scorecardresearch
Live

Tamil news today : தமிழக சட்டப்பேரவையில் இன்று துணைநிதிநிலை அறிக்கை தாக்கல்

Tamil Nadu News, Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil news today : தமிழக சட்டப்பேரவையில் இன்று துணைநிதிநிலை அறிக்கை தாக்கல்

Petrol and Diesel Price:

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லி முதல்வர்: சம்மன்  

டெல்லி துணை முதல்வர் மனிஷ் குமார் சிஷோடியாவுக்கு சிபிஐ சம்மன் மதுபான முறைகேடு வழக்கில் இன்று நேரில் ஆஜராக உத்தரவு  

அந்தியூரில் இன்று  பள்ளிக்கு விடுமுறை

அந்தியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிப்பு.  தொடர் கனமழை காரணமாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

Live Updates
21:50 (IST) 17 Oct 2022
தொண்டர்களும் மக்களும் என் பக்கமே – ஓ.பி.எஸ் பேச்சு

சென்னை வேப்பேரியில் பேசிய ஓ. பன்னீர்செல்வம்: தொண்டர்களும், மக்களும் என் பக்கமே என்று கூறியுள்ளார்.

20:42 (IST) 17 Oct 2022
பில்கிஸ் பானோ வழக்கு: குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய உள்துறை அமைச்சகம் அனுமதி – குஜராத் அரசு

பில்கிஸ் பானோ வழக்கு குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய, ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு தாக்கல் செய்துள்ள பிரமான பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

20:06 (IST) 17 Oct 2022
ஆண்டுக்கு 2 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக தரப்படும் என குஜராத் அரசு அறிவிப்பு

இமாச்சலுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய திட்டங்கள், அறிவிப்புகள் வெளியிடுவதற்காக குஜராத்தில் மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஆண்டுக்கு 2 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக தரப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது.

19:40 (IST) 17 Oct 2022
பாலியல் பலாத்கார வழக்கு: அந்தமான் நிக்கோபார் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்

அந்தமான் நிக்கோபாரில் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜிதேந்திர நரேனை மத்திய அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தொழிலாளர் ஆணையராக நியமிக்கப்பட்ட இரண்டு அதிகாரிகளான நரேன் மற்றும் ஆர்.எல். ரிஷி ஆகியோர் போர்ட் பிளேயரில் 21 வயது பெண் ஒருவரால் பாலியல் வன்கொடுமை மற்றும் கூட்டுப் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இந்த ஸ்டேஷனில் அக்டோபர் 1ம் தேதி எஃப்.ஐ.ஆர்., இரண்டு அதிகாரிகளின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டது. புகார்தாரருக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது. அந்தமான் போலீஸ் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜிதேந்திர நரேன் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

19:02 (IST) 17 Oct 2022
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் டி.ஒய். சந்திரசூட்.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்

உச்ச நீதிமன்ற நீதிபதியாக டி.ஒய்., சந்திரசூட்-ஐ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார்.

இவர் நவம்பர் 9ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வார். தற்போதைய தலைமை நீதிபதி யூ.யூ., லலித் பதவிக் காலம் நவ.8ஆம் தேதியோடு நிறைவடைகிறது.

18:43 (IST) 17 Oct 2022
சென்னை யோகா ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஜேம்ஸ் மரிய ஞானராஜ் என்பவர் யோகா ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இவர், கடந்த 2015ஆம் ஆண்டு, 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், யோகா ஆசிரியர் ஜேம்ஸ் மரிய ஞானராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

18:39 (IST) 17 Oct 2022
கங்குலி விலகல்- மம்தா பானர்ஜி அதிருப்தி

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சௌரவ் கங்குலி விலகிய நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

18:10 (IST) 17 Oct 2022
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமை (அக்.18) 15 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

18:08 (IST) 17 Oct 2022
கடன் தள்ளுபடி ரசீது ஒரு வாரத்தில் கொடுக்கப்படும்- பெரியசாமி

கூட்டுறவு கடன் தள்ளுபடி ரசீது ஒரு வாரத்தில் கொடுக்கப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

17:30 (IST) 17 Oct 2022
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது

16:56 (IST) 17 Oct 2022
கன்னியாகுமரியில் திராவகம் கலந்த குளிர்பானம் கொடுத்த விவகாரம்; 11 வயது சிறுவன் உயிரிழப்பு

கன்னியாகுமரியில் பள்ளி மாணவனுக்கு திராவகம் கலந்த குளிர்பானம் கொடுத்த விவகாரத்தில் 2 சிறுநீரகங்களும் செயலிழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்

16:44 (IST) 17 Oct 2022
அ.தி.மு.க பொன்விழா ஆண்டு – எம்.ஜி.ஆர் உருவ படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை

அ.தி.மு.க பொன்விழா ஆண்டு நிறைவையொட்டி ராமாபுரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் உருவ படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செய்தார். சசிகலாவுக்கு செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

16:35 (IST) 17 Oct 2022
விமர்சித்தால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் – கேரள ஆளுநர் எச்சரிக்கை

ஆளுநருக்கு ஆலோசனை வழங்க முதலமைச்சருக்கும், அமைச்சரவைக்கும் முழு உரிமை உண்டு. அதே சமயம் செயல்பாடுகளை விமர்சித்தால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்

16:22 (IST) 17 Oct 2022
ரயில் நிலையத்தில் மாணவி கொல்லப்பட்ட வழக்கு; 2வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை

பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி கொல்லப்பட்ட வழக்கில், 2வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மாணவி சத்திய பிரியாவின் தாய் மற்றும் தோழிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது

15:59 (IST) 17 Oct 2022
அறநிலைய துறை ஆணையருக்கு அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து

கோவில் சொத்து வாடகை வசூலிக்க நடவடிக்கை எடுக்காதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலைய துறை ஆணையருக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆணையர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

15:38 (IST) 17 Oct 2022
டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது

15:25 (IST) 17 Oct 2022
திருப்பணிபுரம் கிராமத்திற்கு மின்சார வசதி; தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

வனத்துறை எதிர்ப்பு காரணமாக 41 ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவிக்கும், திருநெல்வேலி மாவட்டம், திருப்பணிபுரம் கிராம மக்களுக்கு மின்சார வசதியை செய்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் தாக்கல் செய்த மனு மீது தமிழ்நாடு அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

15:20 (IST) 17 Oct 2022
வேளாண் துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 3,000ஆக அதிகரிப்பு; மோடி பெருமிதம்

வேளாண் துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 3,000ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் வேளாண் பொருட்களுக்கான உற்பத்தி மையமாக இந்தியா உருவாகும் என டெல்லியில் வேளாண் துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி கூறியுள்ளார்

14:59 (IST) 17 Oct 2022
டி20 உலகக் கோப்பை.. ஸ்காட்லாந்து அணி வெற்றி

டி 20 உலகக் கோப்பை முதல் சுற்று ஆட்டத்தின் 3வது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை ஸ்காட்லாந்து அணி வீழ்த்தியது. முதலில் ஆடிய ஸ்காட்லாந்து 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 18.3 ஓவரில் 118 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

14:16 (IST) 17 Oct 2022
23 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய ஆகிய 23 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13:32 (IST) 17 Oct 2022
நயன்தாரா – விக்னேஷ் சிவன் சர்ச்சை

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தற்போது வரை எந்த ஒரு விளக்கமும் வழங்கவில்லை. இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன் பதிவு திருமணம் செய்திருப்பின், அது குறித்து பதிவாளர் அலுவலகத்தில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனதமிழ்நாடு சுகாதாரத்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

13:12 (IST) 17 Oct 2022
ஓபிஎஸ் ஒரு கரும்புள்ளி

கரும்புள்ளியாக உள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக இரட்டை இலை பற்றியும் ஜெயலலிதா, எம்ஜிஆர் பற்றியும் பேச எந்த தகுதியும் இல்லை என்று சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.

12:57 (IST) 17 Oct 2022
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் – ராகுல் வாக்குப்பதிவு

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் – கர்நாடகா, பெல்லாரியில் ராகுல் காந்தி வாக்குப்பதிவு

12:23 (IST) 17 Oct 2022
சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த கூடுதல் மனுக்கள் தள்ளுபடி

சாந்தி திரையரங்கு சொத்துக்கள் விற்பனைக்கு தடை விதிக்க கோரிய வழக்கு

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த கூடுதல் மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

சொத்துக்களில் பங்கு கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோருக்கு எதிராக வழக்கு

12:09 (IST) 17 Oct 2022
காங்கிரஸ் தலைவர் தேர்தல் – சோனியா, பிரியங்கா, மன்மோகன் சிங் வாக்குப்பதிவு

காங்கிரஸ் தலைவர் தேர்தல் – டெல்லியில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் வாக்களித்தனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், ஜெயராம் ரமேஷ் ஆகியோரும் வாக்களித்தனர்.

தமிழ்நாட்டில் கே.எஸ்.அழகிரி, புதுச்சேரியில் நாராயணசாமி ஆகியோர் வாக்கினை பதிவு செய்தனர்.

வேட்பாளர்களான மல்லிகார்ஜுன கார்கே கர்நாடகாவிலும், சசி தரூர் கேரளாவிலும் வாக்களித்தனர்

11:43 (IST) 17 Oct 2022
திமுக எம்.பி. ஆ.ராசா மீது வழக்குப்பதிய கோரிய மனு தள்ளுபடி

இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியதாக ஆ.ராசா மீது வழக்குப்பதிய கோரி ஜோசப் என்பவர் மனு

ஆ.ராசாவுக்கு எதிரான புகார் மீது விசாரணை நடத்தி எந்த குற்றமும் நிரூபணமாகவில்லை – காவல்துறை

காவல்துறை விளக்கத்தை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

11:42 (IST) 17 Oct 2022
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உடன் ஈ.பி.எஸ் மீண்டும் ஆலோசனை

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உடன் ஈ.பி.எஸ் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக மீண்டும் ஆலோசனை

11:41 (IST) 17 Oct 2022
இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்

இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்.

சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல்

11:40 (IST) 17 Oct 2022
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, அருணா ஜெகதீசன் அறிக்கை நாளை சமர்ப்பிப்பு

சட்டப்பேரவையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, அருணா ஜெகதீசன் அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படுகிறது

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தை பொதுவெளியில் விவாதிக்க முடியாது – அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பின் சபாநாயகர் அப்பாவு பேட்டி

11:39 (IST) 17 Oct 2022
சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது

சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. சட்டப்பேரவை அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு

10:22 (IST) 17 Oct 2022
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் அமர்ந்தார் ஓபிஎஸ்

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் அமர்ந்தார் ஓபிஎஸ். சில முக்கிய மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற அரசு முடிவு

10:21 (IST) 17 Oct 2022
இபிஎஸ் தரப்பு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தை புறக்கணிக்க முடிவு

இபிஎஸ் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தை புறக்கணிக்க முடிவு . அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சபாநாயகரை சந்திக்கிறார்

09:51 (IST) 17 Oct 2022
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதல்

டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இன்று இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதல்

09:51 (IST) 17 Oct 2022
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு. மருத்துவக் கல்வி இயக்குநரகம் சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியீடு

09:15 (IST) 17 Oct 2022
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அறிக்கை தாக்கல்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படுவதால் கூடுதல் எதிர்பார்ப்பு

09:14 (IST) 17 Oct 2022
சிலிண்டர் வெடித்து விபத்து

வேடசந்தூர் அருகே தோப்புபட்டி சித்தர் பீடத்தில் அன்னதான சமையல் கூடத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து படுகாயம் அடைந்த மூதாட்டி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

08:34 (IST) 17 Oct 2022
இன்று காங்கிரஸ் தலைவர் தேர்தல்

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்ய இன்று வாக்குப்பதிவு: தலைவர் தேர்தலில் 9,200 பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தலில் எண்ணப்படும் வாக்குகள் வரும் 19 ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் 20ம் தேதி அறிவிக்கப்படும்.

Web Title: Tamil news today live tamilnadu assembly mk stalin rain update jayalalitha death