Rain In Tamilnadu | பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 576-வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வேகமாக நிரம்பும் அணைகள்
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கங்களில் இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அம்மாவட்டங்களை சுற்றி உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. காரையார், சேர்வலாறு அணைகளுக்கு 31,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், தாமிரபரணி ஆற்றில் 32,000 கன அடி நீர் வெளியேற்றம்.
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள மணிமுத்தாறு அணையில் இருந்து 10,000 கன அடி நீர் திறப்பு. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
-
Dec 18, 2023 23:11 ISTவெள்ள பாதிப்பு: தி.மு.க இளைஞரணி மாநாடு ஒத்திவைப்பு
தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தி.மு.க இளைஞரணி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, டிசம்பர் 17-ம் தேதி நடைபெறவிருந்த மாநாடு, சென்னை வெள்ளம் காரணமாக டிசம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தி.மு.க இளைஞரணி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
Dec 18, 2023 23:02 IST4 மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணி - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி: “4 மாவட்டங்களில் வெள்ள மீட்பு பணிகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. விமானப்படை மூலம் 1,000 கிலோ உணவு விநியோகம் செய்துள்ளோம்; மொத்தமாக 106 நிவாரண முகாம்கள் திறப்பு 905 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; 200 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது, 40 தீயணைப்பு படகுகள் மீட்பு பணியில் உள்ளன” என்று கூறினார்.
-
Dec 18, 2023 21:37 ISTதென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு: ஆளுநர் ஆர்.என். ரவி நாளை அவசர ஆலோசனை
4 தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவசர ஆலோசனை நடத்துகிறார். தேசிய பேரிடர் மீட்பு படை, கடலோர காவல்படை, ராணுவம், கடற்படை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆளுநர் ஆர்.என். ரவி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
-
Dec 18, 2023 21:19 ISTதென்மாவட்டங்களுக்கு நாளை இ.பி.எஸ் பயணம்
மழை, வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் ஆய்வு செய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை தென்மாவட்டங்களுக்கு பயணம் செய்கிறார். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க உள்ளார்.
-
Dec 18, 2023 21:14 ISTநெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். டெல்லி சென்றுள்ள முதலமைச்சர், காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
Dec 18, 2023 21:11 IST4 மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைப்பு - உள்துறை செயலாளர் அமுதா பேட்டி
உள்துறை செயலாளர் அமுதா பேட்டி: “மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ரூ. 9 லட்சம் மதிப்புள்ள உணவு பொருட்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கன்னியாகுமாரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு 49,000 போர்வைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.
-
Dec 18, 2023 21:05 IST3 மாவட்டங்களில் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளை நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 18, 2023 20:41 ISTநெல்லை, தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் - அமைச்சர் மா.சு
மழை பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் பாதுகாப்பாக உள்ளனர். சென்னையில் செயல்படும் 300 நடமாடும் மருத்துவ முகாம்கள் 4 மாவட்டங்களுக்கு அனுப்பப்படும்; வெள்ளம் வடிந்தபின், நோய்த்தொற்றைத் தடுக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிமணியன் தெரிவித்துள்ளார்.
-
Dec 18, 2023 20:00 ISTதிருநெல்வேலி சந்திப்பு பகுதிகளில் உதயநிதி நேரில் ஆய்வு
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் மழைநீர் புகுந்துள்ள நிலையில் அதன் பாதிப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார் .
அங்கு தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவும், கடைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்யவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். -
Dec 18, 2023 19:59 ISTதூத்துக்குடியில் கனமழை - திமுக எம்.பி. கனிமொழி ஆய்வு!
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி. ஆய்வு மேற்கொண்டார். -
Dec 18, 2023 19:59 ISTடிராக்டர் மூலம் மக்கள் மீட்பு
தூத்துக்குடியில் கனமழை மற்றும் பெரு வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகு, டிராக்டர் மூலம் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
Dec 18, 2023 19:58 ISTகன்னியாகுமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை பாதிப்பு காரணமாக கன்னியாகுமரியில் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. -
Dec 18, 2023 19:57 ISTதிருநெல்வேலி: கர்ப்பிணி பெண் ஹெலிகாப்டரில் மீட்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட கடற்படையினர் மீட்டனர்.
2 கர்ப்பிணிகள் உள்ளிட்ட 17 பேரை மீட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். -
Dec 18, 2023 19:54 ISTஸ்ரீவைகுண்டம்: 800 ரயில் பயணிகளுக்கு ஹெலிகாப்டரில் உணவு
ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியுள்ள ரயில் பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலமாக உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளுக்கு தரை வழியாக உணவு வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. -
Dec 18, 2023 19:49 ISTஎம்.எஸ் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாளை (டிச.19) நடைபெற இருந்த அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் தெரிவித்துள்ளார். -
Dec 18, 2023 19:48 ISTமழை வெள்ளத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
-
Dec 18, 2023 19:45 IST4 மாவட்ட மக்கள் மின்கட்டணம் செலுத்த அவகாசம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஜன.2ம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் என அமைச்சர் தங்கம தென்னரசு கூறியுள்ளார்.
தொடர்ந்து, “மின்கட்டணத்துடன் 18-ம் தேதி அபராதத் தொகை செலுத்தியிருந்தால் அடுத்த மாத மின் கட்டணத்துடன் சரி செய்யப்படும்.
இச்சலுகை வீடு, வணிக நிறுவனம், தொழிற்சாலைகள், சிறு, குறு தொழில் நுறுவனங்களுக்கும் பொருந்தும்” எனவும் தெரிவித்துள்ளார். -
Dec 18, 2023 19:38 ISTநாளை பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
டெல்லியில் நாளை பிற்பகல் பிரதமரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.
பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில், பிற்பகல் 12 மணிக்கு சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. -
Dec 18, 2023 19:37 ISTதிருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் தவிப்பு
திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் தொடர் கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த ரயிலுக்குள் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் 20 மணி நேரத்திற்கு மேலாக உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருள்கள் இன்றி தவித்துவருகின்றனர். -
Dec 18, 2023 19:01 IST300 ஆம்னி பேருந்துகள் நிறுத்தம்
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தொடர் மழை காரணமாக இன்று ஆம்னி பேருந்துகள் இயங்கவில்லை. 300 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என ஆம்னி பேருந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. -
Dec 18, 2023 18:27 ISTநிவாரணம் வழங்க வாட்ஸ்அப் எண் வெளியீடு
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவோர் 73977-66651 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
-
Dec 18, 2023 17:57 ISTநெல்லை மாவட்டத்தில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை, வெள்ளம் காரணமாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் விடுமுறை அறிவித்துள்ளார்
-
Dec 18, 2023 17:54 ISTமக்களவையில் 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: திருமாவளவன் கண்டனம்
மக்களவையில் 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “மக்களவையில் இன்று பிற்பகல் 3.00 மணி அமர்வின் போது எதிர்க்கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்கள் 33 பேரை இடைநீக்கம் செய்துள்ளது மோடி அரசு." நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து விவாதிக்க வேண்டும்; உள்துறை அமைச்சர் அண்மையில் நடந்த பார்வையாளர்களின் அத்துமீறல் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும்; அவர்களுக்கு அனுமதி பெற்றுத்தந்த பாஜக உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் "என்கிற கோரிக்கைகளை வலியுறுத்திய எதிர்க்கட்சிகளை முற்றாக முடக்கும் வகையில் இந்த அடாவடிப் போக்கில் ஆட்சியாளர்கள் இறங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
மாநிலங்களவையிலும் முப்பதுக்கும் மேற்பட்டோர் இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். இது அதிகார மமதையின் உச்சம். இந்த சனநாயக விரோதப் போக்கினை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது” எனக் கூறியுள்ளார்.
-
Dec 18, 2023 17:39 ISTபுனித சேவியர்ஸ் கல்லூரியில் தங்கிக்கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு
நெல்லையில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாளையங்கோட்டை புனித சேவியர்ஸ் கல்லூரியில் தங்கிக்கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது
-
Dec 18, 2023 17:27 ISTநிவாரண பொருட்கள் வழங்க வாட்ஸ் அப் எண் அறிமுகம்
தென் மாவட்டங்களில் நீடிக்கும் அதிகனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் மற்றும் நிறுவனங்கள், நிவாரண பொருட்கள் வழங்க 73977 66651 என்ற வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம்
-
Dec 18, 2023 17:15 ISTமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. 152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 138 அடியை கடந்துள்ளது. நீர்மட்டம் 138 அடியை எட்டியதை தொடர்ந்து இரண்டாம் கட்ட எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 18, 2023 17:00 ISTபயணிகள் வருகைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும்; போக்குவரத்துக் கழகம்
தென் மாவட்டங்களுக்கு இன்று 60 பேருந்துகள் இயக்க முடிவு செய்த நிலையில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பயணிகளின் வருகைக்கு ஏற்ப குறைவான பேருந்துகள் இயக்கப்படும். தென் மாவட்டங்களில் இருந்து பிற ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் நிலைமையை கண்காணித்து, தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது
-
Dec 18, 2023 16:53 ISTடெல்லி புறப்பட்டுச் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். 'மிக்ஜாம்' புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரிக்கை வைக்கவும், தென் மாவட்ட மழை பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக ஆலோசிக்கவும் பிரதமர் மோடியை நாளை சந்திக்க நேரம் கோரி கடிதம் எழுதியுள்ளார்.
-
Dec 18, 2023 16:39 ISTமழை பாதிப்பு நிலைமை விரைவில் சீரடையும் - ஆளுநர் ஆர்.என்.ரவி
4 மாவட்டங்களில் மக்கள் மழையால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். மக்கள் வீடுகளிலேயே இருந்து அரசு நிர்வாகம் விடுக்கும் அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டும். மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கையால் விரைவில் நிலைமை சீரடையும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
-
Dec 18, 2023 16:24 ISTஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் பயணிகள் உணவு, தண்ணீர் இன்றி அவதி
திருச்செந்தூரில் இருந்து நேற்று சென்னைக்கு புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ், கனமழையால் தண்டவாளம் சேதம் காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நேற்றிரவு முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் உணவு, தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் உடனடியாக மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
-
Dec 18, 2023 16:10 ISTநெல்லையில் அமைச்சர் உதயநிதி ஆய்வு
நெல்லை, பாளையங்கோட்டையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். அப்போது முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்
-
Dec 18, 2023 16:05 ISTமக்களவையில் 31 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 31 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதிமாறன் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், நவாஸ்கனி, அண்ணாதுரை, கலாநிதி வீராச்சாமி, எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் உள்ளிட்டோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் எம்பிக்கள் ஆதிரஞ்சன் சௌத்ரி, விஜய் வசந்த், திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு விடுத்ததால் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
மொத்தமாக நடப்பு கூட்டத்தொடரில் இதுவரை 44 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் -
Dec 18, 2023 16:02 ISTஅதிகனமழை எதிரொலி: தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளையும் விடுமுறை
அதிகனமழை எதிரொலியாக தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
-
Dec 18, 2023 15:00 ISTசிவகாசி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஆனைகுட்டம் அணை திறக்கப்படவுள்ளதால், கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Dec 18, 2023 14:59 ISTகன்னியாகுமரி: அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் உபரி நீர் வெளியேற்றம் குறைப்பு
பேச்சிப்பாறை - 45.57 அடி (கொள்ளளவு 48 அடி) நீர்வரத்து - 1662 கன அடி கால்வாய் வெளியேற்றம் - இல்லை உபரி நீர் வெளியேற்றம் - 2330 கன அடி பெருஞ்சாணி - 75.52 அடி (கொள்ளளவு 77 அடி) நீர் வரத்து - 74.92 கன அடி கால்வாய் வெளியேற்றம் - இல்லை உபரி நீர் வெளியேற்றம் - 2468 கன அடி
-
Dec 18, 2023 14:15 ISTமழை பாதிப்பு, நிவாரண உதவிகளுக்கு வாட்ஸ் அப் எண்
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வரும் நிலையில், மழை பாதிப்பு, நிவாரண உதவிகளுக்கு 8148539914 என்ற வாட்ஸ் அப் எண்ணை அழைக்கலாம் என்றும், @tnsdma என்ற எக்ஸ் தள மற்றும் பேஸ்புக் பக்கங்களிலும் பாதிக்கப்பட்ட மக்கள் உதவி கோரலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
Dec 18, 2023 14:14 ISTதிருச்செந்தூர் துண்டிப்பு!
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திருச்செந்தூர் துண்டிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது
வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் வாகனங்களை ஓட்ட முடியாததால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். திருச்செந்தூரில் மின்சாரம் இணைப்பு, தொலைதொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. வதந்திகள் பரவுவதை தடுக்க ஒலிப்பெருக்கி மூலம் நடப்பு நிலவரத்தை அரசு தரப்பில் தெரிவிக்க மக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
Dec 18, 2023 13:03 IST4 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் முதல்வர் ஆலோசனை
தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி 4 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
-
Dec 18, 2023 12:19 ISTகாயல்பட்டினத்தில் 96 செ.மீ. மழை பதிவு : மீட்பு பணிகள் தீவிரம்
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 96 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆண்டு முழுவதும் பெய்யும் சராசரி மழையை விட வரலாறு காணாத மழை பெய்துள்ள நிலையில், மழை பாதிப்பில் இருந்து 7500 பேர் மீட்கப்பட்டுள்ளனர், 84 மீட்பு படகுகள் மூலம் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இவ்வளவு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கவில்லை தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.
-
Dec 18, 2023 12:17 ISTவிருதுநகர் - மதுரைக்கு கனமழை எச்சரிக்கை
விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு. தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூரில் 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
-
Dec 18, 2023 12:16 ISTதென்மாவட்டங்களுக்கு விரையும் உதயநிதி ஸ்டாலின்
கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
-
Dec 18, 2023 11:32 ISTநிவாரண பணிகளில் அதிகாரிகளுக்கும் துணை நிற்க வேண்டும் : தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
தென் மாவட்டங்களின் நிலை, நிவாரண பணிகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி அனைத்து நிர்வாகிகளும் தங்கள் பகுதி மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவிட வேண்டும். பொதுமக்களுக்கும், நிவாரண பணிகளில் அதிகாரிகளுக்கும் துணை நிற்க வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
Dec 18, 2023 10:52 ISTகுற்றால அருவிகளில் குளிக்க தடை
கனமழை காரணமாக குற்றால அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் நேரில் ஆய்வு.
பொது மக்களின் பாதுகாப்பு கருதி குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
-
Dec 18, 2023 10:52 ISTகுற்றால அருவிகளில் குளிக்க தடை
கனமழை காரணமாக குற்றால அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் நேரில் ஆய்வு.
பொது மக்களின் பாதுகாப்பு கருதி குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
-
Dec 18, 2023 10:42 ISTஇன்னாசியார்புரம் சிறுமலர் குருமடத்தில் மக்கள் தங்க ஏற்பாடு
தூத்துக்குடி இன்னாசியார்புரம் சிறுமலர் குருமடத்தில் உணவு மற்றும் பொதுமக்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள அருட்தந்தை உபர்ட்டஸ் செல்: +919597041392
-
Dec 18, 2023 10:42 ISTஇன்னாசியார்புரம் சிறுமலர் குருமடத்தில் மக்கள் தங்க ஏற்பாடு
தூத்துக்குடி இன்னாசியார்புரம் சிறுமலர் குருமடத்தில் உணவு மற்றும் பொதுமக்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள அருட்தந்தை உபர்ட்டஸ் செல்: +919597041392
-
Dec 18, 2023 10:39 ISTகாயல்பட்டினத்தில் வரலாறு காணாத அளவு மழை
காயல்பட்டினத்தில் 24 மணிநேரத்தில் 95 செ.மீ. மழை பதிவு. ஓராண்டு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்துள்ளது
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது
வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 7,500 பேர் மீட்கப்பட்டு, 84 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்
வெள்ள மீட்பு பணிகளுக்காக கூடுதல் படகுகள் அனுப்பப்பட்டுள்ளன
மீட்புப்பணிகளுக்காக ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளின் உதவி கோரப்பட்டுள்ளது- சிவ்தாஸ் மீனா, தலைமைச் செயலாளர்
-
Dec 18, 2023 10:28 IST3 மாவட்டங்களில் இன்றும் தொடர் மழைக்கு வாய்ப்பு
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்றும் நாள் முழுவதும் தொடர் மழைக்கு வாய்ப்பு. ராமநாதபுரம், குமரி, தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு. நேற்று போல் இல்லைஎன்றாலும் அதிகனமழை பெய்யலாம்- தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான்
-
Dec 18, 2023 10:25 ISTஅணைகளில் நீர் திறப்பு - ஆறுகளில் வெள்ளம்
கன்னியாகுமரி-பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீர் திறப்பு கோதையாறு, பரளியாறு, தாமிரபரணி ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
-
Dec 18, 2023 10:24 ISTகனமழை எதிரொலி: கர்ப்பிணிகள் மருத்துவமனையில் சேர்ப்பு
கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் அடுத்த 7 நாட்களில் மகப்பேறு தேதியுள்ள 24 கர்ப்பிணிகள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் தகவல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.