Advertisment

Tamil News Highlights : பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் அஞ்சலி

Latest Tamil News : ஹெலிகாப்ட்டர் விபத்துத் தொடர்பாக நாட்டு மக்களுக்கு விளக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறார்.

author-image
WebDesk
New Update
Tamil News Highlights : பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் அஞ்சலி

Tamil News Highlights : குன்னூர் அருகே காட்டேரி மலைப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில், விமானப்படை தளபதி இன்று நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்துகிறார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, விபத்து நடந்த இடத்தில் இருந்து CRASH DATA RECORDER என்றழைக்கப்படும் குரல் பதிவு கருவியைக் கண்டறிந்து, அதில் பதிவான பேச்சுகளை ஆராய்ந்தால் மட்டுமே முழு தகவல் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

Advertisment

கறுப்புப் பெட்டி கண்டறியப்பட்டது

சூலூர் விமானப் படைத் தளத்திலிருந்து வந்த  அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் நேற்றிரவு ஆய்வ மேற்கொண்டனர். அப்போது, கறுப்பு பெட்டியும் எடுத்துச்செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் இன்று அறிக்கை அளிக்கும் ராஜ்நாத்சிங்

குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்தது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார். ஏற்கெனவே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுக் கூட்டம் அவசரமாகக் கூடி, விபத்து தொடர்பாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் விரிவாக விளக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நாட்டு மக்களுக்கும் விளக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறார்.

செயல் தலைவராகிறாரா பிரேமலதா?

விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தேமுதிகவின் செயல் தலைவராக பிரேமலதாவை நியமிக்க மாவட்டச் செயலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். உள்ளாட்சித்தேர்தல் அறிவிப்புக்கு முன் செயல் தலைவர் அறிவிப்பு வெளிவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

சென்னையில் 35-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 21:52 (IST) 09 Dec 2021
    ஹெலிகாப்டர் விபத்து - பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழப்பு; முப்படைத் தளபதிகள் அஞ்சலி

    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே, கடற்படைத் தளபதி ஹரி குமார், விமானப் படை தளபதி வி.ஆர்.சவுத்ரி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்


  • 21:35 (IST) 09 Dec 2021
    பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் அஞ்சலி

    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினர்


  • 20:17 (IST) 09 Dec 2021
    டெல்லி வந்தடைந்தன முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்கள்

    சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்கள் தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தன


  • 20:16 (IST) 09 Dec 2021
    நாகர்கோவில் அருகே பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட குறவர் குடும்பம்

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பேருந்தில் இருந்து குறவர் குடும்பத்தை இறக்கிவிட்டு உடைமைகளை கீழே வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


  • 19:58 (IST) 09 Dec 2021
    பிபின் ராவத் குடும்பத்தினரை நேரில் சந்தித்து உத்தரகாண்ட் முதல்வர் ஆறுதல்

    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத்தின் குடும்பத்தினரை உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்


  • 19:56 (IST) 09 Dec 2021
    சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவிக்கால நீட்டிப்பு மசோதா நிறைவேற்றம்

    சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க வழிவகை செய்யும் சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது


  • 19:40 (IST) 09 Dec 2021
    3 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன - ராணுவம்

    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 3 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. 10 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்ட பிறகே உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.


  • 19:38 (IST) 09 Dec 2021
    ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ரோகித் நியமனம் - சவுரவ் கங்குலி விளக்கம்

    இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு வெவ்வேறு கேப்டன்கள் இருப்பது சரியான முடிவு இல்லை என்பதால் ரோகித் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்


  • 19:02 (IST) 09 Dec 2021
    2022 ஜனவரி 31 வரை வெளிநாடுகளுக்கான விமான சேவை ரத்து நீட்டிப்பு - விமான போக்குவரத்துத் துறை

    2022ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை வெளிநாடுகளுக்கான விமான சேவை ரத்து நீட்டிப்பு செய்யப்படுவதாக விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது


  • 18:41 (IST) 09 Dec 2021
    கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,169 பேருக்கு கொரோனா; 52 பேர் உயிரிழப்பு

    கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,169 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 52 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்


  • 18:02 (IST) 09 Dec 2021
    ஹெலிகாப்டர் விபத்து - இறந்தவர்களுக்கு இன்று இரவு பிரதமர், அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் உடல்கள் இரவு 8 மணியளவில் டெல்லி சென்றடையும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி இரவு 9 மணியளவில் அஞ்சலி செலுத்துகிறார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்துகின்றனர்


  • 17:46 (IST) 09 Dec 2021
    ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை - மாவட்ட நிர்வாகம்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


  • 17:45 (IST) 09 Dec 2021
    ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை - மாவட்ட நிர்வாகம்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


  • 17:24 (IST) 09 Dec 2021
    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் விசாரணை

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் விசாரணை செய்கிறார்.


  • 16:09 (IST) 09 Dec 2021
    சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 13 பேரின் உடல்களுடன் டெல்லிக்கு புறப்பட்டது விமானம்

    சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 13 பேரின் உடல்களும் விமானப்படை விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டது.


  • 16:08 (IST) 09 Dec 2021
    டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக நடந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ்!

    தலைநகர் டெல்லியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. மத்திய அரசு வழங்கிய திருத்தி அமைக்கப்பட்ட எழுத்துப்பூர்வமான உறுதியை விவசாயிகள் ஏற்றுக்கொண்டதால் போராட்டம் முடிவுக்கு வந்ததாகவும், அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடங்கும் என போராட்டம் தொடங்கும் என விவசாயிகள் சங்கம் அறிவிப்பு.

    போராட்டம் முடிந்த நிலையில், டெல்லி - சிங்கு எல்லையில் போராடிவரும் விவசாயிகள் கூடாரங்களை அகற்றி வருகின்றனர்.


  • 16:02 (IST) 09 Dec 2021
    சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 13 பேரின் உடல்களுடன் டெல்லிக்கு புறப்பட்டது விமானம்

    சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 13 பேரின் உடல்களும் விமானப்படை விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டது.


  • 15:35 (IST) 09 Dec 2021
    முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம்: அவதூறு வீடியோ வெளியிட்டதாக யூடியூபர் மாரிதாஸ் கைது!

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர் மர்மமான முறையில் இறந்தார். இதையடுத்து, மணிகண்டனின் உறவினர்கள் அவர் போலீஸார் தாக்கியதால்தான் உயிரிழந்ததாகச் சொல்லி, முதுகுளத்தூர் – பரமக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மணிகண்டன் மரணம் தொடர்பாக அவதூறாக வீடியோ வெளியிட்டதாக யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் இன்று கைது செய்யப்பட்டார்.


  • 15:22 (IST) 09 Dec 2021
    ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்த வீரர்களுக்கு மக்கள் மலர்தூவி மரியாதை!

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் பிற வீரர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம், வெலிங்டன் மைதானத்திலிருந்து கோவை சூலூர் விமான நிலையத்திற்கு எடுத்து சென்றனர். அப்போது சாலைகளின் இருபுறங்களிலும் குவிந்திருந்த மக்கள் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செய்த வீடியோ!


  • 14:58 (IST) 09 Dec 2021
    ஹெலிகாப்டர் விபத்து: விசாரணையை தொடங்கியது தமிழக போலீஸ்!

    குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து நீலகிரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி. முத்து மாணிக்கம் தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக 20க்கும் மேற்பட்ட குழுவினர் ட்ரோன் கேமரா மற்றும் கருவிகள் உதவியுடன் ஹெலிகாப்டர் எவ்வளவு உயரத்தில் இருந்து விபத்துக்குள்ளானது என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அங்குள்ள மக்களிடமும் விசாரணை நடக்கிறது. மேலும், சுற்றுலா பயணிகள் குறித்தும் விசாரணை நடக்கிறது.


  • 14:48 (IST) 09 Dec 2021
    ஹெலிகாப்டர் விபத்து: வீரர்களின் உடல்களை சுமந்து சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது!

    பிபின் ராவத் உள்பட 13 வீரர்களின் உடல்களை சுமந்து சென்ற ஆம்புலன்ஸ் கோவை மேட்டுபாளையம் அருகே விபத்தில் சிக்கியது. வெலிங்டன் மைதானத்திலிருந்து கோவை சூலூர் விமான நிலையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. இதையடுத்து அந்த ஆம்புலன்ஸில் இருந்த உடலை உடனடியாக வெறொரு வாகனத்தில் மாற்றி பபட்டு எடுத்து செல்லப்பட்டது.


  • 14:46 (IST) 09 Dec 2021
    ஹெலிகாப்டர் விபத்து: பாதுகாப்புக்கு சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது!

    பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்கள் டெல்லி கொண்டு செல்வதற்காக வெலிங்டன் மைதானத்திலிருந்து கோவை சூலூர் விமான நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. நீலகிரி அருகே, பர்லியார் மலைப்பகுதியில் செல்லும்போது, பாதுகாப்புக்கு சென்ற காவல் வாகனம் விபத்தில் சிக்கியது. வாகனத்தில் இருந்த போலீசார் லேசான காயங்களுடன் தப்பித்தனர்.


  • 14:27 (IST) 09 Dec 2021
    எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசிய அமமுக நிர்வாகி கைது!

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுதினத்தை முன்னிட்டு, டிசம்பர் 5 ஆம் தேதி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்படி பழனிசாமி ஆகியோர் மெரினாவில் உள்ள் ஜெயலலிதாவின் நினைவு இல்லத்துக்கு சென்று மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்து திரும்பியபோது எடப்பாடி பழனிச்சாமி சென்ற கார் மீது, மர்ம நபர்கள் சிலர் செருப்பு வீசினர். இந்த சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணி அமமுக நிர்வாகி மாரிமுத்துவை அண்ணா சதுக்கம் போலீசார் இன்று கைது செய்தனர்.


  • 14:20 (IST) 09 Dec 2021
    ஹெலிகாப்டர் விபத்து: ஏடிஎஸ்பி முத்துமாணிக்கம் தலைமையில் வெலிங்டன் போலீசார் விசாரணை!

    ராணுவ ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 11 பாதுகாப்பு வீரர்கள் டிசம்பர் 8, 2021 அன்று தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தனர். இந்த சம்பவம் குறித்து ஏர் மார்ஷல் மனிதேந்திர சிங் தலைமையில் இந்திய விமானப்படை, முப்படை விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ராஜ்நாத் சிங் மக்களவையில் இன்று தெரிவித்தார். இந்த விபத்து தொடர்பாக வெலிங்டன் காவல்துறையிமரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக, ஏடிஎஸ்பி முத்துமாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.


  • 14:14 (IST) 09 Dec 2021
    அடுத்த சில மணி நேரங்களில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

    வடகிழக்கு பருவகாற்று காரணமாக, மதுரை, திருநெல்வேலி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


  • 13:22 (IST) 09 Dec 2021
    ட்விட்டரில் ஹிட் அடித்த Master

    2021ம் ஆண்டு ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்குகளை வெளியிட்டுள்ளது ட்விட்டர். covid19 farmersprotest - போன்ற ஹேஷ்டேக்குகள் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்த நிலையில் master -எட்டாவது இடத்தில் உள்ளது


  • 13:22 (IST) 09 Dec 2021
    பெங்களூரு அழைத்துச் செல்லப்படுகிறார் வருண் சிங்

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயம் அடைந்திருக்கும் க்ரூப் கேப்டன் வருண் சிங் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்துச் செல்லப்படுகிறார்.


  • 13:19 (IST) 09 Dec 2021
    பெங்களூரு அழைத்துச் செல்லப்படுகிறார் வருண் சிங்

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயம் அடைந்திருக்கும் க்ரூப் கேப்டன் வருண் சிங் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்துச் செல்லப்படுகிறார்.


  • 13:18 (IST) 09 Dec 2021
    வருண் சிங் நீண்ட ஆயுளை பெற பிரார்த்திக்கிறேன் - ராம் நாத் கோவிந்த்

    என்னுடைய எண்ணங்கள் அனைத்தும் விபத்தில் இருந்து உயிர் தப்பிய குரூப் கேப்டன் வருண் சிங் பற்றியதாகவே உள்ளது. விரைவில் அவர் குணம் அடைந்து நீண்ட ஆயுளை பெற பிரார்த்திக்கிறேன் என்று ராம் நாத் கோவிந்த் ட்வீட் வெளியிட்டுள்ளார்.


  • 12:56 (IST) 09 Dec 2021
    வருண் சிங் நீண்ட ஆயுளை பெற பிரார்த்திக்கிறேன் - ராம் நாத் கோவிந்த்

    என்னுடைய எண்ணங்கள் அனைத்தும் விபத்தில் இருந்து உயிர் தப்பிய குரூப் கேப்டன் வருண் சிங் பற்றியதாகவே உள்ளது. விரைவில் அவர் குணம் அடைந்து நீண்ட ஆயுளை பெற பிரார்த்திக்கிறேன் என்று ராம் நாத் கோவிந்த் ட்வீட் வெளியிட்டுள்ளார்.


  • 12:42 (IST) 09 Dec 2021
    சாட்டை துரைமுருகனை கடுமையாக விமர்சித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

    தமிழ்நாடு அரசு மீது என்ன குற்றம் கண்டுவிட்டீர்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எவ்வளவு பணிபுரிய முடியுமோ, அதையும் தாண்டி பணியாற்றி வருகிறார். அரசின் பணிகளை பாராட்டமுடியவில்லை என்றாலும் மைக் கிடைக்கும் இடத்தில் எல்லாம் அவதூறு பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழியை மீறி சாட்டை துரைமுருகன் ஒருவார்த்தை பேசியிருந்தாலும் ஜாமின் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை.


  • 12:40 (IST) 09 Dec 2021
    குஜராத் கலவர வழக்கில் இருந்து மோடி ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனு

    குஜராத் கலவர வழக்கில் இருந்து மோடி ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனு மீதான விசாரணை முடிவுற்ற நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தேதி ஒத்திவைத்து அறிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.


  • 12:24 (IST) 09 Dec 2021
    திமுக அரசிற்கு எதிரான போராட்டம் மீண்டும் ஒத்திவைப்பு

    திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் வரும் 11ம் தேதி அன்று போராட்டம் நடத்துவதாக அதிம்க தலைமை அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த போராட்டத்தின் தேதி 17ம் தேதிக்கு ஒத்திவைப்பு


  • 12:15 (IST) 09 Dec 2021
    உத்தரகாண்ட் சட்டசபையில் அஞ்சலி

    உத்தரகாண்ட் சட்டசபையில் பிபின் ராவத் மறைவிற்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மாநில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


  • 11:47 (IST) 09 Dec 2021
    உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு முதல்வர் மரியாதை

    பிபின் ராவத், மதுலிக்கா ராவத் மற்றும் இதர ராணுவ அதிகாரிகளின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.


  • 11:47 (IST) 09 Dec 2021
    இரு அவைகளிலும் இரங்கல்

    முப்படை தலைமைத் தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் உயிரிழந்த 13 நபர்களுக்கும் நாடாளுமன்ற மாநிலங்களவை மற்றும் மக்களவையில் இரங்கல்


  • 11:35 (IST) 09 Dec 2021
    ஹெலிகாப்டர் விபத்து - மக்களவையில் விளக்கம்

    சூலூர் விமானப்படை தளத்திலிருந்து பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் காலை 11.45 மணிக்கு புறப்பட்டுள்ளனர். 12 மணியளவில் தொடர்பு துண்டிக்கப்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். குருப் கேப்டன் வருண் சிங்கை காப்பாற்ற அனைத்து விதமான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்று மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கமளித்துள்ளார்.


  • 11:04 (IST) 09 Dec 2021
    டெல்லி கொண்டு செல்லப்படும் உடல்கள்

    சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து மதியம் 1 மணியளவில் உடல்கள் டெல்லி கொண்டு செல்லப்படுகின்றன.


  • 10:42 (IST) 09 Dec 2021
    மைதானத்திற்கு எடுத்து செல்லப்படும் வீரர்களின் உடல்கள்

    மருத்துவமனையில் இருந்து வெலிங்டன் ராணுவ மைதானத்திற்கு அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் வீரர்களின் உடல்கள் கொண்டுவரப்பட்டன.


  • 10:24 (IST) 09 Dec 2021
    பிபின் ராவத் மறைவு - ஆளுநர் அஞ்சலி

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார்.


  • 10:22 (IST) 09 Dec 2021
    விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி கண்டெடுப்பு

    குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி காட்டேரி நச்சப்புராசத்திரம் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் கருப்புப் பெட்டியை டெல்லி அல்லது பெங்களூருவுக்கு கொண்டுசென்று ஆய்வு செய்ய திட்டஇடப்பட்டிருக்கிறது.


  • 10:19 (IST) 09 Dec 2021
    பிபின் ராவத்தின் மறைவுக்கு பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷ்யா இரங்கல்

    முப்படைகளின் கூட்டு தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் மறைவுக்கு அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளன.


  • 10:18 (IST) 09 Dec 2021
    ஜெர்மனியின் புதிய பிரதமராக ஒலாஃப் ஸ்கால்ஸ் பதவியேற்பு

    ஜெர்மனியின் புதிய பிரதமராக ஒலாஃப் ஸ்கால்ஸ் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து மெர்க்கலின் 16 ஆண்டுகால பிரதமர் பதவி முடிவுக்கு வந்துள்ளது.


  • 09:52 (IST) 09 Dec 2021
    அதிமுக ஆர்ப்பாட்டம் நாளை மறுநாள் ஒத்திவைப்பு

    திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக அறிவித்துள்ளது.


  • 09:51 (IST) 09 Dec 2021
    டிஜிபி சைலேந்திர பாபு விபத்து நடந்த இடத்தில் ஆய்வு

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் விமானப்படை தளபதி மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.


Bipin Rawat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment