பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 593-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சிறு வணிகர்களுக்கு கடன் வழங்க சிறப்பு முகாம்
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட சிறு வணிகர்களுக்கு கூட்டுறவுத்துறையின் மூலம், ’முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிக கடன் திட்டத்தின் கீழ்’ சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
4 மாவட்டங்களிலும் ஜனவரி 5 முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jan 04, 2024 21:28 ISTபூந்தமல்லி முதல் பரந்தூர் மெட்ரோ
பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் வழிதடத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
-
Jan 04, 2024 21:17 ISTகுரூப் 1,2 தேர்வு முடிவு பிப்ரவரிக்குள் வெளியீடு
குரூப் 1 மற்றும் 2 உள்ளிட்ட 15 தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி கால அட்டவணையை அஜய் யாதவ் வெளியிட்ட நிலையில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. -
Jan 04, 2024 20:53 ISTதமிழக வெள்ளப் பாதிப்புகள் குறித்து ராகுல் கவலை: உதயநிதி ட்வீட்
தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து ராகுல் காந்தி கவலை தெரிவித்தார் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று ராகுல் காந்தியை சந்தித்த நிலையில் ட்விட்டரில் இதனைக் கூறியுள்ளார். மேலும் இந்தியா கூட்டணி முன்னேற்றம் குறித்து விவாதித்தோம் என்றும் சோனியா காந்தி உடல் நிலை குறித்து கேட்டறிந்தேன் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.I was delighted to meet @INCIndia leader brother Thiru Rahul Gandhi at his residence in New Delhi today. I inquired about the health of Annai Sonia Gandhi. @RahulGandhi expressed his concern about the recent floods in Tamil Nadu. We briefly discussed the progress of #INDIA… pic.twitter.com/nQtICWzHMg
— Udhay (@Udhaystalin) January 4, 2024 -
Jan 04, 2024 20:39 ISTதென் ஆப்பிரிக்க வீரருக்கு நினைவு பரிசு
இந்திய அணி வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்ஸியை, ஓய்வு பெறவுள்ள தென்னாப்பிரிக்க வீரர் டீன் எல்கருக்கு பரிசாக ரோகித் சர்மா வழங்கினார்.
Spirit of Cricket 👏#TeamIndia | #SAvIND pic.twitter.com/MkW3IiPraY
— BCCI (@BCCI) January 4, 2024 -
Jan 04, 2024 20:32 ISTஓரு பாடலுக்கு ஓராண்டு எடுக்குராங்க- இளையராஜா பேச்சு வைரல்
“தற்போதைய காலகட்டத்தில் இசையமைப்பாளர்கள் ஒரு பாடலுக்கு 6 மாதங்கள் முறை ஓராண்டு காலம் வரை எடுக்கின்றனர். ஆனால் கடந்த காலங்களில் அப்படி இல்லை” என இசைஞானி இளையராஜா சென்னையில் பேசியது வைரலாகிவருகிறது.
-
Jan 04, 2024 20:24 ISTசிறை கைதிகள் நூலகம்: தானமாக பெறப்பட்ட 42 ஆயிரம் புத்தகங்கள்!
சிறைக் கைதிகள் புத்தகத்தை படித்து மறுவாழ்வு அடையும் விதமாக தமிழ்நாடு சிறைத்துறை சார்பில், சென்னை புத்தக காட்சியில் புத்தகங்களை தானமாக பெற தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 42,000 புத்தகங்கள் தானமாக பெறப்பட்டன. -
Jan 04, 2024 19:52 ISTசென்னையில் அதிகாலை மெட்ரோ சேவை
சென்னை மாரத்தான் ஓட்டப் போட்டியை முன்னிட்டு ஜன.6ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 04, 2024 19:32 ISTஜன.7 உலக முதலீட்டாளர்கள் மாநாடு: மு.க. ஸ்டாலின் ஆலோசனை
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரு தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. -
Jan 04, 2024 19:16 ISTகேலோ போட்டிகளில் பங்கேற்ற பிரதமர் உறுதி: டெல்லியில் உதயநிதி பேட்டி
"கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்பதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்" என பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியபின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்தார்.
Glad to have invited Hon’ble Indian Prime Minister, Thiru @narendramodi in New Delhi today for the Opening Ceremony of the Khelo India Youth Games to be held in Chennai on January 19th, 2024.
— Udhay (@Udhaystalin) January 4, 2024
On behalf of the Tamil Nadu Government, I requested the Prime Minister for the… pic.twitter.com/p3rYnUxmqX -
Jan 04, 2024 19:10 ISTதிருநெல்வேலி- எழும்பூர் சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்!
திருநெல்வேலி- சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் வண்டி எண் 06070 இன்று (ஜன.4) மாலை 6.45 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், இரவு 9 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இணைப்பு ரயில் தாமதம் காரணமாக 2.15 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. -
Jan 04, 2024 18:29 ISTமுரசொலி அலுவலகம் உள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லை - தமிழக அரசு விளக்கம்; ஐகோர்ட் தீர்ப்பு ஒத்திவைப்பு
முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லை; அஞ்சுகம் பதிப்பகம்தான் நிலத்தின் உரிமையாளர் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து முரசொலி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
Jan 04, 2024 18:25 ISTதமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று (04) 7இரவு மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Jan 04, 2024 18:22 ISTபெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு: மேல்முறயீட்டில் விழுப்புரம் நீதிமன்றம் நாளை தீர்ப்பு
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்த முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ்தாசின் மேல்முறையீட்டு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் நாளை மறுதினம் தீர்ப்பு வழங்குகிறது. வேறு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றக்கோரிய மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.
-
Jan 04, 2024 17:57 ISTஇசைஞானி என்ற கர்வத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டேன் - இளையராஜா பேச்சு
சென்னை தியாகராயர் நகரில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, “என்னை இசைஞானி என மக்கள் நினைக்கின்றனர். அவர்களுக்கு நன்றி. ஆனால், நான் என்னை அப்படி நினைக்கவில்லை. அந்த கர்வத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டேன்” என்று கூறினார்.
-
Jan 04, 2024 17:48 ISTவெள்ள நிவாரண தொகை வழங்கக்கோரி அமித்ஷாவை சந்திக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் முடிவு
மிக்ஜாம் புயல், தென்மாவட்ட வெள்ளம் ஆகியவற்றுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண தொகையை வழங்கக்கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர்.
-
Jan 04, 2024 17:14 ISTடெல்லியில் மோடியை சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின்
டெல்லியில் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது சென்னையில் வரும் 19ம் தேதி தொடங்கும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளுக்கான அழைப்பிதழை வழங்கினார்
-
Jan 04, 2024 17:08 ISTமதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரத்தில் ஜனவரி 15ம் தேதி ஜல்லிக்கட்டு, பாலமேட்டில் வரும் 16ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும்
-
Jan 04, 2024 16:46 ISTபேச்சுவார்த்தை தோல்வி : லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடரும் என அறிவிப்பு
LPG டேங்கர் லாரி சங்க நிர்வாகிகளுடன் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் நடத்திய 2ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர உள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.
டேங்கர் லாரிகளில், உதவியாளர்கள் (கிளீனர்கள்) கட்டாயம் என்ற எண்ணெய் நிறுவனத்தின் நிபந்தனைக்கு எதிராக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்! கர்நாடகா மங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சமையல் எரிவாயு ஏற்றாமல் 1000க்கும் மேற்பட்ட LPG டேங்கர் லாரிகள் கடந்த 1ம் தேதி முதல் வேலை நிறுத்தம்!
-
Jan 04, 2024 16:44 ISTஜல்லிக்கட்டு போட்டி : அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு
ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகளை அவிழ்க்கும் போது அதன் உரிமையாளர்களின் பெயரோடு சாதியை குறிப்பிடக் கூடாது என்ற முந்தைய உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் - அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
-
Jan 04, 2024 16:07 ISTமிக்ஜாம் புயல் : நிவாரணம் கோரி விண்ணப்பித்தவர்கள் வீடுகளில் ஆய்வு
மிக்ஜாம் புயல் நிவாரணம் கோரி விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும் பணி தொடக்கம்!
-
Jan 04, 2024 15:28 IST2024 பொங்கல் பண்டிகை : மதுரை ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு
2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு! அவனியாபுரத்தில் 15ம் தேதி, பாலமேட்டில் 16ம் தேதி, அலங்காநல்லூரில் 17ம் தேதி அன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது - மாவட்ட ஆட்சியர் சங்கீதா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
Jan 04, 2024 15:27 ISTதமிழ்நாடு அரசுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை சஸ்பெண்ட் செய்து பல்கலை. வளாக அலுவலகத்தில் இருந்து வெளியேற்ற தமிழ்நாடு அரசுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பல்கலைக்கழகத்துக்குள் நடந்த நிகழ்வு குறித்த சிசிடிவி காட்சி பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்குக் கொடுத்தது யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கு தொடர்பாக மேலும் 8 பேருக்கு சன்னம் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.
-
Jan 04, 2024 15:25 ISTகொரோனாவுக்கு சென்னையில் ஒருவர் பலி
சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் உயிரிழப்பு
-
Jan 04, 2024 14:53 ISTதமிழ்நாட்டில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும்- ஓ.பி.எஸ்
இந்தியாவை 10 ஆண்டுகாலம் சிறப்பாக வழிநடத்திய மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு
மக்களவை தேர்தல் என்பதால் பாஜக தலைமையில் தான் இங்கே கூட்டணி அமையும்
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் எங்கள் அணிக்கு சாதகமாக தீர்ப்பு வரும்
கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி எத்தனை இடங்களில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும்
காஞ்சிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
-
Jan 04, 2024 14:33 ISTசெந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 14வது முறையாக நீட்டிப்பு
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜன.11ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
Jan 04, 2024 14:26 ISTநெல்லை மாநகரப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி
#JUSTIN | நெல்லை மாநகரப் பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அகற்ற வழங்கப்பட்ட 24 மணி நேர அவகாசம் முடிந்த நிலையில், மாநகராட்சி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தொடங்கியது
— Sun News (@sunnewstamil) January 4, 2024
வண்ணாரப்பேட்டையில் இருந்து டவுண் ஆர்ச் வரை உள்ள நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு… pic.twitter.com/eY9q8gmvceCredit: Sun News
-
Jan 04, 2024 14:16 ISTலோகேஷ் கனகராஜ் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கு
லோகேஷ் கனகராஜ் தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
-
Jan 04, 2024 14:16 IST5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவள்ளூர், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Jan 04, 2024 14:00 ISTஇந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஜனவரி 8ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் சென்னையில் ஆலோசனை!
-
Jan 04, 2024 14:00 ISTவிஜயகாந்தின் இழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது- சி.பி.ராதாகிருஷ்ணன்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர் ஏழை எளிய மக்களுக்கு பணியாற்றுவதை கைவிடவில்லை.
விஜயகாந்துக்கு சிலை அமைப்பது வரவேற்கத்தக்கது.
அவருக்கு விருது வழங்குவது குறித்து மத்திய அரசிடம் கோரிக்கையை எடுத்து சொல்வோம்
- சென்னையில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
-
Jan 04, 2024 13:42 ISTசோனியா காந்தியுடன் ஒய்.எஸ்.சர்மிளா சந்திப்பு
YSR తెలంగాణ పార్టీని, కాంగ్రెస్ పార్టీలో విలీనం చేయడం జరిగింది. వైయస్ఆర్ చనిపోయేనాటికి కూడా అహర్నిశలు కాంగ్రెస్ పార్టీ కోసం శ్రమించారు. దేశంలోనే కాంగ్రెస్ పార్టీ అతిపెద్ద సెక్యూలర్ పార్టీ. దేశ పునాదుల నుండి నిర్మాణం వరకు కాంగ్రెస్ హస్తం ఉంది. రాహుల్ గాంధీ గారిని ప్రధాని చేయాలని… pic.twitter.com/idXtzEqdre
— YS Sharmila (@realyssharmila) January 4, 2024 -
Jan 04, 2024 13:39 ISTபொங்கல் தொகுப்புடன் ரூ.1000- இ.பி.எஸ். வலியுறுத்தல்
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமாக வழங்க வேண்டும்- தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
-
Jan 04, 2024 13:25 ISTகனமழை பெய்ய வாய்ப்பு
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு (ஜன.10) மழைக்கு வாய்ப்பு
தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு
வரும் 6ஆம் தேதி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
7ஆம் தேதி முதல் சென்னை , கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உட்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
8ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
- சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Jan 04, 2024 13:24 ISTஅமைச்சர் சேகர்பாபு பேட்டி
கிளாம்பாக்கத்தில் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு பேருந்துகள் இயக்கப்படும்.
பயணிகளுக்கு இடையூறாக உள்ள சுவரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பயணிகளின் பாதுகாப்புக்காக காவல் நிலையம் பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு வரும்- அமைச்சர் சேகர்பாபு பேட்டி
-
Jan 04, 2024 13:09 ISTநான் எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை -அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மதுபான முறைகேடு புகார் தொடர்பாக எனக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் அமலாக்கப் பிரிவு காட்டவில்லை
சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு பயன்படுத்தி என்னை கைது செய்ய பாஜக விரும்புகிறது
அமலாக்கப் பிரிவு அனுப்பும் சம்மன் சட்டப்பூர்வமாக இருந்தால் ஒத்துழைக்க தயார்.
பாஜகவினர் ஊழலில் ஈடுபட்டால் மத்திய விசாரணை அமைப்புகள் கண்டுகொள்வதில்லை
வரும் தேர்தலில் நான் பிரச்சாரம் மேற்கொள்வதை தடுக்க பாஜக முயற்சி செய்கிறது. தேர்தல் வரவுள்ள நிலையில் எனக்கு சம்மன் அனுப்பவது ஏன்?
- அரவிந்த் கெஜ்ரிவால்
-
Jan 04, 2024 13:05 ISTதுணை முதலமைச்சர் எனும் டம்மி பதவி
துணை முதலமைச்சர் எனும் டம்மி பதவியை என்னை கட்டாயப்படுத்தி கொடுத்தனர்
- காஞ்சிபுரத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு
-
Jan 04, 2024 12:54 ISTஉலக முதலீட்டாளர் மாநாடு - முதல்வர் ஆலோசனை
உலக முதலீட்டாளர் மாநாடு ஏற்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை வரும் 7, 8ஆம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ள நிலையில் ஆலோசனை
-
Jan 04, 2024 12:53 ISTஅமலாக்கத்துறை சட்ட விரோதமாக சம்மன்
மதுபான ஊழலில் தனக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் அமலாக்கத்துறை கண்டுபிடிக்கவில்லை சட்டவிரோதமாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது . டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
-
Jan 04, 2024 12:52 ISTகுஜராத்திற்கு 3 நாட்கள் பயணமாக அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் செல்கிறார்
அமலாக்கத்துறை கைது செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், 3 நாட்கள் பயணமாக அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் செல்கிறார். ஜனவரி 6 முதல் 8 வரை அவர் குஜராத் செல்ல உள்ளார்.
-
Jan 04, 2024 12:15 IST"பேச்சுவார்த்தைக்கு எப்போதும் அரசு தயார்
போக்குவரத்து தொழிலாளர்களுடன் எந்நேரத்திற்கும் பேச்சுவார்த்தைக்கு தயார். ஒரு கோரிக்கையை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகள் பொங்கலுக்குள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர் பேட்டி
-
Jan 04, 2024 11:51 ISTபல்வேறு துறைகள் சார்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு
காவல் துறை சார்பில் ரூ.18.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு, காவல்நிலையங்கள் காணொலி காட்சி மூலம் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் 62 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள் திறப்பு குறு சிறு தொழில்துறை சார்பில் 'தென்னை நார் கொள்கை 2023' வெளியீடு 'தென்னை நார் கொள்கை 2023'-ஐ வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை உறுதி செய்யும் என விளக்கம்.
-
Jan 04, 2024 11:21 ISTஜெகன்மோகனின் சகோதரி ஒய்.எஸ். சர்மிளா காங்கிரஸில் இணைந்தார்
கார்கே, ராகுல்காந்தி முன்னிலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனின் சகோதரி ஒய்.எஸ். சர்மிளா காங்கிரஸில் இணைந்தார். அவர் நடத்தி வந்த ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியையும் காங்கிரஸில் இணைத்தார்.
-
Jan 04, 2024 11:14 ISTபெரியார் பல்கலை. பேராசிரியர்கள் ஆஜர்
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், அரசு விதிகளை மீறி தனியார் நிறுவனத்தை தொடங்கியதாக புகார் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சுப்பிரமணிய பாரதி மற்றும் ஜெயராமன் ஆகியோர் கருப்பூர் காவல் நிலையத்தில் ஆஜர்
-
Jan 04, 2024 10:51 ISTதுப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் காயம்.
செங்கல்பட்டு ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது துப்பாக்கி குண்டு பாய்ந்து 13 வயது சிறுவன் காயம். ஏர் கண் வெடித்து அலுமினிய குண்டு சிறுவனின் பின் தலையில் பாய்ந்தது விபத்து. காயமடைந்த சிறுவனுக்கு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
-
Jan 04, 2024 10:48 ISTகிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் ஆய்வு
வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கான வசதிகள் குறைவாக உள்ளதாக புகார் எழுந்த நிலையில் ஆய்வு. வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கு போதுமான மாநகர பேருந்துகள் இயக்கப்படுவது பற்றி
ஆய்வு -
Jan 04, 2024 10:45 ISTகருப்பூர் போலீசில் 2 பேர் ஆஜர்
சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக கருப்பூர் போலீசில் ஆஜரான 2 பேரிடம் விசாரணை.
5 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், டீன் ஜெயராமன், துணை வேந்தரின் செயலாளர் சுப்பிரமணிய பாரதி ஆகியோர் ஆஜராகினர்.
-
Jan 04, 2024 10:45 ISTகருப்பூர் போலீசில் 2 பேர் ஆஜர்
சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக கருப்பூர் போலீசில் ஆஜரான 2 பேரிடம் விசாரணை.
5 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், டீன் ஜெயராமன், துணை வேந்தரின் செயலாளர் சுப்பிரமணிய பாரதி ஆகியோர் ஆஜராகினர்.
-
Jan 04, 2024 10:45 ISTவிவசாயிகள் மீதான வழக்கைக் கைவிட அமலாக்கத்துறை முடிவு
கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து சேலம் விவசாயிகள் மீதான வழக்கைக் கைவிட அமலாக்கத்துறை முடிவு. விவசாயிகளின் சாதி பெயரைக் குறிப்பிட்டு சம்மன் அனுப்பியதற்கு அரசியல் கட்சியினர் உள்பட பல தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் அவர்கள் இருவரின் நிலத்தை அபகரிக்க பாஜக நிர்வாகி உதவியுடன் உள்ளூர் பிரமுகர் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
-
Jan 04, 2024 10:40 ISTதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.46,960க்கு விற்பனை.
-
Jan 04, 2024 10:35 ISTமுதலமைச்சராகி இருக்க வேண்டியவர் விஜயகாந்த்: சிவக்குமார்
வருங்கால முதலமைச்சராகி இருக்க வேண்டியவர் விஜயகாந்த். சென்னை கோயம்பேட்டில் உள்ள மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அவருடனான நினைவுகளை உருக்கமாக பகிர்ந்தார் நடிகர் சிவக்குமார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.