Advertisment

Tamil News Today: பொங்கல் பண்டிகை: தாம்பரம்- நெல்லை இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்

Tamil News updates: அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
railway Train

IE Tamil Updates

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 599-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24  காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

 போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் 

 போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும் சென்னை மாநகர பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இன்று வழக்கம் போல் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகின்றன- மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

  • Jan 10, 2024 23:03 IST
    தர்மபுரி விவகாரம்: அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

    தர்மபுரி பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கு. அண்ணாமலை மீது தர்மபுரி பொம்மிடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    பொம்மிடி அருகே தேவாலயத்துக்கு கு. அண்ணாமலை சென்றபோது சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். கார்த்திக் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • Jan 10, 2024 22:10 IST
    ஓ.பி.எஸ் மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு

    அ.தி.மு.க பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்தி தனி நீதிபதி விதித்த தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், நாளை தீர்ப்பு வெளியாகிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கின்றனர்.



  • Jan 10, 2024 21:56 IST
    தஞ்சை ஐஸ்வர்யா ஆணவக்கொலை:  பல்லடம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

    தஞ்சை ஐஸ்வர்யா ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக, திருப்பூர் மாவட்டம்,  பல்லடம் காவல் ஆய்வாளர் முருகையாவை சஸ்பெண்ட் செய்து கோவை சரக டி.ஐ.ஜி சரவணசுந்தர் உத்தரவிட்டுள்ளார். சாதிமறுப்பு திருமணம் செய்த ஐஸ்வர்யாவை அவரது விருப்பத்திற்கு மாறாக பெற்றோருடன் காவல் ஆய்வாளர் அனுப்பியதாக புகார் எழுந்துள்ளது.



  • Jan 10, 2024 20:58 IST
    சென்னையில் ஜன.12ல் பொருட்காட்சி தொடக்கம்   

    சென்னையில் ஜன.12ல் பொருட்காட்சி தொடங்குகிறது. ஜன.12 மற்றும் 13ஆம் தேதிகளில் பொதுமக்கள் கட்டணமின்றி இந்தப் பொருள்காட்சியை பார்வையிடலாம்.
    சென்னை தீவுத் திடலில் நடைபெறும் இந்தப் பொருள்காட்சியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.



  • Jan 10, 2024 20:36 IST
    கங்குவா சூர்யா காட்சிகள் நிறைவு!

    'கங்குவா' படத்தில் தனது கடைசி காட்சியை நிறைவு செய்ததாக நடிகர் சூர்யா X தளத்தில் பதிவில் தெரிவித்துள்ளார்.



  • Jan 10, 2024 20:34 IST
    ஓடிடி தளத்தில் ஜோ!

    “ஜோ’ திரைப்படம் வரும் 15ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.



  • Jan 10, 2024 20:34 IST
    இங்கிலாந்து லயன்ஸ் அணி பேட்டிங் ஆலோசகர் தினேஷ் கார்த்திக்!

    இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக, இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



  • Jan 10, 2024 20:04 IST
    பவன் கல்யாண் கட்சியில் இணைகிறாரா பிரபல கிரிக்கெட் வீரர்?

    நடிகரும் ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் உடன் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
    ஒய்.எஸ்.ஆர். கட்சியில் இருந்து விலகிய நிலையில் பவன் கல்யாணை அவர் சந்தித்துள்ளது அம்மாநிலத்தில் அரசியல் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.



  • Jan 10, 2024 19:40 IST
    விஜயகாந்த் மகன் படத்தில் சிறப்பு தோற்றம்; ராகவா லாரன்ஸ் வீடியோ!

     

    “கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன்; விஜயகாந்த் சார் மீது எனக்குள்ள மரியாதைக்கும் அன்பிற்கும் காரணமாக உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என ராகவா லாரன்ஸ் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.



  • Jan 10, 2024 19:22 IST
    ‘ஆடு ஜீவிதம்’ ஏப்.10 ரிலீஸ்


    பிளெஸ்ஸி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், பிருத்வி ராஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது.



  • Jan 10, 2024 19:11 IST
    ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா; சபாநாயகர் தீர்ப்பு

     

    ஷிண்டே தலைமையிலான அணிதான் உண்மையான சிவசேனா என சபாநாயகர் ராகுல் நார்வேகர் தீர்ப்பு அளித்துள்ளார். இது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு பாதகமாக பார்க்கப்படுகிறது.



  • Jan 10, 2024 18:44 IST
    பொங்கல் பரிசு வழங்க நியாய விலைக் கடைகளுக்கும் நாளை பணி நாளாக அறிவிப்பு

    பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்க ஏதுவாக, 12.01.2024 (வெள்ளிக் கிழமை) அன்று அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் பணி நாளாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு ஈடாக 16.01.2024 (செவ்வாய்க் கிழமை) அன்று அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது!



  • Jan 10, 2024 18:19 IST
    நேபாள கிரிக்கெட் வீரர் லமிச்சனேவுக்கு 8 ஆண்டுகள் சிறை!

    17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நேபாள கிரிக்கெட் வீரர், சந்தீப் லமிச்சனேவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காட்மாண்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Jan 10, 2024 17:35 IST
    "ஜன.19ல் மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை" - சிவசங்கர்

    வேலை நிறுத்தம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை ஆராய வேண்டும் என்று தெரிவித்துள்ள போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், வரும் ஜனவரி 19-ந் தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.



  • Jan 10, 2024 16:57 IST
    கருக்கா வினோத் வழக்கு; என்.ஐ.ஏ மனு தள்ளுபடி

    ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.



  • Jan 10, 2024 16:49 IST
    ராமர் கோவில் கும்பாபிஷேக விழா; அழைப்பை நிராகரித்த காங்கிரஸ்

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பை காங்கிரஸ் தலைவர்கள் நிராகரித்துள்ளனர். அயோத்தியாவில் கட்டி முடிக்கப்படாத கோவிலை பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொள்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்



  • Jan 10, 2024 16:31 IST
    19-ம் தேதி கோரிக்கைகள் ஏற்கபடாவிட்டால் மீண்டும் ஸ்டிரைக்; சவுந்தரராஜன்

    வரும் 19ம் தேதி நடைபெறும் பேச்சு வார்த்தையிலும் எங்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால் அதன் பிறகு மீண்டும் அமைதியான முறையில் வேலை நிறுத்தத்தை தொடருவோம் என சி.ஐ.டி.யூ மாநில தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்



  • Jan 10, 2024 16:05 IST
    கஞ்சா விற்பனை செய்த இளைஞர்கள் கைது; 4.50 கிலோ கஞ்சா, 4 மொபைல் போன்கள் பறிமுதல்

    புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த, ஆந்திராவை சேர்ந்த இளைஞர்களை போதைப்பொருள் தடுப்பு படை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4.50 கிலோ கஞ்சா, 4 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. லாரி டிரைவராக இருந்து கொண்டு கஞ்சா விற்பனை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.



  • Jan 10, 2024 15:30 IST
    போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

    ஜனவரி 19 வரை வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன



  • Jan 10, 2024 15:09 IST
    பயிற்சியை தொடங்கிய தோனி

    சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி ராஞ்சியில் ஐ.பி.எல் 2024க்கான பயிற்சியை தொடங்கியுள்ளார்



  • Jan 10, 2024 14:57 IST
    தனியார் மினி பேருந்துகள்- நீதிமன்றம் கேள்வி

    அரசு பேருந்து இயக்கப்படும் வழித்தடங்களில் தனியார் மினி பேருந்துகள் இயங்க எவ்வாறு அனுமதிக்கப்படுகிறது?

    போக்குவரத்து ஆணையர் மற்றும் கன்னியாகுமரி ஆட்சியர் தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு



  • Jan 10, 2024 14:32 IST
    எழும்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட இன்ஜின்

    சேத்துப்பட்டு ரயில் பணிமனையில் இருந்த பெட்டிகளை இழுத்து செல்ல வந்த இன்ஜின், எழும்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்து

    தடம் புரண்ட ரயில் இன்ஜினை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள்

    தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய 3 சக்கரங்களை சீரமைக்கும் பணி தீவிரம்



  • Jan 10, 2024 14:28 IST
    தற்காலிக ஓட்டுநர் மூலம் இயக்கப்பட்ட அரசு பேருந்து விபத்து

    வேலூர் சேம்பள்ளி  கூட்ரோடு பகுதியில் தற்காலிக ஓட்டுநர் மூலம் இயக்கப்பட்ட அரசு பேருந்து  முன்னே சென்ற லாரி மீது மோதி சாலை விபத்துக்குள்ளாகியது;

    காயமடைந்த பயணிகள்  சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதி



  • Jan 10, 2024 14:12 IST
    ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு

    மணிப்பூரில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிக்கான யாத்திரைக்கு அனுமதி மறுப்பு

    பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுக்கபட்டுள்ளதாக அம்மாநில அரசு விளக்கம்

    ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிக்கான பயணம் ஜனவரி 14ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது



  • Jan 10, 2024 13:51 IST
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

    சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இணைத்து மனுத்தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

    தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது நியாயமானது தானா?- உயர்நீதிமன்றம்

    இழப்பீடு வழங்க உத்தரவிட்டதுடன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் பணி முடிவடைந்து விடவில்லை - உயர் நீதிமன்றம்

    மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது- தமிழக அரசு



  • Jan 10, 2024 13:47 IST
    உயர்நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை

    போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் இன்று பிற்பகலுக்கு பிறகு கிடைக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    தொழிற்சங்கத்தினர் தொடர் பிடிவாதத்தில் இருக்கிறார்கள்

    -போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்     



  • Jan 10, 2024 13:28 IST
    குமரி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட மலைப்பகுதியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும்

    வரும் 11, 12 ஆகிய இரு தினங்கள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்

    - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Jan 10, 2024 13:23 IST
    ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு



  • Jan 10, 2024 13:22 IST
    ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு



  • Jan 10, 2024 13:15 IST
    சாலை மறியல்

    திருச்சி: மணப்பாறையில் 100-க்கும் மேற்பட்ட பணிமனை தொழிலாளர்கள் பேருந்து நிலையம் அருகே ஊர்வலம் சென்ற போது திடீர் சாலை மறியல்;

    மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரை டி.எஸ்.பி ராமநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்



  • Jan 10, 2024 13:15 IST
    பொங்கல் பரிசுத் தொகுப்பு

    பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் கிடைக்கப்பெறாத அரிசி குடும்ப அட்டைதாரர்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் தொகையை ஜன.13, 14 ஆகிய தேதிகளில் அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்

    - தமிழ்நாடு அரசு அறிவிப்பு



  • Jan 10, 2024 13:13 IST
    நெல்லை சித்த மருத்துவக் கல்லூரியில், சமத்துவப் பொங்கல்



  • Jan 10, 2024 12:51 IST
    ஜல்லிக்கட்டு- மதுரையில் முன்பதிவு தொடக்கம்

    ஜல்லிக்கட்டு- மதுரையில் முன்பதிவு தொடக்கம் . மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்பதிவு தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் காளைகள், மாடுபிடி வீரர்கள் நாளை பிற்பகல் 12 மணி வரை முன்பதிவு செய்யலாம் madurai.nic.in

     என்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் காளை உரிமையாளருக்கும், மாடுபிடி வீரருக்கென தனித்தனியாக உள்ள பிரிவுகளில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தல் முறைகேடுகளை தடுக்க QR code இணைப்புடன் டோக்கன் வழங்கப்படும். 



  • Jan 10, 2024 12:28 IST
    தாங்கள் முன்வைத்த எந்தகோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை: சிஐடியு செளந்தரராஜன்

    அரசிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு எந்த அழைப்பும் வரவில்லை முறையாக பயிற்சி பெறாதவர்களை வைத்து பேருந்துகள் இயக்கம் .நிதிச்சுமை என்பதை காரணமாக சொல்ல முடியாது" "தாங்கள் முன்வைத்த எந்தகோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை...எந்தவித முன்னேற்றமும் இல்லை" "மக்களை திசை திருப்பும் வகையில் அமைச்சர் பேசி வருகிறார்.சட்டப்படியான நடவடிக்கைகளை சந்திக்க தயாராக இருக்கிறோம்.அனைத்து பேருந்துநிலையங்களிலும் கூட்டம் கூட்டமாக காத்திருக்கும் பயணிகள்" "பழைய ஓய்வூதியம் உள்பட எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை- சிஐடியு செளந்தரராஜன்



  • Jan 10, 2024 12:22 IST
    பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை துவக்கி வைத்த ஸ்டாலின்



  • Jan 10, 2024 11:57 IST
    தாம்பரம் - தூத்துக்குடி - தாம்பரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கம்

    பொங்கல் விடுமுறையை ஒட்டி தாம்பரம் - தூத்துக்குடி - தாம்பரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலும், தாம்பரம் - நெல்லை - தாம்பரம் இடையே முன்பதிவு சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளது



  • Jan 10, 2024 11:55 IST
    மதுரை, தென்காசி வழியாக நெல்லைக்கு சிறப்பு முன்பதிவு ரயில் இயக்கம்.

    பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி தாம்பரத்தில் இருந்து மதுரை, தென்காசி வழியாக நெல்லைக்கு சிறப்பு முன்பதிவு ரயில் இயக்கம். வியாழன், சனி மற்றும் செவ்வாய்கிழமை தாம்பரத்தில் இருந்து இந்த ரயில் புறப்படுகிறது மறுமார்க்கமாக சனி, திங்கள் மற்றும் வியாழன் என்று நெல்லையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்பட உள்ளது இதற்கான முன்பதிவு சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.



  • Jan 10, 2024 11:53 IST
    தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கம்

    பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி வரும் ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமையில் தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கம் மறுமார்க்கமாக திங்கள் மற்றும் புதன் அன்று தூத்துக்குடியில் இருந்து இந்த ரயில் தாம்பரம் வரை இயக்கப்பட உள்ளது.



  • Jan 10, 2024 11:52 IST
    கொடநாடு கொலை; சயானிடம் சிபிசிஐடி போலீசார் நாளை விசாரணை

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயானிடம் சிபிசிஐடி போலீசார் நாளை மீண்டும் விசாரணை ஜாமினில் உள்ள சயானுக்கு, நாளை கோவை அலுவலகத்தில் ஆஜராகுமாறு கடந்த 5ஆம் தேதி சம்மன் கொடநாடு வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கபட்டுள்ள பிஜின்குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் செல்போன் தகவல் பரிமாற்ற விபரங்கள் ஏற்கனவே மீட்பு



  • Jan 10, 2024 11:51 IST
    தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமன் பெயர் பரிந்துரை

    தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமனை, ஆளுநருக்கு பரிந்துரை செய்தது தமிழக அரசு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா செய்த நிலையில், பி.எஸ். ராமன் பெயர் பரிந்துரை



  • Jan 10, 2024 11:46 IST
    தமிழக அரசு தரப்பு கோரிக்கையை ஏற்காததால் தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்

    வேலை நிறுத்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன பிரச்சினை உள்ளது- உயர்நீதிமன்றம். பேச்சுவார்த்தை பல கட்டங்களிலும் நடந்து முற்று பெறாத நிலையில் ஜன.19ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு- தமிழக அரசு தரப்பு கோரிக்கையை ஏற்காததால் தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்- போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பு



  • Jan 10, 2024 11:24 IST
    பண்டிகை நேரத்தில் போராட்டத்தை நடத்துவது முறையற்றது - உயர்நீதிமன்றம்

    பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும்? வேலைநிறுத்தம் மேற்கொண்டு வரும் போக்குவரத்து ஊழியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி. ஓய்வூதியர்களுக்கு மட்டும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து முடிவு எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு. வேலைநிறுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான்- உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு போராட்டம் நடத்த உரிமை இல்லை என கூறவில்லை- உயர்நீதிமன்றம். பண்டிகை நேரத்தில் போராட்டத்தை நடத்துவது முறையற்றது - உயர்நீதிமன்றம். வழக்கை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைத்தது தலைமை நீதிபதி அமர்வு



  • Jan 10, 2024 10:59 IST
    முரசொலி நிலம் வழக்கு - ஆணையம் விசாரிக்க உத்தரவு 

    முரசொலி நிலம் வழக்கில் பட்டியலினத்தோர் ஆணையம் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. அனைத்து தரப்புக்கும் வாய்ப்பளித்து விளக்கத்தைப் பெற்று விசாரணை நடத்த வேண்டும்.

    தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து முரசொலி அறக்கட்டனை தொடர்ந்த வழக்கில் உத்தரவு 



  • Jan 10, 2024 10:53 IST
    சார்மினார் ரயில் தடம் புரண்டு விபத்து: பயணிகள் காயம்

    தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே சார்மினார் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து. நம்பள்ளி ரயில்நிலையம் அருகே தடம் புரண்டது ஒரே ஒரு ரயில் பெட்டி. விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 5க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்



  • Jan 10, 2024 10:29 IST
    செல்வராஜ் எம்.பி மருத்துவமனையில் அனுமதி

    நாகை மக்களவை உறுப்பினர் செல்வராஜ், மூச்சுத்திணறல் காரணமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. 



  • Jan 10, 2024 10:24 IST
    தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களுக்கு அரசு அழைப்பு

    அரசு பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அரசு அழைப்பு - மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளை அணுக அரசு அறிவுறுத்தல்



  • Jan 10, 2024 10:06 IST
    பொன்முடி மன: உச்ச நீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை

    சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் தண்டனை: சிறையில் சரணடைய விலக்கு கோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை



  • Jan 10, 2024 10:05 IST
    பொங்கல் பரிசு திட்டத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின்

    அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு

    சென்னை, ஆழ்வார்பேட்டையில் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்



  • Jan 10, 2024 09:28 IST
    ரூ.1000 உரிமைத் தொகை: முன்கூட்டியே வரவு வைப்பு

    பொங்கல் பண்டிகையை ஒட்டி முன்கூட்டியே வரவு வைக்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

    ஒவ்வொரு மாதமும் 15ம்தேதி பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை

    இந்த மாதம் பொங்கலையொட்டி முன்கூட்டியே ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது



  • Jan 10, 2024 08:56 IST
    போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்: இன்று வழக்கு விசாரணை

    போக்குவரத்து சங்கங்களின் வேலை நிறுத்தத்திற்கு எதிரான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. 

     



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment