Tamil News Highlights : அமெரிக்கப் படைகள் வெளியேறி வரும் நிலையில், ஆப்கனிஸ்தான் தற்போது தாலிபான்கள் கைவசம் வந்துள்ளது. இந்த நிலையில் தலைநகர் காபூலுக்குக் கிழக்கே அமைந்துள்ள ஜலாலாபாத்தில் ஏற்றப்பட்ட தாலிபான்களின் கொடியினை அப்புறப்படுத்தி ஆப்கானிஸ்தானின் தேசியக் கொடியை அப்பகுதி மக்கள் ஏற்றியுள்ளனர். தாலிபான்களின் கொடியை எரித்தும் தங்களது எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்தினர். போராட்டத்தில் இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
293-வது பீடாதிபதியாக ஹரிஹர தேசிகர்
மதுரை ஆதீனத்தின் 292-வது பீடாதிபதியாக இருந்த அருணகிரிநாதர் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்ததை அடுத்து, 293-வது மதுரை ஆதீன மடத்தின் பீடாதிபதியாக, இளைய ஆதீனமாக இருந்த ஹரிஹர தேசிகர் வருகிற 23-ம் தேதி முறைப்படி பட்டமேற்க உள்ளார். அன்றைய தினமே மறைந்த ஆதீனத்திற்கு குருபூஜை விழா நடைபெறும் என்றும் மதுரை ஆதீன மடத்தின் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆளுநரை சந்திக்கும் இபிஎஸ், ஓபிஎஸ்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை 11.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் சந்திக்கின்றனர். சட்டப்பேரவைக் கூட்டத்தை அதிமுக இரண்டு நாட்கள் புறக்கணித்ததுடன், கோடநாடு வழக்கில் ஆளும் கட்சியுடன் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் ஆளுநருடனான இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணி
கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியா வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது. இந்திய வீரர்கள் பிரியா, ஸ்ரீதர் பரத், சமி, கபில் ஆகியோர் இப்போட்டியில் பங்குபெற்று, சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இதில் ஸ்ரீதர் பரத் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
10 ஆம் வகுப்பு மாணவர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
http://www.dge.t.gov.in என்ற இணையதளத்தில், பதிவெண், பிறந்த தேதியை பதிவிட்டு சான்றிதழை பெறலாம்.
தமிழகத்தில் இன்று 1,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தற்போதைய தலிபான் அரசாங்கம், பன்னாட்டு நாணய நிதியத்தில் கடன்களை அணுக முடியாது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அங்கு நிலையான அரசாங்கம் இல்லாததால் ஐ.எம்.எஃப் இந்த முடிவை எடுத்துள்ளது.
சர்வதேச அங்கீகாரம் வேண்டுமா என்பதை தலிபான்கள் முடிவு செய்ய வேண்டும என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்
ஆப்கானிஸ்தானின் பல்வேறு நகரங்களில் தலிபான்களுக்கு எதிராக கொடி அசைக்கும் போராட்டங்கள் நடந்து வருகிறது
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் அவர் தொடர்ந்து வாய்தா கேட்டதால் ராஜேந்திர பாலாஜி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
7 கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள், அரசுக் கல்லூரி முதல்வர்கள் பணியிடமாற்றம் செய்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சுரண்டை காமராஜர் அரசுக் கல்லூரி முதல்வராக லதா பூரணம் நியமனம்.
திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநராக பாஸ்கரன் நியமனம்.
கடலூர் பெரியார் அரசுக் கல்லூரி முதல்வராக எழிலன் மற்றும் கோவை மண்டல இணை இயக்குநராக உலகி நியமனம்.
ஆத்தூர் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி முதல்வராக கலைச்செல்வி நியமனம். ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக அருள் ஆண்டனி நியமனம்.
சேலம் அரசு மகளிர் கல்லூரி முதல்வராக ரமா நியமனம்.
சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி என் .கிருபாகரன் நாளையுடன் பதவி ஓய்வு பெறுவதையொட்டி அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையில் பணி ஓய்வு பாராட்டு விழா மற்றும் பிரிவு உபச்சார விழா நடைபெறுகிறது.
நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். நீதிபதி கிருபாகரன் ஒய்வு பெறும் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக குறைகிறது.
நீதிபதி கிருபாகரன் ஒய்வு பெறும் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையில் 18 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருக்கும்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லி ராணுவ மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடித்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பித்தபோது கார்கள் நிறைய பண மூட்டைகளை அள்ளிச் சென்றதாக வரும் செய்திகள் உண்மையல்ல என அமீரகத்தில் தஞ்சம் அடைந்துள்ள ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனி விளக்கம் அளித்துள்ளார்.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் தமிழக ஆளுநரை சந்தித்து முறையிட்டனர்.
இந்தியாவில் இருந்து புறப்படும் முன் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய தவறியதால், இண்டிகோ விமானங்கள் ஆக.24-ந் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குநர் செல்வராகவன் முதன் முதலாக நடிகராக அறிமுகமாகும் படம் சாணி காகிதம். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள்தொடர்ந்து நடைபெற்று சரும் நிலையில், தற்போது இந்த படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மாடுகளுக்கு மூக்கில் கயிறு கட்ட துளையிடுவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாவதால் மூக்கனாங்கயிறை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி கொடநாடு வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி பெறவில்லை என்றும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கொரோனா தொற்று பாதிப்புகளை குறைத்து காட்டுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பாலில் ரசாயன கலக்கப்பட்டுள்ளதா என கண்டறிய தமிழக கேரள எல்லையில் ஆய்வகம் துவங்கப்பட்டுள்ளது. “டேங்கர்” லாரிகளில் இருந்து பால் “மாதிரிகள்” எடுக்கப்பட்டு அவை தற்காலிக ஆய்வகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, ரசாயண கலப்பில்லை என்று தெரிந்தால் மட்டுமே அவை கேரளாவிற்குள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த சோதனை ஓணம் பண்டிகையின் முதல் நாளான ஆகஸ்ட் 20 தேதி வரை நான்கு நாட்களும் 24 மணி நேரமும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால், அஙகு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்கிருந்து மக்கள் வெளியேறி வரும் நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து 50க்கும் அதிகமானோர் ஸ்பெயின் நாட்டு விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தொடர்ந்து ஸ்பெயின் நாட்டு வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், அவர்களுடன் பணியாற்றிய ஆப்கானியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட 500க்கும் அதிகமானோரை மீட்க திட்டமிட்டுள்ளதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் முழு அதிகாரத்தையும தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், பதற்றத்தில் உள்ள மக்கள் நாட்டில் இருந்து வெளியேறி வரும் நிலையில், ஆப்கான்கள் பாதுகாப்பாக வெளியேற தலிபான்கள் அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு வலியுறுத்தியுள்ளது.
“தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, விதிமுறைகளை பின்பற்றாமல் விசாரிக்கிறது என்று கூறி முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தின் 13 மாவட்டங்களில் ஆக.21 ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நந்தனத்தில் உள்ள நிதித்துறை கட்டடத்திற்கு பேராசிரியர் க.அன்பழகனின் பெயர் சூட்டப்படும் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பாதிப்பு எண்ணிக்கையை அரசு குறைத்து காட்டுவதாகவும் ஈபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
நீதிமன்றத்தில் அனுமதி பெறாமல் கொடநாடு வழக்கை மீண்டும் திமுக அரசு விசாரிக்கிறது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கொடநாடு வழக்கை கையில் எடுத்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு விசாரணை முடியும் தருவாயில் உள்ளதாகவும், நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை தேர்தல் அறிக்கையில் தொடர்புப்படுத்த கூடாது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஊழியர்களை பணியிட மாற்றம் செய்தது தான் திமுக அரசின் 100 நாள் சாதனை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாததை மறைக்க பொய் வழக்கு போடப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
ஊழியர்களை பணியிட மாற்றம் செய்தது தான் திமுக அரசின் 100 நாள் சாதனை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாததை மறைக்க பொய் வழக்கு போடப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் பெட்ரோல் விலையை ரூ.3 குறைத்த பின், ஒரு நாளைக்கு 11.28 லட்சம் லிட்டர் பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களின் நிலை குறித்து இந்த கூட்டத்தொடரில் அறிக்கை வெளியிடப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள தொல்லியல்துறை கல்வெட்டியல் கிளையை, தமிழ் கல்வெட்டியல் கிளை என பெயர் மாற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தொல்லியல்துறையில் உள்ள கல்வெட்டில் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் போதுமான அளவு நிபுணர்களை பணியமர்த்த வேண்டும் என்றும் தமிழ் கல்வெட்டுகள் மற்றும் தமிழ் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சென்னை தமிழ் கல்வெட்டில் கிளைக்கு 6 மாதத்திற்குள் மாற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு மற்றும் அதன் அலுவலர்கள் இந்திய அலுவல் மொழி சட்டத்தை முறையாக பின்பற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு எந்த மொழியில் மத்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்புகிறதோ, அதே மொழியிலேயே மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் இந்திய அலுவலக மொழி சட்டமும் இதை தான் உறுதி செய்கிறது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சென்னை, கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி, துணை தலைவர் பன்னீர்செல்வம் சந்திப்பு. அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதாக குற்றச்சாட்டு.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.35,592-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.67.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சிதிலமடைந்தது தொடர்பாக பேரவையில் திமுக உறுப்பினர் பரந்தாமன் கவன ஈர்ப்பு தீர்மானம் மேற்கொண்டார். “தொட்டால் சிணுங்கி பார்த்திருக்கிறோம், ஆனால் தொட்டாலே விழுகின்ற சிமெண்டை கண்டு பிடித்த ஆட்சி கடந்த அதிமுக ஆட்சி. 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி கட்டிமுடித்த அனைத்து கட்டடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்” என்று அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
21 ஆயிரத்திற்கும் அதிகமான ஆப்கான் அகதிகளுக்கு மறுவாழ்வு கொடுக்க கனடா அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானில் இருந்து எவ்வளவு மக்களை அழைத்து வர முடியுமோ அத்துனை பேரையும் அழைத்து வர முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்தார் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
வேலூர் நாடாளுமன்ற தொகுதி முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன்( 65) உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.
சென்னை அண்ணாநகரில் நேற்றிரவு திமுக பிரமுகர் சம்பத்குமார் என்பவரை மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்துள்ளது. இதனை அடுத்து இன்று அண்ணாநகர் காவல் நிலையத்தில் 4 பேர் சரணடைந்துள்ளனர்.
இந்தியாவில் 18 வயதுக்குட்பட்டோருக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளதாக, தேசிய வைராலஜி மையத்தின் இயக்குநர் ப்ரியா ஆப்ரஹாம் தெரிவித்துள்ளார்.
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்கு இப்போது அந்தப் பொறுப்பில் இருக்கும் முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பித்துள்ளார். ராகுல் டிராவிட்டை தவிர்த்து மற்ற யாரும் விண்ணப்பிக்கவில்லை என்பதனால், விண்ணப்பம் அனுப்புவதற்கான காலக்கெடுவை மேலும் சில நாட்களுக்கு பி.சி.சி.ஐ. நீட்டித்துள்ளது.
கொடநாடு விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவை நிகழ்வுகளை இன்று புறக்கணிப்பதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.பி.எஸ் அறிவித்திருக்கிறார்.