Advertisment

Tamil News highlights: வெள்ள பாதிப்பு : நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஸ்டாலின் இன்று ஆய்வு

Tamil News Today , Tamil News updates, Tamilnadu Rains: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சட

பெட்ரோல் - டீசல் விலை

Advertisment

சென்னையில் 578-வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

மத்தியக் குழு வருகை 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஆய்வு செய்ய 5 அதிகாரிகள் கொண்ட மத்தியக் குழு இன்று தூத்துக்குடி வருகை. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Dec 20, 2023 21:56 IST
    எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் எண்ணெய் கழிவு அகற்றம் - சி.பி.சி.எல் நிறுவனம் தகவல்

    எண்ணூர் முகத்துவாரத்தில் இருந்து சிவன்படை பகுதிவரை மொத்தம் 8.9 கி.மீ வரை கச்சா எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன; கழிவுகளை அகற்றும் பணியில் மீனவர்கள் உட்பட 900 பேர் ஈடுபட்டுள்ளனர். கடலில் கலந்த 393 டன் எண்ணெய் கசடுகள் அகற்றப்பட்டுள்ளதாக சி.பி.சி.எல் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.



  • Dec 20, 2023 21:14 IST
    அமைச்சர் பொன்முடிக்கு நாளை தண்டனை அறிவிப்பு 

    அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் நாளை (டிச. 21) காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தண்டனை விவரங்களை அறிவிக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு 2-வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது; அமைச்சர் பொன்முடி மற்றும அவரது மனைவி நேரிலோ காணொலி வாயிலாகவோ ஆஜராகும்பட்சத்தில் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • Dec 20, 2023 20:57 IST
    தயான் சந்த்; துரோணாச்சியார் விருதுகள் அறிவிப்பு 

     

    தமிழ்நாட்டை சேர்ந்த கபடி பயிற்சியாளர் கவிதா செல்வராஜுக்கு வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதும், செஸ் பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ்-க்கு துரோணாச்சியார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. 



  • Dec 20, 2023 20:33 IST
    2024-25ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை: டி.என்.பி.எஸ்.சி வெளியீடு 

     

    2024-25ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி இன்று அறிவித்துள்ளது. அதன்படி, குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் (ஜனவரியில்) வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் எனவும், குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும் 

    குரூப் - 1 தேர்வுக்கான அறிவிக்கை அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலையில் தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.



  • Dec 20, 2023 20:22 IST
    25 மணி நேரத்தில் 24 டன் நிவாரணப் பொருட்கள்

     

    தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுகளை  இந்திய விமானப்படை அதிகாரிகள் வழங்கி வருகிறார்கள். கடந்த 25 மணி நேரத்தில் 24 டன் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.



  • Dec 20, 2023 19:26 IST
    தூத்துக்குடி மக்கள் விரைவாக மீள்வார்கள்': தி.மு.க எம்.பி கனிமொழி பேச்சு 

     

    “வரலாறு காணாத மழையால்  தூத்துக்குடி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. முடிந்த அளவிற்கு அனைத்து பகுதிகளுக்கும் சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறோம். ஏரல் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

    ஒரு எம்பியாக நானும், முதலமைச்சரும் உங்களுடன் இருக்கிறோம். தூத்துக்குடி மக்கள் விரைவாக மீண்டு  விடுவார்கள்” என்று தி.மு.க எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். 



  • Dec 20, 2023 19:20 IST
     நிவாரண உதவி: வீடியோ காலில் பேசிய சூர்யா!

     

    தென் மாவட்டங்களில் நிவாரண உதவிகளை மேற்கொண்டு வரும் ரசிகர்களிடம் வீடியோ காலில் நடிகர் சூர்யா பேசினார். அங்கு தேவைப்படும் அடிப்படை  உதவிகளை தெரிவிக்கும் படியும் அதற்கு நமது சார்பாக உதவிக் கரம் நீட்டுவோம் எனவும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.



  • Dec 20, 2023 18:55 IST
    ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

    விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப், ராதிகா ஆப்தே, காயத்ரி உள்ளிடோர் நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது



  • Dec 20, 2023 18:26 IST
    எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது

    ’நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது



  • Dec 20, 2023 18:12 IST
    தென்காசியில் விடுமுறை இல்லை

    அதேநேரம் தென்காசி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை



  • Dec 20, 2023 18:06 IST
    தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலிக்கு அர்ஜுனா விருது

    சமீபத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது



  • Dec 20, 2023 17:45 IST
    தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை

    தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பால், 3வது நாளாக விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்



  • Dec 20, 2023 17:44 IST
    முகமது ஷமிக்கு 'அர்ஜுனா விருது'

    இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு, இந்த ஆண்டிற்கான 'அர்ஜுனா விருது' மத்திய அரசு அறிவித்தது.



  • Dec 20, 2023 17:24 IST
    டி.என்.பி.எஸ்.சி ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2024ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.



  • Dec 20, 2023 17:11 IST
    கிறிஸ்துமஸ் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

    கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக 640 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 22ம் தேதி கூடுதலாக 350 பேருந்துகளும், 23ம் தேதி கூடுதலாக 290 பேருந்துகளும் இயக்கப்படும். சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக்குடி, வேளாங்கண்ணிக்கும், இதர ஊர்களுக்கும் பயணம் மேற்கொள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது



  • Dec 20, 2023 17:01 IST
    ஸ்டாலின் நாளை தூத்துக்குடி செல்கிறார்

    தென் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட இன்று திட்டமிடப்பட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மதுரை பயணத்தில் திடீர் மாற்றம்; நாளை (டிச.21) காலை 10.15 மணிக்கு நேரடியாக தூத்துக்குடி செல்கிறார்; நெல்லை மற்றும் தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொண்ட பின் நாளை இரவு 10:40 விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்



  • Dec 20, 2023 16:29 IST
    நெல்லை: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

    வெள்ள பாதிப்பு: நெல்லையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு.  



  • Dec 20, 2023 16:15 IST
    இதுவரை: மொத்தமாக 143 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

    மக்களவை: கேரள எம்.பி தாமஸ் சஷிகாடன், எ.எம் அரிஃப் என இன்று 2 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட். இதுவரை ஒட்டு மொத்தமாக 143 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.  



  • Dec 20, 2023 15:32 IST
    தூத்துக்குடி: பொதுமக்கள் சாலை மறியல்

    தூத்துக்குடி: மறவன் மடத்தில் 3 மணிநேரமாக பொதுமக்கள் சாலை மறியல். 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியல் முடிவுக்கு வந்தது



  • Dec 20, 2023 15:31 IST
    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த அமைச்சர்கள்

    தூத்துக்குடி: பழையகாயல் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன்



  • Dec 20, 2023 14:59 IST
    தூத்துக்குடியில் மீண்டும் மழை

    தூத்துக்குடியில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது



  • Dec 20, 2023 14:47 IST
    நெல்லை மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? ஆட்சியர் விளக்கம்

    நெல்லை மாவட்டத்தில் உள்ள 1195 பள்ளிகளில் 1108 பள்ளிகள் முழு பாதுகாப்புடன் உள்ளன. மீதமுள்ள பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    கடந்த 3 நாட்களாக துண்டிக்கப்பட்ட நெல்லை - தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

    மழை வெள்ளத்தால் நெல்லையில் உள்ள 840 நியாய விலைக் கடைகளில் 63 நியாய விலைக் கடைகள் பாதிக்கப்பட்டு பொருட்கள் சேதமடைந்துள்ளன-கார்த்திகேயன், நெல்லை ஆட்சியர்



  • Dec 20, 2023 14:24 IST
    குடியரசுத் தலைவர் வேதனை

    ஜகதீப் தன்கர் போல மிமிக்கிரி - நாடாளுமன்ற வளாகத்தில் நமது மதிப்பிற்குரிய குடியரசுத் துணைத் தலைவர் அவமானப்படுத்தப்பட்ட விதத்தைப் பார்த்து மனம் நொந்து போனேன்” - குடியரசுத் தலைவர் வேதனை



  • Dec 20, 2023 14:23 IST
    வெள்ளத்தில் சிக்கி தவித்த அனிதா ராதாகிருஷ்ணன் 3 நாட்களுக்கு பின் மீட்பு



  • Dec 20, 2023 14:21 IST
    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- நீதிமன்றம் உத்தரவு

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை தென்கால் பாசன விவசாயிகளின் சங்க நிர்வாகிகள் நடத்தி வந்த நிலையில், மதுரை மாவட்ட நிர்வாகமே நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு



  • Dec 20, 2023 13:54 IST
    தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு

    தூத்துக்குடி  ஏரல் தாலுகா மங்கல குறிச்சி கிராமத்தில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் ஏராளமான மக்கள் மருந்து, உணவின்றி தவித்து வருகின்றனர்;

    உமரிக்காடு, முக்காணி, ஆதனூர், பழையகாயல், வாழவல்லான் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் ஏராளமான மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்;

    உடனடியாக மீட்க கோரிக்கை



  • Dec 20, 2023 13:53 IST
    ஹெலிகாப்டர் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்

    தூத்துக்குடியில் இன்று காலை முதல் சுமார் 700 உணவுப் பொட்டலங்கள் ஹெலிகாப்டர் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவல் படை தகவல்!



  • Dec 20, 2023 13:29 IST
    மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (டிச.20) லேசானது  முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Dec 20, 2023 13:15 IST
    திருச்சி சிவா எம்.பி பேட்டி

    நாடாளுமன்றத்தில்  எதிர்கட்சிகளின் செயல்பாடுகளை திட்டமிட்டு ஒடுக்கப்படுகிறது. இதுவரை இல்லாத அளவில் 141 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்- டெல்லியில் திருச்சி சிவா எம்.பி பேட்டி



  • Dec 20, 2023 13:15 IST
    தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி

    மழை பாதித்த பகுதிகளில் 27 டன் உணவுப் பொருட்களை விநியோகித்துள்ளோம்- பெரு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குமரி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நடைபெற்ற மீட்பு பணிகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி



  • Dec 20, 2023 13:14 IST
    எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்த பயணிகள்

    ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள், சிறப்பு ரயில் மூலம் எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தனர். எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்த பயணிகளுக்கு மருத்துவ உதவி,  உதவி மையம், உணவு ஆகிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



  • Dec 20, 2023 13:06 IST
    வெள்ளத்தில் மூழ்கிய சிவகளை, பெருங்குளம் சுற்றுவட்டார கிராமங்கள்



  • Dec 20, 2023 13:06 IST
    துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் வேதனை

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி கல்யாண் பானர்ஜி நேற்று பாராளுமன்றத்திற்கு வெளியே தன்னை கேலி செய்ததாக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜ்யசபாவில் இன்று வேதனை தெரிவித்திருந்த நிலையில், "நீங்கள் ஜக்தீப் தங்கரை அவமதிக்கலாம் ஆனால் இந்திய துணை ஜனாதிபதியை அவமதிக்க முடியாது" என்று அவர் கூறியுள்ளார்.

    திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கல்யாண் பானர்ஜி , ராஜ்யசபா தலைவரும், துணைத் ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கரைப் போல் சைகை செய்யும் காட்சிகள் பார்லிமென்ட் வளாகத்தில் இருந்து காணொளி ஒன்றும் , காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதை பதிவு செய்திருப்பதால் கோபமடைந்த தங்கர், தன் பதவியின் கண்ணியம் தாழ்ந்தால் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.



  • Dec 20, 2023 12:23 IST
    மழை வெள்ள பாதிப்பு : நிவாரண பொருட்கள் வழங்கும் பணி தீவிரம்

    வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை மட்டும் 5.5 டன் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய விமாப்படை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ள.



  • Dec 20, 2023 12:22 IST
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

    தென்மாவட்ட மழை வெள்ள மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு



  • Dec 20, 2023 12:21 IST
    தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • Dec 20, 2023 12:20 IST
    கொலை வழக்கில், முன்னாள் பாமக மற்றும் பாஜக செயலாளர்களுக்கு ஆயுள் தண்டனை

    கோபியில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் முன்னாள் பாமக மாவட்ட செயலாளர் மணிமோகன், முன்னாள் பாஜக ஒன்றிய செயலாளர் பூபதிராஜன் உட்பட 4 பேருக்கு கோபி நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!



  • Dec 20, 2023 12:19 IST
    செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று கோவில்பட்டியில் இருந்து புறப்படும்

    திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று கோவில்பட்டியில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது கோவில்பட்டியில் இருந்து இரவு 10.22 மணிக்கு புறப்படுகிறது



  • Dec 20, 2023 11:40 IST
    மழை பாதிப்பு - வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்

    வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை ஸ்டார்ட் செய்ய வேண்டாம். மழை பாதிப்புக்குள்ளான வாகனங்களை பழுதுநீக்காமல் இயக்குவதன் மூலம் வாகனங்களில் பெரிய அளவு பாதிப்பு நேரிடும். காப்பீட்டு நிறுவனங்கள் மக்கள் எளிதில் இழப்பீடு பெறுவதற்கு ஏதுவாக முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.



  • Dec 20, 2023 10:59 IST
    பேருந்துகளில் கட்டணமின்றி நிவாரண பொருட்களை அனுப்பலாம்

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கட்டணமின்றி அரசு பேருந்துகளில் நிவாரண பொருட்களை அனுப்பலாம்

    4  மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் சென்றடைய ஏற்பாடு - போக்குவரத்து துறை

    தமிழகம் முழுவதும் இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகளில் உள்ள சுமை பெட்டிகள் மூலம் அனுப்ப அனுமதி



  • Dec 20, 2023 10:58 IST
    மழை, வெள்ள பாதிப்பு: தூத்துக்குடி வந்த மத்திய குழு 

    மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு தூத்துக்குடி வருகை

    தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு

    பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து மத்திய குழுவினருக்கு காணொலி மூலமாக மாவட்ட நிர்வாகம் விளக்கம்

    ஆலோசனைக்கு பிறகு பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடுகிறது, மத்திய குழு



  • Dec 20, 2023 10:21 IST
    திருச்செந்தூர் கோயில்: சொந்த ஊர் திரும்ப அரசு சார்பில் இலவச பேருந்து

    திருச்செந்தூர் கோயிலில் உள்ள பக்தர்களுக்கு 3 வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூரில் 3 நாட்களுக்குப் பின் பொது போக்குவரத்து தொடக்கம்.   போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் 

    மதுரை, திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சிறப்பு இலவச பேருந்து இயக்கப்படும். கனமழை, வெள்ளத்தால் திருச்செந்தூர் கோயிலில் 3 நாட்களாக ஊர் திரும்ப முடியாமல் காத்திருக்கும் பக்தர்கள். 



  • Dec 20, 2023 09:57 IST
    நீலகிரி: ரயில் போக்குவரத்து இன்று ரத்து

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை காரணமாக இல்குரோ ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால் இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட ரயில் கல்லார் வரை சென்று பாதியில் திரும்பியது.

    ரயில் போக்குவரத்து இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு



  • Dec 20, 2023 09:55 IST
    தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு 

    சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு. ஒரு கிராம் தங்கம் ரூ.5,835க்கும், ஒரு சவரன் ரூ.46,680க்கும் விற்பனை



  • Dec 20, 2023 09:36 IST
    3 நாட்களுக்கு பின் தூத்துக்குடிக்கு விமான சேவை

    சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 3 நாட்களுக்கு பின் விமான சேவை தொடங்கியது

    கனமழை வெள்ளத்தால் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக சென்னை- தூத்துக்குடி விமான சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது



  • Dec 20, 2023 09:13 IST
    திருச்செந்தூர் கோயிலில் காத்திருக்கும் பக்தர்கள்

    மழை, வெள்ள பாதிப்பால் திருச்செந்தூரில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்வதற்காக சென்ற பக்தர்கள் கோயில் வளாகத்திலேயே காத்திருப்பு 



  • Dec 20, 2023 09:04 IST
    மீட்பு பணியில் மராட்டா பட்டாலியன் படையினர்

    பத்மநாபமங்கலம் பகுதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலைகள். வெள்ளத்தால் குடியிருப்புகளை விட்டு வெளியேற முடியாமல் சிக்கி தவிக்கும் மக்கள்

    கிராம மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ 23 மராட்டா பட்டாலியன் படையினர்



  • Dec 20, 2023 09:04 IST
    மீட்பு பணியில் மராட்டா பட்டாலியன் படையினர்

    பத்மநாபமங்கலம் பகுதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலைகள். வெள்ளத்தால் குடியிருப்புகளை விட்டு வெளியேற முடியாமல் சிக்கி தவிக்கும் மக்கள்

    கிராம மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ 23 மராட்டா பட்டாலியன் படையினர்



  • Dec 20, 2023 08:03 IST
    நெல்லை ரயில் போக்குவரத்து சீரானது

    வெள்ளம் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட நெல்லை  ரயில் நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. கடும் மழையால்  தேங்கிய வெள்ள நீர் அகற்றப்பட்ட நிலையில் நெல்லை ரயில் நிலையம் சீரானது. 



  • Dec 20, 2023 07:59 IST
    மத்தியக் குழு இன்று வருகை

    அதிகனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு மத்தியக் குழு இன்று வருகை. மழை வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கர்னல் ஏ.பி சிங் தலைமையிலான குழு ஆய்வு 



tamilnadu rain
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment