Tamil News Live : 2 நாட்கள் அரசியல் பயணமாக ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். இன்று (23) கோவை வரும் அவர், அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, 24ம் தேதி காலை 10.00 மணிக்கு திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிறகு அங்கு இருந்து புறப்படும் ராகுல்காந்தி, காலை 10.30 மணிக்கு ஊத்துக்குளியிலும், 11.15 மணிக்கு பெருந்துறையிலும் மக்கள் மத்தியில் பேசுகிறார்.
மதியம் 12.00 மணிக்கு ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகிய தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மக்களிடம் பேசுகிறார். பிறகு மதியம் 1.15 மணிக்கு அரசலூர் அருகே உள்ள ஓடாநிலையில் சுதந்திர போராட்ட தியாகியாக போற்றப்படும் தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து, அங்கு நெசவாளர்கள் மத்தியில் பேசுகிறார்.
பிறகு மதியம் 3.45 மணிக்கு திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் பேசுகிறார். அடுத்து மாலை 4.45 மணிக்கு தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
வேளாண் சட்ட மசோதாவைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகளுடன் ஏற்கெனவே மத்திய அரசு 10 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால், இந்த பேச்சுவார்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், இன்று மீண்டும் 11-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது. இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்குச் சொந்தமான இடங்களில், 3-வது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது.
சென்னையில் பெட்ரோல் விலை 22 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.88.07-க்கும், டீசல் லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.80.90-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மூன்று நாள் சுற்றுப்பயணமாக ராகுல் காந்தி நாளை தமிழகம் வருகிறார். காலை 11 மணியளவில் விமான நிலையத்தை வந்து சேரும் அவருக்குச் சிறப்பான வரவேற்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கோவை பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 24-ம் தேதி ஈரோட்டிலும், 25-ம் தேதி கரூரிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
News In Tamil Live : நேற்று முன்தினம் திடீரென சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் தீவிர கண்கானிப்பில் இருந்து வருகிறார். மேலும் அவருக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் அறிகுறி இருப்பதால், ஆன்டிஜென் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என தெரியவந்த்து.
இந்நிலையில், சசிகலாவின் உடல்நிலை குறித்து தற்போது மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், சசிகலாவின் உடல்நிலை மற்றும் இரத்த அழுத்தம் சீராக இருப்பதாகவும், சர்க்கரையின் அளவும் மட்டும் இன்னும் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூச்சுத்திணறல் காரணமாக அவரது நுரையீரல் ஸ்கேன் செய்தபோது, லேசான தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
Web Title:Tamil news today live tamilnadu chennai petrol price politics corona eps stalin farmers
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வன விலங்கை கொன்றால் மரண தண்டனை சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், தெரிவித்துள்ளார்.
2021-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரி 18ல் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே தபால் ஓட்டு போடலாம்" என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி, நாம் தமிழர் மட்டுமே என தெரிவித்துள்ள சீமான் அடிப்படை மாற்றத்தையும், தூய அரசியலையுமே விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
எமது மீனவர்கள் உயிரிழக்க காரணமான இலங்கை கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலை கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பாரம்பரிய கடல் பகுதியில் எமது மீனவர்கள் நிம்மதியாக தொழில் செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தள்ளார்.
இதன்படி நாளை தமிழகம் வரும் ராகுல் காந்தி
காலை 10.30 மணிக்கு கோயம்புத்தூர் விமானநிலையத்திற்கு வருகிறார். அங்கு அவருக்கு கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.
காலை 11 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்டம் கல்லூப்பட்டியில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் எம்.எஸ்.எம்.இ பிரதிநிதிகளை சந்திக்க உள்ளார்.
பகல் 1 மணிக்கு அவினாஷி சாலையில் உள்ள சின்னியம்பாளையம் சந்திப்பில் மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.
பகல் 2.45 மணிக்கு அவினாஷி பேருந்து நிலையத்தில் பிரநிதிகள் வரவேற்பு
பகல் 3.30 மணிக்கு திருப்பூர் மாவட்டம் அனுபர்பாளையத்தில் பிரதிநிதிகள் வரவேற்பு
மாலை 4.15 மணிக்கு திருப்பூரில் உள்ள திருப்பூர் குமரன் நினைவு சின்னத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்.
மாலை 5 மணிக்கு திருப்பூரில் ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் தொழிலாளர்களை சந்திக்கவுள்ளார்.
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வரும் 23-ந் தேதி (நாளை) தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். தற்போது அவரின் பயண விபரங்கள் வெளியாகியுள்ளது.
வேளாண் சட்டம் தொடர்பாக, விவசாயிகளுடனான 11வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமல், பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதாகவும், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என விவசாய சங்கங்கள் மீண்டும் வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
மருத்துவ ஓய்வுக்குப் பின் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை கமல்ஹாசன் தொடங்குவார் என்று மநீம துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்திற்குள் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் 24ஆம் கட்ட விசாரணை நிறைவு பெற்றது.2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் நடைபெற்று வருகிறது. இதில் 24 ஆம் கட்ட விசாரணை கடந்த 18ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற்றது.
இதனிடையே 25-ஆம் கட்ட விசாரணை பிப்ரவரி மாதம் 15-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரையில் நடைபெற இருப்பதாக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தினத்தன்று கிராம சபை கூட்டங்களை நடத்துவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
சென்னை மெரினாவில், வரும் 27 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா குறித்து ஆலோசிக்கப்பட்டது என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்து கட்சி தலைமை விளக்கம் அளித்துள்ளது.
போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் .காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக கடந்த 18ம் தேதி மருத்துவமனையில் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், உணவுப் பாதுகாப்பை முற்றில் ஒழிக்கும் என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் சோனியா காந்தி பேச்சு. மேலும், ராணுவ ரகசியம் கசிந்த விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது என்றும் மத்திய அரசின் தனியார் மய கொள்கையை காங்கிரஸ் ஒரு போதும் ஏற்காது என்றும் சோனியா காந்தி தெரிவித்தார்.
ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. திடீரென நுழைந்த மர்ம நபர்கள், மேலாளர் உட்பட 4 பேரை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் கருத்துக்களை நீக்கக்கோரி தமிழக அரசு மனு அளித்துள்ளது.
பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு 2 வாரங்களுக்குப் பிறகு விசாரணைக்கு வந்துள்ளது. பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம்.
சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, அவருடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், 2 பெண் கைதிகள், அதிகாரிகள் உள்பட 8 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என கர்நாடகா சிறைத்துறை முடிவு செய்திருக்கிறது.
கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் என்றும் ஆராய்ச்சி தொடங்கும் தேதி நாளைக்குள் அறிவிக்கப்படும் என்றும் தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம் தகவல் தெரிவித்தார்.
கூட்டத்தை தவிர்க்கும் வகையில் குடியரசு தின விழாவை நேரில் காண வருவதை தவிர்க்குமாறும் தமிழக அரசு அறிவுறுத்தியிருக்கிறது. குறிப்பாக குழந்தைகள், பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். மேலும், தியாகிகளை வீடுகளுக்கேச் சென்று கவுரவப்படுத்த ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடந்து வருகிறது. மேலும், சசிகலா விடுதலை குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி சென்னைக்கு திரும்பிய இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் வாஷிங்டன் சுந்தரின் வருகையை கோலாகலமாகக் கொண்டாடியுள்ளனர்.
தமிழக அளவில் சிறந்த காவல் நிலையமாக சேலம் டவுன் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இது, 5,558 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் துணை அதிபராகி இருப்பது அமெரிக்காவின் வரலாறாகியுள்ளது. இது இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவை வலுப்படுத்தும் என அமெரிக்க செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டார். தமிழகத்தில் 908-வது நபராக கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். மேலும், மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவே கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொண்டதாகத் தெரிவித்தார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகளவிற்கு கடுமையான நிமோனியா மற்றும் நுரையீரல் தோற்று ஏற்பட்டிருப்பதாக பெங்களூரு மருத்துவமனை தகவல் தெரிவித்திருக்கிறது.