பெட்ரோல் டீசல் விலை:
இன்று சென்னையில் பெட்ரோலின் விலை 1 லிட்டருக்கு ரூ.102.63, மேலும் டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.94.24 என்று விற்கப்படுகிறது.
கஞ்சா வைத்திருந்த ஆட்டோ ஓட்டுநர் கைது
சென்னை பட்டினப்பாக்கத்தில் 40 கிலோ கஞ்சா வைத்திருந்த ஆட்டோ ஓட்டுநர் செல்வம் கைது; கஞ்சாவை பறிமுதல் செய்து மயிலாப்பூர் துணை ஆணையரின் தனிப்படை பேலீஸ் நடவடிக்கை.
மேம்படுத்தப்பட்ட, சென்னை அண்ணாநகர் கோபுரம்
ரூ. 97.60 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட, சென்னை அண்ணாநகர் கோபுரத்தை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் போட்டியில், டெல்லி அணிக்கு 139 ரன்களை இலக்காக உ.பி அணி நிர்ணயித்துள்ளது. முதலில் ஆடிய உ.பி. அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்தது
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 79 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது 402 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்
தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய பீகாரைச் சேர்ந்த உபேந்திர ஷானி என்பவர் திருப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பீகாரின் ரத்வாரா பகுதியில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்து, திருப்பூர் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்
சென்னை, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நாளை 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நடைபெறுவதை ஒட்டி சென்னை காவல்துறை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது
சென்னையில் உள்ள தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில் முக்கிய விவாதங்களுக்கு பதில் அளிப்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக தண்ணீர் தினத்தை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபை கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அந்தக் கூட்டத்தில், புதிய குடிநீர் ஆதாரங்களை உருவாக்குதல், பாரம்பரிய நீர்நிலைகளை புனரமைத்தல் குறித்து விவாதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
நெல்லையில் உள்ள சிப்காட் நில எடுப்பு தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ₹30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, தாசில்தார் சந்திரனின் வீடு மற்றும் அவரது மகள் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
விராத் கோலி 100 சதங்கள் அடிக்க வாய்ப்பு பிரகாசமாக என ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
விராத் கோலி, டெஸ்ட், ஒருநாள் என சதத்தில் சதம் அடிக்க நெருங்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டம், கூடுதாழையில் மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குமார் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.30,000 அபராதம் விதித்து சென்னை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நகைச்சுவை கலைஞர் கோவை குணா காலமானார். இவர் சிவாஜி கணேசன், கவுண்டமணி உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்க்ளின் குரல்களில் மிமிக்ரி செய்து பிரபலமானவர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
காதல் திருமணம் செய்த இளைஞர், பெண்ணின் தந்தையால் படுகொலை. கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர், பெண் வீட்டாரால் நடுரோட்டில் வெட்டிக்கொலை கே.ஆர்.பி. அணை அருகே பைக்கில் சென்ற கிட்டம்பட்டியை சேர்ந்த ஜெகனை (28), பெண் வீட்டார் சுற்றி வளைத்து வெட்டிக்கொலை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கல்லூரியில் படித்துவரும் சீக்கிய மாணவர் ககந்தீப் சிங் மீது இனவெறி தாக்குதல்; காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு சீக்கிய தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
“ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது; அரசமைப்பின் 7வது அட்டவணையின் கீழ் சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று மக்களவையில் தி.மு.க எம்பி பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.
நெல்லையில், பங்குனி உத்திர திருநாளை ஒட்டி ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ள மாவட்ட ஆட்சியர் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்
அடுத்த மாதம் 8ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி ரூ 294 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார். சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார் பிரதமர்
ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை. சென்னை, பல்லாவரம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய போது முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டவர் சிவக்குமார்
தமிழகத்தில் XBB வகை கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துவருகிறது” “இவ்வகை தொற்று உயிரிழப்பு ஏற்படுத்தாது என்பதால் மக்கள் பதற்றமடைய தேவையில்லை” மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
புலம் பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய உ.பி. பாஜக நிர்வாகி உம்ராவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விபரங்களை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு தூத்துக்குடி, திருப்பூர் காவல் நிலையங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
தூத்துக்குடியில் பதிவான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அவர் முன்ஜாமின் பெற்ற நிலையில், திருப்பூரில் பதிவான வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்
கிருஷ்ணகிரி அருகே இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியல் – வாக்குவாதம். கிருஷ்ணகிரி-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு – சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மாவட்ட எஸ்.பி.,
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் போட்டியை ஒட்டி, அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மைதானத்திற்கு இலவச சிற்றுந்து வசதி
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது குறித்து பிரதமர் மோடியிடம் முறையிட தயார்” -பாக். முன்னாள் வீரர் ஷாயித் அஃப்ரிடி
புதுச்சேரியில் பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசு ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு பத்தாயிரம் ரூபாயில் இருந்து ₨15,000 ஆக உயர்த்தி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள் தங்கள் வாழ்க்கையில் செழிப்பதற்கான புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. விவசாயிகளுக்கான புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது- டிடிவி தினகரன்
10 வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் ஹால் டிக்கெட்டினை, வரும் 27 ஆம் தேதி பிற்பகல் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்திலிருந்து, பள்ளிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது..
பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைத்திருந்த நிலையில், டெல்லியின் நடப்பாண்டுக்கான பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாளை மறுநாள் (23.03.2023) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. H3N2 வைரஸ் பாதிப்பை கண்டறிய முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் பதட்டமடைய வேண்டாம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
வேளாண் பட்ஜெட் என்பது ஒரு மாய தோற்றம் – அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
தமிழகத்தில் வரும் 25ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலந்த விவகாரத்தில் விசாரணையை கண்காணிக்க, ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
வேளாண் பட்ஜெட் என்பது ஒரு மாய தோற்றம். அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு முன்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. மின் தட்டுப்பாடே இல்லை என்றால் மும்முனை மின்சாரம் வழங்குவதில் ஏன் நேரக் கட்டுப்பாடு என இபிஎஸ் கேள்வி
மக்களிடையே சிறுதானிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்படும் – தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
தமிழகத்தில் ஒமிக்ரான் XBB , BA2 வகை வைரஸ் பரவி வருகிறது” – சென்னை, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
ஒற்றை இலக்கத்தில் இருந்த தொற்று எண்ணிக்கை தற்போது 70க்கும் மேல் அதிகரித்துள்ளது அமைச்சர் மா.சுப்பிரமணியன்
“வேளாண் பட்ஜெட் ஏமாற்றும் வகையில் உள்ளது“ – வேளாண் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் வகையில் உள்ளது. கரும்புக்கு ஆதார விலை உயர்த்தப்படும் என்ற திமுக வாக்குறுதி பட்ஜெட்டில் இல்லை. நெல் குவிண்டாலுக்கு ரூ. 2500 உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றவில்லை. வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடி பழனிசாமி பேட்டி
விவசாயிகளுக்கு ரூ.14 ஆயிரம் கோடி கூட்டுறவு பயிர் கடன் வழங்கப்படும் – பட்ஜெட்டில் அறிவிப்பு
வெளிநாட்டு வேளாண் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளும் வகையில், விவசாயிகள் வெளிநாட்டில் பயிற்சி பெற ரூ.3 கோடி நிதி – தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
பருத்தி உற்பத்தியை உயர்த்தும் வகையில் ரூ.12 கோடி ஒதுக்கீடு . வேளாண்மை, தோட்டக்கலை பட்டதாரி இளைஞர்களை தொழில் முனைவோராக்கிட ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் . சூரியகாந்தி பயிர் உற்பத்தியை அதிகரிக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு
2,504 கிராமங்களில் ரூ.230 கோடியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் .
நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் புதிதாக சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்படும் .
கம்பு, கேள்வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு.
விவசாயிகள் அங்கக சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்க ஆண்டு கட்டணமாக ரூ. 10,000 மானியத்தொகை அறிவிக்கப்படும் இதற்காக ரூ.26 கோடி ரூபாய் ஒதுக்கீடு . வேளாண் பட்டப்படிப்பு பயின்ற இளைஞர்கள், 200 பேருக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு”
மாப்பிளை சம்பா அனைவரும் சாப்பிட வேண்டும். அப்போது மாப்பிளையாகலாம். தங்க செம்பா சாப்பிட்டால் தங்கமாகலாம். என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியபோது, அப்பாவு, ”அப்போ நீங்க எங்களுக்கு வாங்கிதாங்க நாங்க சாப்பிடுறோம்’ என்று பதிலளித்தார். இதனால் அனைவரும் சிரித்தனர்.
50,000 ஏக்கரில் சிறுதானிய சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்.
ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளின் நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின் இணைப்பு வழங்கப்படும் . சந்தனம், செம்மரம், தேக்கு போன்ற உயர் ரக மரக்கன்றுகள் 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நடப்பட்டுள்ளன.
டெல்டா மாவட்டங்களில் 5.36 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது . தமிழ்நாட்டில் வேளாண் பரப்பளவு 1.93 லட்சம் ஹெக்டேர் அதிகரிப்பு . 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது