோவில் அருகே 10,000 சதுர அடி வீட்டுமனை ஒன்றை வாங்கியுள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். இந்த வீட்டுமனையின் விலை 14.5 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. • Jan 15, 2024 19:54 IST
  ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப்போன தங்கலான்

  பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சில தினங்களில் ஜனவரி 26-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தங்கலான் படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. • Jan 15, 2024 19:17 IST
  மகரஜோதி தரிசனம்

  பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவமாக காட்சியளிக்கும் ஐயப்பன் பக்தர்களின் சரண கோஷத்தால் அதிரும் சபரிமலை • Jan 15, 2024 18:02 IST
  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு

  அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாகவும், சிறந்த வீரராகவும் தேர்வானவர்களுக்கு கார் பரிசை அமைச்சர் மூர்த்தி வழங்கினார் • Jan 15, 2024 17:45 IST
  மகரஜோதி தரிசனம்; அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

  சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மகரஜோதி தரிசனம். மகரஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் குவிந்துள்ளனர் • Jan 15, 2024 17:28 IST
  மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

  மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. 817 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 400 வீரர்கள் களம் கண்டனர். • Jan 15, 2024 17:08 IST
  அமெரிக்காவில் 2 இந்திய மாணவர்கள் மர்ம மரணம்

  தெலுங்கானாவில் உள்ள வனபர்த்தியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த ஒருவர் என இரண்டு இந்திய மாணவர்கள் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் விடுதியில் இறந்து கிடந்ததாக குடும்ப உறுப்பினர் ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார். • Jan 15, 2024 16:52 IST
  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; இறுதிச்சுற்று தொடக்கம்

  மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிச்சுற்று தொடங்கியுள்ளது. 9 சுற்று முடிவில் 721 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன 405 காளையர்கள் களமிறங்கியுள்ளனர் • Jan 15, 2024 16:25 IST
  சிவசேனா விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பு மேல்முறையீடு

  ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என மகாராஷ்டிரா சபாநாயகர் அறிவித்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது • Jan 15, 2024 15:51 IST
  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 8 சுற்றுகள் நிறைவு

  மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் 9வது சுற்று தொடங்கியுள்ளது. 8 சுற்றுகள் முடிவில் 656 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன 380 காளையர்கள் களமிறங்கியுள்ளனர் • Jan 15, 2024 15:30 IST
  என்னால் நிச்சயம் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது தோனிதான்! - சிவம் துபே

  என்னுடைய முழு வெற்றிக்கு காரணம் சி.எஸ்.கே அணியும், கேப்டன் தோனியும் தான். என்னால் நிச்சயம் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது தோனிதான் என இந்திய கிரிக்கெட் வீரர் சிவம் துபே தெரிவித்துள்ளார் • Jan 15, 2024 15:10 IST
  ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

  சந்தானம், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளது • Jan 15, 2024 12:23 IST
  பினராயி விஜயன் தமிழில் பொங்கல் வாழ்த்து

  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். "அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். மண்ணைப் பொன்னாக்க அயராது உழைப்பவர்களின் வாழ்வில் எல்லா வளமும் நிறைந்திருக்கட்டும். கோடானகோடி மக்களோடு சேர்ந்து நாங்களும் இந்த அறுவடை திருநாளை கொண்டாடி மகிழ்கிறோம்." என்று அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  • Jan 15, 2024 12:04 IST
  பேருந்துகளில் 6.54 லட்சம் பேர் பயணம்

  பொங்கல் விடுமுறைக்காக இயக்கப்பட்ட பேருந்துகளில் 6.54 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

  2.44 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும் போக்குவரத்துத்துறை தகவல் • Jan 15, 2024 11:55 IST
  இதுவரை 33 பேர் காயம்

  மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 33 பேர் காயமடைந்துள்ளனர். 6 பேர் படுகாயமடைந்து மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.  • Jan 15, 2024 11:10 IST
  ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 30 பேர் காயம்

  மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 30 பேர் காயமடைந்துள்ளனர். 6 பேர் படுகாயமடைந்து மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி • Jan 15, 2024 11:09 IST
  15 காளைகளை அடக்கிய வீரருக்கு மருத்துவ சிகிச்சை

  மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ள கார்த்திக் என்பவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்துவருகின்றனர் • Jan 15, 2024 10:52 IST
  தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி 

  தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி. 

    • Jan 15, 2024 10:27 IST
  வேட்டையன் படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

  பொங்கல் வாழ்த்துடன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் `வேட்டையன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு.  • Jan 15, 2024 10:19 IST
  நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து

  போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து

  அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் - நடிகர் ரஜினி

  வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தால் வாழ்வில் நிம்மதி. அனைவரும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் - நடிகர் ரஜினி • Jan 15, 2024 09:52 IST
  3வது சுற்று தொடக்கம்

  மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் 3வது சுற்று தொடங்கியது. 2வது சுற்றில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.  • Jan 15, 2024 09:52 IST
  3வது சுற்று தொடக்கம்

  மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் 3வது சுற்று தொடங்கியது. 2வது சுற்றில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.  • Jan 15, 2024 09:23 IST
  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 2வது சுற்று நிறைவு

  மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் 2வது சுற்று நிறைவு. கார்த்திக், ரஞ்சித் ஆகியோர் 6 காளைகளை அடக்கி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.  • Jan 15, 2024 09:22 IST
  முதல் சுற்றில் 16 பேர் காயம்

  மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி முதல் சுற்றில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.  • Jan 15, 2024 09:21 IST
  ஜல்லிக்கட்டு வீரருக்கு ரெட் கார்டு எச்சரிக்கை

  மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, முதல் சுற்றில் 4 காளைகளை அடக்கி 2ம் சுற்றுக்கு தகுதி பெற்ற திருப்பதி என்ற வீரருக்கு ரெட் கார்டு எச்சரிக்கை.  • Jan 15, 2024 09:13 IST
  கனிமொழி பொங்கல் வாழ்த்து

  பொங்கல் பண்டிகையையொட்டி திமுக எம்.பி., கனிமொழி வாழ்த்து

  ஜாதி பேதங்கள் கடந்து நாம் அத்தனை பேரும் தமிழர்களாக, மனிதர்களாக ஒன்றிணைந்து கொண்டாடக்கூடிய திருநாளே தை பொங்கல் திருநாள்

  மகிழ்ச்சி பொங்கிடும் இந்த திருநாளிலே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய பொறுப்புகளும் கூடியிருக்கிறது

  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதைப் பொங்கல் திருநாளில் உறுதியேற்க வேண்டும் - கனிமொழி  • Jan 15, 2024 08:53 IST
  தமிழ்நாடெங்கும் பொங்கும் இன்பப் பொங்கல்: ஸ்டாலின்

  தமிழ்நாடெங்கும் பொங்கும் இன்பப் பொங்கல் - ஈகைப் பொங்கல் - சமத்துவப்பொங்கல், இந்த ஆண்டு இந்தியா முழுவதும் பொங்கட்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் • Jan 15, 2024 08:43 IST
  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதல் சுற்று நிறைவு

  அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியின் முதல் சுற்று நிறைவு 6 காளைகளை தழுவிய முத்துக்கிருஷ்ணன் முதல் இடம். 

  தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் 6 காளைகளை அடக்கி முதல் சுற்றில் முதல் இடத்தில் உள்ளார்.  • Jan 15, 2024 08:07 IST
  உதயநிதி ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வாழ்த்து. மாநில உரிமையை மீட்டெடுத்து இந்திய ஒன்றியத்தை காத்திட தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் சூளுரைப்போம் - அமைச்சர் உதயநிதி • Jan 15, 2024 08:06 IST
  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

  மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. போட்டியில் 1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்புTamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment